World Socialist Web Site www.wsws.org |
The Woolwich killing and the responsibility of Britain’s ruling elite வுல்விச் கொலையும் பிரித்தானியாவின் ஆளும் உயரடுக்கின் பொறுப்பும்Chris
Marsden லண்டன் வுல்விச்சில் இராணுவ சிப்பாய் லீ ரிக்பி கொல்லப்பட்டது, கவனமாக கட்டமைக்கப்பட்ட பொய்கள், சதியாலோசனைகள், குற்றம் சார்ந்த தன்மை என பிரித்தானிய வெளியுறவுக் கொள்கையை சுற்றி அமைக்கப்பட்டிருந்த திரையின் ஒரு ஓரத்தை உயர்த்திவிட்டுள்ளது. ரிக்பி மிருகத்தனமாகக் கொலையுண்ட பின்னர், பல அரசியல் மற்றும் செய்தி ஊடக நபர்கள், கொலைகாரர்கள் மைக்கேல் அடெபோலெஜோ மற்றும் மைக்கேல் அடெபோவலே உடைய நோக்கங்களை வினாவிற்கு உட்படுத்தும் நேரம் இதுவல்ல என வலியுறுத்தினர். தொழிற் கட்சி பாராளுமன்ற அங்கத்தவர் டேவிட் லாமி, “இக்கொலை பிரித்தானிய வெளியறவுக் கொள்கையின் நேரடி விளைவு என்னும் கருத்து மேம்போக்காகச் சரியாக இருக்கலாம், இதில் ஈராக் படையெடுப்பு குறித்து நான் ஆதரித்து வாக்களித்ததும் அடங்கும்” என விவரித்தார். கார்டியனின் ஜோனதன் ப்ரீட்லான்ட், “தாராளவாத மற்றும் இடது” நபர்களை, லண்டன் நிகழ்வுகளுக்கும் ஆப்கானிஸ்தான், ஈராக், லிபியா மற்றும் சிரியப் போர்களுக்கும் இடையே அடையாளத்தை தொடர்புபடுத்துகின்றனர் என்பதற்காக அவர்களைத் தாக்கினார்; “சிலர் பரிவுணர்வை இரகசியமாக காட்டுகின்றனர், செயலுக்கு அல்ல, ஆனால் அது உயர்த்திக் காட்டும் காரணத்திற்காக.” அடெபோலஜோ மற்றும் அடெபோவலேயின் கொடூரக் கொலைக்குப் பாதையிட்ட சூழலைப் பற்றிய விவாதத்தை தடுப்பது என்பது பிரித்தானிய ஆளும் உயரடுக்கு செய்யும் இன்னும் பெரிய குற்றங்களை மறைப்பதற்குத்தான் உதவும். கொலைகாரர்கள் எனக் கூறப்பட்டவர்கள் M15 க்கு பல ஆண்டுகள் தெரிந்தவர்கள் என்பது ஒரு சில நாட்களுக்குள் தெளிவாயிற்று; அடெபோலஜோவைப் பொறுத்தவரை கிட்டத்தட்ட ஒரு தசாப்தம் ஆகும். அவர் Al-Mahajiroun எனப்பட்ட தடைசெய்யப்பட்ட இஸ்லாமியக் குழுவுடன் பிணைந்திருந்தார். நவம்பர் 10, 2010ல் அவர் சோமாலியாவிற்கு பயணிக்க முயல்கையில் கென்யாவில் காவலில் வைக்கப்பட்டிருந்தார், அது Al-Shabaab என்னும் இஸ்லாமியவாதக் குழுவில் சேருவதற்கு எனக் கூறப்படுகிறது. மே 23ம் திகதி, அடெபோலஜோவின் நண்பரான அபு நுசய்பா பிபிசி “Newsnight” க்கு ஒரு பேட்டி கொடுத்து முடித்தவுடன் கைது செய்யப்பட்டார்; அப்பேட்டியில் அவர் அடெபோலஜோ கென்யாவில் சித்திரவதை