சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பிய ஒன்றியம்

More austerity in Europe in face of record unemployment

ஐரோப்பா மிக உயர்ந்த வேலையின்மையை எதிர்நோக்குகையில் மேலும் சிக்கன நடவடிக்கைகள்

By Christoph Dreier
1 June 2013


use this version to print | Send feedback

யூரோ வலையத்தில் வேலையின்மை விகிதமானது ஏப்ரல் மாதத்தில் இரண்டு ஆண்டுகளில்லாத உயர்நிலையை எட்டியுள்ளது. ஐரோப்பாவின் யூரோஸ்டாட் புள்ளிவிவர நிறுவனம் வெள்ளியன்று வெளியிட்ட தகவல்களின்படி, மார்ச்சில் 12.1 சதவிகிதத்திலிருந்த வேலையின்மையானது கடந்த மாதம் 12.2 சதவிகிதமாக உயர்ந்துள்ளது. இளம் தொழிலாளர்களில் முழுமையாக 24.4 சதவிகிதம் பேருக்கு வேலையில்லை.

2008ல் இருந்து ஆழமான மந்தநிலையில் உள்ள தெற்கு ஐரோப்பிய நாடுகளில் மிக அதிக வேலையின்மை விகிதங்கள் காணப்படுகின்றன. இந்தப் பட்டியலில் மேலிடத்தில் கிரேக்கம் உள்ளது; வேலையின்மை விகிதம் 27 சதவிகிதமாகவும் இந்த ஆண்டு இந்நாட்டில் பொருளாதாரச் சுருக்கமானது 4.2 சதவிகிதமாகவும் மதிப்பிடப்பட்டுள்ளது. இளைஞர்களில் அதிர்ச்சிதரும் வகையில் 62.5 சதவிகிதமானோருக்கு வேலைகள் இல்லை.

இரண்டாவதாக 26.8 சதவிகிதம் வேலையின்மையும், இளைஞர்களிடையே 56.4 சதவிகிதமான நிலையும் ஸ்பெயினில் உள்ளது; போர்த்துக்கல் (மொத்த 17.8 சதவிகித வேலையின்மையில், இளைஞர்களிடையே 42.5 சதவிகிதமாகும்), சைப்ரஸ் (இது 15.6 சதவிகிதம், 32.7 சதவிகித முறையேயாகும்), மற்றும் இத்தாலி (12 சதவிகிதம், 40.5 சதவிகிதம்) இந்நாடுகளிலும் வேலையின்மை விகிதம் மிக அதிகம் ஆகும்.

சமீபத்திய வாரங்களில் புறநகர் இளைஞர்களுடைய பெரும் கலகத்தை ஏற்படுத்திய நாடான சுவீடனிலும், கிட்டத்தட்ட தொழிலாளர்களில் கால் பகுதியினரான 25 வயதிற்கும் உட்பட்டவர்களுக்கு வேலையில்லை. ஜேர்மனியில் வேலையின்மை விகிதம் ஒப்புமையில் குறைவாக 5.4 சதவிகிதமாக உள்ளது; ஆனால் ஜேர்மனியின் புள்ளிவிவர நிறுவனம் இந்த எண்ணிக்கை 6.8 சதவிகிதமாக இருக்கலாம் என மதிப்பிட்டுள்ளது.

பிரான்சில் உழைக்கும் மக்களில் 11 சதவிகிதம் பேருக்கு வேலை கிடையாது; குறைந்தப்பட்சம் 26.5 சதவிகிதமான இளைஞர்களுக்கு வேலைகள் கிடையாது. இந்த எண்ணிக்கை இடைவிடாமல் 24 மாதங்களாக உயர்ந்து வருகிறது. பிரான்சின் பொருளாதாரம் இந்த ஆண்டு 0.1 சதவிகிதமாக எதிர்பார்க்கப்பட்ட மந்தநிலையை எதிர்கொள்ளும்.

