தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
The German mini-series Generation War: Five young people traumatized by World War II ஜேர்மனிய குறுந்தொடரான Generation War: இரண்டாம் உலகப் போரால் பாதிக்கப்பட்ட ஐந்து இளைஞர்கள்
By Bernd
Reinhardt use this version to print | Send feedback ஸ்டெஃபன் கோல்டிட்ஸ் இன் கதைவசனத்தில் பிலிப் காடெல்பாஹ் இயக்கியது இரண்டாம் உலகப் போர் பற்றிய தொலைக்காட்சிக் குறுந்தொடரான Unsere Mütter, unsere Väter (நமது அம்மாக்கள், நமது அப்பாக்கள்) இவ்வருடம் மார்ச் மாதத்தில் ஒளிபரப்பப்பட்டபோது அது ஜேர்மனியில் வரலாறு காணாத அளவு ரசிகர்களை சென்றடைந்தது. மூன்று பகுதிகளில் ஒவ்வொன்றையும் 7 மில்லியன் மக்கள் அல்லது மக்கள்தொகையில் வயது வந்தோர்கள் எண்ணிக்கையில் 10 சதவீதம் பேர் பார்த்ததாக மதிப்பிடப்பட்டது. இந்த குறுந்தொடர்கள் ஜேர்மனியில் கிட்டத்தட்ட இதுவரையிலும் இல்லாதபடி ஒரு பகிரங்க விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. Generation War எனும் பெயரில் அமெரிக்கா மற்றும் பிற நாடுகளில் Unsere Mütter, unsere Väter தற்போது விநியோகிக்கப்பட்டிருக்கிறது. போலந்து தொலைக்காட்சியிலும் இந்நிகழ்ச்சி சமீபத்தில் ஒளிபரப்பப்பட்டது. 1941ல் பேர்லினில் ஆரம்பிக்கிறோம்: அப்போதுதான் பள்ளிப் படிப்பை முடித்திருக்கும் ஐந்து இளைஞர்கள், இரண்டாம் உலகப்போரின் அட்டூழியங்களுக்குள் சிக்கிவிடுகிறார்கள். ஒருவகையில் அப்பாவித்தனமாக, அவர்கள் தாம் விரைவாக மீண்டும் சந்திப்பார்கள் என நம்புகிறார்கள். ஆனால் அதற்கு நான்கு வருடங்கள் கடக்க வேண்டியிருந்தது. அவர்களுள் உயிர்பிழைத்தவர்கள் தாங்கள் அனுபவத்த நரகவாழ்க்கையால் மிகவும் பயந்து போயிருக்கிறார்கள்.
புரூசியன்
இராணுவ
மதிப்புகளை
பின்பற்றுகிற
ஒரு
நல்ல
குடும்பத்தில் இருந்து
வந்துள்ள
சகோதரர்களான வில்லெம்
(Volker
Bruch)
மற்றும்
ஃப்ரீட்ஹெல்ம் வின்டர்
(Tom
Schilling)
சகோதரர்கள்
பிரதான
கதாப்பாத்திரங்களில் அடங்குகின்றனர். முதல்
உலகப்போரில்
ஜேர்மனிக்காக
பெருமையுடன்
போரிட்டவரும்
Star
of David
ஐ
ஒரு
“பிழையானதாக”
இருக்குமென்று
கருதுபவருமான
ஒரு
யூத
தையற்காரரின்
மகன்
விக்டர்
கோல்ட்ஸ்ரைன்
(Ludwig
Trepte).
விக்டர்
கிரெட்டாவின் (Katharina
Schüttler)
கூட்டாளி,
கிரேட்டா
மதுபானக்கடையில்
குவளைகளைக்
கழுவுகையிலும் திரைப்பட
நடிகையான
மர்லீன்
டீட்ரிச்சை ப்ரிதாக மதிப்பதுடன் இசைத்
தொழிலில்
பிரபல்யமடையவேண்டும் என்று கனவு காண்கின்றார். கிரெடாவுக்கு,
உண்மையில்
மூன்றாம் குடியரசை
(Third
Reich)
பெரிதாக
மதிக்கவில்லை,
ஆயினும்
சாலொட்ட
(Miriam Stein)
ஜேர்மனிக்கு
சேவை
செய்வதில்
பெருமையடைவதுடன்
கிழக்கு
போர்முனையில் ஒரு
செவிலியாகப்
பணியாற்றுகிறாள்.
