சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan president signs “strategic cooperative partnership” with China

இலங்கை ஜனாதிபதி சீனாவுடன் "மூலோபாய கூட்டுறவு இணைப்பு" உடன்படிக்கையை கைச்சாத்திட்டார்

By Panini Wijesiriwardane
11 June 2013

use this version to print | Send feedback

இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ சீனாவுக்கு கடந்த மாத கடைசியில் விஜயம் செய்த போது, இரண்டு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை மேம்படுத்த "மூலோபாய கூட்டுறவு இணைப்பு" ஒப்பந்தம் ஒன்றில் சீன ஜனாதிபதி ஹி ஜின்பிங்குடன் கைச்சாத்திட்டார். பெய்ஜிங் மற்றும் கொழும்புக்கு இடையேயான நெருக்கமான உறவுகளை அமெரிக்கா மற்றும் இந்தியாவும் வரவேற்கப் போவதில்லை, இதனால் தெற்காசியாவில் மேலும் பதட்ட நிலைமைகளே அதிகரிக்கும்.

புதிய ஒப்பந்தமானது வர்த்தக மற்றும் பொருளாதார உறவுகளை உள்ளடக்கியுள்ள அதேவேளை, அது பெரும் சட்ட அமலாக்கல் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்புகளையும் உள்டக்கியுள்ளது. உயர் மட்ட பரிமாற்றங்களை பேணுவதோடு "தேசிய சுதந்திரம்", "இறைமை" மற்றும் "பிராந்திய ஒருமைப்பாட்டை" பாதுகாப்பதில் இரு நாடுகளுக்கும் இடையில் அரசியல் தொடர்பாடல் மற்றும் ஒத்துழைப்பு விரிவாக்கப்படவுள்ளன.

தீவின் உள்நாட்டு யுத்தத்தின்போது மனித உரிமை மீறல்கள் சம்பந்தமாக அணுகுமாறு இலங்கைக்கு அழைப்பு விடுத்து, ஐ.நா. மனித உரிமைகள் சபையில் வரையறுக்கப்பட்ட தீர்மானங்களை நிறைவேற்ற அமெரிக்கவும் அதன் நட்பு நாடுகளும் மேற்கொண்ட முயற்சிகளை எதிர்ப்பதில், இராஜபக்ஷ அரசாங்கத்துக்கு சீனா ஏற்கனவே ஆதரவளித்துள்ளது. தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான கொழும்பின் இனவாத யுத்தத்தை ஆதரித்த வாஷிங்டன், பெய்ஜிங்கிடம் இருந்து தூர விலகியிருக்க இராஜபக்ஷவுக்கு அழுத்தம் கொடுப்பதற்காக மனித உரிமைகள் பிரச்சினையை சுரண்டிக் கொண்டது.

பதிலுக்கு, ஆசியாவில் சீன செல்வாக்கை கீழறுப்பதற்கு வாஷிங்டன் மேற்கொள்ளும் உக்கிரமான பிரச்சாரத்திற்கு எதிராக கொழும்பின் ஆதரவை பெய்ஜிங் எதிர்பார்க்கும். இந்திய மேலாதிக்கத்திலான ஒரு பிராந்திய பொருளாதார முகாமான, பிராந்திய ஒத்துழைப்புக்கான தெற்காசிய சம்மேளனத்துடன் (சார்க்), தனது ஒத்துழைப்பை அதிகரிக்க சீனாவுக்கு ஆதரவளிப்பதாக இலங்கை சம்மதித்துள்ளது.

புதிய இலங்கை-சீன ஒப்பந்தம் பற்றிய இந்திய கவலைகளை வெளிப்படுத்திய கருத்தாய்வாளரும் முன்னாள் தூதருமான எம்.கே. பத்ரகுமார், "இந்திய இராஜதந்திரத்துக்கு வல்லமை மிக்க சவால்" என விவரித்தார். இன்டியன் பன்ச்லைனில் (Indian Punchline) எழுதிய பத்ரகுமார், தெற்காசிய அரசியலில் ஒரு "முக்கிய அடையாள நிகழ்வு" என விவரித்தார். "அதை பற்றி எந்த தவறும் விடக் கூடாது. மூலோபாய கூட்டுறவு இணைப்பானது பெய்ஜிங் [இலங்கை உடனான] இருதரப்பு உறவுகளுக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கின்றது என்பதை குறிக்கும் உறவுகள் சம்பந்தமான ஒரு வடிவமே இந்த உடன்படிக்கை" என அவர் கூறினார்.

இந்த மூலோபாய கூட்டானது இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு, நிதி உதவி மற்றும் சுற்றுலா ஒத்துழைப்பு உட்பட ஒரு தொகை பொருளாதார விடயங்களையும் உள்ளடக்கியது.

