தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ரஷ்யா மற்றும் முந்தைய USSR Snowden remains in airport as Russian officials send mixed messages ரஷ்ய அதிகாரிகள் மாறுபட்ட தகவல்களை அனுப்புகையில் ஸ்னோவ்டென் விமான நிலையத்திலேயே இருக்கிறார் By Eric London
தகவல் வெளிப்படுத்துபவரான எட்வார்ட் ஸ்னோவ்டென், மாஸ்கோவில் உள்ள Sheremetyevo விமான நிலையத்தில் இருந்து வெளியேற அனுமதிக்கும் ஒரு சான்றிதழ் வழங்கப்பட்டது என ரஷ்ய அதிகாரிகள் நேற்று தெரிவித்தனர். ஆனால் பின்னர், அதிகாரிகள் விமான மாற்றுப் பகுதியில் இருந்து வெளியேறுவதை அதிகாரத்துவ பாசாங்குத்தனங்களை காட்டித் தடுத்தனர். ஒரு மாதத்திற்கும் மேலாக விமான மாற்றுப் பகுதியில் ஸ்னோவ்டென் பொறியில் அகப்பட்டதுபோல் உள்ளார்; ஏனெனில் ஒபாமா நிர்வாகம் அவரைக் கைப்பற்றி இந்த இளம் தகவல் வெளிப்படுத்துபவரை சிறையில் தள்ள விரும்புகிறது. இம்முயற்சிகளில் அச்சுறுத்துல் தொலைபேசி அழைப்புக்களும் பொலிவிய ஜனாதிபதி ஏவோ மோராலேஸ் உடைய விமானம் கட்டாயமாகக் கீழிறக்கப்பட்டதும் அடங்கும். ஆனால் புகலிடம் கோருபவர் என்னும் வகையில் ஸ்னோவ்டெனுடைய அந்தஸ்து தெளிவாக இல்லை. நுழையும் சான்றிதழ் இருந்தும்கூட, ஸ்னோவ்டெனுக்கு தற்காலிக புகலிடமும் கொடுக்கப்படவில்லை, ரஷ்ய கூட்டாட்சி குடியேறும் பணித்துறைப் பிரிவின்படி (FMS) ஆழ்ந்து ஆராய்தல் செயல்முறை மூன்று மாதங்களுக்கு மேலாகும் எனத் தெரிகிறது. தன்னுடைய பங்கிற்கு ஜனாதிபதி விளாடிமிர் புட்டினின் ரஷ்ய அரசாங்கம் ஸ்னோவ்டெனுக்கு பாதுகாப்புத் தஞ்சத்தை அவர் “அனைத்து அரசியல் செயல்பாடுகளையும் நிறுத்தினால் ஒழிய” தருவதற்கில்லை என மறுத்துவிட்டது. புதன் அன்று FMS ல் இருக்கும் அதிகாரி ஒருவர், ஸ்னோவ்டென் விமான நிலையத்தில் இருந்து வெளியேற்றப்பட்டுவிட்டால் “ரஷ்ய சட்டத்தை செயல்படுத்தும் அதிகாரிகள் குறிப்பிடும் இடங்களில்தான் தங்க அனுமதிக்கப்படுவார்” என்றார். நேற்று விமான மாற்றுப் பகுதியில் இருந்து ஸ்னோவ்டென் வெளியேற அனுமதி மறுக்கப்பட்டதில் இருந்து ரஷ்ய அரசாங்கம் அவரைக் காக்க விரும்பவில்லை என்பது தெளிவாகியுள்ளது. அரசாங்க அதிகாரிகள் அவரை மீண்டும் விமான மாற்றுப் பகுதிக்கு அனுப்பி வைத்தனர்; அவருடைய ஆவணத்தாட்கள் சரியாக இல்லை என்ற காரணம் கூறப்பட்டது. பெயரிட விரும்பாத FMS அதிகாரி ஒருவர், “ஸ்னோவ்டெனிடம் முறையான பாஸ்போர்ட் இல்லை, ரஷ்ய எல்லைக்குள் நுழைவதற்கு பல்வேறு ஆவணங்களின் ஒரு முழுத் தொகுப்பு தேவைப்படும்” என்றார். ஸ்னோவ்டெனுடைய வக்கீல் அனட்டோலி குச்சேர்னா செய்தியாளர்களிடம் ஸ்னோவ்டென் விமான மாற்றுப் பகுதியை விட்டு வெளியேற மாட்டார் என்றார். “இந்த நிலைமை ரஷ்யாவில் பொதுவாகக் காண்பதற்கில்லை” என்றார் குச்சேர்னா. “நாங்கள் சில அதிகாரத்துவக் கெடுபிடிகளை எதிர்கொண்டுள்ளோம். அவருடைய ஆவணங்கள் இன்னும் பரிசீலிக்கப்படுகின்றன. சில காலம் நாம் காத்திருப்போம், அடுத்த சில நாட்களில் பிரச்சினை