World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா : துனிசியா Tunisian opposition seizes on Brahmi’s murder to push for Egypt-style coup துனிசிய எதிரத்தரப்பு பிராஹ்மியின் கொலையை பயன்படுத்தி எகிப்திய மாதிரி ஆட்சி சதியை நாடுகிறதுBy Kumaran Ira
எதிர்த்தரப்பு தலைவர் முகம்மத் பிராஹ்மி வியாழன் அன்று படுகொலை செய்யப்பட்டதை பயன்படுத்தி, ஜூலை 3 குருதிகொட்டிய எகிப்து முஸ்லிம் சகோதரத்துவத்திற்கு எதிரான இராணுவ ஆட்சி சதி மாதிரியில், துனிசியாவில் இஸ்லாமியவாத தலைமையின் கீழ் இருக்கும் அரசாங்கத்தை மாற்ற முதலாளித்துவ “இடது” மற்றும் போலி இடது கட்சிகள் விரும்புகிறது. துனிசிய தலைநகர் துனிசில் தன் வீட்டிற்கு வெளியே அடையாளம் தெரியாத தாக்குதல்காரர்களிடம் இருந்து 11 முறை சுடப்பட்டு பிராஹ்மி இறந்தார். இவர் கொலையை கண்ட இவருடைய மகள், இரு கொலைகாரர்கள் மோட்டார் சைக்கிளில் ஒன்றில் தப்பியோடியதாக தகவல் கூறினார். இதற்கு எவரும் இன்னும் பொறுப்பு ஏற்கவில்லை. இப்படுகொலை நாடுமுழுவதும் செல்வாக்கற்ற இஸ்லாமியவாத தலைமையிலான என்னஹடா கட்சி அரசாங்கத்திற்கு எதிரான எதிர்ப்புக்களை தூண்டியுள்ளது. துனிசியாவில் இருந்து அனைத்து விமானப் பயணங்களும் துனிசியாவிற்கான அனைத்து பயணங்களும் இரத்து செய்யப்பட்டன. 58 வயதான பிராஹ்மி, தேசிய மக்கள் இயக்கக் கட்சியின் முன்னாள் பொதுச் செயலாளர் ஆவார், அரசியலமைப்பு மன்றத்தின் உறுப்பினராகவும் இருந்து, ஆளும் என்னஹடா கட்சியை விமர்சிப்பதில் நன்கு அறியப்பட்டவர். இவருடைய கட்சி, பல போலி இடது கட்சிகள் என்ற மக்கள் முன்னணியில், ஹம்மா ஹம்மாமி தலைமையில், சேர்ந்திருந்தது; ஹம்மாமி துனிசிய கம்யூனிச தொழிலாளர் கட்சி (PCOT) இப்பொழுது துனிசியத் தொழிலாளர் கட்சி என்று அறியப்படுவதின் தலைவர் ஆவார். பெப்ருவரி 6ம் திகதி மற்றொரு எதிர்க்கட்சித் தலைவர் சோக்ரி பெலாய்ட் இதேபோல் கொலை செய்யப்பட்ட ஆறு மாதங்களுக்குப்பின் பிராஹ்மியின் கொலை நடந்துள்ளது. பெலாய்டின் கொலை எதிர்ப்புக்களை தூண்டி பிரதம மந்திரி ஹமதி ஜேபலியை இராஜிநாமா செய்ய வைத்தது, புதிய அரசாங்கம் அமைக்க அவர் உடன்பாட்டில் தோல்வி அடைந்ததை அடுத்து. பெலாய்டை எவர் கொன்றார் என்பது தெளிவாகவில்லை; என்னாஹாடாவுடன் பிணைந்திருந்த ஒரு சலாபி குழு அதற்கு குற்றம் சாட்டப்படுகிறது. உள்துறை அமைச்சரக ஆதாரங்கள் நேற்று பிராஹ்மியையும் பெலாய்டையும் கொல்ல ஒரே துப்பாக்கித்தான் பயன்படுத்தப்பட்டது என்று