World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : ஜேர்மனி

Germany: SPD-Green coalition imposes massive spending cuts with support of Left Party

ஜேர்மனி: சமூக ஜனநாயக கட்சி-பசுமைக் கட்சிக் கூட்டணி, இடது கட்சி ஆதரவுடன் பாரிய செலவுக் குறைப்புக்களை சுமத்துகிறது

By Elisabeth Zimmermann 
22 July 2013

Back to screen version

2009 உள்ளூர் தேர்தல்களில் இருந்து, டியூஸ்பேர்க் நகரில் வணிகச் சார்புடைய கொள்கைகளையும் மிருகத்தனமான சமூகநல வெட்டுக்களையும் செயல்படுத்துவதற்கு இடது கட்சி ஆதரவைக் கொடுத்துள்ளது. சமூக ஜனநயாகக் கட்சி மற்றும் பசுமைக் கட்சியுடன் இணைந்து, இதன் ஆறு குழு உறுப்பினர்களும்வரவு-செலவுத் திட்ட உறுதிப்படுத்தல் கூட்டணிஎன அழைக்கப்படுகின்றனர்.

அரை மில்லியன் மக்கள் வசிக்கும் இப்பெருநகரம் ரூர் பகுதியில் பெருநகரங்களில் ஒன்றாகும். இங்கு வேலையின்மை மற்றும் வறுமை மிக உயர்ந்த நிலையில் உள்ளன. ஜூன் மாதம் 31,000 மக்களுக்கு மேல் வேலையற்றோர் எனப் பதிவாயினர். இவர்களுள் 25,000 பேர் சமூகநல உதவிகளைப் பெறுகின்றனர். உத்தியோகபூர்வ வேலையின்மை 12.7% என உள்ளது. இதைத்தவிர 41,000 பேர் பகுதிநேர வேலை அல்லதுசிறு வேலைகள்என அழைக்கப்படும் தகுதிக்குறைவான வேலையில் உள்ளனர். ஆனால் அவர்கள் முழுநேர வேலையை விரும்புகின்றனர்.ATE

2011ம் ஆண்டு 23.5% என இருந்த வேலையின்மை கிட்டத்தட்ட டியூஸ்பேர்க்கின் மக்களில் கால்வாசிப்பேரை வறுமையில் தள்ளியது. கடந்த நவம்பர் மாதம் நடத்தப்பட்ட பொருளாதார, சமூக அறிவியல் கூடத்தின் (WSI)  ஆய்வு,  டியூஸ்பேர்க்கைப் பொறுத்தவரை ஒரு முழு நகரம்எப்படி வறுமையில் வீழ்ந்தது என்பதை அவதானிக்ககூடியதாக இருந்தது என்று குறிப்பிட்டுள்ளது.

அரசியல்வாதிகளும், செய்தித்துறையினரும் கூறுவதுபோல் இந்த நிலைமை மரபார்ந்த முறையில் இப்பிராந்தியத்துடன் தொடர்பு கொண்ட நிலக்கரி, எஃகுத் தொழில்களில் பல தசாப்தங்களாக ஏற்பட்டுள்ள சரிவின் விளைவு அல்ல. மாறாக, மாநில, மத்திய ஆட்சியினால் வேண்டுமென்றே செயல்படுத்தப்படும் கொள்கைகளின் விளைவுதான். இவை பல நகரசபைகளை பெரும் கடனில் ஆழ்த்தியுள்ளன.

டியூஸ்பேர்க், வடக்கு ரைன் வெஸ்பாலியா (NRW) மாநிலத்தின்உடன்பாட்டுச் சட்டத்திற்கு ஆதரவை கொடுக்கும் அதிக கடன்பட்டுள்ள 34 நகரங்களில் ஒன்றாகும். இது மறுகட்டுமானத் திட்டங்களை செயல்படுத்துவது ஆகும். இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு NRW மாநில நிர்வாகம் சமூக ஜனநாயக கட்சியின் ஹனலோர கிராவ்ட்டின் கீழ்நகர நிதி ஆதரவு உடன்பாட்டுச் சட்டத்தை இயற்றியது. இத்திட்டம் கடன்பட்டுள்ள நகரங்களுக்கு நிதியளிக்கையில் அதற்கு ஈடாக பாரிய வெட்டுக்களை அவை செயல்படுத்த வேண்டும் என எதிர்பார்க்கிறது.

டியூஸ்பேர்க், ஆண்டு ஒன்றிற்கு 2016 வரை 52 மில்லியனை இந்தஆதரவு உடன்பாட்டின் கீழ் வாங்கும். அதன்பின் அளவு 2021 ஒட்டி பூஜ்யமாகும். ஆனால் நகரம் சமப்படுத்தப்பட்ட வரவு-செலவுத் திட்டத்தை செயற்படுத்த வேண்டும் என்னும் நிபந்தனை உள்ளது. ஈடாக நகரவை ஆண்டு ஒன்றிற்கு 82 மில்லியன் யூரோக்கள் தான் சேமிப்பதாக காட்ட வேண்டும்.

