சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama administration collecting phone records of tens of millions of Americans

ஒபமா நிர்வாகம் பல மில்லியன் அமெரிக்கர்களுடைய தொலைப்பேசிச் சான்றுகளைச் சேகரிக்கிறது

By Joseph Kishore 
7 June 2013

use this version to print | Send feedback

தேசிய பாதுகாப்பு நிறுவனம் (NSA) ஏற்பாடு செய்துள்ள திட்டத்தின்படி, ஒபாமா நிர்வாகம் ஒரு இரகசிய, சட்டவிரோத வலையாக பல நூறு மில்லியன் அமெரிக்க மக்களுடைய விரிவான தொலைபேசி சான்றுகளை சேகரிக்கும் பணியில் ஈடுபட்டுள்ளது.

புதன்கிழமை, பிரிட்டிஷ் கார்டியன் பத்திரிகை, வெளிநாட்டு புலனாய்வு கண்காணிப்பு நீதிமன்றம் வழங்கிய இரகசிய நீதிமன்ற உத்தரவை வெளியிட்டு, தொலைத்தொடர்பு பெருநிறுவனம் வெரிசோனின் கிளை ஒன்றை அன்றாடம் அதன் வாடிக்கையாளர்கள் அனைவருடைய அழைப்புக்கள் குறித்த “முழுவிவரங்களையும்” கொடுக்குமாறு உத்தரவிட்டுள்ளது. வெரிசோனுக்கு கிட்டத்தட்ட 121 மில்லியன் வாடிக்கையாளர்கள் உள்ளனர், குறிப்பாக இலக்கு வைக்கப்பட்டுள்ள கிளையான வெரிசோன் வணிகப் பணிகளில் 10 மில்லியன் தொலைபேசி இணைப்புக்கள் உள்ளன.

தொலைபேசி பற்றிய முழுத் தகவல்களில், அழைப்பவருடைய தொலை பேசி எண்கள், பெறுபவருடைய எண்கள், இருக்கும் இடம் பற்றிய தகவல் (அருகில் இருக்கும் தொலைபேசி கோபுரம் அல்லது GPS பற்றிய தகவல்) ஆகியவையும் அழைப்பின் நேரம், இணைப்பில் இருந்த நேரம் ஆகியவையும் அடங்கும். இத்தகவல் அரசாங்கத்திற்கு சமூக, தொழில்முறை, அரசியல் தொடர்புகள் குறித்த முழுச் சித்திரத்தையும் கட்டமைக்கவும் உத்தரவின்படி வந்துள்ள அனைவருடைய தொலைபேசி எண் கொண்டவரின் அன்றாட நடவடிக்கைகள் பற்றிய புரிதலைப் பெறவும் உதவும்.

கார்டியன் வெளியிட்டுள்ள உத்தரவு, இந்த ஆண்டு ஏப்ரலில் அது வெளியிடப்பட்ட தேதியில் இருந்து மூன்று மாதங்களுக்கு, ஜூலை 19 வரை பொருந்தும். வாஷிங்டன் போஸ்ட் கருத்துப்படி, “ஒரு சட்டக் கூறுபாட்டு வல்லுனர் புதன்கிழமை அன்று இந்த உத்தரவு வாடிக்கையானது, இதேபோன்ற உத்தரவை இதே நீதிமன்றம் 2006 ல் முதலில் வெளியிட்டதை புதுப்பிப்பது போல் உள்ளது” என்றார் எனக் கூறியுள்ளது.

உளவுபார்க்கும் திட்டத்தை பாதுகாக்கையில், ஜனநாயகக் கட்சி செனட்டரும், செனட் உளவுத்துறைக் குழுவின் தலைவருமான Dianne Feinstein, இதேபோன்ற அறிக்கையை வெளியிட்டு, இந்தத் தீர்ப்பு “எனக்குத் தெரிந்த வரையில்.... இது, கடந்த ஏழு ஆண்டுகளாக நடைமுறையில் இருப்பதின் சரியான மூன்றுமாதப் புதுப்பித்தல் ஆகும்.” என்றார்.

