சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Greece and Detroit—a new stage in the social counterrevolution

கிரீசும் டெட்ராயிட்டும் - சமூக எதிர்ப்புரட்சியில் ஒரு புதிய கட்டம்

Stefan Steinberg
27 July 2013

use this version to print | Send feedback

இந்த வாரம் கிரேக்கத்தில் பொதுத்துறை ஊழியர்களை பரந்த அளவில் வேலையை விட்டு நீக்குவதில் ஒரு புதிய அலையைக் காண நேர்ந்தது. திங்களன்று 2,000 ஆசிரியர்கள் அவர்களது வேலைகளில் இருந்து இடைநீக்கம் செய்யப்பட்டனர், அத்துடன் 2,500 சுகாதாரத் தொழிலாளர்கள் அவர்கள் ஒரு தொழிலாளர் நகர்வு (labour mobility) சிக்கன நடவடிக்கை திட்டத்திற்குள்ளாக - இது ஏறக்குறைய வேலைவாய்ப்பு பறிக்கப்படுவதற்கு இடையில் தற்காலிக ஆசுவாசம் செய்து கொள்ளச் செய்கின்ற ஒரு நிலை - மாற்றப்படுவதான தகவலறிவிப்பை பெற்றனர். இந்த ஆண்டின் இறுதிக்குள்ளாக 27,000 பேரை தொழிலாளர் நகர்வு திட்டத்திற்குள் தள்ளுவது அவர்களது இலக்கு. இந்த தொழிலாளர்களில் அநேகம் பேர் இந்த ஆண்டின் முதல் ஆறு மாதங்களில் வேலைவாய்ப்பின்றியோ அல்லது உபரியாகவோ ஏற்கனவே ஆக்கப்பட்டிருக்கின்ற 15,000 தொழிலாளர்களுடன் கூடுதலாகச் சேர்வர்.

2015 ஆம் ஆண்டுக்குள்ளாக 150,000 வேலைகளை வெட்ட வேண்டும் என்பது தான் ஐரோப்பிய ஒன்றியம், சர்வதேச நாணய நிதியம் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி ஆகியவற்றால் உத்தரவிடப்பட்டு நடத்தப்பட்டுக் கொண்டிருக்கும் நடப்பு வேலை வெட்டுக்கான ஒட்டுமொத்த இலக்கு ஆகும்.

ஐரோப்பாவில் பொதுத் துறை ஊழியர்களுக்கு இருக்கும் உத்தரவாதமான வேலைப் பாதுகாப்பை அகற்றுவதென்பது நிதி மூலதனம் தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக தொடுத்திருக்கும் ஒரு சர்வதேச அளவிலான தாக்குதலின் பாகமாகும். அமெரிக்காவில் டெட்ராயிட் நகரம் அதன் நிதி மேலாளர் கெவின் ஓரால் திவால்நிலைக்குள் தள்ளப்பட்டிருக்கும் அதே சமயத்தில் இது நிகழ்கிறது. ஓய்வு பெற்றவர்களின் ஓய்வூதியங்களை வெட்டுவதற்கும் நகரத்தின் சொத்துகளை விற்றுத் தள்ளுவதற்கும் ஓர் நடவடிக்கை எடுத்துக் கொண்டிருக்கிறார். தொழிலாள வர்க்கம் மிகக் கடுமையான போராட்டங்களின் ஊடாக வென்றெடுத்திருக்கும் ஒவ்வொரு சமூக உரிமையும் உலகெங்குமான நிதி உயரடுக்கினருக்கு தமது இலாபங்கள் மற்றும் செல்வத்திற்கு முன்னால் நிற்கும் சகிக்க முடியாத முட்டுக்கட்டையாகத் தெரிகிறது.