கதைகள் காலக்கிரம வரிசைப்படி கூறப்படுதவதால் ஒரு திரைப்பட தனமான பலவண்ணத் தன்மை உண்டாக்கப்படுகிறது. முன்னாள் போர் வீரர்களின் தனிப்பட்ட அனுபவங்களும் இத்திரைப்படத்தில் உள்ளது. ஒரு மோசமான வன்முறையின் களியாட்டத்தை ஒன்றன்பின் ஒன்றாக அரங்கேற்றும் ஹாலிவுட் வகையறாவினுள் விழாமல், இயக்குனர் பிலிப் காடெல்பாஹின் விரைவான மற்றும் நேரடியான கவனம் அமெரிக்க சினிமாவால் ஆதிக்கம் செலுத்தப்படுகின்றது. யதார்த்தமான மற்றும் வித்தியாசமான வகையிலான இந்த முக்கோணக் கதை நிச்சயம் ஒரு போருக்கெதிரான படைப்பாகும். இது இளைஞர்களுக்கு அந்த நேரத்தில் போரின் மோசமான பின்விளைவுகளையும் அவர்களின் வாழ்க்கையையும் சிந்தனையும் அது எவ்வாறு மாற்றியது என்பதைக் காட்டுகிறது. இந்தக் குறுந்தொடரின் ஆரம்பத்தில் நாசி பிரச்சார திரைப்படங்களில் (மற்றும் இதர பல திரைப்படங்கள் மற்றும் ஊடக சித்தரிப்புகளிலும்) சித்தரிக்கப்படுகிற வெறிபிடித்த இளைஞர்களின் கதாப்பாத்திரங்கள் நமக்கு அறிமுகப்படுத்தப்படுவதில்லை. ஹிட்லர் ஆட்சியின் கோசங்கள் மற்றும் கொள்கைகள் குறித்து இந்த இளைஞர்களிடம் மிகமிக சாதாரண அணுகுமுறை காணப்படுகிறது. முரணாக ”ஷலோம், சக நாட்டு மக்களே!” (ஷலோம்- யூதமக்களின் மொழியில் வணக்கம்) என்று விக்டர் தன் நண்பர்களை சூசகமாக வாழ்த்துகிறார். கற்றுத் தேர்ந்த ஃப்ரீட்ஹெல்ம் உத்தியோகபூர்வமாக முன்னெடுக்கப்பட்ட ”ஜேர்மன் மாவீர்ர்கள்” பற்றிய கருத்தியல்களை எதிர்க்கிறார். நாசிக்களின் BDMஇல் (Bund Deutscher Mädel—ஜேர்மன் இளம்பெண்கள் சங்கம்) கற்பிக்கப்பட்ட தேசியவாத கல்வியால் கவர்ந்திழுக்கப்படுகிறார் சார்லெட். ஆனால் நாஜிக்களின் “இனகளங்க” வரையறையின்படி குற்றமுற்றவர்களாக இருந்த விக்டர் மற்றும் க்ரெடாவுடனான அவளது நட்பினை பாதிக்கவில்லை. போரின் ஆரம்பத்திற்கு முன்னதாக, அது மக்களிடமிருந்து மோசமானவற்றை வெளிக்கொண்டுவரும் என்று ஃப்ரீட்ஹெல்ம் முன்கூட்டி கூறுகின்றார். Generation War இன் மூன்று பகுதிகள் ஓரளவுக்கு இதை உறுதிபடுத்திகிறது. சாதாரண மனநிலையில் யாருமே செய்திருக்காத குற்றங்களில் அந்த நண்பர்கள் ஈடுபடுகின்றனர். ஆனால் ஃப்ரீட்ஹெல்மின் விதிவசமான வார்த்தைகளும் தவறென சுட்டிக் காட்டப்படுகின்றன.
