தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா : எகிப்து Massacre in Egypt: US-backed junta kills scores, wounds thousands of people எகிப்தில் படுகொலை: அமெரிக்க ஆதரவுடைய இராணுவ ஆட்சி ஏராளமானவர்களைக் கொல்லுகிறது, ஆயிரக்கணக்கான மக்கள் காயம்By Alex Lantier பல்லாயிரக்கணக்கான மக்கள் பங்கேற்ற, பதவி அகற்றப்பட்ட இஸ்லாமியவாத ஜனாதிபதி முகம்மது முர்சியை ஆதரித்தோ அல்லது அவரை ஜூலை 3 ஆட்சி சதியின் மூலம் அகற்றிய இராணுவ ஆட்சியை ஆதரித்தோ நடந்த டஜன் கணக்கான ஆர்ப்பாட்டங்களில் எகிப்து முழுவதும் பயங்கர மோதல்கள் வெடித்துள்ளன. இன்று காலை பாதுகாப்புப் படைகள் முர்சி ஆதரவு அணிவகுப்புக்களை, உண்மையான வெடிபொருட்களையும், இரப்பர் தோட்டாக்களையும் கண்ணீர்ப்புகை குண்டுகளையும் பயன்படுத்தி தாக்கியது. இந் நடவடிக்கை, உள்துறை மந்திரி முகம்மது இப்ரஹிம்—இராணுவத்தால் நியமிக்கபட்டவர்— இன் சதி ஆட்சி, முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவம் ஏற்பாடு செய்யும் எதிர்ப்புக்களை “விரைவில், சட்டபூர்வமாக” அகற்றும் என்று சூளுரைத்த பின் வந்துள்ளது. இன்று, கெய்ரோவின் ரபா அல்-அடாவியா மசூதியில் நாள் முழுவதும் நடைபெற்ற முர்சி ஆதரவுக் கூட்டத்தை இராணுவம் தாக்கியபோது 120 பேர் கொல்லப்பட்டதோடு கிட்டத்தட்ட 4,500பேர் காயமுற்றனர் என்று அல்-ஜசீரா கூறியுள்ளது. கெய்ரோவின் நாசர் நகரத்தில் உள்ள அக்டோபர் 6 பாலத்தில் நடந்த மற்றொரு முர்சி சார்பு எதிர்ப்புப் போராட்டத்தில் பொலிசாருடனான மோதலில் 17 பேர் கொல்லப்பட்டதோடு 500க்கும் மேற்பட்டவர்கள் காயமுற்றனர். அலெக்சாந்திரியாவில் ஒரு இராணுவ சார்பு மற்றும் முர்சி சார்பு ஆர்ப்பாட்டக்காரர்கள் மோதியபோது குறைந்தப்பட்சம் 7 பேர் கொல்லப்பட்டனர், 80 அல்லது அதற்கும் அதிகமானவர்கள் காயமுற்றனர். பாதுகாப்புப் படையினர் முன்குறிப்பின்றி முர்சி ஆதரவு ஆர்ப்பாட்டக்காரர்கள் மீது அலெக்சாந்திரியாவில் சுட்டனர் என முஸ்லிம் சகோதரத்துவ (MB) அதிகாரிகள் கூறுகின்றனர். இறந்தவர்களில், குத்திக்கொல்லப்பட்ட ஒரு 14 வயதான சிறுவனும் அடங்குவான். எகிப்திய சுகாதார அதிகாரிகள், இறந்தவர்கள் அல்லது காயமுற்றவர்களில் பெரும்பாலானவர்கள் தலை அல்லது முண்டப்பகுதியில் சுடப்பட்டனர் என்று தெரிவித்தனர், இது பாதுகாப்புப் படையினர் கொல்லுவதற்கே சுட்டனர் என்பதைக் காட்டுகிறது. கெய்ரோவின் ஷுப்ரா புறநகர்ப்பகுதியான டமீயிட்டா துறைமுக நகர் மோதலிலும் மற்றும் எகிப்தின் வேறுபகுதிகளிலும் நூற்றுக்கணக்கான மற்றவர்கள் காயமுற்றனர். இராணுவம், முஸ்லிம் சகோதரத்துவத்திற்கு இன்று புதிய இராணுவ ஆட்சிக்குழுவுடன் பேச்சுக்களுக்கு சேருமாறு இறுதி எச்சரிக்கை வழங்கப்பட்ட பின்னர், இன்னும் குருதி கொட்டும் வன்முறை வரவுள்ளது என்னும் பரந்த