கிரீஸில் வேலைவாய்ப்பின்மை ஏற்கனவே 30 சதவீதத்தைத் தாண்டி நிற்கும் ஒரு நிலையில் தான் சுமார் 27,500 பொதுத் துறை ஊழியர்களை வேலைநீக்கம் செய்யும் சர்வதேச வங்கிகள் மற்றும் முக்கூட்டின் கோரிக்கைகளுக்கு ஏதென்ஸ் சென்ற வாரத்தில் ஒப்புக் கொண்டுள்ளது. அவர்களுக்கு சுகாதாரப் பராமரிப்பு மற்றும் ஓய்வூதிய உரிமைகள் பறிபோகும். கடந்த நான்கு ஆண்டுகளில் ஏழு சிக்கன நடவடிக்கை வரவு-செலவுத் திட்டங்கள் அமலாகியிருப்பதைத் தொடர்ந்து கிரேக்க மக்களில் 40 சதவீதம் பேர்  ஏற்கனவே முழுமையாக சுகாதாரப் பரமாரிப்பு இன்றி இருக்கின்றனர். தொழிலாளர் நகர்வு திட்ட இலக்கு எண்ணிக்கையில், ஊனமுற்ற தொழிலாளர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் கோரியிருக்கிறது.

பொது நிர்வாகத் துறை அமைச்சரான கிரியகோஸ் மிட்ஸோடகிஸ் - இவர் முன்னதாக சொத்து பறிக்கும் நடவடிக்கைகளில் இழிபெயர் சம்பாதித்த மெக்கென்சி ஆலோசனை முகமை (McKinsey consultancy agency) என்னும் நிறுவனத்திற்காக வேலை பார்த்தவர் - தான் இந்த வேலைநீக்கங்களுக்கான பொறுப்பில் அமர்த்தப்பட்டிருக்கிறார்.

கிரீசிலும் சரி டெட்ராயிட்டிலும் சரி முறையே நாடு மற்றும் நகரம் திவாலாகி விட்டது எனவே இனியும் அரசு வாழ்வாதார ஊதியங்களுக்கும் சமூக நல உதவிகளுக்கும் செலவிட முடியாது என்பதான பிரச்சாரம் தான் தொழிலாளர்களிடம் கூறப்படுகிறது. ஆனால் இந்தப் பிரச்சாரம் ஒரு நச்சுத்தனமான பொய் ஆகும்!

2008 ஆம் ஆண்டில் வங்கிகளைப் பிணையெடுப்பது என்று வரும்போது வோல் ஸ்ட்ரீட் மற்றும் முக்கிய ஐரோப்பிய வங்கிகளின் ஊக வணிக இழப்புகளை மூடிமறைக்கும் பொருட்டு ஒரேநாள் இரவில் வாஷிங்டனும் மற்றும் ஐரோப்பிய தலைநகரங்களும் டிரில்லியன் கணக்கிலான பணத்தை அள்ளியிறைக்க முடிந்தது. இப்போது வோல் ஸ்டீரிட் மற்றும் மேற்கு ஐரோப்பாவில் பங்குச் சந்தைகள் ஏறிச் செல்கின்றன. அட்லாண்டிக்கின் இரு பக்கத்திலும் இருக்கும் முக்கிய வங்கிகள் எல்லாமே உச்ச அளவிலான இலாபங்களைக் குவித்துக் கொண்டிருக்கின்றன.

எத்தகைய போர்க்குணமிக்க வர்க்கப் போராட்டங்களின் மூலமாக இப்போது தாக்குதலுக்கு உள்ளாகி வரும் சமூக உரிமைகளை ஆரம்பத்தில் வென்றெடுத்ததோ அதே போர்க்குணமிக்க வர்க்கப் போராட்டங்களை மீண்டும் புதுப்பிப்பது ஒன்றே தொழிலாள வர்க்கத்தின் முன்னிருக்கும் ஒரே வழியாகும். அமெரிக்காவில் 1930கள் தொடங்கி நடந்த கடுமையான வர்க்கப் போராட்டங்களின் பாதையில் தான் - இப்போராட்டங்கள் பெரும்பாலும் சோசலிச சிந்தனை கொண்ட தொழிலாளர்களால் தலைமை தாங்கி நடத்தப்பட்டன - வாழ்வூதியம், சமூக மற்றும் சுகாதார நல உதவிகள் ஆகியவை முதலாளிகளிடம் இருந்து கைப்பற்றப்பட்டன.