இந்த உத்தியோகபூர்வ யூரோஸ்டாட் எண்ணிக்கையானது ஐரோப்பாவில் உண்மையில் வேலையில் இல்லாதவர்கள் அனைவரையும் அடக்கியிருக்கவில்லை. அவர்கள், மொத்த வேலையில்லாத எண்ணிக்கையை குறைக்க முற்படுகின்றனர்;  நீண்ட காலமாக வேலையின்மையில் இருப்பவர்கள் ஒவ்வொரு வாரமும் ஒரு வேலையை தேடுவதில்லை—இவர்கள் இங்கு கணக்கில் எடுத்துக் கொள்ளப்படுவதில்லை.

வேலையில்லா தொழிலாளர்களுடைய மொத்த எண்ணிக்கையை துல்லியமாக கணக்கிட்டு அளவிடுவது என்பது இன்னும் உயர்ந்த தன்மையைத்தான் காட்டும்.

பல நாடுகளில் வேலையின்மை மற்றும் ஆழமான மந்தநிலை அதிகரித்துள்ளமையானது ஐரோப்பிய ஒன்றியமும் சர்வதேச நாணய நிதியமும் சுமத்தியுள்ள மிருகத்தன சிக்கன நடவடிக்கைகளின் விளைவாகும். கிரேக்கம், ஸ்பெயின், போர்த்துக்கல், இத்தாலி ஆகியவை தங்களுடைய வரவு-செலவுத் திட்டங்களை கடந்த ஐந்து ஆண்டுகளில் குறைத்துவிட்டனர், நூறாயிரக்கணக்கான பொதுத்துறை ஊழியர்களை பதவி நீக்கம் செய்துள்ளன, மற்றும் எஞ்சிய தொழிலாளர்களின் ஊதியங்களை கடுமையாக குறைத்துவிட்டன.

கண்டத்தின் இளைஞர்களுக்கு ஐரோப்பிய ஆளும் உயரடுக்கு வேலையின்மை, ஊதிய வெட்டுக்களைத் தவிர வேறு எதுவும் கொடுப்பதற்கில்லை. இது ஜேர்மனி, இத்தாலி, பிரான்ஸ் ஆகிய நாடுகளின் முக்கிய அரசியல்வாதிகளால் புதிய புள்ளிவிவரங்கள் வெளியிடப்படுவதற்கு சில நாட்களுக்கு முன்பு அடிக்கோடிட்டுக் காட்டப்பட்டன; அப்பொழுது அவர்கள் ஐரோப்பிய ஒன்றியத்திற்குள் உள்ள இளைஞர்கள் வேலையின்மையை எதிர்கொள்ள ஒரு திட்டத்தை முன்வைத்தனர்.

பெரும் பரபரப்புடன் அளிக்கப்பட்ட அத்திட்டம் உண்மையில் மேலும் வெட்டுக்களுக்கும் சமூகத் தாக்குதல்களுக்குமான ஒரு செயல்பட்டியலாகும்.

ஜேர்மனிய நிதி மந்திரி  வொல்வ்காங் ஷொய்பிள, தொழிலாளர் துறை மந்திரி உர்சுலா வான் டெர் லயென் மற்றும் பிரெஞ்சு நிதி மந்திரி பியர் மொஸ்கோவிச்சிதொழிலாளர் துறை மந்திரி மிசல் சப்பான் ஒன்றாக பாரிசில் ஒரு மாநாட்டில் பேசினர். இதை பில்லியனர்-முதலீட்டாளரான நிக்கோலா பெர்க்குருவான் ஏற்பாடு செய்திருந்தார். அன்றே நான்கு அரசியல்வாதிகள் வேலையின்மை எதிர்ப்பு நடவடிக்கைக்கைகள் பற்றிய கருத்துக்களை ஜேர்மனிய நாளேடான Süddeutsche Zeitung  இல் வெளியிட்டிருந்தனர்.

இக்கட்டுரையில், அவர்கள் தொடக்கத்தில் இருந்தே “தவிர்க்க முடியாத அரச வரவு-செலவுத் திட்டங்களின் ஒருங்கிணைப்பு” மற்றும் “ஆக்கிரோஷ, தைரியமான தொலைநோக்கு  கட்டமைப்புச் சீர்திருத்தங்கள்” என்பவைகளை கண்டமானது “உலகப் போட்டியில்” இருந்து தப்பிக்க உதவுவதற்கு வழிவகைகளாக கொடுத்திருந்தனர்.

