World Socialist Web Site www.wsws.org |
New revelations about filmmakers’ collaboration with CIA on Zero Dark Thirty Zero Dark Thirty திரைப்பட தயாரிப்பாளர்களின் சி.ஐ.ஏ.வுடனான கூட்டுறவு குறித்த புதிய அம்பலங்கள்
By David
Walsh சித்திரவதைக்கு ஆதரவான திரைப்படமான Zero Dark Thirty இன் தயாரிப்பாளர்களான, திரைக்கதை எழுத்தாளர் மார்க் போல் மற்றும் இயக்குனர் கேத்ரின் பிகெலோ ஆகியோருக்கும் சி.ஐ.ஏவுக்கும் இடையிலான ஒத்துழைப்பு மட்டத்தை அம்பலப்படுத்தும் புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. உண்மையில், அமெரிக்க புலனாய்வுத்துறை, திரைக்கதை எழுத்தாளர் போல் தொடர்ச்சியாக எடுத்துச்சென்ற இத்திரைப்படத்தின் கதையை சோதித்து, முக்கிய மாற்றங்களை வலியுருத்தியிருக்கிறது. இதில் ஆச்சரியப்படுவதற்கு எதுவுமில்லை. உ.சோ.வ.தளம் (WSWS) குறிப்பிட்டிருப்பது போல், பிகெலோ, போல் மற்றும் சி.ஐ.ஏ.வுக்கும் பெண்டகன் அதிகாரிகளுக்குமிடையேயான உயர்மட்ட விவாதம் குறித்து ஏற்கெனவே தெரிந்திருப்பதானது திரைப்பட தயாரிப்பாளர்களால் எதுவும் முடியும் என்பதை சுட்டிக்காட்டுகிறது. எவ்வாறாயினும், அமெரிக்க அதிகாரிகளுடனான அவர்களது ஈடுபாட்டினை இந்த புதிய செய்திகள் அடிக்கோடிட்டு காட்டுவதுடன் மற்றும் ஒசாமா பின்லேடன் வேட்டையை புனைக்கதையாக சித்தரிக்கின்ற Zero Dark Thirty ஐ, ஒரு மாபெரும் பிரச்சார வெற்றியாக சி.ஐ.ஏ. பார்த்தது. பிகெலோ-போலின் திரைப்படம் ஒரு “போருக்கு எதிரான” அல்லது “சித்ரவதைக்கு எதிரான”” படைப்பு என வலியுறுத்துகிற இயக்குனர் மைக்கேல் மூர் மற்றும் பிற தாராளவாதிகளின் முயற்சிகளை இத்தகவல்கள் மேலும் ஒரு கேலிக்குரியதாக்குகின்றது. சமீபத்திய வரலாற்றில், அமெரிக்க அரசின் அதி உயர்மட்ட சித்திரவதையாளர்கள் மற்றும் படுகொலையாளர்களால், உண்மையில் எந்த திரைப்படமும் இந்த அளவுக்கு மிக நெருக்கமாக கவனிக்கப்பட்டு உருவாக்கப்படவில்லை. தகவல் பெறும் சுதந்திர சட்டத்தின் கீழ் வெளியிடப்பட்ட, ஒரு தடைநீக்கப்பட்ட சி.ஐ.