அச்சம் நிலவுகிறது. வியாழன் அன்று, ஜூலை 3 ஆட்சி சதி தலைவர் ஜெனரல் அப்டெல் பட்டா அல்-சிசி, அடுத்த 48 மணி நேரம்தான் “இறுதி வாய்ப்பு” “எதிர்காலத்திற்கு நாட்டைத் தயாரிக்க சேருங்கள்” என்று முஸ்லிம் சகோதரத்துவத்திற்கு (MB) கூறியிருந்தார். இராணுவம் தன்னுடைய பேஸ்புக் பக்கத்தில், வன்முறையில் ஈடுபடுகிறார் எனத் தான் கருதும் எவரையும் சுட இருப்பதாக அறிவித்துள்ளது. “மக்களுக்கு எதிராக துப்பாக்கி இயக்கப்பட மாட்டாது, ஆனால் வன்முறை மற்றும் மதமோ அல்லது நாடோ இல்லாத பயங்கரவாதத்திற்கு எதிராக பயன்படுத்தப்படும்” என தெரிவிக்கிறது. நூற்றுக்கணக்கான எதிர்ப்பாளர்கள், பெரும்பாலானவர்கள் MB ஆதரவாளர்கள் ஆட்சி சதிக்கு பின் நடைபெற்ற ஆர்ப்பாட்டங்களில் கொலையுண்டுள்ளனர். டாங்குகளும் கவசமணிந்த வீரர்களும் கெய்ரோவின் தஹ்ரின் சதுக்கத்தை சூழ்ந்து வெள்ளியன்று நின்றனர். “இராணுவம், பொலிஸ், மக்கள் அனைவரும் ஒருபுறம்” என்னும் கோஷத்திற்கு இடையே உயர்மட்ட பொலிஸ் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகள் பகலில் சதுக்கத்தில் தோன்றினர். முர்சி அகற்றப்பட்டதற்கு ஆதரவு தெரிவித்து இரவு, நூறாயிரக்கணக்கான மக்கள் தஹ்ரிர் சதுக்கம் மற்றும் சுற்றுப்புறத் தெருக்களில் கூடினர். மிகப் பெரிய முர்சி சார்பு அணிவகுப்புக்கள் சினாய் மற்றும் மாட்ரோவில் நடைபெற்றன. இப்பொழுதும் முர்சி ஆதரவு அணிவகுப்புக்கள் முர்சி எதிர்ப்புக்களைவிட அதிகம் எனத் தோன்றுகிறது. ஜூலை 3 ஆட்சி சதிக்குப்பின், வெளிப்படுத்தப்படாத இடத்தில் சிறையில் உள்ள முர்சிக்கு எதிராக இராணுவம் குற்றச்சாட்டுக்களைக் கொண்டுவர உள்ளது என்னும் அறிவிப்பால் அழுத்தங்கள் அதிகமாயின. ஹொஸ்னி முபாரக்கைக் கவிழ்த்த 2011 எழுச்சியின்போது, முர்சி மற்றும் பிற முஸ்லிம் சகோதரத்துவ காவலில் இருந்தவர்கள் சிறையில் இருந்து தப்பியதாக குற்றஞ்சாட்டி, ஒரு தொலைக்காட்சிப் பேட்டியில், “தெரியாத நபர்கள்” அவரையும் பிற MB சிறைக்கைதிகளையும் விடுவித்ததாகவும், இது வாடி நட்ரௌன் சிறையில் நடந்தது என்றும் கூறியிருந்தார். முபாரக்கிற்கு ஆதரவு கொடுப்பதில் கோட்டை போல் இருக்கும் எகிப்திய நீதிமன்றங்கள், முர்சி, பாலஸ்தீனிய இஸ்லாஹமியக் குழுவான ஹமாஸுடன் சதி செய்து எகிப்திய பொலிஸ் நிலையங்களையும் சிறைகளையும் தாக்க முயன்றார் எனக் குற்றம் சாட்டுகின்றன. இந்த கூறப்படும் தொடர்பு, “ஒரு சிறைக்கு தீ வைத்து, கைதிகள் மற்றும் அவரையும் ஓட உதவச்செய்யும், பின்னர் முன்கூட்டி தீர்மானிக்கப்பட்ட அதிகாரிகள், வீரர்கள், கைதிகள் ஆகியோர் கொல்லப்படுவர்.” MB செய்தித் தொடர்பாளர் கெஹட் எல் ஹட்டட், இக்குற்றச்சாட்டுகளை ஒதுக்கித் தள்ளி, அவர்களுடன் முபாரக் ஆட்சி “நாம் மீண்டும் முழு சக்தியாக இருப்பதை சமிக்ஞை காட்டியது” என்றார். பெருகிய முறையில் அதிகார