தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : கலை விமர்சனம் Once again, on the filthiness of the makers of Zero Dark Thirty Zero Dark Thirty - திரைப்பட படைப்பாளிகளின் இழிவான தன்மை குறித்து மீண்டுமொருமுறை
By David Walsh use this version to print | Send feedback கடந்த ஒரு மாதத்திற்கு முன்பு போன்று, Zero Dark Thirty மற்றும் அதன் படைப்பாளிகளான இயக்குனர் காத்ரின் பிகெலோ மற்றும் திரைக்கதை ஆசிரியர் மார்க் போல் ஆகியோரின் அரசியல் ரீதியாக இழிந்த அணுகுமுறை பற்றி உலக சோசலிச வலைத் தளத்தில் அதிகமாகவே எழுதியிருக்கிறோம். தமது படத்தின் உருவாக்கத்தின்போது சி.ஐ.ஏ. மற்றும் அமெரிக்க இராணுவத்தின் பல்வேறு மட்டங்களுடன் கூடிவேலை செய்த அந்த ஜோடி, ஒசாமா பில் லேடனை தேடும் ஒரு விதத்தை காட்டுகையில் சித்ரவதையை ஒரு துரதிர்ஷ்டவசமானதாக ஆனால் “பயங்கரவாதத்தின் மீதான போரின்” அவசியமான அம்சமாக சித்தரிக்கிறது. போல் மற்றும் பிகெலோ, குறிப்பாக முன்னவர் பல்வேறு சி.ஐ.ஏ. மற்றும் பாதுகாப்புத் துறை அதிகாரிகளை சந்தித்தும், அவர்களது கதை புலனாய்வுத்துறை அதிகாரிகளால் சோதிக்கப்பட்டு மாற்றப்படுவதற்கு அனுமதி அளித்ததும், நமக்கு மே மாதம் தெரிய வந்தது. Zero Dark Thirty அமெரிக்க இராணுவம் மற்றும் சி.ஐ.ஏ.வின் “கடின உழைப்புக்கு” ஒரு நன்றிப்பாடல் போன்று ஏற்றுக் கொள்ளப்பட்டதுடன், அவர்களது மரியாதைக்குரிய அதிகாரிகளாலும் அதேபோல் அணுகப்பட்டது. ஒட்டுமொத்தமாக பார்க்கையில் இந்த பலவீனமான திரைப்படத்தின் ஆதரவாளர்களின் விநோதமான கூற்றான Zero Dark Thirty ”போருக்கு எதிரான” மற்றும் ”சித்ரவதைக்கு எதிரான” கருத்துடையது என்பது 2011 சி.ஐ.ஏ. விருது வழங்கும் நிகழ்ச்சியில் மார்க் போல் கலந்து கொண்டது வெளிப்பட்டதன் மூலம் இன்னொரு அடியை பெற்றுள்ளது! இந்த வாரம் ஊடகங்களில் கசிந்த அமெரிக்க பாதுகாப்புத்துறை உயர் அதிகாரியின் அலுவலகத்தின் வரைவு அறிக்கை, பிற பகிரங்கமான உண்மைகளுடன் இதனை வெளிப்படுத்துகிறது. பிகெலோ மற்றும் போல் இருவரும் அதே கதை தொடர்பாக தாங்கள் ஏற்கெனவே தயாரித்துக் கொண்டிருந்த ஒரு திரைப்படத்திற்காக தகவல் பெறுவதற்காகவும் பென்டகனின் உதவியை கோருவதற்காகவும், பின்லேடன் கொல்லப்பட்ட மறுநாள் பாதுகாப்புத் துறை அதிகாரிகளை தொடர்பு கொண்டனர். அறிக்கையின்படி, ” UBL (பின்லேடன்) எழுதப்பட்ட பின்னர், அவர்கள் தங்களின் மூலப் படைப்பை ஓரங்கட்டிவிட்டு கிட்டத்தட்ட