Generation War உதாரணமாக, SS ஒரு யூதப்பெண்ணை சுடுவதிலிருந்து தடுக்க முயற்சித்து வில்ஹெல்ம் தோல்வியடைகிறார். அதுபோன்ற முயற்சிகள் எடுக்கப்படுகிறது. மேலும், சோவியத் யூனியனின் ஊடுருவலின் பொழுது பிடிபடும் எந்த சோவியத் அதிகாரிகளும் உடனடியாக தூக்கிலிடப்படுவார்கள் எனும் (“Commissar Order”—எனப்படுகிற) ஹிட்லரின் கட்டளை வில்ஹெல்மால் கண்மூடித்தனமான பணிவுடன் செயல்படுத்தப்படுவதில்லை, சுவாரஸ்யத்திற்காக மட்டுமே வைக்கப்பட்டுள்ளது. போரின் யதார்த்தம் அவரது சந்தேகங்களுக்கு தொடர்ந்து தீனி போடுகிறது. முழு அலட்சியத்துடன் கொலை செய்யப்படுவதற்காக அனுப்பப்படும் சாதாரண இராணுவத்தினர் தொடர்பான மூத்த இராணுவ அதிகாரிகளின் மனிதநேயமின்மையைக் கண்டு அவர் அதிர்ச்சியடைகிறார். ஒரு தந்தி நிலையத்தை கைப்பற்றும் அர்த்தமற்ற சண்டை ஒன்றில் வில்ஹெல்ம் தனது எல்லா ஆட்களையும் இழக்கிறார். அவர் விட்டோடி முடிவில் தண்டனைப் பிரிவைச் சென்றடைகிறார். போருக்கு சற்று முன்பாக, தான் ஒரு காலத்தில் ஒரு முன்னுதாரணமான இராணவத்தினனாக இருந்ததற்கு மாறான ஒன்றை செய்கிறார். தனது கட்டளையிடும் அதிகாரியை சுட்டுக்கொல்கின்றார். ஃப்ரீட்ஹெல்ம் கதாப்பாத்திரம் சுவாரஸ்யமானது. ஆரம்பத்திலிருந்து “சர்வதேச யூதர்களுக்கு” எதிரான போர் அர்த்தமற்றதாக இருக்குமென்று அவர் கருதுகிறார். ஆனால் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்திற்கு பிறகு, ஒரு இளம் பெண்ணைச் சுடுவது, குற்றம்சாட்டப்பட்ட கிளர்ச்சியாளர்களைத் தூக்கிலிடுவதில் கலந்து கொள்வது போன்றவற்றைத் தயக்கமின்றி செயல்படுத்த இயலும் ஒரு பொருத்தமான தனிநபர் அவர்தான். அவரது சூசகமாக தவிர்த்துக்கொள்ளல், “வெள்ளைத்தலை மாவீர்ர்களை” இகழ்வது, அவரது ஆத்திரமூட்டும் அறிக்கைகள் தவிர்த்து , ஃப்ரீட்ஹெல்ம் தன்னை விஷேடமானவராக காட்டிக்கொள்வது போருக்கு எதிரான ஒரு கொள்கைரீதியான எதிர்ப்புடன் எவ்வித தொடர்புமற்றது. அவர் செயலற்றவரும், காழ்ப்புணர்ச்சியுள்ளவருமாவார்.