உத்தியோகபூர்வமாக கற்பிக்கப்படும் நியாயம் —ஒபாமா நிர்வாகத்தால் இரகசியமாக சட்டபூர்வக் குறிப்பாக தயாரிக்கப்பட்டிருக்கலாம்— இத்திட்டம் தேசப்பற்று சட்டத்தின் “வணிகச் சான்றுகள்” பிரிவின் கீழ் அங்கீகரிக்கப்பட்டுள்ளது. அச் சட்டத்தின்கீழ், 9/11 தாக்குதல்கள் நடந்த ஒரு மாதத்திற்குள் கையெழுத்திடப்பட்டது, வெளியுறவுத்துறை பாதுகாப்புச் சட்டத்தின் வடிவமைப்பின் கீழ் (FISA) செயல்படும் இரகசிய நீதிமன்றங்களில் இருந்து வாடிக்கையான முத்திரை கொடுக்கப்படும். இதில் நிறுவனங்கள், நூலகங்கள் மற்றும் பிற அமைப்புக்கள் எத்தகைய உறுதியான விடயங்களாக இருந்தாலும் (புத்தகங்கள், பதிவுகள், ஆய்வுக் கட்டுரைகள், ஆவணங்கள், பிற இதுபோன்றவை) ஒரு விசாரணைக்கு சர்வதேச பயங்கரவாதத்திற்கு எதிராக தேவைப்பட்டால் கொடுக்கப்பட வேண்டும் என உள்ளது.

ஒபாமா நிர்வாகத்தின் வாதம், “சர்வதேச பயங்கரவாத” விசாரணைகளுக்கு பொருத்தமான அனைத்து தொலைபேசி தரவுகளும் அடிப்படையில் கைப்பற்ற வேண்டும்.

வெரிசோனைத் தவிர மேலும் பல நிறுவனங்களும் ஈடுபட்டுள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. 2012ல் மட்டும் 212 “வணிக பதிவு” கோரிக்கைகள், FISA நீதிமன்றங்களில் இருந்தன; இவற்றின் உள்ளடக்கம் அறியப்படவில்லை.

NSA, புஷ் நிர்வாகத்தின் கீழ் இரகசிய திட்டம் ஒன்றை, வெரிசோன், AT&T, பெல்சௌத் ஆகியவற்றிடம் இருந்து தொலைபேசி தகவலை சேகரிப்பதை தொடங்கியது என 2006 ல் USA Today முதலில் வெளிப்படுத்தியது. இவை மொத்தத்தில் 224 மில்லியன் வாடிக்கையாளர்களைக் கொண்டவை —80% தரை இணைப்புக்களும், 50% தந்தியில்லா பயன்பாட்டாளர்களும் அமெரிக்காவில் என. இத்திட்டம் ஒரு தொடர் சட்டவிரோத ஒற்றுக்கேட்டல் நடவடிக்கைகளில் ஒன்றாகும், இதில் நீதிமன்ற உத்தரவு இல்லாது NSA  இனால் அமெரிக்க குடிமக்களை இலக்கு வைத்து ஒற்றுக் கேட்டலும் இருந்தது.

பொதுமக்களுடைய எதிர்ப்பை முகங்கொடுக்கையில், புஷ் நிர்வாகம் பெயரளவற்கு NSA  திட்டத்தின் பகுதிகிளைக் கைவிடும் கட்டாயத்திற்கு உட்பட்டது; அதே நேரத்தில் அவற்றை வேறு வகைகளில் தொடர்ந்தது. 2008ல் அப்பொழுது செனட்டராக இருந்த பாரக் ஒபாமா வெளிநாட்டு உளவுத்துறைக் கண்காணிப்புச் சட்டம் திருத்தப்படுவதற்கு வாக்களித்தார்; அதில் இச்சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகாரத்தின் கீழ் வரையறுக்கப்பட்டன.

முந்தைய NSA திட்டம் தொடர்கிறது என்பதும், ஒபாமா நிர்வாகத்தின் கீழ் விரிவாக்கப்பட வாய்ப்பு உள்ளது என்பதும் வெளிப்படை.

