சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The contemporary significance of the Declaration of Independence and the Battle of Gettysburg

சுதந்திரப் பிரகடனம் மற்றும் கெட்டிஸ்பேர்க் போரின் சமகாலத்திய முக்கியத்துவம்

Joseph Kishore
1 July 2013

use this version to print | Send feedback

இந்த வாரம், அமெரிக்க மற்றும் உலக வரலாற்றில் இரு பெரும் நிகழ்வுகளை குறிக்கிறது. அவை சுதந்திரப் பிரகடனமும், உள்நாட்டுப் போரில் கெட்டிஸ்பேர்க் போருமாகும்.  

தோமஸ் ஜேபர்சன் எழுதிய சுதந்திரப் பிரகடனம் இந்த வியாழக்கிழமைக்கு 237 ஆண்டுகளுக்கு முன் ஜூலை 4, 1776 அன்று கான்டினென்டல் காங்கிரசால் ஏற்கப்பட்டது. அறிவுவொளிமயமாக்க காலத்தின் முற்போக்கான அரசியல் சிந்தனையை வெளிப்படுத்திய இப்பிரகடனம் அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர்” மற்றும் “வாழ்வதற்கும், சுதந்திரத்திற்கும் மற்றும் மகிழ்ச்சியை அனுபவிப்பதற்கும்” “அகற்றமுடியா உரிமைகள்” உள்ளன என்பதை “சுயவிளக்கமுள்ளதும் உண்மையானதும்” என அறிவித்தது. இக்கருத்துக்கள் அன்றைய ஆட்சியாளர்களால் கடுமையாக எதிர்க்கப்பட்டன.

பிரகடனம் அத்துடன் நின்றுவிடவில்லை. “எந்த வடிவிலான அரசாங்கமாவது இந்த இலக்குகளுக்கு அழிவுகரமாக வருமானால் அதை மாற்றும் அல்லது அகற்றும் உரிமையும், ஒரு புதிய அரசாங்கத்தை நிறுவும் உரிமையும் மக்களுக்கு உண்டு எனக்கூறியது. அந்த அரசாங்கத்திற்கு மக்கள் தங்கள் பாதுகாப்பு, மகிழ்ச்சி இவற்றைச் செயல்படுத்தத் தேவையான அதிகாரங்கள், அவற்றின் கொள்கைகள் வடிவமைப்புக்களுக்கு அஸ்திவாரத்தை இடும் உரிமை உண்டு” என்றும் அது பிரகடனப்படுத்தியது.

லண்டனில் இருந்த பிரித்தானிய அரசாங்கத்திற்கு இப்பிரகடனம் சட்டவிரோதமானதும், தேசத்துரோகமானதும் ஆகியது. பிரகடனத்தில் கையெழுத்திட்டவர்களை ஜோர்ஜ் மன்னர் கைப்பற்ற முடிந்திருந்தால், அவர்கள் இங்கிலாந்திற்குத் திருப்ப அனுப்பப்பட்டு, தூக்கிலிடப்பட்டிருப்பர். ஆனால் புரட்சி வெற்றி பெற்றதுடன், வரலாறு அதற்கு ஊக்கமளித்து, தலைமை தாங்கி, அதற்காக கைகளில் ஆயுதங்களுடன் போராடியவர்களுக்கும் மதிப்பளித்தது.

பிரகடனத்தில் கையெழுத்திட்ட 87 ஆண்டுகளுக்குப்பின், இன்றைக்கு 150 ஆண்டுகளுக்கு முன்பு, கெட்டிஸ்பேர்க் போர் ஆரம்பமாகிய ஜூலை 1இலிருந்து ஜூலை 3 1863 வரை நடந்தது. நாட்டின் தலைநகரில் இருந்து 80 மைல்களே தெற்கில் இருந்த தெற்கு பென்சில்வானியா சிறுநகரத்தில் நடந்த போர், கூட்டரசினதும் சுதந்திர மாநிலங்களின் இராணுவங்களுக்கும் இடையே நடந்த மிகப் பெரிய போர்களுள் ஒன்றாகும். இதில் 35000 படையினர் இறந்தனர் அல்லது காயமுற்றனர். மோதலுக்கு அடித்தளமாக இருந்த மிகப்பெரிய வரலாற்றுப் பிரச்சினை அடிமை முறையை அகற்றுவதாகும். மூன்று நாட்கள் போருக்குப்பின், கொளுத்தும் கோடை வெய்யிலில், கூட்டரசின் படையினர் வெற்றி பெற்றனர்.