Generation War இனியும் ”தன்னார்வ செயல்பாடுகளைத்” தன்னால் தவிர்க்க முடியாது எனும்போது, அவர் அதே மனிதவெறுப்பு என்கிற போரில் தன்னை ஈடுபடுத்திக் கொள்வதுடன், மேலும் மிகவும் விழிப்புள்ள மற்றும் ஆபத்தான இராணுவ வீரராகிவிடுகிறார். இறுதியாக, முழுவதும் மனம் நொந்த நிலையில், தனது ஆயுதமேந்திய படையின் (“Volkssturm”-“மக்கள் புயல்”) குழந்தை வீரர்களை ஒரு அர்த்தமற்ற சண்டையிலிருந்து காப்பாற்றுவதற்காக அவர் செம்படையின் துப்பாக்கிச் சூட்டிற்குள் தனியாக ஓடுகிறார். சோவியத்தின் பார்வையில், போர் முடிவதற்கு சற்று முன்பாக ஒரு வீரனாக இறக்க விரும்பும் ஒரு வெறிபிடித்தவர் மாதிரி அவர் இருந்திருக்க வேண்டும். இதுபோன்று எத்தனை “வெறிபிடித்தவர்கள்” அங்கு இருந்தார்களோ? யதார்த்தத்துடன் மோதும்போது பகுத்தறிவற்ற கருத்துக்கள் சிதையலாம் என்பதை சார்லெட்டின் செயல்பாடு காட்டுகிறது. காயம்பட்டவர்களின் புலம்பல் மற்றும் வாழ்வு மற்றும் சாவு குறித்த மருத்துவர்களின் உடனடி முடிவுகள் உள்ளிட்ட தினசரி வாழ்க்கையின் சாகசமற்ற தன்மைகள் ஆரம்பத்தில் செவிலிக்கு புதிராகவே இருக்கிறது. உக்ரேனிய கீழ்மனிதர்களுக்கு (“Untermenschen”) மத்தியில் சார்லெட் ஓர் உதவியாளராக தேடும்போது, விரைவில் அந்தப் பெண்மனி தன்னைவிட தொழில்நுட்ப அறிவில் மேம்பட்டவள் என்பதை கண்டறிவதுடன் அவளை புகழவும் ஆரம்பிக்கிறாள். அவள் ஒரு யூதப் பெண் என்பதை சார்லட் அறிந்துகொள்ளும்போது, சற்று நேரத்திற்கு பிறகு, தான் அதற்கு வருத்தப்படுவதாக அவளிடம் தெரிவிக்கிறாள். ஏனைய பெண்களை காப்பாற்ற முயற்சி செய்து முடிவெடுப்பதற்குள் மிகவும் தாமதமாகிவிடுகிறது. பின்பு, ஒரு ரஷ்ய உதவி செவிலியுடனான தனது தோல்வியைப் புரிய வைக்க முயற்சித்தும் பலனில்லாதுபோகின்றது. அவள் ஒரு முதன்மையான இனத்தின் உறுப்பினர் என்கிற சார்லட்டின் ஆரம்ப நம்பிக்கைகளில் எதுவும் இல்லாதுபோகின்றது. முடிவில், உயிர் தப்பியவர்கள் ஒரு புதிய ஆரம்பத்திற்காக தயாராக இருக்கிறார்கள். ஆனால் விக்டர் பேர்லினுக்கு வரும்போது, போலந்து பாசிச எதிப்பாளர்களின் யூத எதிர்ப்பு தன்மையால் பேரதிர்ச்சியடைந்து, ஜேர்மன் இரகசிய காவல் படைக்காக பணியாற்றியவரும் விக்டரின் நாடுகடத்தல் மற்றும் பிற குற்றங்களுக்கு காரணமானவரும் முன்னாள் SS படைத் தலைவருமான டார்னால் (Mark Waschke) நடத்தப்படுகிற ஒரு நிர்வாக அமைப்பை சென்றடைகின்றார். இந்த சுறுசுறுப்பான நாஜிகளிடம் உயர்பதவியடைந்தவரின் சிறப்பு நிபுணத்துவம் இந்த முறை நேசநாடுகளால் மீண்டும் பயன்படுத்தப்பட அழைக்கப்படுகிறது. போருக்கு பிந்தைய பொதுவான யதார்த்தத்தை குறிக்கும் இந்த காட்சி, Generation War இல் மிகவும் நம்பும்படியான ஒன்றானதாகும். முக்கிய சமூக அனுபவங்களைச் சித்தரிக்கும் பல திரைப்படங்களை தயாரிப்பாளர் நிகோ ஹாஃப்மான் தயாரித்துள்ளார். 