World Socialist Web Site www.wsws.org |
Obama administration initiates criminal prosecution of NSA whistleblower ஒபாமா நிர்வாகம் NSA இன் தகவல் வெளிவிட்டவர் மீது குற்றவியல் வழக்கை ஆரம்பிக்கிறதுBy Thomas Gaist தேசியப் பாதுகாப்பு ஆணையத்தின் (NSA) தகவல் வெளிவிட்டவரான எட்வார்ட் ஜோசப் ஸ்னோவ்டன் அரசாங்கத்தின் பாரிய ஒற்று வேலையை விபரிக்கும் இரகசிய ஆவணங்களை வெளியிட்டதானது பெரும் கூக்கூரல்களையும் அச்சுறுத்தல்களையும் கண்டனங்களையும் அமெரிக்க அரசியல் ஸ்தாபனம் முழுவதிலுருந்தும் தூண்டியுள்ளது. FBI ஆனது ஸ்னோவ்டனை கண்டுபிடிக்க முயற்சிகளை முடுக்கிவிட்டுள்ளது; அவர் தன்னுடைய பாதுகாப்பு குறித்த கவலையுடன் ஹாங்காங்கில் இருந்த தன்னுடைய ஹோட்டல் அறையிலிருந்து வெளியேறியுள்ளார். நீதித்துறையானது கசிவுகள் குறித்து குற்றவியல் விசாரணையை ஆரம்பித்துள்ளது என்று செய்தித்துறைத் தொடர்பாளர் நந்தா சிட்ரே வார இறுதியில் உறுதிப்படுத்தினார். பிரித்தானியாவின் கார்டியன் மற்றும் வாஷிங்டன் போஸ்ட்டிற்கு கடந்த வாரம் கொடுத்த தகவல்களில் ஸ்னோவ்டன் பென்டகனை தளமாகக் கொண்ட NSA நடத்தும் இரண்டு இரகசியத் திட்டங்களை அம்பலப்படுத்தியுள்ளார்; அவை கிட்டத்தட்ட அனைத்து அமெரிக்க மக்களுடைய தொலைப்பேசி சான்றுகளை சேகரிப்பதுடன் உலகம் முழுவதும் இருக்கும் மில்லியன் கணக்கான மக்களுடைய மின்னஞ்சல் தொடர்புகளையும் இடைமறித்து தலையீடு செய்துள்ளது. இந்த வெளியீடுகளால் ஐரோப்பா இன்னும் பிற இடங்களில் அரசியல்வாதிகள் மற்றும் செய்தி ஊடகங்களிலிருந்து விமர்சனங்களை தூண்டியுள்ளன; உலகம் முழுவதும் நடத்தப்படும் ஒற்றுக் கேட்டல் நடவடிக்கைகள், அமெரிக்காவின் எதிரிகளினதும் மற்றும் கூட்டணி நாடுகளினதும் தேசிய நலன்களுக்கு அச்சுறுத்தலாக காணப்படுகின்றன. அமெரிக்காவில், அமெரிக்க அரசியலமைப்பின் உரிமைகளுக்கான சட்டம் அப்பட்டமாக மீறப்பட்டமையானது இரு பெரிய வணிகக் கட்சிகளாலும் ஆதரிக்கப்பட்டுள்ளது; இவை ஜனாதிபதி மற்றும் உளவுத்துறை அதிகாரிகளின் கூற்றான இத்திட்டங்கள் பயங்கரவாதிகளை அலசி எடுக்கத் தேவை என்பதை எதிரொலிக்கின்றன. உண்மையில், இக்கண்காணிப்புத் திட்டங்களின் இலக்குகள் பயங்கரவாதிகள் அல்ல; மாறாக தொழிலாளர்கள், இளைஞர்கள், மாணவர்கள் மற்றும் ஆளும் வர்க்கத்தால் சாத்தியமான அரசியல் எதிர்ப்பாளர்களாக கருதப்படுபவர்கள். பெரிய குற்ற விசாரணை அல்லது பொலிஸ் அரச கண்காணிப்பு என NSA ஆல் கட்டமைக்கப்பட்டுள்ளது குறித்து காங்கிரஸ் விசாரணை நடத்துவதற்குப் பதிலாக, ஸ்னோவ்டனுக்கு எதிராகப் பதிலடி கொடுக்க வேண்டும் என்னும் கோரிக்கைகள்தான் மேலாதிக்கம் கொண்டுள்ளன. ஸ்னோவ்டன் கொடுத்துள்ள அசாதாரண வீடியோ பேட்டியில் —ஞாயிறன்று அவரே முன்வந்து கார்டியன் மற்றும் வாஷிங்டன் போஸ்ட்டிற்கு ஆதாரத்தை அடையாளம் காட்டினார்— 29 வயது NSA