சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இலங்கை

Sri Lankan government to limit provincial powers

இலங்கை அரசாங்கம் மாகாண அதிகாரங்களை மட்டுப்படுத்தவுள்ளது
By K. Ratnayake
15 June 2013

use this version to print | Send feedback

இலங்கை ஜனாதிபதி மஹிந்த இராஜபக்ஷ
, மாகாண சபைகளின் அதிகாரங்களை குறைக்கும் வகையில் நாட்டின் அரசியலமைப்பில் குறிப்பிடத்தக்க மாற்றங்களை செய்ய அழைப்பு விடுத்துள்ளார். 2009 ஆம் ஆண்டில், பிரிவினைவாத தமிழீழ விடுதலைப் புலிகளின் தோல்வியின் பின்னர், பெரும் தாக்கங்களுடன் இராணுவ கட்டுப்பாட்டின் கீழ் வைக்கப்பட்டுள்ள வட மாகாணத்துக்கான தேர்தலை செப்டம்பரில் நடத்துவதற்கு அரசாங்கம் அறிவித்தில் விடுத்த பின்னரே இந்த மாற்றம் முன்மொழியப்பட்டுள்ளது.

அமெரிக்க, இந்தியா, ஜப்பான் மற்றும் ஏனைய சக்திகளும் தீவின் தமிழ் உயர் தட்டிடனருடனான ஒரு அதிகாரப் பரவலாக்கல் ஒழுங்கை ஏற்படுத்தும் வகையில், இலங்கையின் நீடித்த உள்நாட்டு யுத்தத்துக்கு ஒரு "அரசியல் தீர்வு" காண்பதன் பகுதியாகவே இந்த தேர்தல் இடம்பெற வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளன. இந்த அரசியலமைப்பு மாற்றங்களை செய்தவன் மூலம், இராஜபக்ஷ இன்னும் கூடுதலாக கொழும்பில் அரசியல் அதிகாரத்தை மையப்படுத்தவும், மாகாண அரசாங்கங்களை, குறிப்பாக வடக்கு மற்றும் கிழக்கின் அரசாங்கங்களை வலுவிழக்க செய்ய உத்தேசித்திக்கின்றார்.

முன்மொழியப்பட்டுள்ள மாற்றங்கள், 1987 இந்திய-இலங்கை உடன்படிக்கையின் ஒரு பகுதியாக இயற்றப்பட்ட, அரசியலமைப்பின் 13 வது திருத்தச் சட்டத்திலேயே மேற்கொள்ளப்பட உள்ளன. இந்த உடன்படிக்கையின் கீழ், தமிழ் முதலாளித்துவத்துக்கான ஒரு சலுகையாக ஒன்றிணைக்கப்பட்ட வட-கிழக்கு மாகாணத்துக்கு வரையறுக்கப்பட்ட அதிகாரங்கள் பகிரப்பட்ட அதே வேளை, புலிகளை நிராயுதபாணிகளாக்க யுத்த வலையத்துக்கு இந்திய துருப்புக்கள் அனுப்பப்பட்டன. இந்த உடன்படிக்கை விரைவில் முறிந்து போனதுடன், இந்திய அமைதிப்படை என்று அழைக்கப்பட்ட துருப்புக்கள் நாட்டை விட்டு வெளியேறின. மீண்டும் மோதல்கள் தொடங்கியதுடன், வட-கிழக்கு மாகாண சபை ஒரு இறந்த கடிதமாக இருந்தது.

13 வது திருத்தச் சட்டத்திலான மாற்றங்கள், மாகாண சபைகளின் அதிகாரங்களை பாதிக்கும் சட்டங்களை தடுப்பதற்கு அவற்றுக்கு உள்ள இயலுமையை வலுவிழக்கச் செய்யும். தற்போது, இத்தகைய சட்டங்கள் அனைத்து மாகாண சபைகளாலும் அங்கீகரிக்கப்பட்ட பின்னரே தேசிய பாராளுமன்றத்தில் முன்வைக்கப்பட முடியும், இல்லையேல் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற வேண்டும். இந்த பிரேரணையின் கீழ், பெரும்பான்மையான சபைகள் மட்டும் சட்டத்துக்கு ஒப்புதல் அளித்தால் போதும்.

இராஜபக்ஷ அரசாங்கம்
, மாகாண சபைகளின் சில பொருளாதார அதிகாரங்களை பறிக்கக் கூடிய புதிய திவிநெகும மசோதாவை சகல மாகாண சபைகளதும் உடன்பாடு இல்லாமல் நிறைவேற்றுவதற்கு முயற்சித்ததை அடுத்து வெடித்த அரசியல் நெருக்கடி மீண்டும் தோன்றுவதை தவிர்ப்பதில் உறுதியாக உள்ளது. இந்த நடவடிக்கை அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று உச்ச நீதிமன்றம் தீர்ப்பளித்தபோது, அரசாங்கம் பெரிய எதிர்ப்புக்களை தூண்டிவிட்டு, சோடிக்கப்பட்ட ஊழல் குற்றச்சாட்டுக்களை பயன்படுத்தி, பிரதம நீதியரசர் ஷிரானி பண்டாரநாயக்கவுக்கு எதிராக ஒரு கண்டன தீர்மானத்தை கொண்டுவந்து அவரை பதவி விலக்கியதோடு இன்னொருவரை நியமித்தது.

