World Socialist Web Site www.wsws.org |
European governments in crisis over US spying revelations அமெரிக்க ஒற்றுக்கேட்டல் வெளிப்படுத்தல்கள் குறித்து ஐரோப்பிய அரசாங்கங்கள் நெருக்கடியில்By
Stefan Steinberg எந்தளவிற்கு அமெரிக்கா உலகத் தொடர்பு போக்குவரத்துக்களை கண்காணித்துள்ளது என்பது குறித்த சமீபத்திய வெளிப்படுத்தல்கள், ஐரோப்பிய செய்தி ஊடக மற்றும் அரசியல் வட்டங்களிலும் எதிர்ப்புக் குரல்களுக்கும் அசௌகர்யத்தின் வெளிப்பாடுகளுக்கும் இட்டுச்சென்றுள்ளன. கடந்த வெள்ளியன்று முன்னாள் CIA ஊழியர் எட்வார்ட் ஸ்னோவ்டன் வெளியிட்ட தகவல்படி, NSA, உலகம் முழுவதும் தொலைபேசி, இணைய தள தொடர்பு முறைகளை அடித்தளமாக கொண்ட ஏராளமான தகவல்களைச் சேகரித்துள்ளது. “சூடான வரைபடங்கள்” என அழைக்கப்படும் ஒற்றுக்கேட்டல் செயல்பாடுகள் NSA அதன் விரோதிகள் எனக் கருதப்படும் நாட்டினதும் மற்றும் அதன் நீண்ட கால நட்பு நாடுகளை ஒற்றுக்கேட்பதிலும் சிறிதும் தயக்கத்தை காட்டவில்லை என்பதைத் தெளிவாக்குகிறது. கார்டியன் செய்தித்தாளில் வெளியிடப்பட்ட NSA இன் சூடான வரைபடம், குறைந்தப்பட்சம் 3 பில்லியன் தகவல்கள் தொகுப்புகள், பல நபர்கள், நிறுவனங்கள், வணிகங்கள் என ஐரோப்பியக் கண்டம் முழுவதும் மார்ச் 2013ல் மட்டும் சேகரிக்கப்பட்டன என்பதை வெளிப்படுத்துகிறது. ஒவ்வொரு ஐரோப்பிய நாடும் கண்காணிப்பிற்கு உட்படுத்தப்பட்டது, கண்டத்தின் மிகப் பெரிய நாடான ஜேர்மனி மிக அதிகக் கண்காணிப்பிற்கு உட்பட்டது. செவ்வாய் தலையங்கங்கள் மற்றும் அறிக்கைகளில், ஐரோப்பிய அரசியல் வாதிகள் மற்றும் ஊடகப் பிரிவுகள் தங்கள் தேசிய அரசாங்கங்கள் மக்கள் மீது பாரியளவில் ஒற்றுக்கேட்டல் செய்யும் உரிமையைக் பாதுகாக்கையில் அமெரிக்கக் கண்காணிப்பு நடவடிக்கை பற்றிப் புகார் கூறின. தகவல்கள் அந்தரங்கத்தன்மைக்கு பொறுப்பான ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் விவியன் ரெடிங் NSA ஒற்றுக்கேட்டல் பிரச்சினை குறித்து அமெரிக்க அதிகாரிகளிடம் இந்தவார இறுதியில் டப்ளினில் நடக்க இருக்கும் G8 கூட்டத்தில் எழுப்புவதாகக் கூறினார். ஜேர்மனிய அரசாங்கத்தின் செய்தித் தொடர்பாளரும் ஜேர்மனிய சான்ஸ்லர் மேர்கெல் இவ்விடயம் குறித்து அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமாவுடன் பேச இருப்பதாகக் கூறினார். ஒபாமா டப்ளின் உச்சிமாநாட்டிற்குப்பின் நேரடியாக பேர்லினுக்கு பயணிப்பதாக உள்ளது. “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்ற அடிப்படையில் நியாயப்படுத்தப்படும் அமெரிக்கக் கண்காணிப்பு திட்டங்கள் பல ஆண்டுகளாக ஐரோப்பாவில் நெருடும் பிரச்சினையாகத்தான் உள்ளன. இந்த ஆண்டு ஆரம்பத்தில், ஐரோப்பிய பாராளுமன்றம் மோதல்கள், சுதந்திரம் மற்றும் பாதுகாப்பு தொடர்பான ஆய்வு மையத்தின் -Centre for the Study of Conflicts, Liberty