சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் :ஆசியா : பாகிஸ்தான்

New Pakistani government desperate for IMF bailout

சர்வதேச நாணய நிதிய பிணை எடுப்பிற்காக புதிய பாகிஸ்தானிய அரசாங்கம் ஏங்கிக்கொண்டுள்ளது

By Sampath Perera
25 July 2013

use this version to print | Send feedback

புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள நவாஸ் ஷெரீஃபின் பாக்கிஸ்தானிய அரசாங்கம் வெளிநாட்டு நாணய இருப்பு நெருக்கடியை தவிர்ப்பதற்கு சர்வதேச நாணய நிதியத்திடம் தவிர்க்கமுடியாத பிணைஎடுப்பை நாடுகிறது. ஜூன் மாதம் தன் முதல் வரவு-செலவுத் திட்டத்தில் கடுமையான செலவுக் குறைப்புக்களை சுமத்தியபின், ஷெரீஃபின் அரசாங்கம் சர்வதேச நாணய நிதியத்திடம் (IMF) இத்தாக்குதல்களை தீவிரப்படுத்துவதாக உறுதியளித்துள்ளது.

பாக்கிஸ்தானுக்கு வெளிநாட்டு நிதியுதவி அவசரமாகத் தேவைப்படுகிறது, ஏனெனில் அதன் வெளிநாட்டு நாணய இருப்புக்கள் அமெரிக்க 6.3 பில்லியன் டாலர்கள் என 6 வார கால இறக்குமதிகளுக்கு மட்டுமே போதுமானதாக உள்ளது. மற்றவற்றுடன் அரசாங்கம் உலக வங்கி மற்றும் ஆசிய வளர்ச்சி வங்கியையும் இன்னும் அதிக உதவிக்காக, கிட்டத்தட்ட அமெரிக்க 5 பில்லியன் டாலர்கள், கடனை அடுத்த 12 மாதங்களில் அடைப்பதற்காக நாடுகிறது.

அமெரிக்கா, 5.3 பில்லியன் டாலர்கள் பிணையெடுப்பு பொதியை பாக்கிஸ்தானுக்கு அளிக்க IMF ஒப்புக்கொண்டுள்ளது என ஜூலை 4 அறிக்கை கூறுகிறது. ஆனால் பாக்கிஸ்தான், நிர்ணயிக்கப்படும் பல செலவுக்குறைப்புக்கள் இலக்கை பூர்த்தி செய்ய, வரிகளை அதிகப்படுத்த வேண்டும், இப்பிணையெடுப்பை பெற பொருளாதாரக் கொள்கையை சீர்திருத்த வேண்டும்.

IMF இற்குள் மிக அதிக ஒற்றை வாக்கு முகாமைக் கொண்டிருக்கும் வாஷிங்டன், சந்தேகத்திற்கிடமின்றி வரவிருக்கும் கொடுக்க வேண்டிய பணங்களின் இருப்பையும் பயன்படுத்தி ஷெரீஃப் அரசாங்கத்தை ஆப்கானிய-பாக்கிஸ்தானிய போரில் தான் ஆணையிட்டதை செய்யத் தூண்டும்.

பாக்கிஸ்தானிய முஸ்லிம் லீக் (PML-N) அரசாங்கத்திற்கு செப்டம்பர் வரை இந் நிபந்தனைகளை செயல்படுத்த அவகாசம் உள்ளது. எந்தக் கடனையும் கொடுப்பதற்கு முன் IMF கடுமையான சீர்திருத்தங்களை நாடுவதில் இது மற்றொரு செயல் ஆகும். இந்த நடைமுறை சர்வதேச அளவில் இயல்பான விதிமுறையாகிக் கொண்டு வருகிறது.

சம்பிரதாயபூர்வமாக கடந்த வாரம் அரசாங்கம் IMF ஐ கடன் தொகையை 7.3 பில்லியன் அமெரிக்க டாலராக உயர்த்த கேட்டுக் கொண்டது. இதற்கு IMF  ஒப்புக்கொண்டதா என்பது பற்றி இன்னமும் தெரியவில்லை. ஆனால் இஸ்லாமாபாத்திற்கு வருகை புரிந்த ஒரு IMF குழு இரண்டு வாரப் பேச்சுக்களுக்கு பின்னர் ஜூலை தொடக்கத்தில் இதேபோன்ற கோரிக்கையை நிராகரித்திருந்தது.