கெட்டிஸ்பேர்க் மோதல் உள்நாட்டுப் போரை முடித்துவிடவில்லை. அது இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கு தொடர்ந்தது. ஆனால் அமெரிக்காவில் அடிமைமுறைக்கு எதிரான போராட்டத்தில் அது ஒரு திருப்புமுனை ஆகும். ஆபிரகாம் லிங்கனின் விடுதலைப் பிரகடனம் நடைமுறைக்கு வந்து ஆறு மாதங்களுக்குப் பின் வந்த போர், ஜெனரல் ரோபர்ட் லீயின் வடக்குப் படையெடுப்பை மாற்றியது. இத்தோல்வியில் இருந்து தெற்கு பின்னர் மீளவே இல்லை.

நான்கு மாதங்களுக்குப்பின் கெட்டிஸ்பேர்க்கில் உள்ள படையினரின் தேசிய கல்லறைக்கு அர்ப்பணித்த உரையில், லிங்கன் சுதந்திரப் பிரகடனத்திற்கும் உள்நாட்டுப் போருக்கும் இடையே உள்ள உறவை விவரித்தார். “70 ஆண்டுகளுக்கு முன்பு நம் தந்தையர் இக்கண்டத்தில் சுதந்திரத்தில் உருவான, அனைத்து மனிதர்களும் சமமாகப் படைக்கப்பட்டுள்ளனர் என்ற கருத்தாய்வைக் கொண்ட ஒரு புதிய நாட்டை உருவாக்கினர்” என்று லிங்கன் ஆரம்பித்தார். “அர்ப்பணிப்பின் இறுதியான முழு மதிப்பீடு என லிங்கனால் விவரிக்கப்பட்ட கெட்டிஸ்பேர்க்கில் தம்மை தியாகம்செய்த படையினர் “மக்களுடைய, மக்களால், மக்களுக்கான அரசாங்கம் உலகில் இருந்து அழியக்கூடாது என்பதை உறுதிபடுத்துவதற்கு” அதைச் செய்தனர் என்றார்.

வரலாற்று ரீதியாக பேசுகையில், இந்நிகழ்வுகள் அமெரிக்காவிலும் மற்றும் சர்வதேசரீதியாகவும் முதலாளித்துவ ஜனநாய புரட்சியின் சகாப்தத்திற்கு உரியவை. ஆயினும் அவற்றில் உள்ளடங்கியுள்ள கொள்கைகள் ஒரு பரந்த, அனைத்துலக முக்கியத்துவத்தை கொண்டவை. முதலாளித்துவ ஜனநாயகப் புரட்சிகள் பெரும் சமூகப் புரட்சிகளின் முன்னோடிகள் ஆகும். மார்க்சின் சொற்களில், அமெரிக்க உள்நாட்டுப் போர், சர்வதேச தொழிலாள வர்க்கத்தின் எதிர்காலப் போராட்டங்களுக்கு “எச்சரிக்கை மணியை ஒலித்தன.

இப்புரட்சிகளில் முன்வைக்கப்பட்ட கொள்கைகளுக்கும் இன்றைய அமெரிக்க அரசாங்கத்தின் செயல்களுக்கும் இடையே உள்ள வேறுபாடுகள் எவ்வளவு அப்பட்டமாக உள்ளன? கெட்டிஸ்பேர்க் உரையின் 150வது ஆண்டு நிறைவு விழா பற்றி ஒபாமா கிட்டத்தட்ட ஏதும் கூறவில்லை என்பது முன்னரே தெரிந்த ஒன்றுதான். இந்த வாரம் நடக்கும் கொண்டாட்டங்கள் நூறாயிரக்கணக்கான மக்களை ஈர்க்கும். ஆனால் செய்தி ஊடகம் அவற்றிற்கு அதிக கவனத்தைக் கொடுக்காது.

அவற்றால் என்ன கூறமுடியும்? தங்கள் பாசாங்குத்தனத்தை அம்பலப்படுத்தாமல் எப்படி அவை உள்நாட்டுப் போர் மற்றும் புரட்சியின் மரபுகளைப் பற்றிப் பேச முடியும்?

மூன்றாம் ஜோர்ஜ் மன்னர் மீது குற்றச்சாட்டைக் கூறப் பயன்படுத்தப்பட்ட அடாவடித்தனமான பட்டியல் இன்றைய அமெரிக்க அரசாங்கத்தில் செயல்களோடு ஒப்பிடுகையில் மங்கிப்போகும். “பயங்கரவாதத்தின் மீதான போர்” என்னும் மோசடியான பதாகையின் கீழ், உரிமைகள் பற்றிய சட்டத்தில் உள்ளடங்கியுள்ள உரிமைகளான பேச்சு சுதந்திரம், ஊடக சுதந்திரம், நியாயமற்ற தேடல்கள் மற்றும் கைப்பற்றல்கள், முறையான வழக்கு நடத்தும் உரிமை மறுப்பு, ஒரு நடுவர் நீதிமன்றம் மூலம் விசாரணை, தன்னேயே ஆபத்திற்கு உட்படுத்திக் கொள்வதற்கு எதிரான பாதுகாப்பு, கொடூர, அசாதாரண தண்டனை தடுக்கப்படல் ஆகியவை திட்டமிட்டு வெற்றுத்தன்மை உடையவையாக ஆக்கப்பட்டுவிட்டன.