and Security- ஆய்வு பற்றி விவாதித்தது. இந்த ஆய்வு 2012 இறுதியில் அமெரிக்க நிர்வாகம் புதுப்பித்த வெளிநாட்டு உளவு மற்றும் கண்காணிப்புத் திருத்தச் சட்டங்கள் –FISA- “ஐரோப்பிய ஒன்றியத் தகவல் இறைமைக்கு இதுவரை ஐரோப்பிய ஒன்றிய கொள்கை இயற்றுபவர்கள் பரிசீலித்துள்ள வேறு எந்தச் சட்டங்களையும் விட அதிக ஆபத்தைக் கொடுக்கும்” என்ற முடிவிற்கு வந்தது. அமெரிக்க FISA சட்டம் வெளிப்படையாக வெளிநாட்டு சந்தேகத்திற்குரிய பயங்கரவாதிகள் அல்லது அரசாங்க முகவர்கள் என்று மட்டும் இல்லாமல் தொலைத்தொடர்புகள் மற்றும் “வெளிநாட்டை அடித்தளம் கொண்ட அரசியல் அமைப்புக்கள்” இலக்கு கொள்ளப்பட இசைவைக் கொடுக்கிறது. ஐரோப்பிய ஒன்றிய அறிக்கையை இயற்றியவர்களில் ஒருவர் FISA உண்மையில் “அமெரிக்க வெளியுறவுக் கொள்கை நலன்களுக்காக அனைத்தையும் செய்யலாம் எனக் கூறுகிறது” என அறிவித்தார். இது ஐரோப்பிய செய்தியாளர்கள், செயலர்கள், ஏதாவது விடயத்தில் அமெரிக்காவுடன் பிரச்சினைக்குள்ளான அரசியல்வாதிகள் மீதும் கண்காணிப்பதை சட்டபூர்வமாக்குகிறது. முன்பு ஐரோப்பிய பாராளுமன்றம், அமெரிக்க உளவுத்துறை பரந்த முறையில் அமெரிக்காவில் நுழையும் அனைத்து ஐரோப்பிய குடிமக்கள் குறித்து விரிவான தகவல்களை கேட்டபோது தனது அதிருப்தியை வெளிப்படுத்தியிருந்தது. இந்த ஆண்டு ஆரம்பத்தில் ஐரோப்பிய ஒன்றிய ஆய்வின் பிரதிபலிப்பாக, ஐரோப்பிய ஒன்றியத்திற்கு அமெரிக்க தூதரான வில்லியம் கென்னர்ட் ஐரோப்பிய பாராளுமன்றத்தின் “பாரியளவிலான கண்காணிப்பு குறித்த அச்சங்கள் தேவையற்றவை” என அறிவித்தார். சமீபத்திய NSA ஒற்றுக்கேட்டல் திட்டம் குறித்த வெளிப்படுத்தல்கள் கென்னார்ட் ஜனவரியில் கொடுத்த உத்தவாதங்கள் பயனற்றவை எனத் தெளிவாக்குகின்றன. அமெரிக்க ஒற்றுக்கேட்டல் செயல்கள் குறித்து முன்னர் கவலைகள் தெரிவித்தபோதிலும், சமீபத்திய வெளிப்படுத்தல்கள் பற்றிய ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து உத்தியோகபூர்வ எதிர்ப்பு குறைந்த மட்டத்திலேயே உள்ளன. திங்களன்று ஐரோப்பிய பாராளுமன்றத்தில் மால்ட்சீயின் சுகாதார, நுகர்வோர் பிரிவு ஆணையாளரான ஒரு இளம் ஐரோப்பிய ஒன்றிய அதிகாரியால் எழுப்பப்பட்ட விடயத்தில் ஸ்ட்ராஸ்பேர்க்கில் NSA Prism திட்டம் “ஐரோப்பிய ஒன்றிய குடிமக்களின் அடிப்படை அந்தரங்க தகவல் உரிமைகளுக்கு ஆபத்தை உருவாக்கும் சாத்தியப்பாட்டை கொண்டுள்ளது என்று அதிக ஊக்கமின்றிப் புகார் கூறியுள்ளார். தகவல் கண்காணிப்பு மற்றும் அந்தரங்க தகவல் பாதுகாப்பில் “நேர்த்தியான சமப்படுத்தும் செயல்” அடங்கியுள்ளது என்றும், இந்த அவதூறு அமெரிக்கவிற்கும் ஐரோப்பாவிற்கும் இடையே “சிறப்பு உறவை” ஆபத்திற்கு உட்படுத்தாது எனத் தான் நம்புவதாக தெரிவித்தார். ஐரோப்பிய அரசியல்வாதிகளால் NSA செயற்பாடுகளின் அளவு குறித்து வெளிப்படுத்தியுள்ள கவலைகள் ஐரோப்பிய