ஐரோப்பாவின் ஆளும் வர்க்கம், பாசிசத்துக்கு அது அளித்திருந்த ஆதரவின் மூலம் மதிப்பிழந்து போயிருந்த நிலையிலும், அதிகரித்துச் செல்லும் வர்க்கப் போராட்டங்கள் புரட்சியாக ஒன்றுதிரண்டு விடக் கூடாது என்ற அச்சத்தினாலும் - அதற்குக் காரணம் தொழிலாள வர்க்கத்திடம் அக்டோபர் புரட்சிக்கு இருந்த கௌரவம் - இரண்டாம் உலகப் போருக்குப் பின்னர் ஐரோப்பிய தொழிலாளர்கள் வென்றெடுத்த சமூக வெற்றிகளை அது தயக்கத்துடன் ஏற்றுக் கொண்டது.

கிரீஸில் தொழிலாள வர்க்கத்தின் விடாப்பிடியான எதிர்ப்பு தான் 1974 இல் இராணுவ ஆட்சிக்குழு வீழ்ச்சி காண்பதற்கு இட்டுச் சென்றதோடு அடுத்து வந்த PASOK அரசாங்கம் முக்கியமான சலுகைகளை அளிக்கவும், குறிப்பாக பொதுத்துறை வேலைவாய்ப்பை கணிசமாக அதிகரிக்கச் செய்வதற்கும் தள்ளியது.

இந்த வெற்றிகள் மீது தாக்குதல் தொடுப்பதற்கு நிதி உயரடுக்கினருக்கும் வாஷிங்டனிலும், புரூசேல்ஸிலும் மற்றும் ஏதென்ஸிலும் இருக்கக் கூடிய இவர்களது அரசியல் வேலையாட்களுக்கும் முடிகிறது என்றால் அதற்குக் காரணம் போலி-இடது கட்சிகள் மற்றும் அவை ஆதரிக்கும் பழைய தொழிற்சங்க அதிகாரத்துவங்களின் பிற்போக்குத்தனமான பாத்திரமே. 1968க்குப் பிந்தைய தொழிலாள வர்க்கப் போராட்டங்களின் எழுச்சிக்கும் உலகமயமாக்கத்தின் அபிவிருத்திக்கும் இவர்கள் காட்டிய பதிலிறுப்பு தங்களை முதலாளிகள் மற்றும் வங்கிகளின் பக்கத்தில் நிறுத்திக் கொண்டது தான்.

சோவியத் ஒன்றியமும் கிழக்கு ஐரோப்பாவின் ஸ்ராலினிச ஆட்சிகளும் வீழ்ச்சி கண்ட பின்னர், இவர்கள் காட்டி வந்த சோசலிச உணர்வுகளில் கொஞ்ச நஞ்சம் எஞ்சியிருந்ததையும் நிராகரித்து விட்டனர்.

முதலாளிகளுக்கு சலுகைகள் காட்டுவதும் ஜனநாயகக் கட்சியில் நம்பிக்கை வைப்பதுமே டெட்ராயிட் தொழிலாளர்களை மோசமான நிலையில் இருந்து காப்பாற்ற முடியும் என்ற மந்திரத்தைத்தான் ஐக்கிய வாகனத் தொழிலாளர்கள் சங்கம் (UAW) இப்போது வரை பல தசாப்தங்களாக சொல்லி வந்திருக்கிறது. கிரேக்கத்தில், ஏராளமான தேசிய அளவிலான ஒருநாள் வேலைநிறுத்தங்கள் உட்பட உப்புச்சப்பில்லாத ஆர்ப்பாட்ட போராட்டங்களை நடத்தினாலே கிரேக்க அரசாங்கம் போராட்டத்தின் நியாயத்தை உணர்ந்து சிக்கன நடவடிக்கையில் இருந்து பின் வாங்கி விடும் என்பதான பிரமைகளையே தொழிற்சங்கங்கள் ஊக்குவித்து வந்திருக்கின்றன.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் இருக்கும் தொழிலாள வர்க்கம் தமது சொந்த முடிவுகளுக்கு வர வேண்டும், ஒரு சுயாதீனமான புரட்சிகர முன்னோக்கின் அடிப்படையில் தமது போராட்டங்களை நோக்குநிலைபடுத்திக் கொள்ள வேண்டும்.