அரசாங்கம், மாகாணங்களை இணைப்பதை தடுப்பதற்காகவும் அரசியலமைப்பில் மாற்றம் செய்ய முயன்று வருகின்றது. உயர் நீதிமன்றம், சிங்கள அதி தீவிரவாத மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பீ) தாக்கல் செய்த ஒரு வழக்குக்கு ஆதரவாக 2006 தீர்ப்பளித்த பின்னர், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்கள் பிரிக்கப்பட்டன. அரசியலமைப்பிலான திருத்தம் அந்த தீர்ப்பு மாற்றப்படுவதை சாத்தியமற்றதாக்கும்.

தேசிய சுதந்திர முன்னணி (தே.சு.மு.) மற்றும் ஜாதிக ஹெல உறுமய போன்ற ஆளும் கூட்டணியில் உள்ள சிங்கள மேலாதிக்கவாத கட்சிகள், தற்போது காகிதத்தில் மட்டுமே உள்ள, மாகாண சபைகளுக்கு உள்ள போலீஸ் மற்றும் காணி அதிகாரங்களை அகற்றுமாறு கோருகின்றன. ஜனாதிபதியின் சகோதரரும் பாதுகாப்பு செயலாளருமான கோடாபய இராஜபக்ஷ, பகிரங்கமாக இந்த சக்திகளுக்கு ஆதரவளித்து, இத்தகைய அதிகாரங்களுடனான வடக்கு மாகாண சபை, ஒரு தனி நாடாகுவதற்கு வழிவகுக்கும் என பிரகடனம் செய்தார். எதிர்க் கட்சியான ஜே.வி.பீ., 13 வது திருத்தச் சட்டத்தை முழுதுமாக இரத்து செய்ய கோருகிகிறது.

தெளிவாகவே இந்தப் பேரினவாத பிரச்சாரத்தில் அனுதாபம் கொண்ட ஜனாதிபதி இராஜபக்ஷ, தனது அரசியலமைப்பு மாற்றங்களை நியாயப்படுத்த இதைப் பயன்படுத்திக்கொள்கின்றார். எனினும், அதே நேரம், அவரது பிரேரணைகள், மாகாணங்களில் அதிகாரக் குறைப்பைசெய்யும் எந்தவொரு செயலையும் எதிர்க்கும் அரசாங்கத்தின் கூட்டணி கட்சியான ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரசுடன் பிளவை ஏற்படுத்தியுள்ளன. தீவின் முஸ்லீம் தட்டுக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ், நீண்ட காலமாக கிழக்கு மாகாணத்தில் ஒரு விசேட நிர்வாக மாவட்டத்தை பரிந்துரை செய்துவந்துள்ளது. அது பொது பல சேனா போன்ற பெளத்த அதி தீவிரவாத குழுக்களின் முஸ்லீம்-விரோத பிரச்சாரங்களுக்கான அரசாங்கத்தின் மறைமுக ஆதரவையிட்டும் கவலை கொண்டுள்ளது.

மேலும், லங்கா சம சமாஜ கட்சி (ல.ச.ச.க.), ஸ்ராலினிச கம்யூனிஸ்ட் கட்சி மற்றும் ஜனநாயக இடது முன்னணியும் தாம் இந்த அரசியலமைப்பு மாற்றங்களை எதிர்ப்பதாக ஜனாதிபதிக்கு தெரிவித்துள்ளன. அவர்கள் 2006ல் தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு எதிரான இனவாத யுத்தத்தை இராஜபக்ஷ அரசாங்கம் புதுப்பித்தமைக்கு துணைபுரிந்ததோடு அதன் யுத்தக் குற்றங்கள் மற்றும் அப்பட்டமான ஜனநாயக உரிமை மீறல்களையும் நியாயப்படுத்தியமையால், தமிழர்களின் உரிமைகளை பாதுகாப்பதாக அவர்கள் கூறுவது கேலிக்கூத்தாகும்.

இந்த கூட்டணி பங்காளிகளின் ஆதரவு இல்லாமல், இராஜபக்ஷவுக்கு அரசியலமைப்பு திருத்தங்களை மேற்கொள்ளத் தேவைப்படும், மூன்றில் இரண்டு பாராளுமன்ற பெரும்பான்மையை அடைய முடியாது. அவர் மேலும் வடக்கு மாகாண சபை தேர்தலை கேலிக்குரியதாக்குவதன் மூலம் இன்னும் அதிகளவில் அமெரிக்கா மற்றும் இந்தியாவில் இருந்து அந்நியப்படும் ஆபத்தை எதிர்கொள்கின்றார். பிரதான தமிழ் முதலாளித்துவக் கட்சியான தமிழ் தேசிய கூட்டமைப்பு, 13வது திருத்தச் சட்டத்தை வலுவிழக்கக் செய்தால் தேர்தலை புறக்கணிப்பதாக பிரகடனம் செய்துள்ளது.