தீர்க்கப்படும் என நம்புவோம்” என்றார். ஸ்னோவ்டெனுடைய ஓட்டல் அறைக்குச் சென்றுவந்தபின், குச்சேர்னா ஸ்னோவ்டெனுடைய பாதுகாப்பு “உயர்மட்ட முன்னுரிமை” என்றார். ஒபாமா நிர்வாகம், பிடி ஆணை, விசாரணை என்று அமெரிக்கக் குடிமக்களையும் கொல்லும் திறன் உடையது என்பதைத் தெளிவாக்கியுள்ளது; ஸ்னோவ்டெனுடைய வாழ்க்கை ரஷ்ய இரகசியப் பொலிசின் கைகளில் இருக்கும் வரை எத்தைகைய பாதுகாப்பையும் கொண்டிருக்கவில்லை. தான் புதிய உடைகளையும், பயோடோர் டோஸ்டோயேவ்ஸ்கியின் “குற்றமும் தண்டனையும்” என்னும் நூலின் பிரதியையும் ஸ்னோவ்டெனிடம் கொடுத்ததாக குச்சேர்னா குறிப்பிட்டார். ஸ்னோவ்டெனுடைய முறையீடு ஏற்கப்பட்டால், அவர் ரஷ்யாவிற்குள் நிரந்தரமாக குடியேற முடிவெடுக்காலாம் என்று குச்சேர்னா சமிக்ஞை செய்தார். அவருடைய விண்ணப்பம் மறுக்கப்பட்டால், முடிவை எதிர்த்து ஸ்னோவ்டென் ரஷ்ய நீதிமன்றத்தில் முறையீடு செய்வார் என்று குச்சேர்னா கூறினார். எப்படியும் ஸ்னோவ்டெனுடைய வருங்காலம் உறுதியற்று உள்ளது. ரஷ்யாவில் இருக்க முடிவெடுத்தாலும், அவருக்குத் தஞ்சம் கொடுப்பது பரிசீலிக்கப்படும் என விருப்பம் தெரிவித்துள்ள நான்கு இலத்தின் அமெரிக்க நாடுகளில் ஒன்றிற்கு பயணிக்க முயற்சித்தாலும், ஸ்னோவ்டெனுடைய வாழ்க்கை ஏதேனும் ஒரு முதலாளித்துவ அரசாங்கத்தின் கரங்களில்தான் இருக்கும்; அவை ஒன்றும் ஜனநாயக உரிமைகளைக் கொள்கையுடன் பாதுகாக்கும் விருப்பத்தைக் கொண்டவை அல்ல. இதுதான் பொலிவிய ஜனாதிபதி ஏவோ மோராலேஸினால் நேற்று, இம்மாதம் முன்னதாக ஆஸ்திரியா வியன்னாவில் அவருடைய விமானத்தை கட்டாயமாக தரையிறக்கியதில் உடந்தையாக இருந்த ஐரோப்பிய நாடுகளிடம் கூறியதில் பிரதிபலிப்பாகிறது. “முதல் கட்டமாக நான்கு நாடுகள் அளிக்கும் மன்னிப்பையும் நாம் ஏற்கிறோம்; ஆனால் நம் நாடுகளுக்கு இடையே உள்ள மரியாதையான உறவைத் தொடர விரும்புகிறோம், ஒருவருக்கு ஒருவர் உதவுதல், ஒற்றுமை என்ற உறவுகள்தாம் அவை.” என்று மோராலேஸ் பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, போர்த்துக்கல் நாட்டுஅரசாங்கங்களை நோக்கி தெரிவிக்கப்பட்ட அறிக்கையில் கூறியுள்ளார். ஏகாதிபத்திய ஆதிக்கத்திற்கு உட்பட்ட அமைப்புக்களான அமெரிக்க அரசுகளின் அமைப்பு (Organization of American States -OAS) மற்றும் ஐ.நா.விற்கு அவை நிகழ்வுகளை கையாண்டதற்கு மோராலேஸ் நன்றி தெரிவித்தார். இலத்தின் அமெரிக்காவிற்கு ஸ்னோவ்டென் செல்லுவது உறுதி அல்ல. கடந்த வாரம் அமெரிக்க வெளிவிவகாரச் செயலர் கெர்ரி, வெனிஜூலா அரசை அச்சுறுத்தும் வகையில் அமெரிக்கா, ஸ்னோவ்டென் விமானத்தில் இருக்கிறார் எனச் சந்தேகித்தால், அமெரிக்க அல்லது நேட்டோ வான்வழியில் எந்த விமானப் பயணத்தையும் கீழிறக்கும் என்றார். வெனிஜூலிய ஜனாதிபதி நிக்கோலோ மதுரோவை அழைத்துச்செல்லும் விமானத்தையும் கூட அமெரிக்கா கீழிறக்கும் என்று கெர்ரி அப்பட்டமாகக் கூறினார். “ஜனாதிபதிக்குத்தான் விதிவிலக்கு, விமானத்திற்கு அல்ல” என்றார் கெர்ரி. |
|
|