WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள் :
ஆசியா :
இலங்கை
Sri
Lankan SEP to mark 25th anniversary of Keerthi Balasuriya’s death
இலங்கை சோசலிச
சமத்துவக் கட்சி கீர்த்தி பாலசூரியவின் 25வது நினைவு தினத்தை நிகழ்த்துகிறது
By the Socialist Equality Party (Sri Lanka)
29 January 2013
Back to screen version
இலங்கையில் சோசலிச
சமத்துவக் கட்சி (சோ.ச.க.) மற்றும் சமூக சமத்துவத்துக்கான அனைத்துலக மாணவர்கள்
(ஐ.எஸ்.எஸ்.ஈ.) அமைப்பும் கீர்த்தி பாலசூரியவின் 25வது நினைவு தினத்துக்காக
பெப்ரவரி 10 அன்று கொழும்பில் ஒரு பொதுக் கூட்டத்தை நடத்தவுள்ளன.
தோழர் கீர்த்தி,
சோசலிச
சமத்துவக் கட்சியின் முன்னோடியான புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் (பு.க.க) பொதுச்
செயலாளரும் நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் (ICFI)
அனைத்துலக
தலைவர்களில் ஒருவருமாவார். அவர் 1987 டிசம்பர் 18 அன்று காலமானார். அவர்
அனைத்துலகத் தொழிலாள வர்க்கத்தின் புரட்சிகர தலைமையாக நான்காம் அகிலத்தின்
அனைத்துலகக் குழுவை கட்டியெழுப்பும் போராட்டத்துக்கு தனது முழு இளமைக் காலத்தையும்
அர்ப்பணித்திருந்தார்.
அனைத்துலகக் குழுவுக்குள் ஈர்க்கப்பட்டிருந்த இளைஞர்கள் மத்தியில் சோசலிச
சர்வதேசியவாதத்தின் உறுதியான பிரதிநிதியாக முன்னணிக்கு வந்திருந்த காரணத்தால்
பாலசூரிய அவரது 19 வயதிலேயே புரட்சிக் கம்யூனிஸ்ட் கழகத்தின் பொதுச் செயலாளராக
1968ல் நடந்த ஸ்தாபக மாநாட்டில் தேர்ந்தெடுக்கப்பட்டார். தம்மை ட்ரொட்ஸ்கிஸ்டுகள்
எனக் கூறிக்கொண்டிருந்த லங்கா சமசமாஜ கட்சி (ல.ச.ச.க.),
1964ல்
முதலாளித்துவ ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் கூட்டணியில் சேர்ந்துகொண்டு செய்த
மாபெரும் காட்டிக்கொடுப்பின் விளைவாக தோன்றிய சிக்கலான அரசியல் பிரச்சினைகளைத்
தீர்ப்பதற்கு, கீர்த்தியும் அவரது தோழர்களும் நான்காம் அகிலத்தின் அனைத்துலக
குழுவின் கோட்பாட்டு மற்றும் அரசியல் வழிகாட்டுதலுடன் போராடி வந்தனர்.
கீர்த்தி, முதலாளித்துவ சமுதாயத்தில் தொழிலாள வர்க்கமே ஒரே புரட்சிகர சக்தி என்ற
அவரது உறுதியான நம்பிக்கையில் இருந்து தளராததோடு, முதலாளித்துவத்தின் அனைத்து
பிரிவுகள் மற்றும் முகவர்களில் இருந்தும் தொழிலாள வர்க்கத்தின் அரசியல்
சுயாதீனத்துக்காக சளைக்காது போராடினார்.
கீர்த்தியின் வாழ்க்கை மற்றும் சோசலிச சர்வதேசியவாதத்திற்காக அவர் முன்னெடுத்த
கொள்கைப் பிடிப்பான போராட்டத்தின் படிப்பினைகளை கிரகித்துக்கொள்வதானது, போர்
மற்றும் சமூக காட்டுமிராண்டித்தனத்தை மட்டுமே உருவாக்கும் இந்த நெருக்கடி நிறைந்த
உலக முதலாளித்துவ முறைமைக்கு இன்று ஒரு மாற்றீட்டைத் தேடும் அனைவருக்கும்
இன்றியமையாததாகும். சோசலிச அனைத்துலகவாதத்துக்கான போராட்டத்துக்கு கீர்த்தி செய்த
பிரமாண்டமான அரசியல் மற்றும் தத்துவார்த்த பங்களிப்பை பற்றியும் இன்று
தொழிலாளர்களின் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்களின் போராட்டங்களுக்கு அதன்
முக்கியத்துவத்தைப் பற்றியும் கலந்துரையாட நினைவு கூட்டத்தில் கலந்து கொள்ளுமாறு
நாம் தொழிலாளர்கள், இளைஞர்கள் மற்றும் எமது ஆதரவாளர்கள் உட்பட புத்திஜீவிகள்
மற்றும் உலக சோசலிச வலைத் தள வாசகர்களுக்கும் அழைப்பு விடுக்கின்றோம்.
நேரம்: பெப்ரவரி 10, ஞாயிறு,
பி.ப. 3.00
மணி
இடம்: புதிய நகர மண்டபம்,
கிறீன் பாத்,
கொழும்பு 7 |