ஒப்பந்தக்காரர் தான் அமெரிக்க அரசாங்கத்தால் அந்நாட்டிற்குக் கொண்ட செல்லப்பட்டு, வாழ்நாள் சிறைதண்டனை அல்லது தூக்குத் தண்டனைக்கு இலக்காகக் கூடும் என எதிர்பார்ப்பதாகக் கூறினார். ஜனநாயக உரிமைகளுக்கு எதிராக நடக்கும் சதி குறித்து மக்களை எச்சரிக்கை செய்ய தனது உயிரை தியாகம் செய்யவும் தயாராக வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது என துணிச்சலாக அறிவித்தார். வாஷிங்டனின் உத்தியோகபூர்வ விடையிறுப்பு குறித்த அவருடைய மதிப்பீடு விரைவில் உறுதிபடுத்தப்பட்டது. செனட் உளவுத்துறைக் குழுவின் ஜனநாயகக் கட்சித் தலைவியான டயனே பீன்ஸ்டின், ஞாயிறன்று NSA திட்டங்கள் குறித்த செய்திகளை கசிய விட்டதற்கு பொறுப்பானவர்கள் மீது குற்ற விசாரணை வேண்டும் என அழைப்புவிடுத்தபின், திங்களன்று ஸ்னோவ்டன் பற்றிக் கூறினார் “அவர் உறுதிமொழியை மீறியுள்ளார், சட்டத்தை மீறியுள்ளார். இது தேசத்துரோகம்.” அரசாங்கத்தின் ஒற்று நடவடிக்கைத் திட்டங்களுக்கு இரு கட்சி ஆதரவை அடிக்கோடிட்டுக் காட்டும் வகையில் பீன்ஸ்டின் ஞாயிறன்று ஏபிசி நியூஸின் “இந்தவாரம்” நிகழ்வில் பிரதிநிதிகள் மன்றத்திலுள்ள குடியரசுக் கட்சித் தலைவர் மைக் ரோஜர்ஸுடன் தோன்றி அறிவித்தார், அதாவது “இந்த அம்பலப்படுத்தல்களில் தொடர்பு உடையவர்கள் குற்ற விசாரணைக்கு உட்படுத்தப்பட வேண்டும் என நான் நினைக்கிறேன்.” பாக்ஸ் நியூஸின் பகுப்பாய்வாளரும் ஓய்வு பெற்ற லெப்டினென்ட் கேணலுமான ரால்ப் பீட்டர்ஸ் திங்களன்று ஸ்னோவ்டனின் தேசத்துரோகத்திற்கு தூக்கிலிடப்பட வேண்டும் என்று கூறினார். “தேசத்துரோகம் பற்றி நாம் தீவிரமாக இருக்க வேண்டும் என நான் கூறுகிறேன். பிராட்லி மானிங், எட்வார்ட் ஸ்னோவ்டன் போன்றார் விவகாரங்களில் நாம் மறுபடியும் மரண தண்டனையைக் கொண்டுவர வேண்டும்.” குடியரசுக் கட்சியின் காங்கிரஸ் உறுப்பினரான நியூ யோர்க்கின் பீட்டர் கிங், ஹாங்காங்கில் இருந்து ஸ்னோவ்டன் நாடு கடத்தப்பட வேண்டும் எனக் கோரினார். “எந்த நாடும் இந்த நபருக்குத் தஞ்சம் கொடுக்கக்கூடாது என்பதை அமெரிக்கா தெளிவுபடுத்த வேண்டும்.... இந்த நபர் நாட்டிற்கு ஆபத்தானவர்... NSA தகவல்களை உண்மையில் அவர் கூறுவதுபோல் அவர்தான் கசியவிட்டதாக இருந்தால், அமெரிக்க அரசாங்கம் முழுச் சட்டத்துணையுடன் அவர் மீது குற்றவிசாரணை நடத்தி, மிக விரைவில் அவரை நாடு கடத்தித் தருவிக்க வேண்டும்.” ஸ்னோவ்டன் மீது குற்றவிசாரணை நடத்துவது ஒபாமா நிர்வாகத்திற்கு முன்னோடியில்லாத வகையில் தகவல் வெளிவிடுவோர்களை இலக்கு கொள்ளும் சான்றை அளிக்கும். இந்த நிர்வாகம் அனைத்து முந்தைய நிர்வாகங்கள் இணைந்து செயல்பட்டதை விடக் கூடுதலான தனிநபர்களை, ஒற்று நடவடிக்கை சட்டத்தின் கீழ் குற்ற விசாரணைக்கு உட்படுத்தியுள்ளது. CIA உடைய “இருண்ட இடங்களில் சித்திரவதை குறித்து தேசிய