1945 பிப்ரவரியில் அந்த ஜேர்மன் நகரத்தில், கிட்டத்தட்ட 25 ஆயிரம் பேர்களைக் கொன்ற, கூட்டுப்படையினரின் குண்டுவீச்சின் கொடூரத்தால் பாதிக்கப்பட்ட பொதுமக்களின் கஷ்டங்களைப் பற்றி இரண்டு பகுதிகள் கொண்ட தொலைக்காட்சி நிகழ்ச்சியான Dresden (2006) சித்தரித்தது. 1945ல் அப்போது கிழக்கு புரூசியாவாக இருந்ததிலிருந்து ஜேர்மன் மக்களின் வெளியேற்றத்தினால் ஏற்பட்ட மக்களின் கஷ்டங்களை The Fugitive (2007) சித்தரித்தது. இந்த நிகழ்வுகள் ஆழமான வரலாற்றுத் தழும்புகளை விட்டுச்சென்றன. கூட்டு “ஜேர்மன் குற்றம்” என்கிற பரந்த கருத்தியலின் அடிப்படையில், போருக்கு பின் இந்த நிகழ்வுகள் பற்றி சிறிதளவே சொல்லப்பட்டன, அல்லது மாறாக, அவை வலதுசாரி அரசியல் சக்திகள் தனிப்பட்ட விஷயமாக இருந்தது. 1968 தலைமுறையின் எதிர்ப்பாளர்களுக்கு, போரில் ”குற்றவாளிகளின் தலைமுறையை” சேர்ந்த ஜேர்மனிய மக்களே படுகொலைக்கு (Holocaust) பதில் சொல்ல வேண்டியவர்களாக இருந்தார்கள். அனைத்து ”சாதாரண ஜேர்மனியர்களும்” ஹிட்லரின் விருப்பமான செயல்படுத்துவோராக” இருந்தனர் என்கிற அமெரிக்க ஆசிரியரான டேனியல் கோல்ட்ஹாகனின் பிற்போக்குத்தனமான அறிவிப்புகளிலிருந்து Generation War முக்கோணக்கதை வேறுபடுவதால் மதிப்புக்குரியதாகின்றது. ஹிட்லர் ஆட்சிக்கு வந்த போது குழந்தைகளாக இருந்த, போரில் பயங்கரமான விஷயங்களை அனுபவித்த மற்றும் பின்பு அமைதியாக இருக்க விதிக்கப்பட்ட ஒரு தலைமுறையின் கொடுங்கனவான ”தனிப்பட்ட கதைகளை” சித்தரிப்பததில் ஹாஃவ்மானின் உறுதியான எண்ணம் இருந்தது. குறிப்பிடும்படியாக அவர் வெற்றியடைந்திருக்கிறார். அவர் இதுவரை இயக்கிய திரைப்படங்களுள் மிகவும் நம்பும்படியான படைப்பு Generation War. இளைஞர்கள் போருக்கு போவது என்பது அவர்களின் தேர்வு என்றபதை இந்த முக்கோணக்கதையின் பெரும் பலவீனம். பரந்த அளவிலான சமுதாய மற்றும் அரசியல் தாக்கங்கள் பெருமளவு தவிர்க்கப்பட்டுள்ளது. முதல் பகுதியின் ஆரம்பத்தில், பிரதான கதாப்பாத்திரங்கள் நம்பமுடியாதபடி அப்பாவியாக இருப்பதுடன் அவர்களைச் சுற்றி நடப்பவற்றால் பாதிக்கப்படாதவர்களாக இருக்கிறார்கள். ஆளும் பாசிஸவாதிகளின் கருத்துக்களை எடுதுக்கொள்ள முடியாமை மற்றும் “இளைஞர்கள் அப்படித்தான் இருக்கிறார்கள்” என்பதாக மிகத்தீவிரமான ஒரு போரினை வேடிக்கையாக எடுத்துக் கொண்டது போன்றவற்றை இதற்கு காரணமாக இத்திரைப்படத்தின் படைப்பாளிகள் விளக்குகிறார்கள். இதுவரையில் சமுதாய பின்னணி ஒரு பங்குவகிக்கின்றது என்பது (கிரெடா மற்றும் சார்லெட்டின் ஆரம்பங்கள் மிக மறைக்கப்பட்டு