சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ்

France sends troops to secure Niger uranium mines

நைஜர் யூரேனியச் சுரங்கங்களைப் பாதுகாக்க பிரான்ஸ் துருப்புக்களை அனுப்புகிறது

By Bill Van Auken
25 January 2013

use this version to print | Send feedback

வெளிநாட்டு படையணி (Foreign Legion) துருப்புக்கள் 2000க்கும் மேற்பட்டவையுடன் மாலியின்மீது படையெடுத்த இரண்டு வாரங்களுக்குள் பிரான்ஸ் அண்டை நைஜரில் பிரெஞ்சு அரசாங்கத்திற்கு உரிமையான அணுசக்தி நிறுவனமான அரேவாவிற்குத் தேவையான யூரேனியத்தைப் பாதுகாக்க அங்குள்ள யூரேனியச் சுரங்கங்களுக்கு அதன் சிறப்புப் படைகளை அனுப்பியுள்ளது.

வடமேற்கு ஆபிரிக்காவில் புதிய பிரெஞ்சு இராணுவத் தலையீடு முதலில் வாராந்திர ஏடு Le Point  இனால் கொடுக்கப்பட்டு, பின்னர் பிரெஞ்சு செய்தி ஊடகத்தின் மற்ற பிரிவுகளால் தொடர்பு கொள்ளப்பட்டபோது இராணுவ வட்டாரங்களால் உறுதிப்படுத்தப்பட்டன. Le Point  பிரெஞ்சுப் பாதுகாப்பு மந்திரி Jean-Yves Le Drian முன்னதாக இந்த வாரம் விரைவில் சிறப்புப் படைகளை, அரேவா யூரேனிய உற்பத்தி நிலையங்கள் Imouraren என ஆர்லிட்டிற்கு 80 கி.மீ. தொலைவில் இருப்பதை பாதுகாக்க அனுப்பப்படும் என்பதை ஒப்புக் கொண்டார், இது ஒரு முக்கிய புதிய செயற்பாடு” ஆகும். அந்த ஏடு, பிரெஞ்சு கமாண்டோக்கள் நேரடியாக ஒரு பெருநிறுவனச் சொத்துக்களை காப்பதில் ஈடுபட்டிருப்பது முதல் தடவையாகும் என்று குறிப்பிட்டுள்ளது.

அந்த ஏடு, பிரெஞ்சு அரசாங்க அதிகாரிகள் பிரெஞ்சு பணயக்கைதி டெனிஸ் அலெக்ஸ் ஐ சோமாலியாவில் இருந்து மீட்கத் தோல்வியுற்ற முயற்சிக்கு அடுத்து வந்துள்ளது என்று கூறுகிறது; அதேபோல் அல்ஜீரியாவில் உள்ள ஆர்மெனஸ் எரிபொருள் நிலையத்தில் சமீபத்தில் 80 பேர் கொல்லப்பட்ட குருதி கொட்டிய பணயக்கைதி விவகாரம் நடந்ததை அடுத்தும் நிகழ்ந்துள்ளது.

“மாலியில் சேர்வல் நடவடிக்கை தொடக்கி வைக்கப்பட்டுள்ளதை அடுத்து வந்துள்ள இந்ந இரண்டு நிகழ்ச்சிகள் கணிசமாக பிரெஞ்சு ஆதார இருப்புக்களுக்கு இடர் காரணிகளை அதிகரித்துள்ளன; அவற்றுள் தொழில்துறை மற்றும் சுரங்கங்கள் என இப்பிராந்தியத்தில் உள்ளவையும் அடங்கும்” என Le Point  குறிப்பிட்டுள்ளது.

