World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா : எகிப்து Egyptian military regime plans sharp attack on working class எகிப்திய இராணுவ ஆட்சி தொழிலாள வர்க்கத்தின் மீதான தீவிரமான தாக்குதலுக்கு திட்டமிடுகிறதுBy Alex Lantier அகற்றப்பட்ட முஸ்லிம் சகோதரத்துவ ஜனாதிபதி முர்சியின் ஆதரவாளர்கள் 51 பேர் இரத்தம் சிந்தி படுகொலை செய்யப்பட்ட மறுநாள், புதிதாக நிறுவப்பட்டுள்ள எகிப்திய இராணுவ ஆட்சிக் குழு அரசியலமைப்பு ஆணை ஒன்றை வெளியிட்டு, இராணுவ ஆதரவுடைய ஜனாதிபதிக்கு வரம்பற்ற அதிகாரங்களைக் கொடுத்துள்ளது. தடையற்ற சந்தைப் பொருளாதார வல்லுனர் ஹசிம் எல்-பெப்லவியை அது பிரதம மந்திரியாகவும் நியமித்து, தொழிலாள வர்க்கத்தின் மீது தீவிர தாக்குதலுக்கான திட்டங்களையும் அடையாளம் காட்டியுள்ளது. முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவத்திற்கு (MB) எதிரான புதன் இராணுவ ஆட்சி மாற்றம் முர்சிக்கு எதிராக கடந்த வாரம் ஏராளமான தொழிலாளர்களையும் இளைஞர்களையும் ஆர்ப்பாட்டத்திற்கு தூண்டிய ஜனநாயக விழைவுகள், சமூக சமத்துவம் ஆகியவற்றை பிரதிபலிக்கவில்லை என்பதை இந்நிகழ்வுகள் உறுதிப்படுத்துகின்றன. மாறாக, தாராளவாத மற்றும் போலி இடது அமைப்புக்கள் என தமரோட் கூட்டணியில் (‘எழுச்சி’) சேர்ந்துள்ளவற்றின் ஆதரவுடன் ஆட்சி மாற்றம் தொழிலாள வர்க்கத்தின் எழுச்சி பெறும் அரசியல் எதிர்ப்பை கட்டாயமாக முன்கூட்டியே அது முழு ஆளும் வர்க்கத்திற்கு எதிரான புரட்சிகர போராட்டமாக மாறுவதற்கு முன்கூட்டிய தாக்குதல் செய்ய வேண்டும் என்ற நோக்கத்தைத்தான் கொண்டுள்ளது. நேற்றைய அரசியலமைப்பு அறிவிப்பு ஜனாதிபதி அட்லி மன்சூருக்கு சர்வாதிகார அதிகாரங்களை அடுத்த ஆண்டு ஜனாதிபதி தேர்தல்கள் வரை “இடைமருவுகாலத்திற்கு”, குறைந்தபட்சம் ஆறு மாதங்களுக்குக் கொடுக்கிறது. இக்காலத்தில் ஜனாதிபதி முழு சட்டமியற்றும் அதிகாரத்தையும் கொண்டிருப்பார், அரச கொள்கையையும் அரச வரவு-செலவுத் திட்டத்தையும் கட்டுப்படுத்தி, அவரே நியமிக்கும் மந்திரிசபையின் ஒப்புதலுடன் அவசரகால ஆணையையும் வெளியிடும் அதிகாரத்தையும் கொண்டிருப்பார். ஆனால் இறுதி முடிவுகளை இராணுவம்தான் எடுக்கும். ஒரு தனி தேசிய பாதுகாப்புக் குழு, எகிப்திய ஜனாதிபதியின் தலைமையில் பாதுகாப்பு, இராணுவ வரவு-செலவுத் திட்டம் மற்றும் ஆயுதப் படைகள் குறித்த எந்த சட்டங்களையும் மேற்பார்வையிடும். இக்கருவியின் மூலம் இராணுவம் தனக்கு சுதந்திரத்தையும் எகிப்திய