சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Imperialism, Syria, and the threat of world war

ஏகாதிபத்தியம், சிரியா மற்றும் உலகப் போர் அச்சுறுத்தல்

Alex Lantier
31 May 2013

use this version to print | Send feedback

சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை அகற்றும் நோக்கம் கொண்ட அமெரிக்க ஆதரவுடைய பினாமிப்போர் ஒரு புதிய, ஆபத்தான கட்டத்திற்குள் நுழைந்து கொண்டிருக்கிறது. உலக மக்களுக்கு கணக்கிலடங்கா விளைவுகளை ஏற்படுத்தக்கூடிய ஒரு பெரிய சர்வதேச போருக்கான வாய்ப்பு மிகவும் உண்மையாக உள்ளது.

நேற்று, லெபனானின் அல் மனர் தொலைக்காட்சி, அசாத், சிரியா ரஷ்ய விமான எதிர்ப்பு S-300 ராக்கெட்டுக்களின் முதல் தவணையை பெற்றுள்ளது, ரஷ்யாவுடனான நம் உடன்பாடுகள் அனைத்தும் செயல்படுத்தப்படும், அவற்றில் சில பகுதிகள் ஏற்கனவே செயல்படுத்தப்பட்டுள்ளன என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது.

சாத்தியமான அமெரிக்க வான் தாக்குதல்களில் இருந்து சிரியா தன்னை காப்பாற்றிக் கொள்வதற்காக ரஷ்யா உறுதியளித்திருந்த இந்த ஏவுகணைகள், ஒரு சர்வதேச நெருக்கடியைத் தூண்டியுள்ளன. இஸ்ரேலிய அதிகாரிகள், ஏவுகணைகளை கொண்டு செல்லும் கப்பல்களை தாக்க இருப்பதாக அறிவித்துள்ளனர்.

அத்தகைய அச்சுறுத்தலை இஸ்ரேல் செயல்படுத்தி, ரஷ்ய உயிர்கள் இழக்கப்பட்டால், ரஷ்யா இஸ்ரேலிய இலக்குகள் மீது பதிலடித் தாக்குதல்கள் நடத்தினால், உலகம் விரைவில் அமெரிக்காவிற்கும் ரஷ்யாவிற்கும் இடையேயான ஒரு இராணுவ மோதலை காண நேரிடும்—1962 கியூபா ஏவுகணை நெருக்கடிக்குப்பின் கிட்டத்தட்ட அரை நூற்றாண்டாக இந்த நிலைமை இருந்ததில்லை.

தெற்கு சிரியாவில் லெபனிய ஷியாத் தளமுடைய ஹெஸ்போல்லா போராளிக் குழு சிரிய இராணுவத்திற்கு ஆதரவான தலையீட்டிற்குப்பின் ஈரானிய படைகளுடன் இணைந்து என்று சில தகவல்கள் கூறுகின்றனபெரிய வெற்றிகளை அடைந்துள்ளது என அசாத் அறிவித்தார். இச்சக்திகள் விரைவில் அமெரிக்க ஆதரவு பெற்ற சுன்னி இஸ்லாமிய எதிர்ப்பை தோற்கடித்த வகையில், எதிர்த்தரப்பில் அதிகமாக இருக்கும் அல் குவேடா பிணைப்புடைய கூறுபாடுகளுக்கு மக்கள் ஆதரவு இல்லை என்பதை அம்பலப்படுத்தியுள்ளது.

அமெரிக்க ஆதரவுடைய சுன்னி சக்திகளுக்கும் ஈரானிய ஆதரவுடைய ஷியாச் சக்திகளுக்கும் இடையே குண்டுத்தாக்குதல்களும் மோதல்களும் சிரியாவில் இருந்து லெபனான், ஈராக்கிற்கு பரவுகையில், சிரியப் போர் ஒரு பரந்த குறுங்குழுவாத போர்களின் மையமாக வெளிப்பட்டுக் கொண்டிருக்கிறது. ஒபாமா நிர்வாகமும் அதன் நட்பு நாடுகளும் மிகவும் பிற்போக்குத்தன சக்திகளை முழு மத்திய கிழக்கையும் மறுகட்டமைக்க பயன்படுத்துகின்றன. ஏகாதிபத்திய சக்திகள் எதிர்த்தரப்பின் ஆட்டம் காணும் நிலையை சீரமைக்க நகர்ந்து, தங்கள் சொந்தக் குறுக்கீட்டை விரிவாக்குகையில், இதையொட்டி வரும் மோதல் இன்னும் கூடுதலான குருதி கொட்டுதல், ஆபத்து ஆகியவற்றை வெளிப்படுத்துகிறது.

