தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Syrian opposition launch rocket attacks in Lebanon சிரிய எதிர்த்தரப்பு லெபனான் மீது ராக்கட் தாக்குதல்களை நடத்துகிறதுBy Thomas Gaist use this version to print | Send feedback ஞாயிறன்று ஹெஸ்போல்லா போராளிகளுக்கும் அமெரிக்க ஆதரவைக் கொண்ட சிரிய எழுச்சியாளர்களுக்கும் இடையே லெபனானில் நடைபெற்ற மோதல்களில் குறைந்தப்பட்சம் 12 பேர் கொல்லப்பட்டனர். ஒரு லெபனிய பாதுகாப்பு அதிகாரியின் கூற்றுப்படி, சிரிய எதிர்த்தரப்பு கூறுபாடுகள் ராக்கட் தாக்குதல்களை லெபனானுக்கு வடகிழக்கில் இருக்கும் பால்பெக் நகரத்திற்கு எதிராக நடத்த தொடங்குகையில் மோதல்கள் மூண்டன. பால்பெக்கிற்கு அருகேயான மோதல்கள் சிரிய எல்லைகளுக்கும் அப்பால் போர் பரவுகிறது என்பதற்கான மற்றொரு அடையாளம் ஆகும். 18 ராக்கெட்டுக்களும், மோட்டார் குண்டுகளும் சனிக்கிழமையன்று லெபனிய மண்ணில் விழுந்தன; ஷியைட் வழிபாட்டுத் தலமான சாயிடா காவ்லா ஞாயிறு காலை துப்பாக்கிதாரிகளால் கிட்டத்தட்ட 2.30 க்கு தாக்குதலுக்கு உட்பட்டது. இதைத்தவிர, ஞாயிறு காலை மூன்று சிரிய ராக்கெட்டுக்கள், லெபனிய நகரான ஹெர்மல் இல் ஒரு ஹெஸ்போல்லா கோட்டையை தாக்கின. டெய்லி ஸ்டார் கருத்துப்படி, சுதந்திர சிரிய இராணுவம் தாக்குதல்களுக்கு பொறுப்பை ஏற்றது, இவை அசாத்திற்கு ஹெஸ்போல்லா ஆதரவு கொடுப்பதை முகங்கொடுக்கும் வகையில் நடத்தப்பட்டன என்று கூறியது. அமெரிக்க ஆதரவுடைய எதித்தரப்பிற்கு தீவிரத் தோல்விகளைக் கொடுக்க உதவும் வகையில் சிரியாவிற்குள் ஹெஸ்போல்லா ஆக்கிரோஷத்துடன் நகர்கிறது. இப்பொழுது அது சிரிய இராணுவப் படைகளுடன் ஒருங்கிணைந்து செயல்பட்டு வடக்கே மூலோபாய சிறுநகரங்களை மீட்கும் நிலையில் உள்ளது. ஹெஸ்போல்லா தலைமை எதிர்த்தரப்பிற்கு எதிராக இன்னும் வெற்றிகள் அடையப்படலாம் என்னும் நம்பிக்கையை வெளிப்படுத்தியுள்ளது செய்தி ஊடகத் தகவல்கள் ஆயிரக்கணக்கான ஹெஸ்போல்லா போராளிகள் அலெப்போ மாநிலத்தில் திரண்டுள்ளனர் எனக் கூறுகின்றன; அங்கு அவை அலெப்போ நகரத்திற்கு வடக்கே உள்ள ஷியா பெரும்பான்மை சிறுநகரங்களில், நிலை கொண்டுள்ளன. புதிதாக தெற்கு சிரிய நகரான க்வாசரில் போரிட்டபின், “அலெப்போப் போர் சிறு மட்டத்தில்தான் தொடங்கியது; நாங்கள் இப்பொழுதுதான் விளையாட்டில் நுழைந்துள்ளோம்” என்று ஒரு ஹெஸ்போல்லா தளபதி கூறினார். “அவர்கள் பாதுகாப்பானது என்று நினைக்கும் கோட்டைகளுக்குள் நாங்கள் செல்ல இருக்கிறோம். அவர்கள் டோமினோ விளையாட்டுப் பொருட்கள் போல் சரிவர்.” ஹெஸ்போல்லாவின் தலைமைச் செயலர் ஹாசன் நஸ்ரல்லா தன்னுடைய முழு ஆதரவை அசாத் ஆட்சிக்கு உறுதியளித்து, சிரியாவில் “வெற்றி” என்று தன்னுடைய ஆதரவாளர்களுக்கு உறுதிமொழி கொடுத்தார், இது லெபனானில் இருந்து இஸ்ரேல் படைகள் வெளியேறிய 