அமெரிக்க அல்லது இந்தியா, தமிழர்களின் ஜனநாயக உரிமைகளை காக்கும் வீரர்கள் அல்ல. இரு நாடுகளும் இராஜபக்ஷவின் யுத்தத்தை ஆதரித்ததோடு புலிகளின் தோல்வி தவிர்க்க முடியாததாகும் வரை இராணுவ அட்டூழியங்களை மூடி மறைத்தன. வாஷிங்டன், இலங்கை அரசாங்கத்தை சீனாவுடனான அதன் உறவுகளை உடைக்க அழுத்தம் கொடுப்பதற்கான ஒரு வழிமுறையாக தாமதமாக "மனித உரிமை" மீறல்கள் பற்றிய பிரச்சினையை பற்றிக்கொண்டது. அமெரிக்கா போன்றே, இந்தியாவும் ஆசியாவில் சீன செல்வாக்கை எதிர்ப்பதற்கு முயன்று வருகின்றது. அது, இலங்கையில் நிலவும் தமிழ்-விரோத பாகுபாடு சம்பந்தமாக தென்னிந்திய மாநிலமான தமிழ்நாட்டில் பொதுமக்களின் எதிர்ப்பையும் சீற்றத்தையும் தணிக்கவும் முயன்று வருகின்றது.

இராஜபக்ஷ, மாகாணங்களை இணைப்பதை மட்டுமே நீக்கும், 19வது திருத்தச் சட்டத்தை அடுத்த வாரம் முன்வைக்க முடிவு செய்துள்ளார். ஏனைய முன்மொழியப்பட்ட மாற்றங்கள் பாராளுமன்ற தெரிவுக் குழு ஒன்றில் ஆராயப்படும். அமைச்சரவை பேச்சாளர் கெஹெலியே ரம்புக்வெல்ல, இந்த வாரம் ஊடகங்களிடம் பேசும்போது, மாகாணங்களை இணைக்கும் பிரிவு, "அரசாங்கத்தின் அதிகாரத்திற்கு ஒரு அச்சுறுத்தலை தோற்றுவிக்கின்றது என்றும் அதை அகற்ற வேண்டும் என்றும் கூறினார்.

இந்த அரசியலமைப்பு மாற்றங்களை எதிர்க்கும் எதிர் கட்சியான ஐக்கிய தேசிய கட்சி (யூ.என்.பீ.), அமெரிக்கா மற்றும் இந்தியாவின் கோரிக்கைகளின் வழியில் 13வது திருத்தச் சட்டத்தை அடிப்படையாக கொண்டு, ஒரு அதிகாரப் பகிர்வு பொதியை உருவாக்குவாக அறிவித்தது. நவ சம சமாஜக் கட்சி, ஐக்கிய சோசலிசக் கட்சி போன்ற இலங்கையின் போலி-இடது குழுக்கள், ஜனநாயக உரிமைகளை காக்கும் யூ.என்.பீ.யின் போலி உரிமை கோரலுக்கு ஊது குழலாக செயற்படுகின்றன. யூ.என்.பி., தீவின் இனவாத யுத்தத்தை தொடங்கி, ஜனநாயக உரிமைகளை மோசமாக துஷ்பிரயோகம் செய்ததோடு உழைக்கும் மக்களின் வாழ்க்கைத் தரங்களை சீரழித்த சந்தை-சார்பு மறுசீரமைப்பு நிகழ்ச்சி நிரலை முன்னெடுத்தமைக்கு முழு பொறுப்பாளியாகும்.

தொழிலாள வர்க்கம், ஆளும் வர்க்கத்தின் மற்றும் அவர்களின் குட்டி முதலாளித்துவ, முன்னாள்-இடது பரிந்துரையாளர்களின் அனைத்து பிரிவுகளினதும் சூழ்ச்சிகளை நிராகரிக்க வேண்டும். சிங்களம், தமிழ் மற்றும் முஸ்லீம்களுமாக உழைக்கும் மக்களின் ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கான போராட்டம், சோசலிச கொள்கைகளை செயல்படுத்துவதற்கான தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகளின் அரசாங்கத்துக்கான ஒரு ஐக்கியப்பட்ட போராட்டத்தின் பகுதியாக மட்டுமே முன்னெடுக்கப்பட முடியும். இந்த வேலைத் திட்டத்துக்கே சோசலிச சமத்துவக் கட்சி போராடுகிறது அதாவது தெற்காசியாவிலும் உலகம் பூராவும் ஐக்கிய சோசலிச அரசுகளுக்கான பரந்த போராட்டத்தின் பாகமாக ஸ்ரீலங்கா-ஈழம் சோசலிச குடியரசை கட்டியெழுப்ப போராடுகிறது.