World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள்: ஆசியா :சீனா Indian minister visits China after patch-up of border dispute எல்லைப் பிரச்சனையில் தற்காலிக தீர்வுக்குப் பின் இந்திய அமைச்சர் சீனாவுக்கு செல்கிறார் By Deepal Jayasekera இரண்டு நாடுகளும் அவர்கள் உரிமைகோரும் பிரச்சனைக்குரிய எல்லைகள் பற்றிய ஒரு மூன்று வாரகால நீடித்த நெருக்கடிகளைத் தணிப்பதற்கு ஒரு கடைசி நிமிட பேரத்தினை செய்துகொண்ட பின்னர் இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் சல்மான் குர்ஷித் கடந்தவார இறுதியில் ஒரு நீண்ட திட்டமிட்டிருந்த இரண்டுநாள் பயணத்தை சீனாவுக்கு மேற்கொண்டிருந்தார். இந்த மாத இறுதியில் சீனா பிரதமர் லீ கேஹியாங் (Li Keqiang) இன் இந்திய விஜயத்தை தயார்செய்ய சென்ற குர்ஷித் இன் பயணத்தின்போது அவருக்கும் அவருடன் உரையாடல்களில் கலந்துகொண்ட சீனாவை சேர்ந்தவர்களும் சீனாவின் கட்டுப்பாட்டிலுள்ள அக்ஷய் சின் பகுதியையும் இந்தியாவின் கட்டுப்பாட்டிலுள்ள லடாக் பகுதியையும் பிரிக்கும் கட்டுப்பாட்டு கோட்டுப்பகுதியான (Line of Actual Control - LAC) டௌலட் பெக் ஓல்டி (Daulat Beg Oldi) நெடுகிலும் சமீபத்திய இராணுவ பதட்டங்களின் முக்கியத்துவத்தை குறைத்துவிட பெரிதும் முயன்றனர். 19 கிலோ மீட்டர் இந்தியப் பகுதிக்குள் தங்கள் கூடாரங்களை அமைத்த சீனப் படைப்பிரிவின் மீது இந்தியா குற்றம் சுமத்தியுள்ளது. சீனாவோ அதன் படைகள் அதன் எல்லையில் இருந்தன என்று கூறிக்கொண்டது. இரண்டு தரப்பின் இராணுவ அதிகாரிகளுக்கிடையில் மூன்று தடவை நடந்த எல்லைப்பகுதி சந்திப்புக்கள் பிரச்சனையை தீர்ப்பதற்கு முடியாமல் போயின. சீனப்படைகள் நிபந்தனையற்ற முறையில் வெளியேறவேண்டும் என இந்தியா வேண்டுகோள் விடுத்திருந்த நிலையில், தனது படைகளை பின்வாங்குவதானால் இந்தியா சமீபத்தில் போட்டிக்குரிய பகுதியில் அமைத்திருந்த பதுங்குகுழிகள் மற்றும் பாதைகள் உள்ளடங்கலான இராணுவ கட்டமைப்பை இல்லாதொழிக்க வேண்டும் என்று சீனா கோரியிருந்தது.