ஏ. இன் உள்ளக குறிப்பினை, Gawker வலைத் தளத்தினாரால் சமீபத்தில் வெளியிடப்பட்டு காணக்கிடைத்தது. அப்போது “கேத்ரின் பிகெலோ இயக்கும் பின்லேடன் தொடர்புடைய திரைப்படத்தின் திரைக்கதையை பொது விவகாரத்துறை அதிகாரிகளுடன் (OPA, [CIA] ) அதன் திரைக்கதை ஆசிரியரான போல் வாயளவில் பகிர்ந்து கொண்டார்” என்று 2011 அக்டோபர் - டிசம்பரில் நடைபெற்ற ஐந்து ஆலோசனை கலந்துரையாடல் அழைப்பினை அக்குறிப்பு விளக்குகிறது. “ஒரு முகவாண்மையின் (Agency) கோணத்தில், முகவாண்மையையும் பின் லேடன் செயல்பாடுகளையும் சரியாக சித்தரிப்பதற்கு உதவி செய்வதே பொது விவகாரத்துறை அதிகாரிகளின் இவ்விவாதங்களது நோக்கம்” என்று சி.ஐ.ஏ. குறிப்பு நேரடியாக விவரிக்கிறது. (இதன் ஒரு பகுதியாக கடந்த வருடம் வெளியிடப்பட்ட இன்னொரு சி.ஐ.ஏ. ஆவணத்தில், “ஒரு முகவாண்மையாக, நாங்கள் போலுடன் பணிபுரிய மிகுந்த ஆர்வமாக இருந்திருக்கிறோம். அவர் எங்களுடன் அந்த திரைப்படத்தின் கதை மற்றும் விவரங்களை பகிர்ந்து கொள்ள ஒத்துக் கொண்டிருக்கிறார், அதனால் அவர் எடுக்கப் போகிற திரைப்படம் குறித்து எங்களுக்கு முற்றிலும் சம்மதமே”” என்று விவரிக்கும் ஒரு முகவாண்மை அதிகாரி, தன் சக பணியாளர்களை திரைக்கதை ஆசிரியருடன் தகவல்களை பகிர்ந்து கொள்ள சொல்லி வலியுறுத்தினார் என்ற தகவல் கிடைத்தது) போலுடனான அவர்களின் ஆலோசனைக் கலந்துரையாடல் அழைப்பின்போது, சமர்ப்பிக்கப்பட்ட கதையில் இருந்த பல காட்சிகளுக்கு OPA அதிகாரிகள் எதிர்ப்பு தெரிவித்தனர். ஒரு ஆரம்பக் காட்சியில், சி.ஐ.ஏ. அதிகாரியான மாயா (Jessica Chastain) ஒரு கைதியை தண்ணீரினுள் அழுத்தி துன்புறுத்துவதில் கலந்து கொண்டு, அவரை ஒரு சிறிய பெட்டியில் அடைக்கின்ற ஒரு காட்சி அவர்கள் புகார் தெரிவித்த காட்சிகளுள் ஒன்றாகும். ”அந்த காட்சிக்கு சாதாரண தகவல் சேர்ப்பவர் (மாயா போன்ற) மேம்பட்ட விசாரணை யுக்திகளை (EITs) கையாளவில்லையென்பதை நாங்கள் சுட்டிக் காட்டினோம். ஏனெனில் இக்காட்சியில் உண்மையான விசாரணையாளர் அல்லாத, மருந்து அளவுகள் சம்பந்தப்பட்ட யுக்திகளில் [பதிவு செய்யப்பட்டது] உதவுகின்ற ஒரு சாதாரண தகவல் சேர்ப்பவரை போல் வைத்திருக்கின்றார் என்று சி.ஐ.ஏ. குறிப்பு கூறுகிறது. தான் இந்த காட்சியை அவ்வாறே வைக்கப் போவதாக போல் கூறினார். மேலும் மாயாவை ஒரு நிமிடத்திற்கும் குறைவாக ஒரு வில்லத்தனமான கதாபாத்திரமாக ஆக்கி, அவர் அதை செய்தார். மேலும், ”நாய் பயன்படுத்தப்படும் இன்னொரு விசாரணைக் காட்சிக்கு, முகவாண்மையால் அதுபோன்ற ஒரு யுக்தி பயன்படுத்தப்படுவதில்லை என நாம் அதற்கு எதிர்ப்பு தெரிவித்தோம். திரைக்கதையிலிருந்து நாய் பயன்படுத்தப்படும் அந்தக் காட்சி எடுக்கப்பட்டுவிட்டது என்று ஜனவரியில் போல் உறுதிபடுத்தினார்” என்று சி.