உள்ளூர் மட்டத்தில், தொழிலாளர்களின் அடிப்படைத் தேவைகளுக்கு எதிராக இயக்கப்படும் வெட்டுக்களும் சேமிப்புக்களும் கொண்ட இக்கொள்கையானது  சமூக ஜனநாயக கட்சியின் தலைமையிலான நகரவையால் செயல்படுத்தப்படுகின்றன. இதற்கு விதிவிலக்கு 2004 தொடக்கம் 2009 வரையிலாகும். அப்பொழுது கிறிஸ்தவ ஜனநாயக ஒன்றியம் (CDU) நகரவைக்குத் தலைமை தாங்கியது. 2009ல் இருந்து சமூக ஜனநாயகக் கட்சி பசுமைவாதிகளுடனும் இடது கட்சி ஆதரவுடனும் மீண்டும் பதவியில் இருந்து இந்த வெட்டுக்களை செயல்படுத்தும் பொறுப்பைக் கொண்டுள்ளது.

நகரவை இடது கட்சிப் பிரிவில் தலைவராக 13 ஆண்டுகளாக இருக்கும் ஹேர்மான் டியர்க்கஸ் டியூஸ்பேர்க்கில் வெட்டுக்களுக்கும் சேமிப்புக்களுக்கும் ஆதரவை செயல்படுத்தபவற்றிற்கு இந்த ஆண்டு பெப்ருவரி மாதம் கட்சி மாநாடு ஒன்றில் ஆதரவைக் கொடுத்தார்.

இடது கட்சியின் முன்னோடியான தவறாகப் பெயரிடப்பட்டுள்ள ஜனநாயக சோசலிசக் கட்சி (PDS) என்பதில் சேர்வதற்கு முன், டியர்க்கஸ் நீண்டகாலம் பப்லோவாத ஐக்கிய செயலகத்தின் ஜேர்மனிய பிரிவான ஐக்கிய சோசலிஸ்ட் கட்சியில் (VSP) உறுப்பினராக இருந்தார். இப்பொழுது மற்ற வலதுசாரி முதலாளித்துவ அரசியல்வாதியைப் போல்தான் வாதிடுகிறார்.கடந்த ஜூன் மாதம் பல மாத ஆலோசனைகளுக்குப்பின், நாம் 2012 நகரவை வரவு-செலவுத் திட்டத்தினை உறுதிப்படுத்தும் கூட்டணியுடன் வாக்களித்தோம். இதனால் படிப்படியாக கிட்டத்தட்ட 118 மில்லியன் யூரோ பற்றாக்குறை வரவு-செலவுத் திட்ட மறுகட்டமைக்கும் திட்டத்தினால் குறைக்கப்படும்.”

டியர்க்கஸ் நகரவை வேலை வெட்டுக்களை நியாயப்படுத்தும் வகையில் பின்வருமாறு கூறினார்: “சுருங்கிவரும் எம்நகர நிர்வாகத்தில் குறையும் 689 பதவிகளும் கட்டாயப் பணிநீக்கங்கள் இன்றி செயல்படுத்தப்படும்.” இயற்கையான வீணடிப்புக்கள் மற்றும் மக்கள்தொகை கணிப்பீடுகள், அதாவது வயதாகுவதால் பணியிலிருந்து விலகும் தொழிலாளர் பிரிவினர் இந்த தேவையான வெட்டுக்களை அடையப் போதுமானவை என்று அவர் வெளிப்படையான இழிந்த தன்மையுடன் கூறினார்.

டியர்க்கஸ் இற்கு பின் பதவிக்கு இடது கட்சியின் தலைவர் என்று நகரவையில் வந்த மார்ட்டீனா அம்மான் வரவு-செலவுத் திட்ட உறுதிப்படுத்தலுக்கான தன் கட்சியின் ஆதரவை மார்ச் நடுப்பகுதியில் உரை ஒன்றில் கொடுத்தார். இடது கட்சி வரவு-செலவுத் திட்ட உறுதிப்படுத்தலை கூட்டணியின் வடிவமைப்பிற்குள் நடத்த உறுதி கொண்டுள்ளது. இது நகரசபைத் தலைவர் சோரன் லிங் (SPD) உடைய நெருங்கிய ஒத்துழைப்புடன் நடைபெறும் என்றார் அவர்.