இந்த மோதல்கள்
தொடர்ந்துகொண்டிருக்கையில்,
தான்
பழிவாங்கும் நடவடிக்கை பற்றி கருத்தில்கொண்டிருப்பதாக இந்திய அரசாங்கம்
மே 5 அன்று நடந்த நான்காவது எல்லைப்பகுதி சந்திப்பில் எல்லைப் பிரச்சனை தீர்த்துவைக்கப்பட்டதாக இரண்டு தரப்பும் அறிவித்தனர். மே 9 அன்று, குர்ஷித் இரண்டுமணி நேரத்திற்கு மேலான பேச்சுவார்த்தைகளை அவருடைய சீனத்தரப்பு அமைச்சரான வாங் ஜி உடன் பெய்ஜிங் இல் நடத்தியிருந்தார். அன்றைய தினமே அவர் பிரதமர் கேஹியாங் (Keqiang) உடனும், 51 வருடங்களுக்கு முன்பு ஒரு எல்லைப்போரில் முடிவடைந்த இரண்டு நாடுகளுக்கிடையிலிருக்கும் வரலாற்று எல்லைப் பிரச்சனையை தீர்த்துவைப்பதற்காக அண்மையில் நியமிக்கப்பட்ட சீனாவின் சிறப்பு பிரதிநிதி யாங் ஜிச்சீ (Yang Jiechi) உடனும் சந்திப்பை ஏற்படுத்தியிருந்தார். பத்திரிகையாளர்களிடம் பேசும்போது, குர்ஷித் அவர் அண்மையில் ஜீ பகுதிக்குள் தவறான முறையில் உள்நுழைந்த சீனப் படைகள் பற்றி குரலெழுப்பியிருந்ததாக கூறினார். ஆனால் இந்த நடவடிக்கைக்காக பெய்ஜிங்கிலிருந்து எந்த விளக்கமும் கிடைக்கவில்லை. ”நாங்கள் எந்த பின்னணியையும் தேடவில்லை, உண்மையில் நாங்கள் எங்களுடைய சொந்த ஆய்வுகளில் இருந்தும் இல்லை” என்று குர்ஷித் கூறியிருந்தார். இந்தியா அல்லது சீனா எப்படி அவர்கள் தங்களுடைய சமீபத்திய பிரச்சனையை தீர்த்துக்கொண்டார்கள் என்று விளக்கவில்லை. சீன இராணுவம் தன்னுடைய படைகளை அவர்களுடைய உண்மையான பகுதிக்கு பின்வாங்கி செல்வதற்காக இந்திய இராணுவம் கட்டுப்பாட்டுக் கோட்டுக்கருகில் உள்ள (LAC-Line of Actual Control) சூமர் பகுதியில் அவை கட்டியிருந்த பதுங்குகுழிகளை அழிப்பதற்கும் அவற்றைக் கைவிடுவதற்கும் ஒத்துக்கொண்டிருந்தன என்று பெயரிடவிரும்பாத ஒரு மூத்த இராணுவ அதிகாரி குறிப்பிட்டுள்ளார் என்று ராய்ட்டர்ஸ் செய்தியளித்துள்ளது. இத்தகைய உடன்பாட்டை இந்திய வெளியுறவுத்துறை அமைச்சர் மறுத்திருக்கின்றார். புதுடெல்லி மற்றும் பெய்ஜிங் அவர்களுடைய எல்லைப் பிரச்சனையை தணித்துக்காட்ட முயற்சியெடுத்தன. ஏனெனில் இரண்டும் இது மிக விரைவாக அவர்களுடைய கட்டுப்பாட்டினை தாண்டி ஒரு பெரும்மோதலாக உருவெடுத்துவிடும் என்று கவலைப்படுகின்றன. இந்திய மற்றும் சீன அரசாங்கங்கள் தங்களிடையே சுமுகமான உறவு இருப்பதாக காட்டும் முயற்சிகளுக்கு மத்தியில் ஆசியாவில் இரண்டு வளரும் சக்திகளுக்கிடையில் ஆழமான அடிப்படை அழுத்தங்கள் உள்ளன. ஒபாமா நிர்வாகத்தின் ”ஆசியாவிற்கு முன்னுரிமை கொடுத்தல்” என்பதன் மூலம் இந்தப் பதட்டங்கள் பாரிய அளவில் அதிகரித்துள்ளது. சீனாவை தனிமைப்படுத்துவதற்கும் அதற்கு எதிரான தனது போருக்குமான