உண்மையில், பிரெஞ்சு கமாண்டோக்களை நைஜரிலுள்ள யூரேனிய சுரங்கங்களுக்கு அனுப்பிவைத்துள்ளது, மாலியில் இராணுவ தலையீட்டிற்குப் பின் உள்ள மிகப்பெரிய பொருளாதார, புவி அரசியல் மூலோபாய உந்துதல்களைத்தான் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. மாலியின் மத்திய அரசாங்கத்தைக் காத்தல், இஸ்லாமிய “பயங்கவராதிளுக்கு” எதிரான போர் என்ற போர்வையில் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் வளம் மிகுந்த அதன் முன்னாள் ஆபிரிக்க காலனிகளில் அதன் பிடியை இறுக்க இராணுவ வலிமையை பயன்படுத்தி வருகிறது.

அரேவா மற்றும் பிரெஞ்சுப் பாதுகாப்பு அமைச்சரகத்தின் உத்தியோகபூர்வ செய்தித் தொடர்பாளர்கள் பாதுகாப்புக் காரணங்களை காட்டி புதிய இராணுவ நடவடிக்கைகளை விவாதிக்க மறுத்துவிட்டனர்.

நைஜரிலியே அதிகாரிகள் சிறப்புப்படைகளின் கமாண்டோக்கள் அனுப்பப்பட்டிருப்பது குறித்து எதையும் மறுத்தனர். “இன்று பயங்கரவாதிகள் அச்சுறுத்தல் அதிகமாகியிருப்பது உண்மைதான், ஆனால் நான் அறிந்தவரை இத்தகைய உடன்பாடு ஏதும் இப்பொழுது இருப்பதாகத் தெரியவில்லை” என்று ஒரு அதிகாரி ராய்ட்டர்ஸிடம் கூறினார்.

நைஜர் இராணுவ அதிகாரி ஒருவர், செய்தி நிறுவனத்திடம், ஏற்கனவே பாதுகாப்பு ஏற்பாடுகள் என்று பிரான்ஸுடன் ஒப்புக்கொள்ளப்பட்டவை நடைமுறையில் உள்ளது, இது செப்டம்பர் 2010ல் அரேவா ஊழியர்கள் ஏழு பேர் கடத்தப்பட்டபின்னும் மற்றும் அதன் ஒப்பந்தக்காரர் ஒருவர் வடக்கு நைஜீரிய ஆர்லிட் சிறு நகரில் கடத்தப்பட்ட பின்னும் சுமத்தப்பட்டது என்றார்.

“நாங்களும் அகடஸ்  பிராந்தியத்தில் பயங்கரவாத எதிர்ப்புப்பிரிவுகளைக் கொண்டுள்ளோம்” என்றார் அதிகாரி. “தற்போதைக்கு நைஜீரிய அரசாங்கம் பிரெஞ்சு சிறப்புப்படைகளை வடக்கில் தளம் கொள்ளுமாறு அனுமதித்தது குறித்த முடிவு ஏதும்  எனக்குத் தெரியாது” என்றார்.

நைஜீரிய அரசு அதன் திட்டங்களை பிரான்ஸ் அறிவிக்காதது கேள்விக்கு அப்பாற்பட்ட விடயமல்ல. அந்நாட்டை காலனித்துவமாக 60 ஆண்டுகளாக ஆட்சி நடத்திய பிரான்ஸ், 1960ல் சுதந்திரம் அதற்குக் கொடுக்கப்பட்டதில் இருந்தே, நைஜரை ஒரு அரைக் காலனித்துவமாகத்தான் நடத்தி வந்துள்ளது.

நைஜர் சுரங்கங்களில் இருந்து எடுக்கப்படும் யூரேனியம், தொடர்ந்த பிரெஞ்சு அரசாங்கங்களால் மூலோபாய முக்கியத்துவம் உடையதாகக் கருதப்படுகிறது. இந்த நைஜர் யூரேனியத்தில் இருந்து தயாரிக்கப்படும் மஞ்சள் கேக் பிரான்சில் அணுகுண்டுகள் தயாரிக்கவும், அணு உலைக்கூடத்தில் எரிபொருளாகவும் பயன்படுத்தப்படுகிறது; நாட்டின் மின் உற்பத்தியில் 75% இதன்மூலம் வருவதாகத் தெரிகிறது.