செய்யப்பட்டார், M15 னால் துன்புறுத்தப்பட்டார் எனக்கூறியதாக தெரிகிறது; M15 அவரை ஒரு தகவல் கொடுப்பவராக இருக்குமாறு கேட்டுக் கொண்டது. அப்பொழுது முதல் பிரித்தானியா உண்மையில் அடெபோலஜோவின் கைதுக்கு சிற்பியாக செயற்பட்டுள்ளது, பின்னர் அவரை தீவிரமாக பாதுகாத்தது என்பதற்கான சான்றுகள் வெளிப்பட்டுள்ளன. டெய்லி மெயிலின் கூற்றுப்படி, M15 உடன் இணைந்து செயல்பட்ட ஒரு SAS பிரிவு, அடெபோலஜோ கென்யாவில் எல்லையைக் கடந்து சோமாலியாவிவிற்கு செல்லத் தயாராக இருக்கையில் பிடித்தது. ஓர் ஆதாரம் கூறுகிறது: “SAS முக்கிய பங்கைக் கொண்டது. அவை தொடர்பு பெற்றிருந்த காரணம் இந்த நபர் முக்கியம் எனக் கருதப்பட்டதுதான்.” ஆபிரிக்காவை தளம் கொண்ட ஒரு ஸ்காட்லாந்து யார்ட் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரி, கென்யாவால் காவலில் எடுத்துக் கொள்ளப்படுகையில் “அருகே இருந்தார்.” அடெபோலஜோ பின்னர் பிரித்தானியாவிற்கு “ஒரு ஸ்காட்லாந்த் யார்ட் துப்பறிபவருடன், இரகசியமாகப் பயணிப்பவருடன்” அனுப்பி வைக்கப்பட்டார். கென்யாவில் இருக்கும அடெபோலஜோவின் சட்டப்பிரதிநிதியின் கருத்துப்படி, அவர் கடந்த ஆண்டு பெப்ருவரி மாதம் இன்னும் ஐந்து பேர்களுடன் சோமாலியாவிற்கு இரண்டாம் முறை பயணிக்க முயன்றார்; ஆனால் கென்ய அதிகாரகளால் காவலில் வைக்கப்பட்டார். ஐக்கிய இராச்சியம் கென்யாவின் பொலிசிடம் அவர் “ஒரு தூய்மையான நபர்” என்று கூறியதாகத் தெரிகிறது; அவர் மீண்டும் ஐக்கிய இராச்சியத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டார். ஆபிரிக்காவில் இருக்கும் ஆதாரங்கள் மெயிலிடம் ஒரு தீவிர மதகுருவான ஷேக் ஹான் மகபுல்லுடன், அடெபோலஜோ மூன்றாம் முறையாக கடந்த நவம்பர் மாதம் கென்யாவில் காணப்பட்டார் என்று கூறின. இரு முறையும் அவர் ஒரு போலிப் பாஸ்போர்ட்டை பயன்படுத்தினர். மீண்டும் பாதுகாப்புப் பிரிவினர் ஜிகதிஸ்ட் கூறுபாடுகளுன் நெருக்கமான உறவுகளை நிறுவியுள்ளது கண்டறியப்பட்டுள்ளது; இது மத்திய கிழக்கிலும் ஆபிரிக்கவிலும் பிரித்தானியாவின் ஏகாதிபத்தியக் கொள்கைக்கு ஏற்றம் காண்பதற்குத்தான். அடெபோலஜோ தடையற்று செல்வதற்கு அனுமதிக்கப்பட்டதின் முக்கிய காரணம் சிரியாவுடனான உறவிலும் அத்துடன் ஒரு பரந்த இஸ்லாமியவாத அடுக்குடன் அவருடைய பங்கும்தான். பிபிசி லண்டன் 94.9 வானொலி நிலையத்திற்கு அழைப்பு விடுத்த ஒருவர், அடெபோலஜோ என்று அடையாளம் காணப்பட்ட அப்துல்லா சமீபத்தில் லண்டனின் Plumstead