சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan mass grave recalls rural massacres

இலங்கை புதை குழிகள் கிராமப்புற படுகொலைகளை நினைவுபடுத்துகின்றன

By Gamini Karunasena and Evan Weerasinghe
29 April 2013

use this version to print | Send feedback

இலங்கையில் அண்மையில் கண்டுபிடிக்கப்பட்ட நூற்றுக்கணக்கான சடலங்கள் அடங்கிய மனிதப் புதைகுழிகள், 1988 மற்றும் 1990க்கும் இடைப்பட்ட காலத்தில், ஜனாதிபதி ஆர். பிரமதாசாவின் ஐக்கிய தேசியக் கட்சி (யூ.என்.பீ.) அரசாங்கத்தின் கீழ் படுகொலை செய்யப்பட்ட பத்தாயிரக்கணக்கான கிராமப்புற இளைஞர்களில் சிலர் புதைக்கப்பட்ட பகுதியாக இருக்கக்கூடும் என்பதற்கான சான்றுகள் அதிகரித்து வருகின்றன.

கொழும்பிலிருந்து சுமார் 150 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள மாத்தளையில் வைத்தியசாலையில் கட்டிடம் ஒன்றைக் கட்டுவதற்காக தோண்டும்போதே இந்த இடம் தற்செயலாக கண்டுபிடிக்கப்பட்டது. ஆரம்பத்தில், நவம்பரில் இவை வெளிப்பட்டபோது, அரசாங்கமும் பொலிசும் மூடிமறைக்க முயற்சித்தன. எனினும், மக்களின் கவனம் அதிகரித்தபோது, மாத்தளை நீதவான் சத்துரிக்கா டீ சில்வா, எச்சங்களை விஞ்ஞான அறிக்கைக்கு சமர்பிக்குமாறு பொலிசாருக்கு கட்டளையிட்டார்.

நீதவான் கடந்த மாதம் அந்த எழும்பு கூடுகள் 1988-99 ஆண்டு காலகட்டத்திற்கு உரியவையாக இருக்கலாம் என முடிவு செய்தார். எச்சங்களை பரிசோதித்த மாத்தளை வைத்தியசாலையின் சட்ட வைத்திய அதிகாரி அஜித் ஜயசேன, களனி பல்கலைக்கழக தொல்பொருள் ஆராய்சி முதுகலை கல்வி நிலையத்தின் பேராசிரியர் ராஜ் சோமதேவ ஆகியோரின் அறிக்கைகளின் அடிப்படையிலேயே அவர் அந்த தீர்ப்பை வழங்கினார்.

எல்லாமாக 154 எலும்பு கூடுகள் மற்றும் பொருட்களும் தடயவியல் மற்றும் தொல்பொருள் ஆராய்ச்சி தொழில்நுட்பத்தை உபயோகித்து பரிசோதனை செய்ய்பட்டன. அந்த பரிசோதனைகள், மழுங்கிய ஆயுதங்கள், அத்துடன் துப்பாக்கி சூடுகளாலும் மற்றும் தலை துண்டிக்கப்பட்டதனாலும் அந்த இறப்புகள் நேர்ந்துள்ளதாக சுட்டிக்காட்டின. “இந்த பரந்த புதைகுழிகளுக்கு யாராவது ஒருவர் பொறுப்பாக இருந்திருக்க வேண்டும்என சோமதேவி ஊடகங்களுக்கு தெரிவித்தார்.

புதைக்கப்பட்ட உடல்கள்எந்த ஒரு இலங்கை சமுதாயத்தினரதும் முறைப்படி புதைக்கப்பட்டிருக்கவில்லை. சில தனித்தனியாக புதைக்கப்பட்டிருந்தன. மேலும் சடலங்கள் 4 மற்றும் 6 பேரடங்கிய குவியலாகவும் புதைக்கப்பட்டிருந்தன. சிதைந்து போனவற்றின் எழும்புகள் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டனசிலவற்றில் ஒரு பகுதி எழும்பு கூடுகள் மட்டுமே இருந்தனஎன அவர் மேலும் கூறினார்.