ஒரு பத்தாண்டுகள் வரை நீடித்த வேட்டையை பரிசோதிக்கின்ற மற்றும் UBL-ன் கொலையில் முடிவடைந்த மிக நீளமான ஒரு கதையை படமாக்குவதாக முடிவெடுத்ததாக” அவர்கள் விவரித்தார்கள். இந்த ஹாலிவூட் உயர்நிர்வாகிகள் [sic] UBL அதிரடி சோதனை குறித்து பாதுகாப்புதுறையிடமிருந்து மேலதிக தகவல்களை வேண்டினர். வேறு வார்த்தைகளில் சொல்வதென்றால், புதிதாக திட்டமிட்டப்பட்ட திரைப்படத்தின் ஆரம்பத்திலிருந்து, பிகெலோவும் போலும் அமெரிக்க இராணுவத்தின் பைக்குள்ளும் அதனைச் சார்ந்தும் இருந்தார்கள் எனலாம். 2011 மே, ஜூன், ஜூலை முழுவதும், போல் (குறிப்பாக) பல்வேறு புலனாய்வுத்துறை மற்றும் இராணுவ அதிகாரிகளை தனிப்பட்ட முறையில் சந்தித்து தொடர்பு கொண்டார். ஜூன் 15 அன்று வெள்ளை மாளிகை தேசியப் பாதுகாப்பு அலுவலர்கள் சிலர், “நான் உங்களை வெள்ளை மாளிகைக்கு அழைத்துச் செல்ல விரும்புகிறேன்” மேலும் “இதை நாம் ஜூன் 27 படப்பிடிப்பு நேரத்தில் செய்ய வேண்டி இருக்கும், அதை நான் ஏற்பாடு செய்கிறேன்” என்று போலுக்கு மின்கடிதம் ஒன்றை அனுப்பினர். 2011 ஜூலை 22–ல் பொது விவகார தொடர்புகளுக்கான பாதுகாப்பு உதவி செயலர் அலுவலகம், பொதுத்துறை செயல்பாடுகளுக்கான பாதுகாப்புத் துறை உதவி செயலாளர் டக்லஸ் வில்சனுக்கும் வெள்ளை மாளிகையின் ஊடக துணை செயலாளருக்கும் இடையிலான ஒரு சந்திப்பை வெளிப்படுத்தியது. “எங்களுக்கு இதை தொடர்வதற்கான அனுமதி கிடைத்துள்ளது” மற்றும் ”வெள்ளை மாளிகை மார்க்குடன் (போல்) பணியாற்ற விரும்புகிறது ஆனால் அது அநேகமாக இன்னும் சில வாரங்களுக்கு இருக்காது” என்றும் குறிப்புகள் தெரிவித்ததாக உயர் ஜெனரலின் அறிக்கை தெரிவிக்கிறது. ”திரு.போல் மற்றும் பிகெலோவுடனான செயல்பாடுகள் குறித்து கையாள வெள்ளை மாளிகையுடன் தான் தொடர்பு கொண்டதாக” வில்சன் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகத்தில் தெரிவித்தார். ஆப்கானிஸ்தானில் 1980களின் மத்தியில், சோவியத் யூனியனை சீர்குலைக்க முயற்சித்த காலகட்டத்தில், இஸ்லாமிய சக்திகளின் ஆயுத செயல்பாட்டில் பெருமளவு தொடர்புடைய ஒரு முன்னாள் சி.ஐ.ஏ. அதிகாரியும் புலனாய்வு பாதுகாப்புத்துறை உதவி செயலதிகாரி மைக்கேல் விக்கர்ஸ் பிகெலோ மற்றும் போலை சந்தித்தவர்களுள் ஒருவர் ஆவார். 