சார்புடைய முர்சி-எதிர்ப்பு எதிர்ப்பாளர்களின் குரல், தொழிலாள வர்க்கத்தின் தலைமை நெருக்கடியை பிரதிபலிக்கிறது; அதேபோல் முதலாளித்துவம் மற்றும் மத்தியர வகுப்புசக்திகள் என எகிப்தின் தாராளவாத போலி இடது கட்சிகளின் எதிர்ப்புரட்சி பங்கையும் குறிக்கிறது. பரந்த வேலைநிறுத்தங்களினாலும், வசந்த காலத்தில் தொழிலாள வர்க்க திரட்டுக்கள் மற்றும் ஜூன் 30 எதிர்ப்புக்களுக்கான அழைப்பு ஆகியவற்றாலும் பீதி அடைந்துள்ள முழு அரசியல் நடைமுறையும் தீவிரமாக வலதுபுறம் பாய்ந்துள்ளன. தமரோட்—தாராளவாத சக்திகள் NSF, சுதந்திர எகிப்திய கட்சி, ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம் போன்றவை அடங்கிய கூட்டணி போலி இடது புரட்சிகர சோசலிஸ்ட்டுக்களால் (RS) ஆதரிக்கப்படுவது— இராணுவ ஆட்சிமாற்றத்திற்கு ஆதரவு கொடுத்துள்ளது. இது ஒரு புதிய இராணுவக்குழு, மக்கள் எதிர்ப்பை நிறுத்த அமைக்கப்படுவதற்கு வழிவகுத்துள்ளது. ஆரம்பத்தில் இராணுவ அடக்குமுறைக்கு MB இலக்காக இருந்தாலும், இராணுவமும் அதன் ஆதரவாளர்களும் இறுதியில் எதிர்ப்பை தொழிலாள வர்க்கத்தின்மீது தங்கள் பிற்போக்குத்தன சமூக செயற்பட்டியலை ஒட்டி திரும்புவர்--இதில் ஆழ்ந்த வெட்டுக்கள், பெரும்பாலான எகிப்திய தொழிலாளர்கள் நம்பியுள்ள முக்கிய உதவித் தொகைகளான உணவு, எரிசக்தி ஆகியவற்றில் செய்யப்படும். தமரோட்டும் அதன் பங்காளி அமைப்புக்களும் இராணுவம் எதிர்ப்புக்களுக்கு விடுத்துள்ள அழைப்பிற்கு பாராட்டுத் தெரிவித்து, எகிப்தில் அரசியல் சூழலை முடிந்த அளவு வலதிற்கு மாற்ற முற்பட்டுள்ளன. தமரோடும் NSF ம் அறிக்கைகளை வெளியிட்டு, அல் சிசியின் இராணுவ அதாரவு எதிர்ப்புக்களுக்கு ஒப்புதல் கொடுத்து இராணுவத்திற்கு முழு ஆதரவை அதன் “பயங்கரவாதத்திற்கு எதிரான” போருக்குக் கொடுத்துள்ளன. ஏப்ரல் 6 இளைஞர் இயக்கம், இராணுவத்தின் அழைப்புக்களுக்கு ஒப்புதல் கொடுக்கவில்லை; ஆனால் இராணுவ அடக்குமுறைக்கான ஆதரவை அடையாளம் காட்டியுள்ளது. ஆயுதப்படைகளுக்கு “தன் நாட்டுப்பற்று கடமைகளான பாதுகாப்பு மற்றும வன்முறையை எதிர்த்தலுக்கு மக்கள் பிரதிநிதிகள் தேவையில்லை” என்று அது கூறியுள்ளது. ஒரு இழிந்த சூழ்ச்சிகையாளலுடன், புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS), “இரண்டாம் புரட்சி” என ஆட்சி சதியை பாராட்டியது, இராணுவத்தின் எதிர்ப்புக்களுக்கு ஒப்புதல் கொடுக்க மறுத்துள்ளது. “சகோதரத்துவம், மதத்தின் பேரால் அதிகாரத்தை தக்க வைப்பதற்காக, மக்களுக்கும், எகிப்தின் பழங்குடி கிறிஸ்தவர்களுக்கும் (Copts) எதிராக என்ன குற்றம் இழைத்திருந்தாலும், நாம் இராணுவத் தலைவர் எல்சிசிக்கு நம் அதிகாரத்தைக் கொடுக்கத் தேவையில்லை. வெள்ளியன்று நாம் படுகொலை செய்ய உரிமையளிக்க தெருக்களுக்குச் செல்லத் தயாராக இல்லை.” என்று எழுதியது.