டாக்டர் ஜயசேன, அல் ஜசிறவுடன் பேசும்போது, “தலைதுண்டித்தல், துண்டாடுதல், மூடி மறைத்தல் ஆகிய சான்றுகள், குற்றங்கள் இழைக்கப்பட்டுள்ளதைசுட்டிக் காட்டுகின்றனஎன கூறினார்.

பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான யுத்தம் நடைபெற்றபோது, ஜனாதிபதி ஜே.ஆர். ஜயவர்த்தன, வடக்கு மற்றும் கிழக்கில் புலிகளை நிராயுதபாணிகளாக்க இந்திய இராணுவத்தை கொண்டுவரவும், தமிழ் முதலாளித்துவ தட்டினருக்கு மட்டுப்படுத்தப்பட்ட சலுகைகளை வழங்கவும் புது டில்லியுடன் ஜூலை 1987ல் இந்திய-இலங்கை உடன்படிக்கையில் கைச்சாத்திட்டார். இந்திய எதிர்ப்பு பேரினவாத பிரச்சாரத்திற்கும், கிராமபுற இளைஞர்களின் வேலையின்மை மற்றும் வறுமையினால் ஏற்பட்ட அமைதியின்மைக்கும் தலமை தாங்கிய மக்கள் விடுதலை முன்னணியை [ஜே.வி.பி] நசுக்குவதற்காக ஜயவர்த்தனஇலங்கை இராணுவத்தை தெற்கு பகுதிக்கு அணுப்பினார்.

ஒரு கணிப்பீட்டின் படி, ஜே.வி.பீ. தலைவர் ரோஹன விஜேவீர உட்பட அதன் உறுப்பினர்களுமாக இந்த காலகட்டத்தில் 60,000 இளைஞர்கள் கொல்லப்பட்டனர் அல்லது காணாமல் போனார்கள். அரசாங்கம் தெற்கில் ஜே,வி.பீ.யின் பாசிச தாக்குதலை மேற்கோள் காட்டி, இளைஞர்களை படுகொலை செய்வதை நியாயப்படுத்தியது. கொலைப்படைகளை ஒழுங்குபடுத்தியதன் மூலம் ஒடுக்குமுறையை ஒருமுகப்படுத்தியது. ஜயவர்த்தனாவும் அவரை அடுத்து வந்த பிரேமதாசவும் அவசரகால சட்டங்களை பலப்படுத்தி கொலைப்படைகள் தண்டணையில் இருந்து விலக்களிப்புடன் செயற்பட அணுமதித்தார்கள். பரந்தளவில் கொலைகள் நடைபெற்ற பிரதேசங்களில் மாத்தளையும் ஒன்றாகும்.

இந்தக் காலகட்டத்தில் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் சகோதரரான தற்போதய பாதுகாப்பு செயலாளர் கோட்டபாய இராஜபக்ஷ, மாத்தளை மாவட்ட இராணுவ இணைப்பு அதிகாரியாக தொழிற்பட்டமை வெளிப்பட்டவுடன், அரசாங்கமும் அரச ஊடகமும் அதனை மூடி மறைக்கும் பிரச்சாரத்தில் ஈடுபட்டன.

ஜனாதிபதி இராஜபக்ஷ, புதைகுழிகளை பற்றி விசாரணை செயவதற்கு ஆணைக்குழுவை அமைக்கப் போவதாக கூறினார். இது உண்மையை மறைப்பதற்கான மற்றுமொரு பிரசித்தி பெற்ற வழிமுறையாகும். 2009ம் ஆண்டில், புலிகளுக்கு எதிரான யுத்ததில், ஆயிரக்கணக்கான தமிழ் பாமர மக்களை இராணுவம் கொன்றமை தொடர்பான குற்றசாட்டுக்கு முகங்கொடுத்தபோது, இராஜபக்ஷ குற்றத்தை மூடிமறைப்பதன் பேரில் கற்றுக்கொண்ட பாடங்கள் மற்றும் மறுசீரமைப்பு ஆணைக்குழுவை அமைத்தார்.