தொலைபேசி பதிவுகளின் ஒரு பரந்த தகவல் திரட்சியானது, அமெரிக்கக் குடிமக்கள் மற்றும் குடிமக்கள் என அனைவரைப் பற்றியும் இயன்ற அளவு தகவலை திட்டமிட்ட வகையில் சேகரிக்கும் உந்துதலின் ஒரு பகுதியாகும். வியாழன் அன்று வாஷிங்டன் போஸ்ட், NSA  மற்றும் FBI ஒன்பது அமெரிக்க இணைய தள நிறுவனங்களின் மத்திய சேவை கணிப்பொறிகளிடம் (central servers) இருந்து நேரடியாக ஒற்றுக் கேட்டு, தகவல் கேட்டல், வீடியோ, புகைப்படங்கள், மின்னஞ்சல்கள், ஆவணங்கள், தொடர்புகள், தரவுகள் இவற்றைப் பற்றி எடுக்கின்றன; அதையொட்டி பகுப்பாய்வாளர்கள் ஒரு நபரின் நடவடிக்கைகளையும் தொடர்புகளையும் தொடர்ந்து ஆராய இயலும். எனத் தகவல் கொடுத்துள்ளது.

போஸ்ட்டின் கருத்துப்படி, தகவல் ஒப்படைத்தலில் தொடர்புடைய நிறுவனங்களில் Microsoft, Yahoo, Google, Facebook, Paltalk, AOL, Skype, YouTube, Apple ஆகியவை அடங்கும்.

அரசாங்கம் ஒவ்வொரு மின்னணு இணைய தளம் மற்றும் தொலைபேசித் தொடர்பை அணுகமுடியும் எனத்தான் வைத்துக் கொள்ள வேண்டும்; இதில் அழைப்புக்களின் உண்மைப் பொருளுரையும் அடங்கும்; இவை முழுத்தகவலில் அடங்காது. NSA உளவுத்துறை பகுப்பாய்வாளராக இருந்து தகவல் தெரிவிப்பவராக மாறியுள்ள Russell Tice, நடப்பது இன்னும் பெரியது, அதிகம் திட்டமிடப்பட்டது, என்ன நடக்கிறது என்று எவரும் கற்பனை செய்வதைவிடப் பெரியது என்று கூறியதாக கார்டியன் மேற்கோளிட்டுள்ளது.

NSA இப்பொழுது அழைப்புக்களின் உள்ளடக்கத்தையும் பதிவு செய்யும் திறனைக் கொண்டுள்ளது எனத் தான்நம்புவதாக Tice தெரிவித்தார். “நான் இது 2015 ஐ ஒட்டி முடியும் என நினைத்தேன்” –நிறுவனம் “அனைத்து எண்முறைத் தொடர்பையும், ஓவ்வொரு சொல்லையும் பதிவு செய்ய. ஆனால் நான் நினைத்தது தவறு என நினைக்கிறேன். அவர்கள் இப்பொழுதே அதைச் செய்கின்றனர்” என்றார் அவர்.

இவை அனைத்தும் நான்காம் திருத்தமான தேவையில்லாத தேடல்கள், கைப்பற்றுதல் என அரசியலமைப்புத் தடைகளை அப்பட்டமாக மீறுவதாகும். இத்திட்டங்கள் அமெரிக்க மக்களின் முதுகுப்புறத்தே இரகசியமாக செயல்படுத்தப்படுவது, இதற்குப் பொறுப்பு உடையவர்களுக்கு இவை சட்டவிரோதம், மக்களிடையே பெரும் இகழ்வைக் கொண்டுள்ளது என நன்கு தெரியும் என்பதைத்தான் காட்டுகிறது.

ஜனநாயகக் கட்சியினர், குடியரசுக் கட்சியினர், செய்தி ஊடகங்கள் என முழு அரசியல் நடைமுறையும், அமெரிக்க மக்களுக்கு எதிரான ஒரு சதியில் உடந்தை ஆவர். அமெரிக்காவில் இருக்கும் பெரிய செய்தி ஊடகங்களுக்கு இது பற்றி நன்கு தெரியும் ஆனால் ஒபாமா மற்றும் புஷ் நிர்வாகங்களின் கோரிக்கைக்கு ஏற்ப அதை மறைத்து வைத்துள்ளன. FISA நீதிமன்ற தீர்ப்பை கசிய விட்டது அமெரிக்கச் செய்தி ஊடகம் அல்ல, பிரித்தானிய ஊடகம் என்பது குறிப்பிடத்தக்கது. கார்டியன் வெளிப்பாட்டை எதிர்கொள்ளும் வகையில், நிர்வாக அதிகாரிகளும் இரு கட்சிகளின் முக்கிய தலைவர்களும் திட்டத்தை பாதுகாக்க விரைந்து செயல்படுகின்றனர்.