இது சமூக வெட்டுக்களுக்கான 2010 செயற்பட்டியல் என ஜேர்மனிய அரசாங்கம் மேற்கொண்டதை தொடர்ந்து வரும் புதிய ஆழமான சமூகத் தாக்குதல்கள் பற்றிய விளக்கமாகும். இச்சீர்திருத்தங்கள் ஊதியங்களில் கடும் சரிவுகளை ஏற்படுத்தின, தொழிலாளர் உரிமைகளை அழித்தன. இன்று ஜேர்மன் தொழிலாளர்களில் கால் பகுதியினருக்கும் மேலாகக் குறைந்த ஊதிய வேலைகளில்தான் உள்ளனர்.

ஆவணத்தின்படி, இக்கொள்கையானது “வேலைவாய்ப்பு மற்றும் வளர்ச்சிக்கான உந்துதல்களை” இணைத்திருக்கும், இது இளைஞர் நலனுக்காக இருக்க வேண்டும். ஆனால் உருப்படியான நடவடிக்கைகளை பார்த்தால், கட்டுரையாளர்கள் முன்னதாகவே இதை ஒப்புக்கொண்டுள்ளபடி, இவை சமூக தாக்குதல்களை மூடி மறைக்கும் கொள்கையின் புதிய மறைப்புத்தான்.

நடைமுறையிலிருக்கும் ஐரோப்பிய ஆணையத்தின் திட்டமான 6 பில்லியன் யூரோக்கள் ஊக்கச் செலவிற்கு என்பதற்கு ஆதரவைத் தெரிவிக்கையில், அவை இளைஞர்களுக்காக ஒற்றை யூரோ கூட செலவழிக்கப்பட மாட்டாது என்று அறிவித்துள்ளனர். அவர்கள் ஐரோப்பிய முதலீட்டு வங்கி கொடுக்க இருக்கும் 60 பில்லியன் யூரோக்கள் கடன் திட்டத்தை அறிவித்துள்ளனர். இக்கடன்களின் ஒரு சில பகுதிகள் நடுத்தர நிறுவனங்களுக்கு செல்லும் என்று அரசியல்வாதிகள் கூறியுள்ளனர்.

புதனன்று ஐரோப்பிய ஆணையமும் இதே செயற்பாட்டு நூலில் இருந்து பற்றி எடுத்து, அனைத்து ஐரோப்பிய நாடுகளிலும் இன்னும் சமூக வெட்டுக்கள் தேவை எனக் கோரியுள்ளது. ஆணையத்தின்படி, ஜேர்மனி ஊதியமில்லாத தொழிலாளர் செலவுகளை, அதாவது சமூகச் செலவுகளை குறைக்க வேண்டும், உணவு மற்றும் பிற அடிப்படைப் பொருட்கள் மீதான வரிகளை உயர்த்த வேண்டும், அதையொட்டி “ஐரோப்பாவின் மையத்தில் ஒரு வலுவான பொருளாதாரமாக இருக்க முடியும்.”

ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் ஜோஸ் மானுவல் பரோசோ பிரெஞ்சு அரசாங்கத்தை தொழிலாளர்களின் சமூக உரிமைகளை அகற்றும் வேலையை தீவிரமாக்க வேண்டும் எனக் கூறியுள்ளார்; அதேபோல் அடுத்த 18 மாதக் காலத்திற்குள் தொழிலாளர் செலவினங்களையும் கணிசமாகக் குறைக்க வேண்டும். இதற்கு ஈடாக ஐரோப்பிய ஒன்றியமானது பிரான்ஸுக்கு இன்னும் இரு ஆண்டுகள் அவகாசத்தை, அதனுடைய வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறையை ஐரோப்பிய ஒன்றிய கட்டுப்பாடுகளில் விதிக்கப்பட்டுள்ளதைப்போல் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 3 சதவிகிதத்திற்கு கொண்டுவர வேண்டும்.