13வது ஆண்டு நிறைவை ஒட்டி நடந்த நிகழ்ச்சியில் கொடுக்கப்பட்ட உரையில் கூறப்பட்டது. “சாலையின் கடைசி வரை தொடர்ந்து செல்வோம், இப்பொறுப்பை ஏற்போம், இதையொட்டி எதிர்பார்க்கப்படும் தியாகங்கள், விளைவுகள் அனைத்தையும் ஏற்போம்” என்று அவர் அறிவித்தார். அமெரிக்க ஆதரவுடைய எதிர்த்தரப்பு சக்திகள் சமீபத்திய மாதங்களில் தீவிர தோல்விகளை சந்தித்துள்ளன. ஹெஸ்போல்லாவின் புதிய படைகள் ஆதரவுடன் அசாத் அரசாங்கம் குவாசர் மூலோபாய சிறுநகரில் எதிர்தரப்பு நிலைகளில் தொடர்ந்து தாக்குதல்களை நீடிப்பதால், ஆட்சியை தோற்கடிப்பது ஒருபுறம் இருக்க எதிர்த்தரப்பினர் தீவிர எதிர்த்தாக்குதலை கூட நடத்த இயலாதவர்கள் போல் தோன்றுகின்றனர். மில்லியன் கணக்கான பார்வையாளர்களை கொண்ட ஒரு கட்டாரி சுன்னி தொலைக்காட்சி தொகுப்பாளர் Yusuf al-Qaradawi, அசாத் மற்றும் ஹெஸ்போல்லாவிற்கு எதிராக குருதி கொட்டப்பட வேண்டும் என அழைப்புவிடுத்தார்; ஷியைட் ஹெஸ்போல்லா, “தீய சக்தியின் கட்சி” என்று குறிப்பிட்டார். “திறமையும் கொலைப் பயிற்சியும் கொண்ட அனைவரும் சிரியாவிற்குப் பயணித்து சுன்னி சக்திகளை ஆதரிக்க வேண்டும்” என்று அவர் அறிவித்தார். போர்க்களத்தில் தோல்விகளைத் தவிர, எதிர்தரப்பு உள் நெருக்கடியையும் முகங்கொடுக்கிறது. திங்களன்று எதிர்த்தரப்பு தேசிய கூட்டணிக்குள் ஒரு பிரிவான சிரியப் புரட்சித் தலைமைக் குழு (Syrian Revolution General Commission- SRGC) தன் ஆதரவை விலக்கிக் கொண்டு, தலைமை “எடுக்கப்பட்ட முன்முயற்சிகள் உண்மையான புரட்சியில் இருந்து மிகவும் அகன்றுவிட்டது” என அறிவித்தது. SRGC சிரிய எதிர்த்தரப்பில் மதசார்பற்ற கூறுபாடு ஆகும்; மேற்கத்தைய ஏகாதிபத்திய சக்திகளான ஜேர்மனிய இடது கட்சி போன்றவற்றுடன் பிணைப்புக்களை கொண்டுள்ளது. அது மேற்கத்தைய வான்சக்தி சிரியாவிற்குள் பறக்கக் கூடாது பகுதிகளைச் சுமத்த வேண்டும் என்று கோரியுள்ளது. 2011ல் இருந்து அசாத் ஆட்சிக்கு எதிராகப் போரிடும் இஸ்லாமிய போராளிகளுடனும் அது ஒத்துழைத்துள்ளது. ஆனால், நேற்று அது வெளிநாட்டு சக்திகள் போரைத் “திரிக்கின்றன” என்று குற்றஞ்சாட்டி, “இந்நாடுகள் மற்றவற்றிற்கு எதிராக முகாம்களை அமைத்துள்ளன, இம்முகாம்கள் புரட்சிக்கு எதிரான செயற்பட்டியலை கொண்டு செய்படுகின்றன” என அறிவித்தது. சிரியாவில் ஏகாதிபத்தியத் தலையீடு என்பது, முழுப் பிராந்தியத்தையும் மறுகட்டமைக்கும் திட்டத்தின் மையத்தில் உள்ளது, சிரியாவின் முக்கிய நட்பு நாடான ஈரானை ஒதுக்குதல், ஹெஸ்போல்லாவை அகற்றுதல், அமெரிக்கா, இஸ்ரேல் ஆகியவற்றிற்கு பிற மத்திய கிழக்கு நாடுகளில் இருந்து வரும் எதிர்ப்பை அகற்றுதல் ஆகிய நோக்கங்களை கொண்டுள்ளது. அடிப்படை வணிக, மூலோபாய நலன்கள் பணயத்தில் உள்ளன. அசாத் வெளியேறவேண்டும் என வலியுறுத்தி, இதுவரை ஒரு