ஒரு மூத்த நிர்வாக அதிகாரி, “அரசாங்கத்தின் மூன்று கிளைகளும்” ஒற்று வேலைக்கு ஒப்புதல் கொடுப்பதில் தொடர்பு கொண்டவை, “வழக்கமாக மற்றும் முழுமையாக இது எப்படிப் பயன்படுத்தப்டுகிறது” என காங்கிரசுக்கு கூறப்படுகிறது என வலியுறுத்தினார். “வெளியுறவு உளவுத்துறைக் கண்காணிப்பு சட்டத்தின் கீழ் நடக்கும் அனைத்துச் செயல்களும் உறுதியான சட்ட முறைக்குக் கீழ் நடைபெறுகின்றன” என அவர் அறிவித்தார்.

“உறுதியான சட்ட ஆட்சி” பற்றிய கூற்றுக்கள் ஒரு மோசடி ஆகும். FISA நீதிமன்றங்கள், அரசாங்கத்தின் ஒற்று பற்றிய  ஒவ்வொரு சமர்ப்பிப்புக்கும் வெறுமனே முத்திரை அளிக்கின்றன; ஒவ்வொன்றிற்கும் ஒப்புதல் கொடுக்கின்றன.

Feinstein மற்றும் Saxby Chambliss உயர்மட்ட ஜனநாயக, குடியரசுத் தலைவர்கள், இதே உளவுத்துறைக் குழுவில் இருப்பவர்கள், அவசரமாக செய்தியாளர் கூட்டத்தை வியாழன் காலை கூட்டினர். Feinstein  “இது வெறும் தகவல்களைப் பற்றிய தகவல்தான், உள்ளடக்கம் இல்லாதவை. வேறுவிதமாகக் கூறினால் தகவல் பொருளுரை பற்றி ஏதும் தெரியாது.” இத்திட்டம் “சட்டபூர்வமானது”, “காங்கிரஸிற்கு இது பற்றித் தெரியும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

செனட்டின் பெரும்பான்மை கட்சித் தலைவர், ஜனநாயகக் கட்சியின் Harry Reid, அனைவரும் “அமைதியாக இருந்து, இதைப் புரிந்து கொள்ள வேண்டும், எதுவும் புதிதல்ல என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும். இது ஏழு ஆண்டுகளாக நடைபெற்று வருகிறு” என்றார்.

மக்கள் வியப்படையக்கூடாது, “இதில் ஒன்றுமில்லை” என்னும் கூற்று, NSA  ஐ கண்காணிக்கும் தேசிய உளவுத்துறை இயக்குனர் ஜேம்ஸ் கிளாப்பர், இரண்டு மாதங்களுக்கு முன்பு ஒரு காங்கிரஸ் கூட்டத்தில், NSA அமெரிகர்களை பற்றிய தகவல்களை சேகரிக்கிறதா எனக் கேட்கப்பட்டார். இல்லை ஐயா, ... தெரிந்து இல்லை” என்று அவர் பதில் கூறினார். NSA இயக்குனர் General Keith Alexander கடந்த ஆண்டு, அமெரிக்க குடிமக்கள் பற்றிய தகவலை நாங்கள் கொண்டிருக்கவில்லை” என்பவற்றால் பொய் ஆகிறது.