உந்துதலுக்கு இந்தியா முக்கியமானது என வாஷிங்டனால் பார்க்கப்படுகிறது. மேலும் சீனாவுக்கு எதிரான போருக்கும் தயார்படுத்துகிறது. அதன் சூறையாடும் நிகழ்ச்சி நிரலுக்கு இந்தியாவை பயன்படுத்திக்கொள்ள புதுடெல்லியுடன் ஒரு ”மூலோபாய பூகோள கூட்டினை” அமெரிக்கா உருவாக்கியிருப்பதுடன் இந்து சமுத்திரத்தில் ஒரு பெரும் சக்தியாக மாற்றுவதற்கு இந்தியாவின் இலட்சியங்களை ஊக்குவிக்கின்றது. மேலும் உலக அணுசக்தி கட்டுப்பாட்டு அமைப்பினுள் அதற்கு ஒரு சிறப்பு அந்தஸ்தும் கொடுத்தும் பாதுகாக்கின்றது. இந்தியாவின் பாதுகாப்புத்துறை அமைச்சர் ஏ.கே.அந்தோனி மாத இறுதி சனிக்கிழமையன்று கோவாவில் உள்ள ஐஎன்எஸ் ஹன்சாவில் இந்திய கடற்படைக்கு முதலாவது MiG-29 K சுப்பர்சோனிக் இரக அதிவேக போர் விமானங்களை படைப்பிரிவிடம் கையளித்தபின் பத்திரிகையாளருக்கு அளித்த பேட்டியில் இந்தியா அதனுடைய சொந்த மண்ணில் அதன் எல்லைகளில் அதனுடைய (இராணுவ) தகமைகளையும் மற்றும் கட்டுமானங்களையும் வளர்ப்பதற்கான உரிமையை உறுதியளித்தார். மேலும் இந்த நடைமுறை தொடரும் என்றும் சூளுரைத்தார். சமீப ஆண்டுகளில் வரவு செலவு திட்டத்தில் இந்திய இராணுவத்திற்கு செலவு ஊதிப்பெருத்துள்ளபோது, சீனாவிற்கும், இந்தியாவின் வரலாற்று எதிரியானதும் ஒரு சீனாவின் நெருங்கிய கூட்டாளியுமான பாகிஸ்தானுக்கும் எதிராக அதன் உயர்அதிகாரிகள் பல போர்விழைவுள்ள அறிக்கைகளை வெளிவிட்டுள்ளனர். அந்தோனியின் கருத்துரைகள் சமீபத்தில் ஏற்பட்ட எல்லைப் பிரச்சனை முடிப்பதற்கு செய்துகொண்ட உடன்பாட்டுடன் இந்திய இராணுவத்தின் பிரிவுகள் மகிழ்ச்சியற்று இருக்கின்றன என்பதையே காட்டுகின்றது. அவ்வாறாயின், அந்தோனியின் குறிப்புக்கள் உண்மையாக சீனாவை நோக்கியதாகவே இருக்கிறது என்பதில் ஐயமேதுமில்லை. அவருடைய கருத்தின்படி பார்த்தால், இந்தியாவிற்கும் சீனாவிற்கும் அவரவர்களுடைய பிரதேசங்களில் இராணுவ கட்டமைப்புகளை அபிவிருத்தி செய்வதற்கு சமஅளவான உரிமைகள் இருக்கின்றன ஆசியாவில் அமெரிக்காவின் மற்றைய மூலோபாய கூட்டணிகள் யப்பான் மற்றும் ஆஸ்திரேலியா போன்று வாஷிங்டனுடனான இந்தியாவினுடைய எப்போதும் அதிகரிக்கின்ற உறவுகளைப்பற்றி சீனா மிகவும் கவலை கொண்டிருக்கின்ற நிலையில், தெற்காசியாவில் சீனாவின் வளர்ச்சியடையும் ஆற்றல் இந்தியாவிற்கு அச்சத்தை கொடுக்கிறது. சமீபத்திய அசோசியட்டட் பிரஸ் செய்தி போல் இரண்டு வெளிப்படும் சக்திகளும் ஆபிரிக்காவிலிருந்து ஆர்க்டிக் வரை மூலவளங்கள் மற்றும் புதிய சந்தைகளுக்காக அவர்களுடைய தேடலில் ஒருவருக்கொருவர் எதிரான மோதலில் இருக்கின்றன என குறிப்பிட்டிருந்தது. பாகிஸ்தானுடன் நீண்ட தசாப்தங்களாக சீனா