நைஜரின் யூரேனியத்திடமிருந்து பெரும் இலாபங்கள் அடையப்பட்டாலும், சுரங்க செயற்பாடுகள் நாட்டின் முதலாளித்துவப் பிரிவின் சிறிய தட்டிற்குத்தான் நலன்களைக் கொடுத்துள்ளது.  ஐ.நா. மனிதவளர்ச்சிக் குறியீட்டின்படி,  நைஜர் உலகில் மூன்றாம் வறிய நாடு ஆகும்;  இங்குள்ள மக்கட்தொகுப்பில் 70% நாள் ஒன்றிற்கு 1 டாலருக்கும் குறைந்த வருமானத்தில் வாழ்கின்றனர்; இங்கு வாழ்நாள் எதிர்பார்ப்பு 45 ஆண்டுகள்தான்.

மேலும் நைஜிரில் சுரங்கத் தொழில் உள்ள இடங்களில் இனவழி, பிராந்திய அழுத்தங்களையும் அதிகரித்துள்ளது. யூரேனிய உற்பத்தி நாடோடி துவரெக்குகள் சிறுபான்மையினரின் வடக்குத் தாயகத்தில் குவிப்பு கொண்டுள்ளது; இப்பிரிவு பலமுறையும் எழுச்சியில் ஈடுபட்டுள்ளது; சுரங்கச் செயல்பாடுகளில் இருந்து கிடைக்கும் எத்தகைய ஆதாரமும் தெற்கு தலைநகரான நியமேக்குச் செல்லவேண்டும் என்று கூறுகிறது. நைஜரின் நீதிக்கான இயக்கத்தின் (MNJ)  உ டைய முக்கிய கோரிக்கைககளில் ஒன்று, ஒரு பெரிய துவரெக் ஆயுதமேந்திய போராளிக்குழு நைஜீரிய இராணுவத்தை எதிர்த்ததின் கோரிக்கைகளில் ஒன்றான, யூரேனியத்தில் இருந்து கிடைக்கும் வருமானங்கள் இன்னும் நியாமான முறையில் பகிர்ந்து கொள்ளப்பட வேண்டும் என்பதாகும்.

மேலும்,  அரேவாவினால் யூரேனியம் சுரண்டப்படுதல் என்பது சுரங்கப்பகுதிகளில் சுகாதாரப் பேரழிவுச் சூழலையும் தோற்றுவித்துள்ளது. பசுமைச் சமாதானம் என்னும் சுற்றுச் சூழல் குழு 2010 அறிக்கை ஒன்றில் இப்பகுதியில் இருக்கும் நீர்க்கிணறுகள் கதிரியக்கத் தரங்கள் இயல்பாக இருப்பதைவிட 500 மடங்கு அதிகமாக இருப்பதால் மாசுபட்டு விட்டன என்று கண்டறிந்துள்ளதைத் தெரிவிக்கிறது. அரேவா சுரங்கங்களின் ஒரு தளமான ஆர்லிட்டில் மூச்சுத் திணறல் நோய்களால் இறப்போர் எண்ணிக்கை தேசிய சராசரியை விட இருமடங்காக உள்ளது.

மாலியின் தலையீட்டால் பயப்பிடுவதற்கு பிரான்ஸிற்குப் பல காரணங்கள் உண்டு; இது ஏற்கனவே குடிமக்கள்மீது குண்டுத் தாக்குதலை, குடிமக்களை சித்திரவதையை, கொலைகளை பிரெஞ்சு ஆதரவு பெற்ற இராணுவம் முக்கியமான துவரெக் பகுதிகளில் நடத்துவதைக் கண்டுள்ளது; இது இராணுவ மோதலை நைஜரின் எல்லைக்கும் கொண்டுவந்துவிடக்கூடும்.