இராஜபக்ஷ, சீனாவிற்கு சொந்தமான கிரேட் வால் இண்டஸ்ட்ரி கோப்பரேஷன் (Great Wall Industry Corporation) உடன் இணைந்து, 320 மில்லியன் டொலர் செலவில் இலங்கை தனியார் நிறுவனம் ஒன்றின் மூலம் ஒரு தொலைத்தொடர்பு செயற்கைக் கோளை தொடங்குவது பற்றியும் கலந்துரையாடினார். இந்திய ஊடகங்களின் படி, இந்திய தேசிய பாதுகாப்பு ஆலோசகர் சிவசங்கர் மேனன், உடனடியாக இந்தியவின் பாதுகாப்புக்கு இதன் தாக்கங்களை மதிப்பீடு செய்ய அழைப்பு விடுத்தார். இந்திய விண்வெளி ஆராய்ச்சி அமைப்பு, இலங்கை செயற்கைக்கோளை உருவாக்கி இயக்க உதவ முன்வருவதன் மூலம், சீனவின் திட்டத்தை எதிர்க்க வேண்டும் என்றும் யோசனை தெரிவிக்கப்பட்டுள்ளது.

பெய்ஜிங், குறிப்பாக 1.5 பில்லியன் டொலர் செலவில் வடக்கு நகரான யாழ்ப்பாணத்தையும் மத்திய மலைநாட்டின் கண்டி நகரையும் இணைக்கும் வடக்கு அதிவேக நெடுஞ்சாலை போன்ற உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக புதிதாக 2.2 பில்லியன் டொலர் கடன் வழங்கியது. இந்தியா, தீவில் தமிழர்கள் பெரும்பான்மையாக வாழும் வடக்கு மாகாணத்திற்கு பிராந்திய சுயாட்சி வடிவம் கொடுக்க இலங்கைக்கு அழுத்தம் கொடுக்கும் அதேவேளை, சீனா இந்த பகுதியின் மீதும் அதன் வளங்கள் மீதும் மத்திய அரசாங்கத்தின் கட்டுப்பாட்டை பலப்படுத்த கொழும்புக்கு உதவுகிறது.

இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் ஜீ.எல். பீரிஸ், வாஷிங்டன் மற்றும் புது தில்லியின் கவலைகளை தணிக்க முயற்சித்தார். சீனாவின் அரசுக்குச் சொந்தமான குளோபல் டைம்ஸ் பத்திரிகைக்கு அளித்த பேட்டியில், அவர் சீனா மற்றும் இலங்கைக்கு இடையேயான நட்பு மற்றவர்களை ஓரங்கட்டுவதை இலக்காகக் கொண்டதல்ல என்று அறிவித்தார். எந்த நாட்டினதும் பெயர் குறிப்பிடாமல், "[மற்றைய சக்திகளால்] வெளிப்படுத்தப்பட்ட அச்சங்களுக்கு அடித்தளம் இல்லை", எனக் கூறிய அவர், சீனாவுடனான நட்பு "மற்ற நாடுகளின் நலன்களை பாதிக்காது," என்று மேலும் தெரிவித்தார்.

பீரிஸ் கருத்துக்கள், ஒபாமாவின் "ஆசியாவில் மையங்கொள்ளும்" திட்டத்தின் ஒரு பகுதியாக, இப்பிராந்தியம் முழுவதும் சீனவின் செல்வாக்கை கீழறுப்பதற்கு முயற்சிக்கும் வாஷிங்டனை, சமாதனப்படுத்தப் போவதில்லை. அமெரிக்க, குறிப்பாக விடுதலை புலிகளுக்கு எதிரான கொழும்பின் யுத்தத்தின் போது, பெய்ஜிங் இராணுவ மற்றும் நிதி உதவிகளை வழங்கியதன் விளைவாகவே சீனா மற்றும் இலங்கைக்கு இடையேயான நெருக்கமான உறவுகளைப் பற்றி அக்கறைகொண்டுள்ளது.

இந்திய பெருங்கடல் ஊடான முக்கிய கப்பல் பாதைகளுக்கு அருகில், தீவின் தெற்கில் மூலோபாய முக்கியத்துவத்துடன் அமைந்துள்ள அம்பாந்தோட்டை துறைமுகத்தை கட்டியெழுப்புவது உட்பட, சமீப ஆண்டுகளில் இலங்கையில் பல பிரதான திட்டங்களில் சீனா ஈடுபட்டு வருகிறது. இந்த துறைமுகமானது ஆப்பிரிக்கா மற்றும் மத்திய கிழக்குடனான அதன் பெரிய மற்றும் வளரும் வர்த்தகத்தை பாதுகாக்க சீனாவால் கட்டப்படும் பல துறைமுகங்களில் ஒன்றாகும்.

இலங்கை சீன கடன் உதவியுடன் அம்பாந்தோட்டை அருகே புதிய மத்தல சர்வதேச விமான நிலையத்தை பூர்த்தி செய்துள்ளது. கொழும்பு துறைமுகத்தின் தென்முனை விரிவாக்கமும் சீனா நிதியில் முன்னெடுக்கப்படுகிறது. 2007ல் இருந்து 2011 வரை, சீனா இலங்கைக்கு 2.13 பில்லியன் டொலர் கடனுக்கு ஒப்புதலளித்துள்ளது.