“கடந்த 10 அல்லது 20 ஆண்டுகளில் பிரான்ஸ் போட்டியிடும் திறனை இழந்துவிட்டது. பிரான்ஸிற்கு எங்களுடைய செய்தி உண்மையில் அதிகம் கோருவதுதான்” என்று பரோசோ கூறினார்.

பற்றாக்குறை விளிம்பின் அளவு பற்றிய இறுதி முடிவு, ஐரோப்பிய நிதி மந்திரிகள் கூட்டத்தில் ஜூன் இறுதியில் எடுக்கப்படும்.

பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட், தான் பிரஸ்ஸல்ஸிலிருந்து “கட்டளை ஆணை” ஒன்றையும் ஏற்காது என்றார், அதேவேளை பிழைக்கு இடமின்றி வரவு-செலவுத் திட்டப் பற்றாக்குறைகளும் சமூகநலச் செலவுக் குறைப்புக்களும் அகற்றப்படுவதற்கான நடவடிக்கைகள் இருக்கும் என்றார். ஜேர்மனிய சான்ஸ்லர் அங்கேலா மேர்க்கெல் (CDU) உடன் நடத்திய பேச்சுக்களில் அவர் எதுவும் விலக்கப்படக்கூடியது அல்ல. செயல்படுத்த வேண்டிய அனைத்துச் சீர்திருத்தங்களும் செய்து முடிக்கப்படும்” என்றார்.

அதை “தைரியமான சீர்திருத்தங்கள், பாதுகாப்பான வேலைத்தன்மை, இவற்றைப் பற்றிய தொகுப்புக்கள், சமுதாய, கலாச்சார மாற்றங்களை எதிர்பார்க்கலாம்,” என்று ஒரு வாரத்திற்கு முன்பு ஹாலண்ட் ஏற்கனவே ஜேர்மனிய செயற்பட்டியல் 2010 ஐ “முன்னேற்றகரமானது” என்று புகழ்ந்திருந்தார்.

ஐரோப்பிய ஒன்றிய ஆணையம் மற்றும் IMF  இன் நேரடிக் கட்டுப்பாட்டின் கீழ் இயங்கும் கிரேக்க அரசாங்கம், தற்பொழுது 2,000 தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யும் திட்டத்தை அறிவித்துள்ளதுஇது பொதுத்துறையில் 15,000 தொழிலாளர்களில் 2000 பேர் பணிநீக்கம் செய்யப்படும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

மற்றய வெட்டுக்களில் கிட்டத்தட்ட 45 பொது நூலகங்கள் மூடப்பட உள்ளது என்று கூறப்படுகிறது. இது 150,000 பொதுத்துறை வேலைகளை அகற்றும் திட்டத்தின் ஒரு பகுதியாகும்; பணிநீக்கங்கள், தனியார்மயமாக்குதல், பணியாளர் விலகுதல் என்னும் திட்டத்தின் ஒரு பகுதியாகும், இதன் இழிந்த அழிப்பின் தன்மை ஏற்கனவே 62.5 சதவிகித இளைஞர்கள் வேலைகள் இல்லை என்னும் சூழ்நிலையில் இருப்பதில் மிகவும் தெளிவாக உள்ளது.

அதே நேரத்தில் கிரேக்கம் குறைந்தப்பட்ச மாதாந்திர இளைஞர் ஊதியத்தை 427 யூரோக்களாக குறைக்கும் திட்டத்தை செயல்படுத்த உள்ளது, இது “வளர்ச்சிக்கு உந்துதல் கொடுக்கும்” வணிக முதலாளிகளை இளம் தொழிலாளர்களை வேலையில் வைக்க ஊக்குவிக்கும், ஏனெனில் அவர்கள் அடிமைக்கூலி ஊதியங்கள் கொடுத்துச் சுரண்டப்பட முடியும்.

இதுதான் ஆளும் உயரடுக்கும் ஐரோப்பிய ஒன்றிய நிறுவனமும் கண்டத்தில் இருக்கும் ஒவ்வொரு நாட்டிற்கும் கொண்டுள்ள திட்டமாகும்.