இருக்கின்றது), கதாப்பாத்திரங்களும் ஒரு தலைப்பட்சமாக தேர்வு செய்யப்பட்டுள்ளன. மற்ற மூன்று முக்கிய பிரபலங்களும் குட்டி முதலாளித்துவ-தேசியவாத பழமைவாதக் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள், அதனால் ஒரு விதிபோல் தங்களின் குழந்தைகளை பெருமையுடன் போருக்கு அனுப்புகின்றனர். அந்த நேரத்தின் ஜேர்மன் சமுதாயத்தை உண்மையாகக் பிரதிநிதித்துவப்படுத்திய ஒரு குழுவினை இத்திரைப்படம் காட்டவில்லை. விக்டரின் தந்தை போல் அல்லாமல், மாறாக முதல் உலகப் போரால் முழுமையான பெருமையுடனல்லாமல், மிகுந்த அதிர்ச்சியடைந்த (மற்றும் தீவிரமயப்படுத்தப்பட்ட) வீடு திரும்பிய மில்லியன் கணக்கான பெற்றோர்களின் பிரதிபலிப்பு என்ன? வைமார் குடியரசின் கீழ் ஒரு புதிய போருக்காக ஜேர்மனி பாரியளவில் ஆயுதமயமாக்க ஆரம்பித்த போது, இந்த பெற்றோர்கள் இரண்டாவதாக அதிர்ச்சியடைந்தார்கள். வைமார் காலகட்டத்தின் அரசியல் மற்றும் சமுதாய பிரிவுகள் அவர்கள் அனைவருக்கும் புத்தாக்கமாக இருந்தது. மில்லியன் கணக்காணவர்கள் சமூக ஜனநாயகவாதிகளுக்கும் கம்யூனிசக் கட்சிக்கும் வாக்களித்தனர். இந்த பதட்டமான சமுதாய சூழ்நிலையும் பிரிவுகளும் ஒரு “மக்களின் அரசிலிருந்து” அதன் சர்வாதிகாரம் வெகு தொலைவுக்கு அகற்றப்பட்ட நாஜிக்களின் கீழ் புதிய,உயர்ந்த கட்டத்தை அடைந்தது. இந்த முரண்பாடுகளும் சமூகப்பதட்டங்களும் Generation War இல் அவர்களது அனுபவங்களிலும் அதன் முக்கிய கதாப்பாத்திரங்களிலும் பிரதிபலிக்க மட்டுமே செய்கிறது. சமுதாய ஆதிக்கம் காண முடியாததாக இருக்குமிடத்தில், செயல்பாடுகள் பெரும்பாலும் இரகசியமாகவே இருக்கும், அல்லது மாறாக தனிப்பட்ட கதாப்பாத்திரத்தின் குணாதிசயங்களான பலம் மற்றும் பலவீனங்கள் இரண்டுமே மிகைப்படுத்தப்படுகின்றன. சம்பந்தப்பட்ட பல இளம் நடிகர்கள் திரைப்படங்களில் தங்களது கதாப்பாத்திரங்களின் நோக்கங்களைப் புரிந்து கொள்வது கடினமாக இருந்ததாக ஒப்புக் கொண்டார்கள். விக்டர் கதாப்பாத்திரத்தில் நடித்த நடிகர் தான் தனிய நடித்ததாகவே ஒப்புக் கொண்டார். குறுந்தொடர்களும் உயிர்தப்பிய போர்வீரர்களை சித்தரிக்கின்றன. இது நிகழ்வுகளை யதார்த்தமாக சித்தரிக்கிறது. ஆயினும், பெரும்பாலும் தொலைக்காட்சி கலந்துரையாடல் நிகழ்ச்சிகளில் கேட்கப்படுகின்ற முற்றிலும் பொதுவான கேள்வியான, ”அந்த நேரத்தில் நீங்கள் எப்படி நடந்து கொண்டிருப்பீர்கள்?” என்பதைத் தவிர, தற்காலத்துடன் எந்த தொடர்பினையும் Generation War ஆல் ஏற்படுத்த முடியவில்லை. நாம் கற்பனை செய்வது போன்று இந்த கேள்விக்கான பதில், இரண்டாம் உலகப் போரின் இன்றும் நிலைத்திருக்கும் முக்கியத்துவத்தையும் அதற்கான காரணங்களையும் எடுத்துக்காட்டுவதை தவிர்த்துக்கொள்வதே. |
|
|