அரசிற்குள் மேலாதிக்க நிலையையும் உறுதிப்படுத்திக் கொள்கிறது. “இடைமருவுகாலம்” என்பதில் 2012ல் MB யின் கீழ் அரசியலமைப்பிற்கு திருத்தங்களை முன்வைப்பதற்கு ஜனாதிபதி நியமித்த குழுவும் அடங்கும். புதிய அரசியலமைப்பு எந்த புதிய தேர்தல்களுக்கு முன்பும் வேண்டாம், வேண்டும் வாக்களிக்கும் வாக்கெடுப்பு ஒன்றை முன்வைக்கும். கடந்த புதன்கிழமை ஆட்சி மாற்றத்தைப் போலவே, புதிய அரசியலமைப்பு அறிவிப்பும் வாஷிங்டனுடைய ஆதரவை கொண்டுள்ளது. எகிப்தின் Al Ahram நாளேடு பெயரிடப்படாத அமெரிக்க அதிகாரிகள் அறிவிப்பான “முன்னேற்றப் பாதைக்கான திட்டத்தை அளிக்கிறது” எனக் கூறியதாக மேற்கோளிட்டுள்ளது. ஆனால் அவர்கள் வாஷிங்டன் திட்டத்திற்கு சற்று “எச்சரிக்கையுடன்தான் முகங்கொடுப்பர்”, ஏனெனில் இது MB எதிர்ப்பாளர்கள் கெய்ரோவில் குடியரசுப் படை தடையரணுக்கு முன் படுகொலை செய்யப்பட்ட ஒரு நாளைக்குப் பின்தான் வந்துள்ளது என்றும் சேர்த்துக் கொண்டனர். எல்-பெப்லவியை பிரதம மந்திரியாக மன்சூர் நியமித்திருப்பது முக்கிய சர்வதேச வங்கிகளுக்கும் பேர்சிய வளைகுடா எண்ணெய் முடியாட்சிகளுக்கும் இராணுவ ஆட்சியானது தொழிலாள வர்க்கத்தின் மீது ஆழமான தாக்குதல்களை நடத்தும் என்பதற்கான அடையாளம் காட்டுதல் ஆகும். எல்-பெப்லவி எகிப்திய சமூக ஜனநாயகக் கட்சியின் நிறுவன உறுப்பினர் ஆவார், பாரிஸ் பல்கலைக்கழகத்தில் பொருளியலில் டாக்டர் பட்டம் பெற்று ஐ.நா. அதிகாரியாக செயல்பட்டுள்ளார். தானியம் மற்றும் எரிபொருள் விலைகளுக்கு அரச மானிய உதவி அளிப்பது வெட்டப்பட வேண்டும் என்பதற்காக வலுவாக அவர் வாதிடுபவர்; ஆனால் இதைத்தான் மில்லியன் கணக்கான எகிப்திய தொழிலாளர்கள் நம்பியுள்ளனர். இக்கருத்துக்களை அவர் Daily News Egypt க்கு முர்சிக்கு எதிரான எதிர்ப்புக்கள் தொடங்கிய முந்தைய நாளான ஜூன் 29 அன்று கொடுத்த பேட்டி ஒன்றில் பகிர்ந்து கொண்டிருக்கிறார். அவர் கூறினார், “எகிப்தில் கொடுக்கப்படும் உதவித் தொகைகளின் அளவு நீடித்திருக்க முடியாது, நிலைமை மோசம் என்பதை மக்கள் தெளிவாக அறிந்து கொள்ளும் வகையில் நாம் கூற வேண்டும். நியாயமான வரம்புகளை மானிய உதவித் தொகைகள் மீறிவிட்டன; இவை வரவு-செலவுத் திட்டத்தில் 25 சதவிகிதத்திற்கும் மேலாக உள்ளன.... சில விளைவுகளை தாங்கள் ஏற்க வேண்டும் என்பதை மக்கள் உணர்ந்து கொள்ள வேண்டும். மானிய உதவித் தொகைகள் இரத்து செய்யப்படுவது என்பதற்கு மக்களிடம் இருந்து தியாகம் தேவை, எனவே அவர்கள் ஏற்கவேண்டிய நிலையை