கொண்டிருக்கும் கூட்டணியும், தர்மசாலாவை தலைமையிடமாகக் கொண்ட திபெத்திய அரசுக்காக நாடுகடந்த அரசாங்கத்திற்கும் தலாய் லாமாவுக்கும் அடைக்கலம் கொடுத்திருக்கும் இந்தியாவின் பங்கும் புதுடெல்லிக்கும் பெய்ஜிங்கிற்கும் இடையிலான உராய்வுக்கு மற்ற இரண்டு பிரதான காரணங்களாக இருக்கின்றன. குர்ஷித்தின் பேச்சுக்களில் இரண்டு பிரச்சனைகளும் வெளிப்பட்டிருந்தன. பத்திரிகையாளர்களிடம் பேசிவிட்டு குர்ஷித் சீனாவிலிருந்து வந்த மறுநாள் ”எந்த அரசியல் நடவடிக்கையிலும் தலாய் லாமா ஈடுபடுவதற்கு அனுமதிக்கப்படமாட்டார்” என்று இந்தியா உறுதியளித்துள்ளதில் பெய்ஜிங் ”முழு நம்பிக்கை” கொண்டிருப்பதாக ஒரு உயர்மட்ட அரசாங்க அதிகாரி கூறியுள்ளார். குர்ஷித்தின் பயணம் ஒரு வெற்றி என்று சீனாவின் ஊடகம் அறிவித்துள்ளது. ஆளும் கம்யூனிஸ்ட் கட்சியின் People’s Daily பத்திரிகையின் முன்பக்க கட்டுரையில் இரண்டு நாடுகளும் ”ஒட்டுமொத்த சீனா இந்தியா உறவுகளிலிருந்து” இந்த ”எல்லைப் பிரச்சனை” பிரித்துப்பார்க்கப்பட்ட ஒரு புதிய உறவுக்கும் மற்றும் ”இதுதொடர்புடைய வேறுபாடுகள்” ”இருதரப்பு உறவுகளின் வளர்ச்சியை பாதிக்காதிருக்க” உறுதியளிப்பதற்கும் உடன்பட்டிருக்கின்றன”. என எழுதியது. இந்தவார ஹிந்துஸ்தான் டைம்ஸ் பெய்ஜிங்குடனான மூன்றுவார எல்லைத் தகராறு ஏற்பட்ட காலத்தில் இந்தியா திடீரென அமெரிக்கா மற்றும் ஜப்பானுடன் ஒரு முக்கூட்டு கடற்படை பயிற்சிக்காக போடப்பட்டிருந்த திட்டத்திலிருந்து விலகிக்கொண்டுள்ளது. ஏனெனில் இது ஒரு முக்கூட்டு இராணுவ கூட்டணிக்கான ஆரம்பம் என சீனாவால் நோக்கப்படலாம் என கவலைகொண்டிருந்தது என செய்திவெளியிட்டிருக்கிறது. எனினும் இந்தியாவை சீனாவுக்கு எதிரிடை எடையாக அமெரிக்காவும் யப்பானும் இரண்டும் சேர்ந்து ஊக்குவிப்பதன் சாதகமான மதிப்பை எடுப்பதற்கு புதுடெல்லி ஆர்வமாக இருக்கிறது. முக்கூட்டு பயிற்சியிலிருந்து வெளியேறியபோதும், புதுடெல்லி ஜப்பான் மற்றும் அமெரிக்காவுடன் இந்திய மற்றும் பசுபிக் கடல் போர்விளையாட்டில் இராணுவ உறவை அதிகரிப்பதற்காக அழுத்தத்ததைக் கொடுக்கிறது. இதைப்போன்ற இராஜதந்திர சூழ்ச்சித்தந்திரங்கள் மற்றும் எல்லைப் பிரச்சனையில் தற்காலிகமான தீர்வுகளும் முதலாளித்துவத்தின் நெருக்கடிகளால் உருவாகும் பூகோள அரசியல் வெடிப்புக்களால் ஏற்படும் பிளவுகளை தடுத்து நிறுத்த முடியாததுடன், இயலாததுமாகும். முக்கியமாக அமெரிக்க முதலாளித்துவத்தால் அதன் வரலாற்று வீழ்ச்சியை அதன் மூர்க்கத்தனமான ஆசியாவிற்கு ”முன்னுரிமைகொடுத்தல்” உட்பட யுத்தத்தை நடத்தி போர் அச்சுறுத்தலால் ஈடுசெய்வதற்கு செய்யப்படும் முனைவை தடுக்கமுடியாது. |
|