சமூக மையத்திற்கு வெளியே இளைஞர்களை சிரியாவிற்குச் சென்று போரிடுமாறு பிரச்சாரம் செய்ததாக கண்டார். அப்துல்லா விளக்கினார்: “நாம் அங்கு போகவேண்டியதில்லை, ஏனெனில் இங்கு அவர்களுடைய வீரர்கள் உள்ளனர்.” பின் சேர்த்துக் கொண்டார்: “வெற்றி நீங்கள் நினைப்பதை விட அருகில் உள்ளது.” ஏப்ரல் மாதம் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக், 600க்கும் மேற்பட்ட ஐரோப்பியர்களில் 100க்கும் மேற்பட்ட பிரித்தானியர்கள் சிரியாவிற்குப் போரிடச் சென்றுள்ளனர் என்பதை ஒப்புக் கொண்டார்; அவர்கள் அல்குவேடவுடன் பிணைப்புடைய குழுக்களான அல் நுஸ்ரா முன்னணி பேன்றவற்றில் உள்ளனர். பாராளமன்ற உறுப்பினர்களுக்கு அவர் எழுதிய கடித த்தில் அத்தகைய நபர்கள் ஆபத்தானவர்கள், ஏனெனில் அவர்கள் “பிராந்தியத்தில் மேற்கத்தைய நலன்களுக்கு எதிரான தாக்குதல்களை நடத்துவர் அல்லது மேற்கத்தைய நாடுகளிலேயே இப்பொழுதோ அல்லது வருங்காலத்திலோ தாக்குதல்களை நடத்துவர்.” உண்மையில் ஐரோப்பிய ஒன்றியத்தின் சிரிய மீதான தடைகளை அகற்றுவதற்கு ஹேக் ஒப்புக்கொண்டதின் நோக்கம்; அதையொட்டி “போட்டியிடப்படாத இடம்” மூடப்படலாம், இப்பொழுது அது அடிப்படைவாதிகளால் நிரப்பப்படுகிறது; “நிதானமான” சக்திகளுக்கு மேற்கத்தைய நாடுகளால் ஆயுதம் கொடுக்கப்படுகின்றன. பிரித்தானியா, ஐரோப்பிய ஒன்றியம், அமெரிக்கா மற்றும் மத்திய கிழக்கு நட்பு நாடுகள் சௌதி அரேபியா மற்றும் கட்டார் போன்றவை அனுப்பும் ஆயுதங்கள், பல ஆண்டுகளாக அவர்கள் பழகிவரும் இஸ்லாமிய குழுக்களின் குறுங்குழுவாத எழுச்சிக்கு எரியூட்டும் என்பதை ஹேக் நன்கு அறிவார். அவர் காட்டிக் கொள்ளுவது சிரியாவில் ஆட்சி மாற்றத்திற்கான போர் முடுக்கிவிடப்பட வேண்டும், பிராந்தியத்தின் எண்ணெய் இருப்புக்கள் மற்றும் மூலோபாய வெகுமதிகள் காப்பாற்றப்பட வேண்டும் என்பதுதான். மே 28ம் திகதி, ரிக்பி கொலையுண்ட 6 நாட்களுக்குப் பின், ஐரோப்பிய ஒன்றிய ஆயுதத் தடைகள் அகற்றப்பட்டன; இதற்கு ஐக்கிய இராச்சியம் மற்றும் பிரான்ஸின் பிரச்சாரங்கள் முக்கிய காரணமாகும். இந்த முடிவு, ஜிஹாதிஸ்ட்டுக்கள், லண்டன், வாஷிங்டன் மற்றும் பாரிசின் சார்பில் பயங்கரவாதக் குழுக்களாகச் செயல்பட்டு வுல்விச்சில் நடத்தப்பட்டதில் இருந்து அதிகம் வேறுபடாத கணக்கிலடங்காக் கொடுமைகள் சிரியாவில், அண்டை லெபனானில், ஈராக்கிலும் நடத்தப்படும். உள்நாட்டில் அரசியல் சக்திகளுடைய