நியூ யோர்க் டைம்ஸ் வர்ணனை ஒன்றில், சிரியாவிற்குள், பெரிய அளவில் செல்க அல்லது வீட்டிலேயே இருக்க என்னும் தலைப்பில் அமெரிக்க வெளியுறவுக் குழுவின் ரே டகேய் அமெரிக்க ஆளும் வர்க்கத்தின் கணிசமான பிரிவின் சிந்தனையை வெளிப்படுத்தி உள்ளார். எதிர்த்தரப்பிற்கு உறுதியான வெற்றியை கொண்டுவரவேண்டிய வகையிலான தலையீட்டிற்கு பறக்கும் பகுதிகள் கூடாது, இன்னும் ஆயுதங்கள், என்பதையும் தவிர அதிகம் வேண்டும்.... இதன் அர்த்தம் திரு. அசாத்தின் வான் அதிகாரத்தை செயலிழக்கச் செய்து தரையில் கால் வைப்பதாகும்.... குறைந்த உறுதியுடைய அமெரிக்கத் தலையீடு, மேலும் ஈரானை மிரட்டுவதற்குப் பதிலாக, எதிரிடையானதை செய்துவிடும்: ஈரானின் தலைவர்களை அமெரிக்கா இப்பிராந்தியத்தில் பெரிய போரை நடத்த ஆர்வம் கொண்டிருக்க வில்லை என நம்ப வைத்துவிடும்.

டகேயின் கருத்து வாஷிங்டன் மற்றும் அதன் முக்கிய ஐரோப்பிய நட்பு நாடுகள் பகிர்ந்து கொள்ளும் கொள்கையின் உட்குறிப்புக்களை எடுத்துரைக்கிறதுஅதாவது இடைவிடாமல் ஈரான், சிரியா இன்னும் பிற மத்திய கிழக்கு ஆட்சிகளை, போர் உட்பட, அனைத்து விருப்பங்களும் மேசையில் உள்ளன என்று அச்சுறுத்துவதை. எண்ணெய் வளமுடைய, புவி மூலோபாய முக்கிய பிராந்தியத்தை கட்டுப்படுத்த வேண்டும் என்னும் திகைப்பில், பல தசாப்தங்களாக அமெரிக்க போர்கள், தலையீடுகளால் சிதைந்த நிலையில், ஏகாதிபத்திய சக்திகள் இன்னும் அதிக பொறுப்பற்ற அச்சுறுத்தல்களுக்கும் போர்களுக்கும்தான் உந்துதல் கொண்டுள்ளன.

அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் ஆளும் வர்க்கத்தின் சில பிரிவுகள் தீவிரமாக தங்கள் துருப்பு அளவை அதிகரிக்கும் விருப்பத்தை பரிசீலிக்கின்றன. மற்றொரு நியூ யோர்க் டைம்ஸ் வர்ணனை, அமெரிக்கர்களும் அவர்களுடைய இராணுவமும் பிரிந்து செல்கின்றனர் என்பது ஒரு கட்டாய இராணுவ சேவையை மீண்டும் தொடக்க வாதிடுகிறது --  இந்த நடவடிக்கை, மத்திய கிழக்கிலும் அதற்கு அப்பாலும் அமெரிக்கா திட்டமிட்டு வரும் போர்களுக்கு கட்டாயமாக இரை கொடுக்க இளைஞர்களை நாடும் கருத்தாகும்.

வாஷிங்டனும் ஐரோப்பாவும் மத்திய கிழக்கில் ரஷ்யா, சீனா என்னும் பெரும் சக்திகளுக்கு எதிராக அதிகாரத்தை முற்றிலும் பற்றி, செயல்படுத்த விரும்புகின்றன; அவையே கூட, போர் மற்றும் ஆட்சி மாற்றத்திற்கு இலக்கு வைக்கப்படலாம். இதே வழிவகைகள்இனவழி, குறுங்குழு வாத மோதல்கள் ரஷ்யாவில் செச்சினியா, சீனாவில் திபெத் எனஇந்நாடுகளில் இருக்கும் அரசாங்கங்களுக்கு எதிராக எளிதில் மாற்றப்பட்டுவிடலாம் அல்லது வாஷிங்டன் அதன் நட்பு நாடுகளின் நலன்களுக்கு எதிராகக் கருதப்படும் எந்த சக்தி மீதும் மோதல்கள் கொண்டுவரப்படலாம்.

சர்வதேச தொழிலாள வர்க்கத்தை எதிர்கொள்ளும் மகத்தான ஆபத்துக்களை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடுதல் ஆழ்ந்த ஆபத்தில் கொண்டு சென்றுவிடும். ஏகாதிபத்திய மையங்களில் முடிவெடுக்கப்படும் கொள்கையில் இருக்கும் சமூக நலன்கள், நூறாண்டுகளுக்கு முன்பு இருந்த சக்திகளின் பேராசை, பொறுப்பற்ற தன்மை இவற்றைவிட அதிகமானது; அவைதான் இரண்டு உலகப் போர்களுக்கு வழிவகுத்து மில்லியன் கணக்கான மக்களைக் கொன்றன.