தொழிற்சங்கங்களிலோ, அமெரிக்காவின் ஜனநாயகக் கட்சி அல்லது ஐரோப்பாவின் சமூக ஜனநாயகக் கட்சி போன்ற முதலாளித்துவ இடது கட்சிகளிலோ, அல்லது கிரீஸின் SYRIZA கட்சி போன்ற போலி-இடது அமைப்புகளிலோ தொழிலாளர்கள் நம்பிக்கை வைக்கக் கூடாது. ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் வங்கிகளுடன் கூடிப் பேசி, சிக்கன நடவடிக்கைத் திட்டத்தையே சேதாரம் குறைவான ஒரு முறையில் மாற்றியமைக்க முடியும் என்பதாக SYRIZA வாதிட்டுக் கொண்டிருக்கிறது.

புதிய வெடிப்பு மிகுந்த வர்க்க மோதல்களுக்கான களம் அமைக்கப்பட்டு விட்டது. அடிப்படை சமூக உரிமைகள் மீதான இத்தகைய முழுமூச்சான தாக்குதல்கள் எல்லாம் ஜனநாயக உரிமைகளுடன் இணக்கமற்றது என்பதை நன்கு தெரிந்து வைத்திருக்கும் ஆளும் உயரடுக்கினர் எதேச்சாதிகார ஆட்சி முறைகளை நோக்கி நகர்ந்து கொண்டிருக்கின்றனர். அமெரிக்காவின் NSA உடன் ஒப்பிடத்தக்க அதேபோன்ற கண்காணிப்பிற்கென ஐரோப்பிய அரசுகள் தமது சொந்த வழிமுறைகளை உருவாக்கி  வைத்திருக்கின்றன என்பதை வெளிப்படுத்தும் எட்வார்ட் ஸ்னோவ்டெனின் ஆவணங்களின் மூலம் மிக சமீபத்திலும் இது உறுதிப்படுத்தப்பட்டிருக்கிறது.

தொழிலாளர்களின் இன்றைய எதிர்ப்பிற்கு தயார் செய்யும் பொருட்டு கடந்த காலத்தின் சோசலிச மரபுகள் புதுப்பிக்கப்பட வேண்டும். உலகெங்கும் இருக்கும் சோசலிச சமத்துவக் கட்சிகளும், அவற்றின் அரசியல் குரலான உலக சோசலிச வலைத் தளமும் மட்டுமே சோசலிச சர்வதேசியத்திற்கான போராட்டத்தின் தொடர்ச்சியை இப்பூமியில் பிரதிநிதித்துவம் செய்கின்ற ஒரேயொரு அரசியல் போக்குகாகும்.

இன்று அமெரிக்காவில் சோசலிச சமத்துவக் கட்சி, டெட்ராயிட் மற்றும் நாடெங்கிலும் இருக்கும் தொழிலாளர்களை அணிதிரட்ட போராடிக் கொண்டிருக்கிறது. ஜேர்மனியில், வேலைகளை பாதுகாப்பதற்கான ஐரோப்பாவெங்குமான பிரச்சாரத்தையே, செப்டம்பர் கூட்டாட்சித் தேர்தலுக்கான தனது பிரச்சாரத்தின் இருதயத்தானமாக சோசலிச சமத்துவக் கட்சி இருத்தியுள்ளது. எங்களது வலைத் தளத்தை படிக்கவும் தொழிலாள வர்க்கத்துள் புதிய புரட்சிகரத் தலைமையைக் கட்டியெழுப்புவதற்கு பங்களிப்பு செய்யவும் தொழிலாளர்களையும் இளைஞர்களையும் நாங்கள் வலியுறுத்துகிறோம்.