ஏற்படுத்தியுள்ளது.” நியூ யோர்க் டைம்ஸானது எல்-பெப்லவியின் நியமனத்தை “இராணுவத் தலைமையிலான இடைக்கால அரசாங்கம் பொருளாதார சீர்திருத்தங்கள், மறுகட்டமைப்பு, நாட்டின் பரந்த பொது உதவித் தொகைகளில் வெட்டு உட்பட செய்யத் தயாராக உள்ளது என்பதின் அடையாளம்” எனப் பாராட்டியுள்ளது. எகிப்தின் EGX30 பங்குச் சந்தை குறியீடு 3.3 சதவிகிதம் உயர்ந்து, 5,295 புள்ளிகளை எட்டியது, முதலீட்டாளர்கள் இராணுவ ஆட்சியின் தடையற்ற சந்தை கொள்கைகளினால் பெரும் புதிய இலாபங்களை எதிர்பார்ப்பதால். இராணுவத்தின் அரசியலமைப்பு அறிவிப்பு இஸ்லாமிய சட்டபூர்வ நாட்டின் அஸ்திவாரத்தை தொடர்கிறது, ஏன் விரிவாக்கக்கூடச் செய்கிறது. எகிப்திய நாளேடான Al Ahram உடைய கருத்துப்படி, “இந்த அறிவிப்பு எகிப்திய அரபுக் குடியரசு ஒரு ஜனநாயக முறையை தளமாகக் கொண்டது, அதையொட்டி குடிமக்கள் உரிமைகள் இருக்கும், நாட்டின் மதம் இஸ்லாம், அரபு இதன் உத்தியோகபூர்வ மொழி மற்றும் ஷரியா சட்டத்தின் கொள்கைகள், நிறுவப்பட்டுள்ள சுன்னி சட்ட நெறிகளில் இருந்து எடுக்கப்பட்டவை சட்டமியற்றும் முக்கிய ஆதாரம் ஆகும்.” இஸ்லாத்தின் சுன்னிக் கிளை பற்றிய வெளிப்படையான குறிப்பு தீவிர வலது இஸ்லாமியவாத சக்திகளின் ஆதரவைத் தக்க வைக்கும் நோக்கம் உடையது – அதாவது சலாபிஸ்ட்டு அல் நூர் கட்சி போன்றவை, இவை ஆட்சி மாற்றத்தை ஆதரித்தன. அல் நூர் கட்சியின் எதிர்ப்பின் விளைவாக ஆட்சிக் குழுவின் பிரதம மந்திரிக்கு முதல் விருப்பமான தேசிய மீட்பு முன்னணியின் தலைவரான முகம்மது எல்பரடேய் நியமிக்கப்படவில்லை. ஆட்சி மாற்றத்திற்கு அமெரிக்க ஆதரவைத் தீவிரமாக நாடுவதில் முக்கிய பங்கு கொண்டிருந்த எல்பரடேய் இப்பொழுது வெளியுறவுத்துறையில் துணைத் தலைவராக இருப்பார். புதிய ஆட்சிக்கு ஆதரவை கொடுக்கும் மாஸ்பெரோ இளைஞர் ஒன்றியம், ஒரு காப்டிக் கிறிஸ்துவக் குழு ஆகியவை அறிவிப்பை குறைகூறியுள்ளதுடன், “சமவாய்ப்புள்ள நாடு, கௌரவத்தைப் பாதுகாப்பதற்கு” அவர்கள் போராடுவதாக உறுதியளித்துள்ளனர். தாராளவாத மற்றும் போலி இடது சக்திகள், தமரோட் கூட்டணிக்குள் இருப்பவைகளான முகம்மது எல்பரடேயீன் கீழ் இருக்கும் NSF மற்றும் போலி இடது புரட்சிகர சோசலிஸ்ட்டுக்கள் (RS) ஆகியவை அடங்கியிருப்பது எப்படி முற்றிலும் அவை எகிப்திய சர்வாதிகாரத்துடன் ஒருங்கிணைந்துள்ளன என்பதை காட்டுகிறது. அரசியலமைப்பு அறிவிப்பு குறித்து அவைகள் இலேசான எதிர்ப்புக்களைத்தான் வெளியிட்டன. அதனுடைய டிவிட்டர் குறிப்பில் தமரோட் எழுதியதாவது: “அரசியலமைப்பு அறிவிப்பை ஏற்பது கடினம் ஆகும், ஏனெனில் இது ஒரு புதிய சர்வாதிகாரத்தை ஏற்படுத்தியுள்ளது. நாங்கள் ஜனாதிபதிக்கு அரசியல் அமைப்பிற்கு ஒரு திருத்தத்தைக் கொடுப்போம்.” உண்மையில், தமரோட்டும் அதன் ஆதரவாளர்களும்—RS உடைய சர்வதேச பிணைப்புக்கள், போலி இடது சர்வதேச சோசலிச அமைப்பு (ISO) அமெரிக்காவில் இருப்பது மற்றும் பிரித்தானியாவிலுள்ள SWP—தொடர்ந்து ஆட்சி மாற்றத்தை ஆதரிக்கிறது. நேற்று SWP இன் ஜூடித் ஒர் “எகிப்திய—இரண்டாவது புரட்சி ஒரு ஜனாதிபதியை அகற்றுகிறது” என்ற தலைப்பை கொண்ட கட்டுரையில் புதன் ஆட்சி மாற்றத்தை ஒரு புரட்சி என பாராட்டியுள்ளார். “இராணுவம் அதிகாரத்தை எடுத்துக் கொண்டுள்ளது, செய்தி ஊடகம் விபரிக்கும் வெறும் இராணுவ மாற்றத்திற்கும் அப்பாற்பட்டது. இது “ஜனநாயகத்தின் முடிவை” அடையாளம் காட்டவில்லை” என்றும் கூறியுள்ளார். முர்சி எதிர்ப்பாளர்கள் திங்களன்று படுகொலை செய்யப்பட்டமை “மக்களை அதிர்ச்சிக்குள்ளாக்கியது” என ஒப்புக்கொண்ட அவர், “சில எதிர்ப்பாளர்கள் முஸ்லிம் சகோதரத்துவத்தை குறைந்த வரவேற்கத்தக்கது எனக் கண்டனர்.” ஒர் இதையொட்டி உட்குறிப்பாக கூறுவது எகிப்தில் “ஜனநாயகம்” இருந்தது, முர்சி ஆட்சியின் கீழ் அல்லது இப்பொழுது ஆட்சிக் குழுவின் கீழ், இது SWP வும் அதன் சக சிந்தனையாளர்களும் எதிர் புரட்சிக்கான பிரச்சாரகர்கள் என முத்திரையிடுகிறது. இராணுவம் மக்களை கொலை செய்தல், தொழிலாள வர்க்கத்தின் எதிர்ப்பிற்கு எதிராக தூண்டிவிடுதல் ஆகிய எல்-பெப்லவியின் பிற்போக்குத்தன சமூக செயற்பட்டியலுக்கு மாறுவதற்கு அதிக நாட்கள் பிடிக்காது. எகிப்தில் இன்னும் அழுத்தங்கள் அதிகமாக உள்ளன, ஆட்சி குழுவானது, முஸ்லிம் சகோதரத்துவ (MB) உறுப்பினர்களை தொடர்ந்து தேடித் தாக்குதல் நடத்துகிறது. திங்களன்று MB எதிர்ப்பாளர்களை கெய்ரோவில் குடியரசு படைகளின் தடுப்பரணுக்கு வெளியே படுகொலை செய்தது இராணுவத்தால் தூண்டிவிடப்பட்டது; குற்றம் சாட்டும் வக்கீல்கள் இப்பொழுது கொலை, குண்டர்த்தனம், பொது பாதுகாப்பை குறைமதிப்பிற்கு உட்படுத்துதல் என்பவற்றிற்காக 650 முஸ்லிம் சகோதரத்துவ உறுப்பினர்களுக்கு எதிராக குற்றங்களை தயாரிக்கின்றனர், இவர்கள் படுகொலையில் இருந்து தப்பியவர்களாவர். முர்சி ஆதரவாளர்கள் இன்று கெய்ரோவில் வெகுஜன அணிவகுப்பிற்குத் திட்டமிட்டுள்ளனர். இது ஆட்சி மாற்றத்தை எதிர்க்கவும், படுகொலையில் இறந்தவர்களை நினைவுகூரூவதற்காகவும் இருக்கும். |
|