அமெரிக்க தலைமை அராங்க வக்கீல் ஜெனரல் எரிக் ஹோல்டர், முன்னதாக திட்டமிட்டிருந்த சாட்சியத்தில், வியாழன் அன்று செனட் நீதித்துறை கண்காணிப்பு வரவு-செலவுத் திட்ட குழு முன், சில செனட்டர்களின் சற்று கவலைதரும் வினாக்களை ஒதுக்கித் தள்ளி, NSA  திட்டம் பற்றிய வினாக்களுக்கு, மற்றும் பிற சமீத்திய ஒற்று அவதூறுகள் குறித்து தான் விடையளிக்க மாட்டேன் என மூடிய கதவுகளுக்குப் பின் வலியுறுத்தினார்

தொலைபேசி பதிவுகள் குறித்து கசியவிட்டுள்ள நீதிமன்ற உத்தரவு, கடந்த ஆறு மாதங்களில் தொடர்ந்த போக்குகளில் சமீபத்தியது மட்டுமே; இவை அமெரிக்கா ஒரு பொலிஸ் அரசுக்கான தயாரிப்பில் முன்னேறியுள்ளது என்பதை அம்பலப்படுத்தி உள்ளன; அதேபோல் இராணுவ-உளவுத்துறைக் கருவி அமெரிக்காவின் அரசியல் விவகாரங்களில் ஆதிக்கம் கொண்டிருப்பது குறித்தும் அம்பலப்படுத்துகிறது. இவற்றுள் கீழ்க்கண்டவை அடங்கும்:

* பெப்ருவரி மாதம் கசியவிடப்பட்டுள்ள “வெள்ளைத்தாள்”, ஜனாதிபதிக்கு ஒருதலைப்பட்சமாக, இரகசியமாக அமெரிக்கக் குடிமக்களைக் கொல்ல உத்தரவிடும் உரிமை உள்ளது என்பதை வாதிடுகிறது மற்றும் ஹோல்டரின் அறிக்கைகள் அத்தகைய படுகொலைகள் நாட்டிற்குள் நடத்தப்படலாம் என வாதிட்டுள்ளன.

* போஸ்டன் நெடுந்தூர ஓட்டப்போட்டி குண்டுத்தாக்குதல், ஏப்ரலில் நடைபெற்றதற்கு விடையிறுப்பு, நகரத்தையே கிட்டத்தட்ட இராணுவச்சட்ட சூழலில் மூடி வைத்ததை தொடர்ந்து, FBI இந்த வழக்கில் ஒரு முக்கிய சாட்சியை படுகொலை செய்தது.

*அரசாங்கம் இரகசியமாக அசோசியேட்டட் பிரஸ் நிருபர்களின் தொலைபேசி சான்றுகளைப் பற்றியுள்ளது என்று மே மாதம் தெரியவந்ததைத் தொடர்ந்து, நிர்வாகம் பாக்ஸ் நியூஸ் நிருபர் ஒருவருடைய மின்னஞ்சல்களை கைப்பற்றியது என வந்துள்ளது;  பிடியாணையில் அவர் குற்ற வகைப்படுத்தப்பட்ட தகவல் கசிவுக்கு உடந்தையாக இருந்தார் எனக் குறிப்பிடப்பட்டுள்ளது.

* இவ்வாரம் தொடங்கிய பிராட்லி மானிங் இன் இராணுவ நீதிமன்ற விசாரணை, ஒற்றுச் சட்டத்தின் கீழ் ஆவணங்களைக் கசியவிட்டது என்ற குற்றத்தின் கீழ் குற்றச்சாட்டுக்களை அடக்கியுள்ளது; இவை செய்தி ஊடகத்தால் மறைக்கப்பட்ட அமெரிக்கா ஈராக்கிலும் ஆப்கானிஸ்தானிலும் செய்த போர்க் குற்றங்களை அம்பலப்படுத்துபவை.

ஜனநாயக உரிமைகள் மீதான ஒவ்வொரு தாக்குதலையும் போல, நிர்வாகம் அதன் தொலைபேசி பதிவுகள் வலையையும் “பயங்கரவாதத்தின் மீதான போரின்” தேவையான பகுதி என்று நியாயப்படுத்துகிறது. இந்த நடவடிக்கைகளின் உண்மையான இலக்கு “சர்வதேச பயங்கரவாதம் அல்ல, தொழிலாள வர்க்கம்தான். இந்த பொலிஸ் அரச நடவடிக்கைகள், அமெரிக்க நிதியப் பிரபுத்துவத்தின் சிக்கன நடவடிக்கைகள், வறுமை, போருக்கான நடவடிக்கைகளுக்கு சமூக, அரசியல் எதிர்ப்பு காட்டுபவர்களுக்கு எதிராகப் பயன்படுத்தப்படும்.