குற்றங்கள், இஸ்லாமியக் குழுக்கள் பயன்படுத்தும் சீற்றத்தை எரியூட்டுபவை, மீண்டும் அவை இவர்களுடன் இரகசியமாகப் பணிபுரிகின்றனர் என்பதை நிரூபிப்பவை, வுல்விச்சை ஒரு வாதமாகப் பயன்படுத்தி இன்னும் அடக்குமுறை அதிகாரங்களுக்கு வாதிடுகின்றனர். பிரதம மந்திரி டேவிட் காமெரோன், “பயங்கரவாத எதிர்ப்பு சிறப்பு பணிப்பிரிவு” என்பதைத் தொடக்கி, அரசிசயல் தீவிரவாதத்தை சமாளிக்கும் “நடைமுறை செயல்களை” முன்வைத்துள்ளார்; இதில் மெட்ரோபொலிடன் பொலிஸ் ஆணையர் சர் பேர்னார்ட் ஹோகன் ஹோ மற்றும் M15 உடைய தலைமை இயக்குனர் ஆண்ட்ரூ பாரக்கர் ஆகியோர் உள்ளனர். அரசாங்கம் ஏற்கனவே தொலைத்தொடர்பு நிறுவனங்கள், எடுத்துக் கொண்ட நேரம், காலம், தொடக்கி வைத்தவர், கேட்பவர் என அனைத்து மின்னஞ்சல்கள், தொலைபேசி அழைப்புக்கள், சமூகச்செய்தி ஊடகத் தகவல்கள், வலைத்தள அஞ்சல்கள், குரல் அழைப்புக்கள் என பிரித்தானியாவில் நடப்பவற்றைப் பதிவு செய்ய வேண்டிய சட்டம் ஒன்றை மீண்டும் அறிமுகப்படுத்தும் திட்டத்தைக் கொண்டுள்ளது. பல சோக வெளிப்பாடுகளில் ஒன்றான லீ ரிக்பியின் கொலை, பல தசாப்தங்களாக போர்கள் மற்றும் காலனித்துவவகை செயற்பாடுகள் சமூக, அரசியல் வாழ்வை பிரித்தானியா மற்றும் சர்வதேச அளவில் நச்சுப்படுத்திவிட்டது, இது நிதியத் தன்னலக்குழுவின் கொள்ளை நோக்கங்கள் தொடரப்படுவதால் என்பதைத்தான் காட்டுகிறது. எண்ணெய், எரிவாயு, தாதுப்பொருட்கள் போன்ற முக்கிய ஆதாரங்களை அடைந்து கட்டுப்பாட்டிற்குள் வைப்பதற்கு, உலகின் பெரும்பகுதிகள் நாசமாகப்படுகின்றன, வறிய நிலைக்குத் தள்ளப்படுகின்றன, மிருகத்தன தலையீட்டிற்கு உட்படுகின்றன. இதற்கிடையில் பிரித்தானியா, ஐரோப்பா, மற்றும் அமெரிக்காவில் உள்ள உழைக்கும் மக்கள் டிரில்லியன் கணக்கான டாலர்களை இப்போர்களுக்கு கொடுக்க கட்டாயப்படுத்தப்படுகின்றனர்; இது மிருகத்தன வெட்டுக்கள் மூலம் நடைபெறுகிறது; அவை குற்றம் சார்ந்த கூறுபாடுகளை செல்வக்கொழிப்பு உடையவையாக மாற்றுகின்றன; அதுதான் இப்பொழுது சமூகத்தின் மீது மேலாதிக்கம் செலுத்துகிறது. ஆளும் வர்க்கத்தினதும் அதன் செய்தி ஊடகத்தில் இருந்து வெளிவரும் முதலைக் கண்ணீர்களாலும் சரி “தேசப்பற்று” பொய்கள் மூலமும் சரி எவரும் மிரட்டப்பட்டோ அல்லது குழப்பப்பட்டோ விடக்கூடாது. மிக அடிப்படையான உணர்வில், இவர்கள்தான் வுல்விச்சில் நடந்ததற்கு காரணம். இவர்கள்தான் தொழிலாள வர்க்கத்தின் பரந்த பிரிவிற்கு அரசியல் ரீதியாகக், கணக்குக்கூற வேண்டும். |
|