சீன நிறுவனங்களும் பெரிய திட்டங்களில் ஈடுபட்டுள்ளன. இலங்கை 11.9 பில்லியன் ரூபாய்களில் அல்லது 87 மில்லியன் டொலர் செலவில், மத்திய கொழும்பில் ஆசியாவின் மிகப்பெரிய கோபுர தொகுதி ஒன்றை உருவாக்க உள்ளது. நெலும் குலுன அல்லது லோட்டஸ் டவர், இரண்டு சீன நிறுவனங்களால் கட்டப்படவுள்ளது.

பெய்ஜிங்கிற்கான இராஜபக்ஷவின் பயணம், அவர் சீன ஒத்துழைப்பு மற்றும் நிதி உதவியில் தொடர்ந்து சார்ந்திருப்பதை காட்டுகின்றன. ஆனால் அவர் வாஷிங்டனை பகைத்துக்கொள்ள அஞ்சுவதோடு அமெரிக்கவுடன் உறவுகளை மேம்படுத்தவும் விரும்புகிறார். அமெரிக்காவுக்கான இலங்கையின் தூதர் ஜாலிய விக்ரமசூரிய சமீபத்தில் அறிவித்ததாவது: "இலங்கையை கட்டியெழுப்புவதில் அது அமெரிக்காவுடனா அதன் 200 வருடகால வர்த்தக கூட்டின் மீது நன்கு நிலைகொண்டுள்ளதுடன், வரவிருக்கும் தசாப்தங்களில் ஒரு வலுவான பூகோள அரசியல் மற்றும் மூலோபாய பங்காளியாக ஆகும் நிலையிலும் உள்ளது."

எல்லாவற்றுக்கும் மேலாக, வட்டி விகிதங்கள் சர்வதேச நாணய நிதியமும் (IMF) உலக வங்கியும் விதிப்பதை விட மிக அதிகமானதாக இருக்கும் நிலையில், சீன கடன்கள் இலங்கையின் பெருகிவரும் கடன் நெருக்கடியை ஊதி பெருகச் செய்கின்றன. நாட்டின் தேசிய கடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 80 சதவீதத்துக்கும் கூடுதலாக "உயர்ந்த அளவிலானதாக" உள்ளது என்று அண்மையில் சர்வதேச நாணய நிதியம் எச்சரித்தது. "இலங்கையின் வெளியுறவு பொறுப்புடைமை மற்றும் போதுமான இருப்பு சம்பந்தமாகவும் கவனமாக இருக்க வேண்டும்," என அது பிரகடனம் செய்துள்ளது.

இராஜபக்ஷ அரசாங்கம், ஏற்கனவே ஊதிய முடக்கம் மற்றும் சமூக செலவுகளில் கடுமையான வெட்டுக்களை விளைவாக்கிய, சிக்கன நடவடிக்கைகளுக்கான சர்வதேச நாணய நிதியத்தின் கோரிக்கைகளால் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ள தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் எதிர்ப்பை சந்தித்து வருகிறது. சர்வதேச நாணய நிதியம், 2014ல் வரவு செலவு திட்ட பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 5.2 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று வலியுறுத்தி வருகிறது.

அரசாங்கம், சீனாவுடனான அதன் நெருக்கமான உறவுகள் சம்பந்தாமக, பாரம்பரியமாக வாஷிங்டனுடன் நெருக்கமாக உறவு வைத்துள்ள எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சியின் (யூ.என்.பி.) விமர்சனங்களை எதிர்கொள்கிறது. ஒரு நிருபர்கள் மாநாட்டில் உரையாற்றிய ஐ.தே.க பொதுச் செயலாளர் திஸ்ஸ அத்தநாயக்க, "சீனாவில் இருந்து அரசாங்கம் பெற்றுள்ள பாரிய கடன்கள், இலங்கையர்களை ஒரு சீன காலனியின் குடிமக்களாவதற்கு தள்ளிவருகிறது," என்று அறிவித்தார்.

சீனாவைக் கட்டுப்படுத்த ஒபாமா நிர்வாகம் எடுக்கும் முயற்சிகள், ஜனாதிபதி இராஜபக்ஷவுக்கு சீனா மற்றும் அமெரிக்காவுக்கு இடையேயான தனது சமநிலைப்படுத்தும் செயலை பராமரிக்க பெருகிய முறையில் சிக்கலை ஏற்படுத்தும். கொழும்பு அரசியல் ஸ்தாபனம் எதிர்கொள்ளும் பொருளாதார மற்றும் அரசியல் நெருக்கடியை குவிக்கும் பிராந்திய போட்டிச் சுழலில் முழு இலங்கையும் இழுக்கப்படுகின்றது.