ஏகாதிபத்தியத்திற்கு எதிரான போராட்டம், அது அனைத்து வகை முதலாளித்துவ அரசியலையும் எதிர்க்கும் தொழிலா வர்க்கத்தின் சுயாதீன அணிதிரள்வில் தங்கியுள்ளது. வட அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருக்கும் அரசியல் நடைமுறை, போருக்கு எதிராக மக்களுடைய வெகுஜன அதிருப்தி, எதிர்ப்பு ஆகியவை உள்ளன என்பதை சிறிதும் பொருட்படுத்தவில்லை; அப்படித்தான் 2003 ஈராக் மீதான அமெரிக்கப் படையெடுப்பு ஏற்பட்டது.

போர் ஆதரவு அரசியல் முகாமின் முக்கியக்கூறுபாடு போலி இடது அமைப்புக்கள் ஆகும். அமெரிக்காவில் சர்வதேச சோசலிச அமைப்பு, பிரான்சில் புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சி, இன்னும் சர்வதேச அளவில் இதே போன்ற குழுக்கள் சிரியப் போரை புரட்சியென சித்தரிக்கின்றன. இக்கட்சிகள், மத்தியதர வர்க்கத்தின் சலுகை பெற்ற பிரிவுகளுக்காக பேசுபவை, முழு நனவுடன் போருக்கான எதிர்ப்பை தடுத்து நிறுத்துகின்றன, அதே நேரத்தில் ஏகாதிபத்திய உளவுத்துறைச் சக்திகளுடைய குரலாகவும் செயல்ப்படுகின்றன.

இவைதான் 2011ல் லிபியா மீது நேட்டோ நடத்திய போருக்கு ஆதரவு கொடுத்தன; அது சிரியாவில் அமெரிக்க தலைமை தலையீட்டிற்கு சோதனை ஓட்டம் போல் உதவியது. நேட்டோ சக்திகள், கேர்னல் முயம்மர் கடாபி ஆட்சியுடன் போரிட்ட எதிர்த்தரப்பு இஸ்லாமிய போராளிகள் குழுக்களை ஆதரிக்க தலையீட்டபோது, போலி இடது கட்சிகள் ஏகாதிபத்திய சக்திகள் எதிர்த்தரப்பிற்கு ஆயுதங்கள் கொடுக்க வேண்டும் எனக் கோரின.

அவை கடாபி ஆட்சி அழிக்கப்பட ஆதரித்தன --லிபியாவின் எண்ணெய் தொழிலைக் கைப்பற்றியதின் மூலம், எண்ணெய் வருவாய்களை பறிமுதல் செய்ததின் மூலம், முக்கிய லிபிய நகரங்களான திரிப்போலி, சிர்ட்டே ஆகியவற்றை குண்டுத்தாக்குதலுக்கு உட்படுத்தியதின் மூலம் மற்றும் இறுதியில் கடாபியைக் கொலை செய்ததின் மூலம். அதன்பின் நேட்டோ சக்திகள் அசாத் மீது தங்கள் பீரங்கிகளைத் திருப்புகையில், அவை இதேபோன்ற இஸ்லாமிய சக்திகளையே சிரியாவில் ஆதரிக்கின்றன.

அதன் மிகச் சமீபத்திய அறிக்கைகளின்படி, சர்வதேச சோசலிச அமைப்பு,  சிரியாவில் ஏகாதிபத்திய தலையீட்டின் விரிவாக்கத்தை “மக்கள் புரட்சி சுதந்திரத்திற்கும் கௌரவத்திற்கும்” எனப் பாராட்டியுள்ளது.

அமெரிக்காவிலும் ஐரோப்பாவிலும் மற்றும் உலகெங்கிலும் இச்சக்திகளின் பரிணாமம், போரை எதிர்க்கக்கூடிய அடிப்படை சமூக சக்தி தொழிலாள வர்க்கம்தான் என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 2008 நிதியச் சரிவிற்கு ஐந்து ஆண்டுகளுக்கு பின், உலக முதலாளித்துவத்தின் பெருகும் நெருக்கடி சர்வதேச பதட்டங்களை பெரிதும் அதிகப்படுத்தியுள்ளது.

அமெரிக்க தலைமையிலான ஆளும் வர்க்கம், மீண்டுமொருமுறை உலகை பேரழிவின் விளிம்பிற்குக் கொண்டு வருகிறது. இதைத் தடுக்க ஏகாதிபத்தியம் மற்றும் போருக்கு எதிராக ஒரு சர்வதேச சோசலிச இயக்கம் கட்டமைக்கப்படுவது அவசியமாகிறது.