செய்தி ஊடகப் பிரிவுகளாலும் எதிரொலிக்கப்பட்டன. அவற்றுள் பல பரந்த ஒற்றுக்கேட்டல் திட்டத்தை அனுமதித்தற்கு ஒபாமா நிர்வாகத்தின் மீது தங்கள் ஏமாற்றத்தை வெளிப்படுத்தியுள்ளன. அதேநேரத்தில் பல செய்தித்தாட்கள் NSA சேகரித்துள்ள தகவல்கள் அமெரிக்க அரசாங்கம் மற்றும் பெருநிறுவனங்களால் வணிகப்போட்டியாளர்களுக்கு எதிரான முன்னுரிமையை பெறுவதற்குப் பயன்படுத்தப்படலாம் என்றும் சுட்டிக்காட்டியுள்ளன. NSA ஆல் அணுகப்பட்ட கூகிள், பேஸ்புக், யாகு, ஆப்பிள், மைக்ரோசாப்ட் ஆகிய அனைத்து முக்கிய கணணி தகவல் வழங்கிகள் –servers- அமெரிக்கர்களுக்கு சொந்தமான நிறுனங்கள், உலகம் முழுவதையும் அணுகுபவை என்று குறிப்பிட்ட ஸ்பெயினின் செய்தித்தாளான EL Periodic de Catalunya பின்வருமாறு எழுதுகின்றது: “ஜோர்ஜ் ஓர்வெல் அறிவித்த பெரிய அண்ணன் -அமெரிக்கா- இருக்கிறார் என்பதுமட்டுமில்லாமல், இத்தகவல்துறை காலத்தில் பெருகிய முறையில் பலநவீனக் கருவிகளையும் தன் பொறுப்பில் கொண்டுள்ளார்.” பெரிய அண்ணன் என்னும் கருத்து பல ஐரோப்பிய நாளேடுகளால் எழுப்பப்பட்டுள்ளது; ஜேர்மனியில் Süddeutsche Zeitung பத்திரிகை தனது NSA வெளிப்படுத்தல்கள் குறித்த கட்டுரைக்குக் கொடுத்த தலைப்பு “ஒபாமாவும் கண்காணிப்பும்—ஓர்வெல் ஜனாதிபதி.” என்பதாகும் இந்த அவதூறு பற்றிய ஆரம்பக் கருத்தில், பிரித்தானிய பைனான்சியல் டைம்ஸ் சர்வதேச இராஜதந்திர மற்றும் வணிக நலன்களில் அமெரிக்க ஒற்றாடல் செயல்களின் விளைவுகள் குறித்த கவலையைத் தெரிவித்துள்ளது. ஆனால், இதற்கிடையில் NSA கண்காணிப்பு தேவை, நியாயப்படுத்தப்பட முடியும் என்று வாதிடும் சில விமர்சகர்களால் வேண்டுமென்ற எதிர்த்தாக்குதல் நடத்தப்படுகிறது. முக்கிய கருத்து விளக்கத்திற்கு மறுநாளே டைம்ஸ் இரண்டு கட்டுரைகளை வெளியிட்டது; இவற்றில் கட்டுரையின் ஆசிரியர்கள் “இணைய தளத்தில் இருண்ட புறத்தைக் கண்காணிப்பில் வைத்திருப்பது அரசாங்கத்தின் நியாயமான செயலாகும்” (Gideon Rachman), “NSA சட்டத்தை பாதுகாக்கிறது, தகர்க்கவில்லை” (பிலிப் போபிட்) கூறியுள்ளனர். முக்கிய முதலாளித்துவ இத்தாலிய நாளேடு La Stampa உம் செவ்வாயன்று ஒரு கட்டுரையை வெளியிட்டு ஸ்னோவ்டனையும் சக தகவல் வெளியிடுபவரான பிராட்லி மானிங்கையும் வீரர்கள் என விவரிக்கும் முயற்சிகள் முற்றிலும் தவறானவை என அறிவித்துள்ளது. “விக்கிலீக்ஸின் பாதுகாவலரும், Datagate இல் இருக்கும் (தற்பொழுதைய வழக்கு) கணினி வல்லுனரும்.... சட்டவிரோதமாகச் செயல்பட்டு அரசாங்கத்திட்டங்களை அம்பலப்படுத்துகின்றனர். இத்திட்டங்கள் வேறுவிதமாக நிரூபிக்கப்படும் வரையில் சட்டபூர்வமானவையும் காங்கிரசின் ஆசிகளையும் பெற்றுள்ளவையுமாகும்.” ஐரோப்பிய அரசாங்கங்கள் மற்றும் செய்தி ஊடகங்கள் அனைத்தும் அமெரிக்க உளவுத்துறைப் பிரிவுகளுடன் சமரசம் செய்துள்ள