நிறைவேற்று அதிகாரப்பிரிவின் அதிகார வளர்ச்சி, ஜனாதிபதி அமெரிக்க குடிமக்கள் உட்பட எவரையும் முறையான வழக்கு விசாரணையற்று படுகொலை செய்யும் உரிமையை கொண்டுள்ளதாக உறுதிகூறும் அளவிற்கு ஜோர்ஜ் மன்னரே கற்பனை செய்யமுடியாத அளவிற்கு வளர்ந்துவிட்டது.

இளம் தகவல் வெளிவிட்டவரான எட்வர்ட் ஸ்னோவ்டெனை கைப்பற்றி குற்றவிசாரணை நடத்தும் தீய பிரச்சாரத்தில் அமெரிக்க அரசாங்கம் ஈடுபட்டுள்ளது. அமெரிக்க மக்கள் நம்பமுடியாத அளவிற்கு நடக்கும் ஒரு சட்டவிரோத ஒற்றுக்கேட்டல் செயலைப் பற்றி வெளிப்படுத்திய ஸ்னோவ்டெனுடைய “குற்றத்திற்காக” அவர் ஒரு “தேசத்துரோகி” என்றும் அறிவிக்கப்பட்டுள்ளார். இதில் அரசாங்கம் ஒவ்வொரு மின்னஞ்சல், தொலைப்பேசி அழைப்பு, இணைத்தளங்களை பார்வையிட்டது, அமெரிக்கா மற்றும் உலகில் ஓரளவிற்கு அதிகமானோர் செய்த பேஸ்புக் உரையாடல், ஸ்கைப் உரையாடல் பற்றிய விவரங்களையும் சேகரித்துக் கண்காணிக்கிறது.

அமெரிக்காவில் அமெரிக்க இராணுவத்தின் குற்றங்களை அம்பலப்படுத்தியதற்கு ஒரு இராணுவ நீதிமன்றத்தின் முன் பிராட்லி மானிங் குற்றம்சாட்டப்பட்டுள்ளார். பிரித்தானியாவில், விக்கிலீக்ஸின் ஜூலியன் அசாஞ் லண்டனில் இருக்கும் ஈக்குவடோர் நாட்டுத் தூதரகத்தில் தஞ்சம் கோரும் கட்டாயத்திற்கு உட்பட்டுள்ளார். கடந்த ஓராண்டாக அவர் அங்குத்தான் உள்ளார்.

நாட்டின் அரசியல் கட்டமைப்பு மாற்றப்படுகிறது. ஏப்ரல் மாதம் அமெரிக்கப் புரட்சியின் தொட்டிலான போஸ்டன் நகர் நெடுந்தூர ஓட்டத்தின்போது வைக்கப்பட்ட குண்டுகளை அடுத்து மூடப்பட்டும் கிட்டத்தட்ட இராணுவச் சட்டத்தின் கீழும் இருத்தப்பட்டது. ஜூன் மாதம் குண்டுத் தாக்குதல் பற்றி அறிந்திருக்கலாம் எனக் கருதப்பட்ட இரு சந்தேகத்திற்கு உரியவர்களைப் பற்றித் தெரிந்திருந்த ஒரு நபரை FBI விசாரணையின்போது சுட்டுக் கொன்றது. இக்கொலைக்கு நம்பத்தகுந்த விளக்கம் ஏதும் கொடுக்கப்படவில்லை.

ஒவ்வொரு உத்தியோகபூர்வ அமைப்புக்களும் சர்வாதிகாரம் என்னும் நோயால் பீடிக்கபட்டுள்ளது. கடந்த வாரம் தலைமை நீதிமன்றம் கெட்டிஸ்பேர்க் நினைவு நாளை அதற்குரிய பிரத்தியேகமான முறையில் நினைவுகூரும் வகையில், வாக்களிக்கும் உரிமைகள் சட்டத்தின் முக்கிய விதியை அகற்றியது. இது1950, 1960 களின் குடியுரிமைகள் இயக்கத்தில் வெளிப்பட்ட முக்கிய ஜனநாயகச் சட்டம் ஆகும். இவ்வாறு செய்கையில், நீதிமன்றம் அமெரிக்க அரசியலமைப்பின் 15வது திருத்தத்தை உட்குறிப்பாக தாக்கியது. அது 1870ல் இயற்றப்பட்டு எந்த மாநிலமும்  இனம் அல்லது நிறத்தால் மக்களின் வாக்களிக்கும் உரிமையை கட்டுப்படுத்துவதை தடுக்கும் அதிகாரத்தை காங்கிரசிற்கு கொடுத்திருந்தது.