ஆனால், “பயங்கரவாதம்” அல்லது மக்கள் எழுச்சி என்பதில் இருந்து ஆதாயங்களை அடையும் நோக்கத்துடன் பிரான்ஸ் நைஜரில் அதன் இராணுவ வலிமையைக் காட்டுவதற்குக் காரணங்களைக் கொண்டுள்ளது. யூரேனிய இலாபங்களில் தன் பங்கை அதிகரிக்கும் முயற்சியில் நைஜீரிய அரசாங்கம் சமீபத்தில் சீனாவிற்கும் இந்திய நிறுவனங்களுக்கும் ஆராயும் உரிமங்களை வழங்கியுள்ளது. ஆயுதமேந்திய கமாண்டோக்களை அனுப்பியுள்ள வகையில் பாரிஸ் தன் முன்னாள் காலனி மீதான அதன் மேலதிக்கத்தை, அதன் ஆபிரிக்கச் செல்வாக்கு மண்டலத்தின் ஒரு பகுதியில் உறுதிப்படுத்துகிறது.

ஆபிரிக்கத் தலையீட்டை பிரான்ஸ் முடுக்கிவிட்டிருக்கையில், வெளிவிவகாரச் செயலர், ஹில்லாரி கிளின்டன் புதன் அன்று செனட் குழு ஒன்றின்முன் கொடுத்த சாட்சியத்தைப் பயன்படுத்தி இப்பிராந்தியத்தில் வாஷிங்டனின் சொந்தத் தலையீட்டை அதிகப்படுத்தும் உறுதியை வெளிப்படுத்தினார்.

 “நாம் ஒரு போராட்டத்தில் உள்ளோம், ஆனால் அது ஒரு தேவையான போராட்டம் ஆகும். வடக்கு மாலி ஒரு பாதுகாப்பான உறைவிடமாக மாற நாம் அனுமதியோம்” என்றார் அவர்.

மாலியில் எழுச்சி மற்றும் அல்ஜீரியாவில் எரிவாயு ஆலையில் பணயக்கைதிகள் முற்றுகை ஆகியவை லிபியாவில் கடாபி ஆட்சியை அமெரிக்க நேட்டோ கவிழ்த்ததின் விளைவாகத்தான் பெரும்பாலும் இருக்கும் என்பதை கிளின்டன் ஒப்புக் கொண்டார்; அங்கு வாஷிங்டனும் அதன் நட்பு நாடுகளும் ஆட்சி மாற்றத்திற்காக நடந்த போரில் தரைப் படையில் பினாமியாகச் செயல்பட்ட இஸ்லாமியப் போராளிகளுக்கு ஆயுதமளித்து ஆதரவு கொடுத்தன.

 “அல்ஜீரியப் பயங்கரவாதிகள் லிபியாவில் இருந்து ஆயுதங்களைப் பெற்றனர் என்பதில் சந்தேகம் இல்லை” என்றார் அவர். “மாலியில் எஞ்சியிருக்கும் AQIM (இஸ்லாமிய மக்ரெப்பில் இருக்கும் அல் குவேடா) லிபியாவில் இருந்து ஆயுதங்களைப் பெற்றனர் என்பதில் சந்தேகம் இல்லை.

இவை எதற்கும் நேரடிச் சான்று இல்லை என்றாலும், “வட ஆபிரிக்கா அமெரிக்காவிற்கு ஒரு நேரடி அச்சுறுத்தலைக் கொடுக்கிறது; வாஷிங்டன் அவர்களுக்கு எதிரான தவிர்க்கமுடியாத நடவடிக்கையை தொடங்க வேண்டும்.” “ஏதும் அவர்கள் செய்யவில்லை என்பதால் இனி அவர்கள் செய்ய மாட்டார்கள் என்று கூறுவதற்கில்லை” என்று அவர் கூறினார்.