தொலைக் காட்சியில் அம்பலப்படுத்தியதற்காக சிறைக்கு அனுப்பப்பட்டவர்களில் ஒரு முன்னாள் CIA முகவரும் அடங்குவார். அதே நேரத்தில் நிர்வாகம் சித்திரவதைத் திட்டங்களை இயற்றி செயல்படுத்திய புஷ் நிர்வாக அதிகாரிகளை குற்றவிசாரணைக்கு உட்படுத்த மறுத்துவிட்டது. வெள்ளை மாளிகை செய்தித்துறை செயலர் ஜே கார்னே திங்களன்று “இந்த விவகாரத்தில் விசாரணை நடக்கிறது என்பது வெளிப்படை” என்று உறுதிப்படுத்தினார். விசாரணை பற்றி அவர் மேலே எதுவும் கூற விரும்பவில்லை; அதே நேரத்தில் ஜனாதிபதி ஒபாமா, புஷ் சகாப்த கொள்கைகளை, பிடியாணை இல்லாத கண்காணிப்புக்கள் மாற்றப்படும் எனக்கூறியதை அபத்தமாக வலியுறுத்தினார். “இந்த அரசாங்கம் இந்த வழக்கில் பின்வாங்காது” என்றார் மைக்கேல் வாடிஸ்; இவர் கிளின்டன் நிர்வாகத்தில் தேசிய பாதுகாப்புத் துறையின் இணைத் தலைமை வக்கீலாக இருந்தவர். கொலோரோடோவின் செனட்டரான மார்க் உடால், அரசாங்க ஒற்று நடவடிக்கை பற்றி “ஒரு வெளிப்படையாகக் குறைகூறுபவர்” என எப்பொழுதும் விவரிக்கப்படுபவர், அரசாங்கத்தின் “பயங்கரவாதத்தின் மீதான போருக்கு” தன்ஆதரவை பெரும் முயற்சி எடுத்து அறிவித்தார். “பயங்கரவாதம் என்பது ஓர் உண்மை அச்சுறுத்தல் என்பதை ஒப்புக் கொண்ட தொடக்க நிலையிலிருந்து நான் வருகிறேன்; அமெரிக்க மக்களை நாம் காப்பாற்ற வேண்டும்” என்று ஞாயிறன்று அவர் கூறினார். உரிமைகளுக்கான சட்டம், காரணமற்ற ஒருதலைப்பட்ச சோதனைகள், பறிமுதல் செய்வது உட்பட நான்காவது சட்டத் திருத்தம் கூறியுள்ள தடைகள், தேசியப் பாதுகாப்புத் தேவைகளுக்கு எதிராக சமநிலை செய்யப்பட வேண்டும் என்று அவர் கூறினார். உடாலுடைய “சமநிலை செய்தல்” என்பது குடியுரிமைகளின் காவலர்கள் எனக்காட்டிக் கொள்ளும் சிறிய எண்ணிக்கையில் இருக்கும் ஜனநாயக கட்சி அரசியல்வாதிகளின் இழிநிலை, போலித்தனம் ஆகியவற்றைத்தான் விளக்குகிறது. இவர்கள் “பயங்கரவாதத்தின் மீதான போரை” பாதுகாக்க வேண்டும் எனத் தொடங்குகின்றனர். இது ஏகாதிபத்தியப் போர் மற்றும் ஜனநாயக உரிமைகளை அழித்தலுக்கு ஒரு மறைப்பு என்பதைத் தவிர வேறு ஒன்றும் இல்லை. அரசு விரும்பும்போது செயல்படுத்துவதற்கு ஒரு பரிந்துரை என்று நான்காவது சட்டத் திருத்தம் கருதப்படவில்லை. இன்று NSA நடத்தும் பரந்த, இரகசிய ஒற்று நடவடிக்கைகள் அமெரிக்க அரசியலமைப்பில் கொடுக்கப்பட்டுள்ள ஜனநாயக உரிமைகளுடன் முற்றிலும் இயைந்திருக்கவில்லை. திங்களன்று கார்டியன், “எட்வார்ட் ஸ்னோவ்டன்: நம்மை அமெரிக்காவிலிருந்து காப்பாற்றுபவர்” என்னும் தலைப்பில் வெளியிட்ட கட்டுரை ஒன்றில், டானியல் எல்ஸ்பேர்க் கடந்த 12 ஆண்டுகளில் ஒரு “நிர்வாக சதி” வெளிந்துள்ளது என எழுதியுள்ளார். “9/11ல் இருந்து இரகசியமாக, பின்னர் பெருகிய முறையில் வெளிப்படையாக, இந்த நாட்டில் 200 ஆண்டுகளுக்கு முன்பு போராடிய உரிமைகளுக்கான சட்டம் தகர்க்கப்பட்டுள்ளது.” |
|