குறிப்புக் காட்டினர். பிராஹ்மி படுகொலை செய்தி பரவியவுடன், எதிர்ப்புக்கள் துனிஸிலும் மற்ற நகரங்களிலும் வெடித்தன, என்னஹ்டா கொலைக்கு பின் இருப்பதாக கண்டிக்கப்பட்டது. ஆயிரக்கணக்கானவர்கள் துனிசில் உள்துறை அமைச்சரகத்தின் முன் எதிர்ப்பு தெரிவித்தனர், அதேபோல் பிராஹ்மியின் சடலம் வைக்கப்பட்டிருந்த அரியானா மாவட்டத்தில் ஒரு மருத்துவமனை முன்னும் எதிர்ப்புக் காட்டினர். “இஸ்லாமியவாதிகள் ஆட்சி ஒழிக” என கோஷமிட்டு, அரசாங்கம் இராஜிநாமா செய்ய வேண்டும் என்றும் அழைப்பு விடுத்தனர். இதேபோன்ற எதிர்ப்புக்கள் மற்ற நகரங்களிலும், 2010-11ல் முன்னாள் பென் அலியின் சர்வாதிகாரத்திற்கு எதிராக எழுச்சிகள் தொடங்கிய துனிசிய தெற்கு நகரங்களான Sfax, Sidi Bouzid (பிராஹ்மியின் வறிய தாய்நகரம்) ஆகியவற்றிலும் வெடித்தன. Sidi Bouzid ல் எதிர்ப்பாளர்கள் என்னஹ்டாவின் உள்ளூர் தலைமையகத்திற்கு தீ வைத்தனர். என்னஹ்டாவின் பிரதம மந்திரி அலி லாராயேட் படுகொலையை கண்டித்துக் கூறினார், “ஒரு அதிகார வெற்றிடத்தை ஏற்படுத்திவிடக்கூடிய, அரசாங்கம் மற்றும் அரசியலமைப்பு கலைக்கப்பட வேண்டும் என்ற அழைப்புக்களுக்கு நாங்கள் எதிராக உள்ளோம்.” என்னஹ்டா கட்சித் தலைவர் Rached Ghannouchi, பிராஹ்மியின் மீதான தாக்குதல் “துனிசியாவில் ஜனநாயக வழிவகையை நிறுத்தும் முயற்சி, குறிப்பாக எகிப்து, சிரியா, லிபியாவில் வன்முறையை பார்க்கையில் இப்பிராந்தியத்தில் இது ஒன்றுதான் வெற்றிகரமான மாதிரி.” துனிசிய முதலாளித்துவ எதிர்த்தரப்பு கட்சிகள், போலி இடது குழுக்கள் மற்றும் துனிசியாவில் UGTT (துனிசிய தொழிலாளர் பொதுச் சங்கம்), பிராஹ்மியின் படுகொலையை எதிர்கொள்ளும் வகையில் அரசாங்கம் இராஜிநாமா செய்ய வேண்டுமென கோரியுள்ளன. UGTT ஒரு பொது வேலைநிறுத்தத்திற்கும் அழைப்பு விடுத்துள்ளது. நேற்று பல போலி இடது குழுக்களும், சங்கங்களும், தேசிய மீட்பு முன்னணி என்ற அமைப்பை அறிவித்தன; இது “தேசத்தின் தீர்விற்கு” ஒரு புதிய அரசியலமைப்பை இயற்றும் தேசிய அதிகாரத்தை தோற்றுவிக்கும் நோக்கத்தை உடையது. இவர்களுள் ஹம்மாமியின் தொழிலாளர் கட்சி, எட்டகடோல் இயக்கம், சோசலிஸ்ட் கட்சி, விவசாயிகள் குரல் மற்றும் அரபு ஜனநாயக முன்னணிக் கட்சி ஆகியவை உள்ளன. அவற்றின் அறிக்கையும் பெலாய்ட் மற்றும் பிராஹ்மியின் படுகொலைக்கு என்னஹ்டாவை குறைகூறியுள்ளது. பிராஹ்மி கொலையில் எவரையும் சந்தேகிக்குமுன், போலி இடது குழுக்கள் உட்பட துனிசிய மதச்சார்பற்ற எதிர்த்தரப்பு மக்கள் முன்னணி, கொலையை