நிலையில் தங்கள் ஒத்துழைப்பைத்தான் காட்டியுள்ளன. ஒரு தசாப்தத்திற்கும் மேலாக ஐரோப்பிய அரசாங்கங்கள் ஆர்வத்துடன் அமெரிக்காவின் “பயங்கரவாதத்தின் மீதான போரை” தங்கள் சொந்த உள்நாட்டுக் கண்காணிப்பு செயல்களுக்கு விரிவாக்கின. இவை அமெரிக்காவின் ஆள்கடத்தல் திட்டங்களுடன் ஒத்துழைத்ததுடன், அமெரிக்க உளவுத்துறைகளுடன் தகவல் பரிமாற்றத்தையும் செய்துகொண்டன. இத்தாலியில் இரகசியப் பிரிவு முகவர்கள் நேரடியாக CIA அதிகாரிகளுடன் கூடிச்செயல்பட்டு இத்தாலியில் நாடுகடந்து வாழ்ந்த எகிப்திய மதகுரு அபு ஒமரை நாடுகடத்த உழைத்தனர். மேலும் Spigel Online திங்களன்று பின்வருமாறு எழுதியது: ஜேர்மனியின் வெளியுறவுத்துறை அமைப்பான BND பல இரகசிய நடவடிக்கைகளை NSA உடன் கூடி நடத்துகிறது. அவற்றுள் பெரும்பாலாவை பெரிய அளவு தகவல் சேகரிப்பு ஆகும்.” இதற்கு ஈடாக NSA ஜேர்மனியின் பாதுகாப்புப் பிரிவுகளுக்கு வழமையாக தகவல்களை கொடுத்தது. NSA நடவடிக்கைகளுக்கு ஐரோப்பிய வட்டங்களில் எழுப்பப்பட்டுள்ள எதிர்ப்புக்கள் அரசியல் எதிர்ப்பை அடக்குவதை நோக்கம் கொண்ட சக்திவாய்ந்த அரசாங்கக் அமைப்பை உருவாக்குவதை எதிர்ப்பதற்கு அல்ல. இவை அனைத்தும் அத்தகைய நடவடிக்கைகளில்தான் ஈடுபட்டுள்ளன. மாறாக, இவை கவலைப்படுவது எல்லாம் உடனடி பொருளாதார, பூகோள அரசியல் பிரச்சினைகளுக்கு அப்பாற்பட்டு, அமெரிக்க அரசாங்கம் நயமற்ற முறையில் பகிரங்கமாக தன் மக்கள் மீது சர்வாதிகார அதிகாரத்தை எடுத்துக் கொண்டிருப்பது ஏகாதிபத்தியத்தின் நடவடிக்கைகள் அனைத்தினதும் கருத்தியல் கட்டமைப்புக்களை மதிப்பிழக்கச்செய்யும் அச்சுறுத்தலைக் கொண்டுள்ளது என்பதை பற்றியதாகும். இக்கவலைகள் ஜேர்மனிய நீதித்துறை மந்திரி சபீன லொய்த்கௌய்சர் ஷ்னாரென்பேர்கரால் வெளிப்படுத்தப்பட்டன. 1776ல் அமெரிக்க அரசியலமைப்பு உத்தரவாதம் கொடுத்த சுதந்திரங்களை பெரிதும் அடித்தளமாக கொண்ட அரசியலமைப்பை 1949 இல் ஜேர்மனி நிறைவேற்றியது என வாதிட்ட அவர், NSA வெளிப்படுத்தல்களின்போது “அடிப்படை உரிமைகளை பாதுகாத்தல் தீவிரமாக கவனத்திற்கு எடுக்கப்படுவதில்லை என்ற உணர்வு ஏற்படுவதை தவிர்ப்பது என்பது முக்கியம்.” என எச்சரிக்கிறார்: அமெரிக்கத் தலைமையிலான “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்பது ஜனநாயகத்தின் மீதான தாக்குதல்கள், வெளிநாடுகளில் நடத்தப்படும் போர்கள் ஆகியவற்றை நியாயப்படுத்தப் பயன்படுத்தப்படுகின்றன. சிரியாவில் தற்போது நடைபெறுவதுபோல் ஒவ்வொரு நாட்டின் மீதும் படையெடுக்கையில் அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் “சுதந்திரம்”, “ஜனநாயகம்” ஆகியவற்றை பாதுகாப்பவை என்று காட்டிக் கொள்கின்றன. ஸ்னோவ்டன் வெளிப்படுத்தல்கள் அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் பாரிய அரசியல் தாக்கங்களை கொண்ட இப்போலித்தனத்தை இன்னும் அம்பலப்படுத்தியுள்ளன. |
|