ஓர் அறிக்கையில் IMF, பாக்கிஸ்தான் பொருளாதாரத்தின் நிச்சயமற்ற நிலையை விவரித்து அதன் சிக்கன நடவடிக்கைக்கான உந்துதலை நியாயப்படுத்தியுள்ளது. பாக்கிஸ்தான் “சவால்விடும் பொருளாதாரச் சூழலை முகங்கொடுக்கிறது; இது உறுதியற்ற  உலக, பிராந்திய சூழலினால் தீவிரமாகியுள்ளது” என அது எழுதியுள்ளது. பாக்கிஸ்தான் “நீண்ட காலமாக இருக்கும் கட்டுமானப் பிரச்சினைகளை தீர்க்க வேண்டும், குறிப்பாக எரிசக்தி துறையில்”, மற்றும் “கடினமான வணிகச்சூழ்நிலையில்”. இப்பிரச்சினைகள்தான் இன்று பாக்கிஸ்தான் எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்குப் பின்புலமாக உள்ளது என்றும் குறிப்பிட்டுள்ளது. சமீபத்திய ஆண்டுகளில் சராசரியாக 3% வளர்ச்சி இருப்பது நாட்டின் விரிவாக்கம் தொழிலாளர் தொகுப்புக்கு வேலை அளிப்பதற்கு போதுமானது அல்ல.

எரிசக்தி துறை உதவித் தொகைகள் வெட்டப்பட வேண்டும் என்று IMF கோருகிறது. அவை “இலக்கற்றவை” என அது கண்டிக்கிறது. “எரிசக்தி துறை கட்டணங்கள் சீரமைக்கப்பட வேண்டும்ம என்று கோருகிறது; வெளிப்படையான மொழியில் இதன் பொருள் முழுச்செலவுகளும் நுகர்வோரிடம் வசூலிக்கப்பட வேண்டும் என்பதாகும்.

அரச-கட்டுப்பாட்டிற்குள் இருக்கும் நிறுவனங்களை மறுகட்டமைக்கும் திட்டங்களுக்கு, இவை முக்கியமாக அடிப்படைத் தேவை துறைகள், எரிசக்தி போன்றவை மற்றும் இரயில்வேக்கள், அஞ்சல் சேவைகள் போன்றவை தனியார்மயமாக்கப்பட வேண்டும் என அது குரல் கொடுக்கிறது.

சர்வதேச வங்கிகளிம் இருந்து பெறும் கடனையும் பாக்கிஸ்தான் பெரிதும் நம்பியுள்ளது – இதில் IMF உட்பட உலக வங்கியும் அடங்கும்; இதையொட்டி நிதிய மூலதனத்தின் கோரிக்கைகளை செயல்படுத்தும் கட்டாயத்திற்கு அது உட்பட்டுள்ளது. நாட்டின் விவசாய உற்பத்தியும் உள்கட்டுமானமும் 2010, 2011 வெள்ளங்களால் பேரழிவிற்கு உட்பட்டன. இது நிலைமையை இன்னும் மோசமாக்கியது. நாணயத்தின் மதிப்பு 2008ல் இது ஒரு அமெரிக்க டாலருக்கு 64 ரூபாய் என இருந்து இப்போது 100 ரூபாய்க்கும் மேல் என சரிந்துள்ளது.

முன்னாள் பாக்கிஸ்தானின் மக்கள் கட்சித் தலைமையிலான அரசாங்கம் IMF கோரிய மிருகத்தன சீர்திருத்தங்களை செயல்படுத்துவதில் தோல்வியுற்றதால் 2008ல் பிணையெடுப்பு உடன்பாட்டில் இருந்து திடீரென விலகும் கட்டாயத்திற்கு உட்பட்டது. இதன் விளைவாக IMF, 2010ல் மொத்த 11.33 பில்லியன் அமெரிக்க டாலர் பிணையெடுப்பில் மீதம் இருந்த 3.7 பில்லியனை கொடுக்க மறுத்துவிட்டது. பாரிய வரவு-செலவுத் திட்ட பற்றாக்குறைகளை தவிர, PPP பதவியை விட்டு விலகும்போது பணவீக்கம் 13% ஆக இருந்தது.

பாக்கிஸ்தானிய ஆளும் உயரடுக்கின் மற்ற பிரிவுகளைப் போலவே PPP சிக்கன நடவடிக்கைகள் பற்றி IMF உடன் உடன்பட்டாலும், கட்டுப்பாட்டை விட்டு மீறிவிடக்கூடிய வெகுஜன எதிர்ப்பின் அச்சத்தினால் அதைச்செயல்படுத்தவில்லை. PPP சந்தைச் சீர்திருத்தங்களுடன் தன்னை அடையாளம் காட்டிக்கொண்டமை, இந்த ஆண்டு பொதுத் தேர்தல்களில் அது பெற்ற அவமானகர தோல்வியில் பெரும் பங்கை வகித்துள்ளது.