பினாமிப்போர் மூலம் இந்த இலக்கை அடையமுடியாத நிலையில், வாஷிங்டன் எதிர்த்தரப்பிற்கு ஆதரவைக் கொடுக்க தன் தலையீட்டை எப்படி விரிவாக்கலாம் என விவாதித்துக் கொண்டிருக்கிறது. பெருகிய முறையில் அமெரிக்காவும் அதன் ஐரோப்பிய நட்பு நாடுகளும் சிரியா மீது தங்கள் சொந்த இராணுவப் படைகள் மூலம் நேரடித் தாக்குதல் நடத்துவதை ஒரு தீவிர விருப்பமாக பரிசீலிக்கின்றன. திங்களன்று அதிகாரிகள் பாட்ரியட் ஏவுகணைத் தொகுப்புக்கள், F16 உடன் ஜோர்டானில் “Eager Lion” போர்விளையாட்டுக்களுக்கு அனுப்பப்பட்டவை, அங்கேயே காலவரையற்று இருக்கும் என உத்தியோகபூர்வமாக அறிவித்தனர். சிரியாவில் விரிவாக்கப்படும் இராணுவத் தலையீட்டிற்கு முக்கிய உருக்கொடுக்கும் செனட்டர் ஜோன் மக்கெயின், ஜோர்டான் டைம்ஸிடம் பாட்ரியட் முறைகளை நிலைப்படுத்துவது சிரியாவில் எதிர்த்தரப்பு நடவடிக்கைகளுக்கு ஒரு “பாதுகாப்புப் பகுதியை” பிரிப்பதில் “முதல் படி போல் ஆகும்” என்றார். குறைந்தப்பட்சம் 200 அமெரிக்கத் துருப்புக்களாவது ஜோர்டனில் நிலைப்பாடு கொண்டுள்ளனர். கடந்த வார இறுதியில் இஸ்ரேலிய போர் விமானங்கள் லெபனிய வான் வெளியில் வார இறுதியில் தந்திர உத்திகளை நடத்தின. இஸ்ரேலியர்கள் ஏற்கனவே சிரியா மீது மூன்று வான் தாக்குதல்களை நடத்தியுள்ளனர்; 2006ல் அவர்கள் பெய்ரூட்டின் பல பகுதிகளையும் அழித்தனர். இப்பொழுது தங்கள் பிராந்திய எதிர்த்தரப்பின்மீது அமெரிக்க ஒருங்கிணைப்புடன் முழுத் தாக்குதலுக்கு தயாரிக்கின்றனர். ஆளும் உயரடுக்கில் இருந்து பெரும் சக்தியுடன் நேரடி ஏகாதிபத்திய தலையீட்டிற்கான அழைப்புக்கள் வந்த வண்ணம் உள்ளன. “Face the Nation” நிகழ்வில் பேசிய செனட்டர் மக்கெயின், “கடந்த ஓரிரு ஆண்டுகளாக நாம் கேள்விப்பட்டு வரும் பேச்சுக்களை நினைத்துப் பார்த்தீர்களா?—பஷார் சரிவது தவிர்க்க முடியாது என்பதை.” தொடர்ந்து அவர் “அந்த அறிக்கையை இன்று நாம் விடமுடியாது என நான் நினைக்கிறேன்.” “ஹெஸ்போல்லா படையெடுத்துவிட்டது, ஈரானியர்கள் அங்கு உள்ளனர். ரஷ்யா ஆயுதங்களை கொட்டுகிறது; பஷார் அசாத் போர்க்களத்தில் வெற்றி கண்டுவரும் நிலையில், ஜெனீவா மாநாட்டிற்கு போவார் என எவரேனும் நம்பினால் அது கேலிக்கூத்து ஆகும்” என்றார் மக்கெயின். அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையே ஜெனீவாவில் சர்வதேச பேச்சுக்களுக்கு முன்பு சிரியப் போர் குறித்து அழுத்தங்கள் தொடர்ந்து பெருகியுள்ளன. வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி மற்றும் ஜேர்மனிய வெளியுறவு மந்திரி கீடோ வெஸ்டர்வெல்ல ஒரு கூட்டு எச்சரிக்கையை வெள்ளியன்று ரஷ்யாவிற்கு விடுத்தனர்; அதில் சிரிய அரசாங்கத்திற்கு S-300 விமான எதிர்ப்பு ஏவுகணை முறைகளை அனுப்பும் திட்டம் சமாதானப் பேச்சுக்களை சீர்குலைக்கும் என்று கூறினர். |
|
|