பயன்படுத்தி இஸ்லாமியவாத தலைமையில் இருக்கும் அரசியலமைப்பு மன்றத்தை கலைக்கவும் என்னஹ்டாவை அகற்றவும் குரல் கொடுத்துள்ளன. பல பிரதிநிதிகள் கொலைக்குப் பின் அரசியலமைப்பு மன்றத்தில் இருந்து இராஜிநாமா செய்துவிட்டனர். ஹம்மா ஹம்மாமி கூறினார்: “துனிசிய மக்கள் அமைதியான ஒத்துழையாமை இயக்கத்தை குடியரசின் அனைத்து நகரங்களிலும் தொடர அழைப்புவிடுக்கிறோம்; அது அரசாங்கத்தை வீழ்த்தவும், அரசியலமைப்பை அகற்றவும், ஒரு தேசிய மீட்சி அரசாங்கத்தை அமைக்கவும் உதவும்.” அதன் பேஸ்புக் பக்கத்தில், மக்கள் முன்னணி பர்டோவில் இருக்கும் தேசிய அரசியலமைப்பு மன்றத்தின் தலைமையகத்தின் முன் உள்ளிருப்புப் போராட்டத்தை அறிவித்துள்ளது, மக்கள் அரசியலமைப்பு மன்றம் கலைக்கப்படவேண்டும் என்று கோரவேண்டும் என்றும் கூறியுள்ளது. பிராஹ்மியின் கொலை ஒரு வெடிப்பு நிறைந்த நேரத்தில் வந்துள்ளது, எகிப்தில் ஜனாதிபதி முகம்மத் முர்சியின் MB ஆட்சி இராணுவ சதியால் தூக்கியெறியப்பட்டபின் வந்துள்ளது. போலி இடது கட்சிகளால் ஆதரிக்கப்பட்ட ஒரு துனிசிய தமரோட் (எழுச்சி) இயக்கம், எகிப்திய ஆட்சிமாற்றத்திற்கு அரசியல் ஆதரவு அளித்து என்னஹ்டாவை அகற்ற அழைப்பு விடுத்துள்ளது. அமெரிக்க ஆதரவுடைய எகிப்திய இராணுவ ஆட்சி சதி முர்சியை நோக்கம் கொண்டாலும், அதன் இறுதி நோக்கம் சிக்கன நடவடிக்கைகளுக்கு தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பு வருவதை நசுக்குவதாகும் —இதில் மில்லியன் கணக்கான எகிப்தியர்கள் நம்பியிருக்கும் உணவுப் பொருட்கள் மீதான மானிய தொகை அகற்றுதலும் அடங்கும், மேலும் இராணுவம் ஒரு சாலை வரைபடத்தின் மூலம் சர்வாதிகார ஆட்சியை சுமத்தும். மக்கள் அதிருப்தி என்னஹ்டாவிற்கு எதிராக பெருகுகையில் —அது சமீபத்தில் IMF உடன் ஒரு 1.8 பில்லியன் டாலர்கள் கடனுக்கு ஒப்பந்தத்தைக் கொண்டுள்ளது— போலி இடது அமைப்புக்கள் தொழிலாள வர்க்கத்தின் சமூக எதிர்ப்பை கண்டு அஞ்சுகின்றன. Pew Research Centre’s Global Attitudes Project ன் படி, 78 சதவிகித துனிசியர்கள் தங்கள் நாடு சென்று கொண்டிருக்கும் பொதுத்திசை குறித்து அதிருப்தி கொண்டுள்ளனர், 83 வீதத்தினர் தற்போதைய பொருளாதார நிலைமை மோசமாக உள்ளது என உணர்ந்துள்ளனர். ஜூலை 7ம்திகதி, எகிப்திய ஆட்சி சதிக்கு நான்கு நாட்களுக்குப்பின், ஹம்மா ஹம்மாமி துனிசியாவில் இதேபோன்ற போக்கிற்கு அழைப்பு விடுத்தார்: “எகிப்தில் நடந்துள்ளதுபோன்ற நிகழ்வு இங்கு நடப்பது சாத்தியமானதே.” மக்கள் முன்னணி “புரட்சியின் வழிவகையை சரிசெய்ய ஒரு சாலை வரைபடத்தை நிறுவும்” என்று அறிவித்துள்ளது. “அரசியலமைப்புக் கலைப்பு மற்றும் இடைக்கால அரசாங்கம் தோற்றுவிப்பது ஒன்றும் அரசியலமைப்பு வெற்றிடம் ஆகாது” என்றார். ஹம்மாமியின் எகிப்திய இராணுவ சதிபோல் துனிசியாவிலும் தேவை என்பது துனிசிய குட்டி முதலாளித்துவ “இடது” சக்திகளின் பிற்போக்கு வேலைத் திட்டத்தை தெளிவாக்குகிறது. எகிப்தில் இராணுவம் ஆட்சி சதிக்குப்பின் நூற்றுக்கணக்கானவர்களை கொன்றுவிட்டது, சிக்கன நடவடிக்கைகளை தயாரிக்கிறது; உணவு, எரிசக்தி போன்றவற்றிற்கு கொடுக்கப்படும் உதவித் தொகைகளை அகற்ற உள்ளது; பெரும்பாலான மக்கள் அதைத்தான் நம்பியுள்ளனர்; இது வரவு-செலவுத் திட்டத்தை சரி செய்ய எனக் கூறப்படுகிறது. நிதியப் பகுப்பாய்வாளர்கள் துனிசியாவில் உள்நாட்டுப் போருக்கான திறனை சுட்டிக்காட்டியுள்ளனர். லண்டனைத் தளம் கொண்ட HIS Country Risk உடைய மூத்த மத்திய கிழக்கு பகுப்பாய்வாளர் கூறினார்: “நாங்கள் மக்கள் எதிர்ப்புக்களையும் மாற்று எதிர்ப்புக்களையும் மதசார்பற்றவர்கள், இஸ்லாமியவாதிகளுக்கு இடையே காண உள்ளோம், இதில் துனிஸ் மற்றும் பிற நகர மையங்களின் நடுவே மோதல்கள் இருக்கும்.” வறிய தொழிலாளி முகமது Bouazizi சுய பலி பிறகு பென் அலி ஆட்சிக்கு எதிராக மக்கள் எழுச்சியை இருந்து, PCOT உட்பட Tunisian போலி இடது குழுக்கள் முதலாளித்துவ ஆட்சிக்கு தொழிலாள வர்க்கத்தை கீழ்ப்படுத்துவதன், ஒரு பிற்போக்கான பங்கை. முகம்மது பௌஜிஜி என்னும் ஏழைத் தொழிலாளியின் சுய பலிக்குப்பின், பென் அலி ஆட்சிக்கு எதிராக வந்த வெகுஜன எழுச்சியில், PCOT உட்பட துனிசியப் போலி இடது குழுக்கள் தொழிலாள வர்க்கத்தை முதலாளித்துவ ஆட்சிக்கு தாழ்த்தியுள்ள பிற்போக்குத்தனப் பங்கைத்தான் கொண்டுள்ளன. அவை அரசியலமைப்பை முதலாளித்துவ ஆட்சிக்கு ஏற்ற வகையில் இயக்குவதற்கு ஆதரவு கொடுத்து, என்னஹ்டா அக்டோபர் 2011தேர்தலில் வெற்றி பெற வழிசெய்தன. இப்பொழுது போலி இடது சக்திகள் UGTT உடைய உதவியுடன் எதிர்ப்பை கட்டுப்படுத்த முயல்கின்றன; UGTT, பென் அலி சர்வாதிகாரக் காலத்தில் ஒரு நீண்ட காலத் தூணாக இருந்தது. ஆரம்பத்தில் எந்த ஆட்சி சதியும் என்னஹ்டாவை இலக்கு வைத்தாலும், இறுதியில், அதன் நோக்கம் தொழிலாள வர்க்க எதிர்ப்பை நசுக்குவதாக இருக்கும்; அப்பொழுதுதான் அவை துனிசிய ஆளும் வர்க்கத்தின் சார்பிலும் அதன் ஏகாதிபத்திய ஆதரவாளர்கள் சார்பிலும் சிக்கன நடவடிக்கைகளை செயல்படுத்தமுடியும். |
|