அம்மான் கூறினார்: “இந்த வரவு-செலவுத் திட்டம் வேதனையின்றி செயல்படுத்தப்பட முடியாது என்பது பற்றி நாங்கள் தன்கு உணர்ந்துள்ளோம். இதை செயல்படுத்தப்பட்டால்தான் 2016 க்குள் சமப்படுத்தப்பட்ட வரவு-செலவுத் திட்டம் என்னும் சட்டபூர்வத் தேவை அடையப்பட முடியும். 2013ல் இருந்து உள்ளூர் சொத்து வரி இன்னும் உயர்த்தப்படுவதை அவர் வெளிப்படையாக நியாயப்படுத்தினார். ஆனால் பெரும்பாலான வீட்டுக்காரர்கள் இதை வாடகையில் ஏற்றிவிடுவர் என்பது தெளிவாகும். இதன் மறுபக்கத்தில் சமூகநலச் செலவு பெறுவோருக்கு அரசாங்கம் வழங்கும் செலவினங்கள் இதனால் உயர்ந்துபோகும்.

மக்களில் பெரும்பாலானவர்களை வெட்டுக்களும் சேமிப்புக்களும் பாதிக்கும் என இருக்கையில், நகரவையில் இருக்கும் இடது கட்சி உறுப்பினர்கள் உளைச்சல் எதையும் காட்டவில்லை. பெருவணிகத்திற்கோ தங்கள் திட்டங்களுக்கு இடது கட்சியின் ஆதரவு இருப்பது குறித்து பெரும் மகிழ்ச்சி.

திட்டங்களில் ஒன்று சில்லறை வியாபாரதொழிற்சாலைகளினால் நேரடியாக விற்கப்படும் மையம்” (FOC) ஒன்று வடக்கு டியூஸ்பேர்க்கில் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதை உருவாக்க இப்பொழுது ரைன்ரூர் மண்டபத்தை கொண்ட ஒரு பகுதி முழுவதும் அகற்றப்படும். இதனுள் நீச்சல்குளம் மற்றும் Zinkuttensiedlung வீடமைப்பு திட்டம் உட்பட பெரிய பன்முகவசதியும் உள்ளது. இந்நிலம் பின்னர் முதலீட்டாளர்கள் குழு ஒன்றிற்கு விற்கப்படும். அவர்கள் பாரிய தொழிற்சாலைகளினால் நேரடியாக விற்கப்படும் மையத்தை அங்கு கட்டுவர்.

இத்திட்டத்தை எதிர்ப்பதில் முதலில் நின்றவர்கள Zinkhuttensiedlung வீட்டுத்திட்ட பகுதியினர் ஆவர். அவர்கள் வீடுகளில் இருந்து துரத்தப்படும் நிலையை முகங்கொடுக்கின்றனர். இதில் சிலர் பல தசாப்தங்களாக வசிக்கின்றனர். நகர மையத்தில் உள்ள சிறு விற்பனையாளர்கள் இன்னும் பிராந்தியத்தின் ஏனைய பகுதியில் உள்ளவர்களும் புதிய வணிக மையம் தமது வணிகத்தை பாதிக்கும் என்னும் கவலையை எழுப்பியுள்ளனர்.

ஆனால் டியூஸ்பேர்க்கில் இருக்கும் இடது கட்சி அவ்வாறல்ல. அவர்கள் இக்கருத்தைவடக்கு டியூஸ்பர்க்கிற்குஇது ஒரு பெரிய வாய்ப்பு என ஆதரிக்கின்றனர். ஹேர்மான் டியர்க்கஸ் இந்த எதிர்ப்புக்களுக்கு எதிராகப் பேசினார். டியூஸ்பேர்க்கில் வேலைகளை தோற்றுவிப்பது எதையும் ஆதரிக்க வேண்டும் என்றார். வேலைகளின் பெரும்பகுதி குறைவூதியங்களாகவும் பகுதிநேர வேலைகளாகவும் இருக்கும் மற்ற வேலைகள் மறைந்துவிடும் என்பதை அவர் நன்கு அறிவார். டியர்க்கஸ்  தனது சொந்த நலன்களைத் தொடர்கிறார். இவர் தொழிற்சாலைகளினால் நேரடியாக விற்கப்படும் மைய (FOC) ஆலோசனை ஆணையத்தின் உறுப்பினராவார். அது இத்திட்டத்தை செயலாக்கும் பொறுப்பை கொண்டுள்ளது. இதைத்தவிர அவர் டியூஸ்பேர்க் பாவனை மற்றும் போக்குவரத்து நிறுவனத்தின் மேற்பார்வைக் குழுவின் உறுப்பினரும் ஆவார்.