ஐ.ஏ. குறிப்பு தெரிவிக்கிறது. சி.ஐ.ஏ. கைதிகள் மீது நாயைப் பயன்படுத்துவதில்லை என்பது ஒரு பொய். ரஃபிக் அல்-ஹாமி என்கிற ஒரு துனிசியா நாட்டவர், ஒருமுறை ஆஃப்கானிஸ்தானில் சி.ஐ.ஏ இன் மறைமுக தடுப்புத் தளத்தில் வைக்கப்பட்டிருந்தார், அங்கு அவர் நிர்வாணமாக்கப்பட்டு, நாய்களால் பயமுறுத்தப்பட்டு, வலிநிறைந்த “அழுத்த” நிலையில் பல மணி நேரமாக கட்டிவைக்கப்பட்டு, குத்தப்பட்டு, உதைக்கப்பட்டு, மிக உயர்ந்த சூட்டிற்கும், குளிர்ச்சிக்கும் உட்படுத்தப்பட்டார்” என்று கெவின் கோஸ்டொலா Firedoglake இல் குறிப்பிடுகிறார். குவாண்டனாமோ மற்றும் அபு கிரைப்பில் அமெரிக்க இராணுவம் கைதிகளை பயமுறுத்த மோப்ப நாய்களை தொடர்ச்சியாகப் பயன்படுத்தியது. போல் தனது திரைக்கதையில் எதையெல்லாம் சேர்க்க அனுமதிக்க வேண்டுமென்பதில் சி.ஐ.ஏ. விழிப்புடன் இருந்தது. அமெரிக்க இராணுவத்தின் பல சித்திரவதை முறைகள் ஏற்கனவே பொதுப்படையாக அம்பலப்படுத்தப்பட்டிருந்த காரணத்தால் மட்டுமே, அவர்கள் குறிப்பிட்ட சித்ரவதைக் காட்சிகளை அனுமதித்தனர். மொத்தத்தில், ஹாசன் குல் மற்றும் அபு ஃபராஜின் திரைப்படத்தில் (அல் கொய்தா செயல்பாடுகள் என்று குற்றம் சாட்டப்பட்ட) இருக்கும் விசாரணைக் காட்சிகள் மேம்பட்ட விசாரணை யுக்திகளை (EIT) உள்ளடக்கியது போல் இருக்கும், அவை ஏற்கெனவே நீதித்துறை / சட்ட ஆலோசனை அலுவலக அறிக்கையில் வெளிப்படையாக இருப்பவை” என்று ஏஜென்சியின் ஆணைக்குறிப்பு தெரிவிக்கிறது. எந்த ஒரு புறநிலை பார்வையாளரையும் அமெரிக்க கொள்கைக்கு எதிராக திருப்பும் அளவுக்கு அதன் சித்ரவதைக் காட்சிகள் மிகவும் கவலைப்படும்படியாக இருப்பதாக, Zero Dark Thirty இன் ஆதரவாளர்கள் வாதிடுகிறார்கள். உண்மையில், அடிப்படையில் நேர்மையான ஒரு காரணத்தின் தொடர்ச்சியில் "தீவிரவாதத்திற்கு எதிரான போரிலும்”, 9/11 இற்காக அவர்களது பழிவாங்கும் ஆர்வத்திலும், அமெரிக்க அதிகாரிகள் எப்போதாவது (மற்றும் எல்லா விஷயங்களையும் கருதும்போது, மன்னிக்கத்தக்க வகையிலும்) எல்லை மீறியிருக்கிறார்கள் என்பதாக இத்திரைப்படத்தின் மையக்கருத்து இருக்கிறது. மனதை பாதிப்பதாக கருதப்படும் படத்தில் பார்த்த எந்த காட்சிகளும் சி.ஐ.ஏ.