இந்த அறிக்கை, இராணுவத்தின் படுகொலைகளுக்கு அவர்களுடைய எதிர்ப்பை பிரதிபலிக்கவில்லை, RS உடைய கவலைகளான, ஆட்சி சதிக்கான அவர்களுடைய ஆதரவு அரசியலில் அம்பலப்பட்டுவிட்டதைக் காட்டுகிறது. (See also: Egypt’s Revolutionary Socialists seek to cover up support for military coup ) உண்மையில், முக்கிய RS உறுப்பினர்கள் நேற்று ஒரு இராணுவத் தலையீட்டிற்கு ஆதரவு கொடுப்பதாக கூறினார்கள். தன்னுடைய டிவிட்டர் கருத்தில், RS உறுப்பினர் கிகி இப்ராகிம், RS இணைய தள எழுத்தாளர் ஹோசம் எல் ஹமலவி உடைய பங்காளி, இராணுவம் எதிர்ப்புக்களில் தலையிட வேண்டும் என்று கோபத்துடன் கூறியுள்ளார். “ஐந்து பேர் அலெக்சாந்திரியாவில் கொல்லப்பட்டனர், இராணுவமோ, பொலிசோ எதிர்ப்புக்களில் தலையிடவில்லை; ஆனால் எகிப்தில் சதுக்கங்களை சுற்றி சிசி இன் கட்டளையான வன்முறைக்கு எதிராக கூடுகின்றனர்” என்று அவர் எழுதினார். “இராணுவமும் பொலிசும் இப்பொழுது அனைவரும் போற்றுபவை ஏன் குருதி சிந்துதலை நிறுத்தவில்லை, அதில் தலையிடவில்லை?’ இன்னும் அடிப்படையில், RS ன் நிலைப்பாடு, அமைப்பின் நீண்டகால அமெரிக்க வெளியுறவுக் கொள்கையுடன் பிணைந்திருப்பதை பிரதிபலிக்கிறது. வாஷிங்டனைப் போலவே, இவர்களும் அடிப்படை ஆட்சி சதிக்கு அடையாளம் காட்டுகின்றனர்; அதே நேரத்தில் இராணுவத்திற்கும் MB க்கும் இடையே அதிக இரத்தம் கொட்டப்படுவதை தடுக்கவும் முயல்கின்றது. இத்தகைய குருதிகொட்டல் வாஷங்டனுக்கு MB மற்றும் இராணுவத்திற்கும் இடையே சமரசத்தை கொண்டுவரவதைக் கடினமாக்கும், எகிப்திய அரசை உறுதிப்படுத்துவதை இடருக்கு உட்படுத்தும்; இதுதான் மத்திய கிழக்கில் அதன் முக்கிய தூண்களில் ஒன்றாகும். பெயரிட விரும்பாத அமெரிக்கத் தூதரக அதிகாரிகள் அல் அஹ்ரத்திடம், “சகோதரத்துவத்தை பொறுத்தவரை, அமெரிக்காவின் முக்கிய நோக்கம், எகிப்தின் அரசியல் வாழ்வில் மறு ஒருங்கிணைக்கப்பட வேண்டும், குழுவின் மீது குற்றச்சாட்டுக்கள் கூடாது என்பதாக” இருக்கவேண்டும் என்றார். நேற்று அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் ஜோன் கெர்ரி எகிப்திய வெளியுறவு மந்திரி நபில் பஹ்மியுடன் நீண்ட நேரம் பேசி, ஆட்சி சதிக்கு ஒப்புதல் கொடுத்தார். பின் வாஷிங்டன், எகிப்து ஒரு “ஜனநாயகப் பாதைக்குத் திரும்ப வேண்டும்” என்று கூறிய கெர்ரி, ஆட்சி சதியால், எகிப்திய ஆட்சிக்கு அமெரிக்க பொருளாதார அல்லது இராணுவ உதவியிலான தாமதம், “தற்காலிகமானது” என பஹ்மிக்கு தெரிவித்தார். நிர்வாகம், உதவிகளில் சட்டப்படி வெட்டுக்கள் ஏற்படக்கூடிய, இராணுவம் முர்சியை அகற்றியதை ஆட்சி சதி என அறிவிக்காது என தெளிவுபடுத்தியுள்ளது. வாஷிங்டன் தற்காலிகமாக நான்கு F16 போர் விமானங்களை கெய்ரோவிற்கு அனுப்புவதை நிறுத்திவைத்திருந்தாலும், பென்டகன் திட்டமிட்டபடி எகிப்திய இராணுவத்துடன் கூட்டுப் பயிற்சிகளை நடத்தும். |
|
|