கடந்த வாரம், மாத்தளை உக்குவெல்ல கிராமத்தை சேர்ந்த கே.ஜி. கமலாவதி, 1989ல் தனது 17 மற்றும் 18 வயது மகன்மார் இராணுவத்தினால் எவ்வாறு கடத்தப்பட்டு காணாமல் ஆக்கப்பட்டார்கள் என்பதை உலக சோசலிச வலைத் தளத்திற்கு கூறுகையில், “1989 டிசம்பர் 13ம் திகதி, கஜபாகு படைப் பிரிவை சேர்ந்த இராணுவ அதிகாரிகள், சீருடையுடன் வந்து பிற்பகல் 1.30 மணியளவில் ட்ரக்கில் ஏற்றிக்கொண்டு சென்றார்கள்என்றார்.

அவருடைய மகன்மார்கள் மாத்தளை விஜயா கல்லூரி மற்றும் விஞ்ஞானக் கல்லூரியிலும் கல்வி கற்றுக் கொண்டிருந்தார்கள். அவர்களோடு இன்னொரு இளம் தொழிலாளியும் கடத்தப்பட்டார். இந்தக் காலகட்டத்தில் தமது பகுதியில் 13 இளைஞர்கள் கடத்தப்பட்டார்கள் என கமலாவதி கூறினார். “அவர்கள் விஜயா கல்லூரியில் அமைக்கப்பட்ட இராணுவ முகாமுக்கு கொண்டு செல்லப்பட்டார்கள். எனது பிள்ளைகளைப் பார்பதற்கு எனக்கு அணுமதி வழங்கவில்லை, எனினும் நான் கடுமையாக முயற்சித்தேன். மூன்று நாட்களின் பின்னர் அவர்கள் ஒரு பெயர் பட்டியலை எனக்கு காட்டினார்கள். அதில் இரண்டு மகன்மார்களின் பெயர்களும் இருந்தன. ஆனால் அவை சிவப்பு பேனாவினால் வெட்டப்பட்டிருந்தன.

கமலாவதி உதவி எதிர்பார்த்து எதிர்க் கட்சி பாராளுமன்ற உறுப்பினர்களிடம் சென்றார். அவர்களில் சிலர் இப்போது அமைச்சர்களாக உள்ளனர். மகிந்த ராஜபக்ஷ உட்பட்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சி (ஸ்ரீ..சு..) தலைவர்களிடம் இருந்து பொய் வாக்குறுதிகளே அவளுக்கு கிடைத்தன. “அவர் [மகிந்த ராஜபக்ச] இத்தகைய பொய்களை கூறிய பொழுதிலும், அவரது உடன் பிறந்த சகோதரனின் கட்டளையின் கீழேயே பிள்ளைகள் கொலை செய்யப்பட்டார்கள்

சமசமாசக் கட்சி, ஸ்ராலிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் போலி இடதுசாரியான நவ சமசமாசக் கட்சியினதும் ஆதரவுடன், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி தலைவர்கள், படுகொலைகளுக்கு எதிரான வெகுஜனங்களின் எதிர்ப்பை, தேர்தல் வெற்றிகளுக்கு சுரண்டிக்கொள்வதற்காக பல வகையான எதிர்ப்பு போராட்டங்களில் ஈடுபட்டனர். 1994ல் ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்ட சிறீலங்கா சுதந்திரக் கட்சி தலைவி சந்திரிகா குமாரதுங்க, சீற்றத்தை தணிப்பதற்காக ஜனாதிபதி ஆணைக்குழுவை நியமித்தார். இந்த ஆணைக்குழுவின் அறிக்கைகள் வெறுமனே அலுமாரியினுள் போடப்பட்டன.

தனது பாசிச தாக்குதலினால், சாதாரண மக்கள் மத்தியில் முழுமையாக செல்வாக்கிழந்திருந்த ஜே.வி.பீ.யும் மற்றும் அதில் இருந்து பிரிந்து சென்றுள்ள முன்நிலை சோசலிச கட்சியும், இந்தக்கால கட்டத்தில் நடந்த படுகொலைகளை பற்றிக்கொண்டு, தமது பேரினவாத பிரச்சாரத்தை வீரம்மிக்க எழுச்சியாக நியாப்படுத்த இப்பொழுது முயற்சிக்கின்றன. தமது பிரச்சாரத்திற்கு ஆதரவு கொடுக்க மறுத்த அரசியல் எதிர்ப்பாளர்கள், தொழிலாளர்களை ஜே.வி.பீ.யினர் சுட்டுக் கொன்றார்கள். அவர்களில் சோசலிச சமத்துவ கட்சியின் முன்னோடி இயக்கமான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் மூன்று அங்கத்தவர்களும் அடங்குவர்.