2011 ஜூலை 16 அன்று, ”மார்க் போல் மற்றும் காத்ரின் பிகெலோவுடன் சென்ற இரவு சிறப்பான பேச்சுவார்த்தை நடந்தது. பதில்: UB: திரைப்படம். அவர்கள் மகிழ்ச்சியாக வெளியே வந்தார்கள்” என்று அவர் வில்சனுக்கு மெயில் அனுப்பினார். பின்லேடன் இரகசிய தேடலில் பங்காற்றியிருந்தவர்களுக்கு மரியாதை செலுத்துவதற்காக, போல் கலந்து கொண்ட சி.ஐ.ஏ. விருது விழா 2011 ஜூன் 24 அன்று, நிறுவன தலைமை அலுவலகத்தில் நடந்தது. சி.ஐ.ஏ அதிகாரிகளின் தலைமை இயக்குனர் இன்ஸ்பெக்டர் ஜெனரல் அலுவலகத்தில் அந்த நிகழ்ச்சியில் “மிகப் பெரும்திரளான கூட்டத்தினர் கலந்து கொண்டனர். அதாவது அவர்கள் ஒரு கூடாரம் போல் திரண்டார்கள் ஆனால் அது அதிக உணர்வுபூர்வமான ஒன்றாக இல்லை, அது ஒரு மிகுந்த உணர்ச்சிமயமான நிகழ்ச்சி இல்லை என்று நான் சொல்வேன். பெருமளவிலான கிராம மக்களுக்கான மற்றும் சுற்றியுள்ள சமூகத்திற்கான [sic] கால்நடைகளின் அழைப்பு போன்றும் பொதுமக்களுக்கு வெளிப்படையாக இல்லாது போலுமே இருந்தது” என்று சொல்வேன்” என்று கூறினார். விழாவின் போது, முன்னாள் சி.ஐ.ஏ இயக்குனர் லியோன் பனெட்டா, பின்லேடன் கொலையை செயல்படுத்திய குழுவை அங்கீகரித்ததுடன் ஒரு சிறு வகைப்படுத்தப்பட்ட தகவலின் மூலம் தரைப்படை தளபதியின் பெயரை அடையாளம் கண்டு கொண்டார். போல் அதில் கலந்து கொண்டதனால் தளபதியின் அடையாளத்தின் அந்தரங்கத்தன்மை வெளிவந்துவிட்டது குறித்து காங்கிரஸில் சில குடியரசுவாதிகள் புலம்பிக் கொண்டிருக்கின்றனர். அவர்கள் பயப்பட ஒன்றுமில்லை. அமெரிக்க இராணுவ உளவுத்துறை அமைப்பின் பக்தியுள்ள பணியாளர்களாக இருப்பார்கள் என்று பிகெலோவும் போலும் தங்களை தாங்களே நிரூபித்திருக்கிறார்கள். புதிய பாணியான, சித்ரவதைக்கு சார்பான “கலைப் படத்தின்” கண்டுபிடிப்பாளர்களான, இந்த இழிவான நபர்களுடன் சி.ஐ.ஏவின் இரகசியங்கள் பாதுகாப்பாக இருக்கின்றன. படுகொலையாளர்கள் மற்றும் சித்ரவதையாளர்களுடன் கூடிப்பழகி, சி.ஐ.ஏ. நிகழ்ச்சிக்கு போல் சரியாகப் பொருந்துகிறார் என்பது வெளிப்படை. எத்தனை குற்றங்கள், எத்தனை இறப்புகள், எத்தனை பரந்த துயரங்களுக்கு அதில் கலந்து கொள்பவர்கள் பொறுப்புள்ளவர்களாக இருப்பார்கள்? அதைக் கணக்கிடுவது மிகக் கடினம். போல் இந்த கேள்வியை தன்னிடமே கேட்டுக் கொள்ளவில்லை என்பது மட்டும் நமக்கு உறுதியாக தெரிகிறது. ஆசிரியர் மேலும் பரிந்துரைப்பவை: New revelations about filmmakers’ collaboration with CIA on Zero Dark Thirty Director Kathryn Bigelow defends her indefensible Zero Dark Thirty Kathryn Bigelow’s Zero Dark Thirty: Hollywood embraces the “dark side” |
|
|