பல மில்லியன்களை கொண்டவர்களின் ஆதிக்கத்தில் இருக்கும் காங்கிரஸ், ஜனநாயகத்தை அழிப்பதில் உதவியளித்து ஒத்துழைக்கும் அமைப்பாக செயல்படுகிறது. பண்டிதர்கள், கட்டுரையாளர்கள் மற்றும் நடைமுறைச் செய்தி ஊடக ஆசிரியர்கள் தங்கள் நச்சை அரசாங்கத்தின்மீது கக்குவதில்லை, அரசாங்கத்தின் குற்றத்தன்மையை அம்பலப்படுத்த முனைபவர்கள்மீது கக்குகின்றனர்.

தற்கால நிதியப் பிரபுத்துவத்தின் முக்கிய அரசியல்வாதிகள் “மக்களால், மக்களுடைய, மக்களுக்காக” அரசாங்கத்தை பாதுகாக்கவில்லை. மாறாக “செல்வந்தர்களால், செல்வந்தர்களுடைய, செல்வந்தர்களுக்காக” உள்ள அரசாங்கத்தை பாதுகாக்கின்றனர். நிதிய ஊக வணிகர்களும், பெருநிறுவன நிர்வாகிகளும் நினைத்துப்பார்க்க முடியாத அளவிற்கு சொத்துக்களைக் குவித்துள்ளனர். ஆனால் சமூகம் முழுவதும் கொடூரப் பிற்போக்குத்தனத்திற்கு சென்றுவிட்டது. அவர்கள் சாதாரண மக்களைக்கண்டு வெறுக்கின்றனர், அச்சம் கொண்டுள்ளனர்.

அமெரிக்க புரட்சிகளின் மரபுகள் மக்களுடைய முழு உணர்மையில் ஆழ்ந்து உறைந்துள்ளன. அதன் நிறுவனர்களை பற்றிய நினைவு, எல்லாவற்றிற்கும் மேலாக ஆபிரகாம் லிங்கன் குறித்தது, பெரும் மரியாதையைதை தூண்டுகிறது. இந்த வாரம் பல்லாயிரக்கணக்கானவர்கள் கெட்டிஸ்பேர்க்கிற்குச் செல்கின்றனர் என்பது, “மக்கள் ஒருபொழுதும் அவர்கள் [வீரர்கள்] இங்கு செய்ததை மறக்க மாட்டார்கள்” என்று லிங்கன் கூறியது சரியென்பதை நிரூபிக்கிறது.

செய்தி ஊடகத்தினதும் மற்றும் அரசியல் அமைப்பு முறையினதும் பொதுமக்கள் உணர்வை நச்சுப்படுத்தும் அனைத்து முயற்சிகளையும் மீறி, அமெரிக்காவாயினும், உலகம் முழுவதும் ஆயினும் சரி மக்களுடைய உணர்மையில் இருந்து பெரும் வரலாற்றுப் போராட்டங்கள் அழிக்கப்படவில்லை.

1776, 1863 மரபுகளின் மற்றும் உயர்சிந்தனைகளின் உண்மையான வாரிசு அமெரிக்க மற்றும் சர்வதேச தொழிலாள வர்க்கமாகும். ஜனநாயகத்தை பாதுகாப்பது ஆனால் வேறுபட்ட சூழலில் மீண்டும் ஒரு புரட்சித் தன்மையை அடைகிறது. சர்வாதிகாரத்தை தடுக்கவும் பின்னோக்கி இழுக்கவும் தொழிலாள வர்க்கத்தின் மத்தியில் ஒரு இயக்கம் கட்டியமைக்கப்பட வேண்டும். அந்த இயக்கம், ஜனநாயகம், முதலாளித்துவத்தோடு இயைந்து இருக்க முடியாது என்பதை உணர்ந்துகொண்டும் உண்மையான சுதந்திரம் சமூக சமத்துவத்தில்தான் வேர்களைக் கொண்டிருக்கிறது என்பதிலிருந்தும் ஆரம்பிக்க வேண்டும். அமெரிக்க வரலாற்றில் முற்போக்கானதாக இருந்தவை அனைத்தும் சோசலிசத்திற்கான ஒரு புரட்சிகரப் போராட்டத்தின் மூலம்தான் முன்னே எடுத்துச் செல்லப்படமுடியும்.