1988-90ம் ஆண்டுகளில் யூ.என்.பீ. அரசாங்கத்தின் ஒடுக்குமுறைக்கும், ஜே.வி.பீ. யின் பாசிச தாக்குதலுக்கும் எதிராக புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகம் (பு...) சர்வதேச பிரச்சாரத்தை மேற்கொடண்டது. அரசாங்கத்துக்கும் மற்றும் ஜே.வி.பீ.க்கும் எதிராக, தொழிலாள வர்க்க இயக்கங்களின் ஐக்கிய முன்னணி ஒன்றை அமைக்க பு... அழைப்புவிடுத்தபோது சமசமாஜக் கட்சி, கம்யூனிஸ்ட் கட்சி, மற்றும் நவசமசமாஜக் கட்சியும் தொழிலாளர்களை அணிதிரட்டுவதற்கு எதிர்ப்பு தெரிவித்தன. மாறாக அவர்கள் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடனான (ஸ்ரீ..சு..) கூட்டுக்கு அவர்கள ஆதரவு கொடுத்ததன் மூலம், ஸ்ரீ..சு.. தலைமையிலான மக்கள் முன்னணி சம்பந்தமாக தொழிலாளர், விவசாயிகள் மத்தியில் மாயை பரப்பினர்.

ஜே.வி.பீ. தலைவர்களையும் அங்கத்தவர்களையும் கொலை செய்ததை பு... கண்டித்த அதேவேளை, அரசின் கைகளைப் பலப்படுத்துவதற்கான சாக்குப் போக்கை வழங்கி இளைஞர்கள் இரத்தக் களரியில் ஒடுக்கப்படுவதற்கும் மற்றும் தமிழர்-விரோத இனவாத யுத்தத்துக்கு ஆதரவு கொடுக்கின்றமைக்கும் ஜே.வி.பீ. அரசியல் ரீதியில் பொறுப்பாளி என்பதையும் விளக்கியது. ஜே.வி.பீ. அரசாங்கத்தில் பதவிகளை எதிர்பார்த்து பிரேமதாசவுடன் திரை மறைவில் இரகசிய பேச்சுவார்த்தைகளை நடத்தியதோடு, 1994ல் அரசியல் ஸ்தாபனத்துக்குள் மீண்டும் நுழைவதற்கும் அனுமதிக்கப்பட்டது. ஜே.வி.பீ. 1994 தேர்தலில் குமாரதுங்காவுக்கும், 2005ல் மகிந்த ராஜபக்ஷவுக்கும் ஆதரவு கொடுத்தது.

1990 பெப்பிரவரி 8 அன்று தொழிலாள வர்க்கம் கிராமப்புற இளைஞர்களை பாதுகாக்க முன்வர வேண்டும் என அழைப்புவிடுத்து பு... அறிக்கை ஒன்றை வெளியிட்டது. அது கூறியதாவது: “அரச படைகளினதும் குண்டர் குழுக்களினதும் தாக்குதலிருந்து கிராமப்புற மக்களை பாதுகாக்க நடவடிக்கை எடுக்க தொழிலாள வர்க்கம் எழுச்சி பெற வேண்டியது மிகவும் தீர்க்கமானதாகும்.”

ஆளும் தட்டினரது ஒவ்வொரு கன்னையினதும் கொடூர வரலாற்றை மாத்தளை புதைகுழிகள் வெளிப்படுத்துகின்றன. இராஜபக்ஷ அரசாங்கம், அதன் ஆழமான சிக்கன நடவடிக்கைகளையும் மற்றும் தொழிலாளர், இளைஞர்கள் மற்றும் கிராமப்புற வறியவர்களின் அடிப்படை உரிமைகள் மீதான தாக்குதல்களையும் எதிர்த்து குவிந்துவரும் வெகுஜன எதிர்ப்புக்கு எதிராக, கடந்த 30 வருடங்களாக அபிவிருத்தி செய்த பொலிஸ் அரச இயந்திரங்களை இன்று உபயோகிக்கின்றது.