இடது கட்சியின் வலதுசாரிக் கொள்கைகள் உள் எதிர்ப்புக்களையும் தூண்டியுள்ளது. உதாராணமாக கட்சியில் இருந்து எதிர்ப்புத் தெரிவித்து சில்வியா பிரென்னமான் இராஜிநாமா செய்து பின்னர் Zinkhutteplatz இனை பாதுகாக்கும் முன்னெடுப்பின் செய்தித் தொடர்பாளராகியுள்ளார். இவ்வமைப்பு 150 குடும்பங்களை அவற்றின் வீடுகளில் இருந்து அகற்றுவதை எதிர்க்கும் ஒழுங்குகளை ஏற்பாடுகளைச் செய்கிறது.

WAZ செய்தித்தாள் கொடுத்துள்ள தகவல்படி, ஜூன் நடுவில் நகரவையின்  கட்சிப் பிரிவின் வேலைகளை பற்றி விவாதிக்க  கூட்டிய இடது கட்சிக் கூட்டத்தில், ஹேர்மான் டியர்க்கஸ் சமூக ஜனநாயக கட்சி மற்றும் பசுமைவாதிகளுடன் நெருக்கமாக உழைப்பது பற்றி எழுந்துள்ள குறைகூறல்களுக்கு எதிராக தன்னை நியாயப்படுத்தினார். ஆனால் வணிக வரி, சமூகநலக்கொள்கை அல்லது ஆப்கானியப்போர் தொடர்பாக சமூக ஜனநாயகக் கட்சி அல்லது பசுமைவாதிகளை குற்றம்சாட்டுகையில் தமக்கு எதிரானவர்களை நோக்கி உள்ளூர் அரசியல் எப்படி செயல்படுகிறது என்பதை அவர்கள் அறிந்துகொள்ளவில்லை என்று டியர்க்கஸ் கூச்சலிட்டார்.

மற்றொரு திட்டம் டியூஸ்பேர்க் புருக்ஹெவுஸன் ThyssenKrupp எஃகு ஆலை பகுதியை சுற்றி பசுமை வளையத்தை அமைப்பது ஆகும். இந்நடவடிக்கை சுற்றுச்சூழலை  முன்னேற்றுவது என பிரச்சாரம் செய்யப்படுவது. இதில் புருக்ஹெவுஸன்  பகுதியில் ஏராளமான வீடுகளை அகற்றுவது உள்ளடங்கும் இதுவும் ஏற்கனவே தொடங்கிவிட்டது. இவற்றை இடித்த பின்னர் பூங்கா கட்டுதல் என்பதற்கு Thyssenkrupp இடம் இருந்து 72 மில்லியன் யூரோக்களும், ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து நிதிகளும் வருகின்றன. டியூஸ்பேர்க் அபிவிருத்தி அமைப்பு இதைச் செயல்படுத்தும் பொறுப்பைக் கொண்டுள்ளது. இங்கும் வாடகைக்கு இருப்பவர்களை வீடுகளில் இருந்து துரத்த அழுத்தங்களும் அச்சுறுத்தல்களும் மேற்கொள்ளப்படுவதுடன், வீட்டுக்காரர்கள் வீடுகளை விற்பதற்கு கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

இப்பகுதியில் சில சொத்துக்கள் புதுப்பிக்கவேண்டிய தேவையைக் கொண்டாலும், இந்நடவடிக்கைகள் முதலீடுகளுக்கு நிலத்தை உருவாக்கும் நோக்கத்தை கொண்டவையாகும்.

கடந்த செப்டம்பர் மாதம் Deutschland radio வானொலியில் வரலாற்றுச் சிறப்புக் கட்டிடங்களை அழித்தல் குறித்த தகவலில் புருக்ஹெவுஸன்  நகரத்தின் மிகப் பழைய பகுதிகளில் ஒன்றாகும் நகரவை அதிகாரிகள் சிறிதும் பொருட்படுத்தாமல் தங்கள் திட்டங்களை செயல்படுத்துவது சித்தரிக்கப்பட்டுள்ளது. தாமாக முன்வந்து வெளியேறாதவர்களுக்கு எதிராக அச்சுறுத்தல்களும் பயன்படுத்தப்படுகின்றன.

டியூஸ்பேர்க்கில் உள்ள சமூக ஜனநாயக கட்சி-பசுமைக் கட்சி-இடது கட்சி கூட்டணியின் சமூக எதிர்ப்புக் கொள்கைகள் எல்லாவற்றிற்கும் மேலாக தொழிலாளர்களுக்கு எதிராக இயக்கப்படுவது ஆகும். இது பல்கேரியா, ருமேனியா என்னும் பகுதிகளில் இருந்து வரும் வறிய குடியேறுவோருக்கு எதிராகவும் மற்றும் எல்லாவற்றிற்கும் மேலாக சிந்தி, ரோமா மக்களுக்கு எதிராகவும் இயக்கப்படுகிறது. அவர்களுக்கு சமூக நல உதவிகள் மறுக்கப்படுகின்றன.