வின் தெளிவான அனுமதியின்றி திரைப்படத்தில் இடம்பெற்றிருக்காது அல்லது வைக்கப்பட்டிருக்காது. “குடித்த பிறகு ஒரு அதிகாரி, ஏகே - 47 துப்பாக்கியால் வெளியில் சுட்டு மகிழ்கிறார். குடிவகையையும் துப்பாக்கிகளையும் கலப்பது ஒரு முக்கிய விதிமீறல் மற்றும் நிஜ வாழ்க்கையில் இது போன்ற செயல் நடப்பதில்லை (!) என நாம் வலியுறுத்தினோம். திரைப்படத்திலிருந்து இக்காட்சியை நீக்க வேண்டுமென்று நாங்கள் கேட்டுக் கொண்டோம். இதனை படத்திலிருந்து எடுத்து விட்டதாக போல் உறுதிசெய்தார்.” என்கிற முன்மொழியப்பட்ட ஒரு காட்சியையும் சி.ஐ.ஏ விதிவிலக்காக எடுத்துக் கொண்டது, சிலர் சித்ரவதை செய்யப்படுவதும் மற்றும் தவறான முறையில் நடத்தப்படுவதை உள்ளடக்கிய கைதிகள் விசாரணை ஒளிப்பதிவுகளை மாயா பார்வையிடுகிற ஒரு நீளமான காட்சிக்கும் சி.ஐ.ஏ. எதிர்ப்பு தெரிவித்தது. ”கைதிகளின் விசாரணைகள் ஒளிப்பதிவு செய்யப்படவில்லை, ஆராய்ச்சி செய்யப்பட்டு பகுத்தாய்வும் செய்யப்படவில்லை” என்று பொது விவகாரத்துறை அதிகாரிகள் (OPA) தெரிவித்தனர். ”ஒரு சுவாரஸ்யமான சினிமா பாணியில் காட்சி ரீதியாக.... ஆராய்ச்சிகளை காண்பிப்பதற்கான ஒரே வழி அதுதான்” என்று போல் அந்த மறுப்புக்கு பதிலளித்தார். அதனால் சி.ஐ.ஏ. அதற்கான கண்டிப்பை குறைத்தது. தண்ணீரில் அழுத்துதலை பயன்படுத்துவது உள்ளிட்ட விசாரணைகளை முகவாண்மை ஒளிப்பதிவு செய்தது என்பதும் அந்த ஒளிப்பதிவுகள் பல பின்னால் சட்டத்திற்குபுறம்பாக அழிக்கப்பட்டன என்பதும் நன்றாக தெரிந்த விஷயம். Gawker இற்கான ஒரு மின்னஞ்சல் பதிலில்,” ”செயல்பாடுகளின் விவரங்களையும் அதில் கலந்துகொண்டவர்களின் அடையாளங்களையும் ரகசியமாக வைப்பதற்காக சில வேண்டுகோள்களை நாங்கள் மதித்தோம். ஆனால் எந்த பதிப்பு அல்லது கலைப் படைப்பையும் போன்றே, கதையைப் பொருத்தவரையில் இறுதி முடிவுகள் திரைப்பட உரிமையாளர்களாலேயே எடுக்கப்பட்டன”” என்று போல் எழுதினார். சி.ஐ.ஏ.வின் தேவைகளுக்கேற்ப, முகவாண்மையின் செயல்பாடுகள், யுக்திகள் மற்றும் நடத்தைகளை நீக்குதல் உள்ளிட்ட மாற்றம் செய்யும் நிலை பிகெலோ அல்லது போல் ஆகிய அமெரிக்க இராணுவ-புலனாய்வு அமைப்பின் பணிவான பணியாளர்களுக்கு ஏற்படாது. இது “கலைப் படைப்பு” இன் முடிவில் எவ்விதமான விளைவையும் கொண்டிருக்கலாம். Zero Dark Thirty திரைப்பட உரிமையாளர்களின் அரசியல் மற்றும் ஒழுக்க இழிநிலை எல்லை அற்றதாக தெரிகிறது. |
|