ஷெரீஃப் அரசாங்கம் இத்தகைய சீர்திருத்தங்களை அதன் வரவு-செலவுத் திட்டத்தை கடந்த மாதம் கொடுக்கையில் தொடங்கியது. பற்றாக்குறையை மொத்த உள்நாட்டு உற்பத்தியின் 8.8%ல் இருந்து ஓராண்டிற்குள் 6.3% எனக் குறைக்கும் வகையில், அது மிக அதிக வரவு-செலவுத் திட்ட வெட்டுக்களை செய்தது. பொது விற்பனைவரி (GST), அதிகப்படுத்தப்பட்டது, அதையொட்டி அடிப்படை பொருட்களின் விலை ஏற்றம் பெரிதாகிவிட்டது. உதவித் தொகைகள் நிறுத்தப்பட்டதால், மின்விசைக் கட்டணங்கள் உடனடியாக ஒரு அலகிற்கு 2.5 ரூபாய் அதிகம் ஆயிற்று.

சர்வதேச நாணய நிதியத்தின் மேலதிக கோரிக்கைகளின் பாதிப்பு, மக்கள் மீது பேரழிவைத்தான் கொடுக்கும்.

IMF கொள்கைகளுக்கு வெகுஜன எதிர்ப்பு உள்ளது என்பதை நன்கு அறிந்துள்ள நிதி மந்திரி இஷக் டர் தன் அரசாங்கத்தின் ஆற்றொணா நிலையை மறைக்க முயன்றார். “உள்நாட்டில் செய்யப்பட்ட திட்டம் ஒன்றுகுறித்து நாங்கள் வெற்றிகரமாக உடன்பட்டுள்ளோம்; இது புதிய அரசாங்கத்தின் கொள்கைகளுடன் இயைந்தும் உள்ளது,” “நாம் ஒன்றும்பிச்சை கேட்கவில்லை. நாமும் IMF உறுப்பினர்கள்தாம்.” என்றார் அவர்.

அரசாங்கத்திடம் இருந்து கவனத்தை திருப்பும் முயற்சியாக அவர் PPP ஐ நாடு எதிர்கொண்டிருக்கும் பொருளாதார நெருக்கடிக்காக குறைகூறினார். “நாம் இன்று எதிர்கொண்டிருக்கும் நெருக்கடி கடந்த சில ஆண்டுகளாக நடைமுறைப்படுத்தப்பட்ட நிதியக் கட்டுப்பாட்டின்மையினால்தான்” என்றார் அவர். ஷெரீஃப் அரசாங்கம் நாட்டின் நலனுக்காக உடன்பாட்டில் நுழைந்துள்ளது என்ற அவர் “இன்று தேவையான வேதனைகளை அனுபவித்தால்தான் நாளை நல்லதொரு பிள்ளை பிறக்கும்” என்றார்.

IMF குழுவின் தலைவரான ஜேப்ரி பிராங்க்ஸ், புதிய அரசாங்கத்தின் கோரிக்கையை, “முந்தைய அரசாங்கங்கள் உறுதியளித்ததை செய்யவில்லை” என்பதால் தள்ளிவிடாது என்றார். ஆனால் ஒரு பொருளாதார வல்லுனரும் முன்னாள் நிதியமைச்சரக ஆலோசகருமான சகிப் ஷெரானி, “இந்த அரசாங்கம் முந்தையவற்றை விட வேறுவிதமாக இருக்கும் என்ற உத்தரவாதம் ஏதும் இல்லை; அவை IMF க்கு கொடுத்த உறுதிமொழிகளை மீறின” என்றார். இதை இலண்டனை தளமாகக் கொண்ட பைனான்சியல் டைம்ஸ் தெரிவித்துள்ளது.

சர்வதேச நாணய நிதியத்தின் சலுகைக்கு பின்னால் பாக்கிஸ்தானின் பொருளாதார நெருக்கடி மோசமான இன்னும் உறுதியற்ற தன்மையில் ஆழ்ந்துவிடும் என்னும் கவலை அமெரிக்காவில் உள்ளது. “தாலிபன் மற்றும் அல்குவேடா போராளிகளுடன் போராடுவது, அண்டை ஆப்கானிஸ்தானுடன் பேச்சுக்களை நடத்துவது” என்பதற்கு அமெரிக்கா, பாக்கிஸ்தான் இராணுவத்தை நம்பியுள்ளது என்று குறிப்பிட்ட அசோசியேட்டட் பிரஸ், “பகுப்பாய்வாளர்கள் முன்னறிவிக்கின்றனர், அமெரிக்க அழுத்தம் உடன்பாட்டை முடிக்கத் திறவு கோலாக இருக்கும்” என எழுதியுள்ளது.