WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் : கலை
விமர்சனம்
Dangerous Remedy:
பெட்ரம் வெய்னரும் கருக்கலைப்பு உரிமைக்கான போராட்டமும்.
By Richard Phillips
3 December 2012
கிறிஸ்
வைல்ட்
திரைக்கதை
எழுத்தாக்கத்தில்
கென்
கேமரூன்
இயக்கியது
1960களின்
பிற்பகுதியில்
போலீசார்
கட்டுப்பாட்டுடனான
கருக்கலைப்பு
பாதுகாப்பு
முறைகேடுகளை
வெளிப்படுத்துவதற்கும்
ஆஸ்திரேலியாவில்
கருக்கலைப்புக்கான
சட்டபூர்வமான
உரிமையை
அங்கீகரிப்பதற்கும்
மருத்துவர்
பெட்ரம்
வெய்னரால்
முன்னெடுக்கப்பட்ட
பிரச்சாரம்
குறித்த
ஒரு
சுவாரஸ்யமான
சித்தரிப்பே
Dangerous Remedy.
எவ்வாறாயினும்,
அரசு-நிதியளிக்கும்
ஆஸ்திரேலிய
ஒளிபரப்பு
நிறுவன
வலைத்
தளம்,
104 நிமிடமுள்ள
இந்த
தொலைக்காட்சிப்
படத்தை
குற்றவியல்
மற்றும்
திகில்
நிறைந்த
படமாக
விளம்பரப்படுத்தி,
நவம்பர்
4 ஞாயிறு
அன்று
பிரதான
இரவு
நேரத்தில்
ஒளிபரப்பியது.
அந்த
திரைப்படத்தின்
முன்னோட்டக்
காட்சிகளில்
“கருக்கலைப்பு”
என்ற
வார்த்தை
பயன்படுத்தப்படவில்லை
ஆதலால்,
பெரும்பாலான
மக்கள்
ஆஸ்திரேலிய
போலீஸார்
பற்றிய
ஒரு
சாதாரண
திரைப்படமாகவே
அதனை
நினைத்திருக்கக்கூடும
என்றுதான்
அர்த்தப்படும்.
கருக்கலைப்புக்கு
சட்டங்களுக்கு
எதிரான
வெய்னரின்
போராட்டம்,
அவரை
போலீசார்
மற்றும்
மாநில
தாராளவாத
அரசாங்கத்துடனான
நேரடி
மோதலுக்கு
கொண்டுவந்தது.
விக்டோரியா
மாநிலத்தில்,
மருத்துவர்கள்
கருக்கலைப்பு
செய்ததற்காக
15 ஆண்டு
சிறைத்தண்டனை
அனுபவித்திருக்கிறார்கள்.
அந்த
மருத்துவரும்
அவரது
நெருங்கிய
ஆதரவாளர்களும்
தொடர்ச்சியான
வன்முறை
மற்றும்
அச்சுறுத்தலுக்கு
உட்பட்டார்கள்.
இதில்
வெய்னருக்கெதிராக
படுகொலை
முயற்சி,
அவரது
சகோதரியின்
வீட்டில்
குண்டு
வெடிப்பு,
மற்றும்
வெய்னருடன்
பணியாற்றிய
இளம்
பத்திரிகையாளரான
லயோனல்
பௌவை
சுட்டுக்
கொன்றது
போன்றவை
உள்ளடங்கும்.
பௌ
தற்கொலை
செய்துகொண்டதாக
காவல்துறை
கூறியது,
ஆனால்
அவர்
இறந்தபோது,
கருக்கலைப்பு
முறைகேடுகள்
குறித்து
அவர்
தன்
வீட்டில்
சேகரித்து
வைத்திருந்தவை
காணாமல்
போயிருந்ததாக
ஆதாரங்கள்
உள்ளன.
Dangerous Remedy,
வெய்னர்
1972ல்
எழுதிய
புத்தகமான
It Isn’t Nice (அது
நல்லதல்ல)
ஐ
சிறிது
அடிப்படையாகக்
கொண்டது,
ஒரு
வீட்டின்
கொல்லைப்புறத்தில்
உழைக்கும்
வர்க்க
பெண்ணொருத்திக்கு
கருக்கலைப்பு
செய்யப்பட்டு
அது
பயங்கர
விபரீதமாகிவிடுவது
என்று
அதன்
கதை
ஆரம்பிக்கிறது.
அப்பெண்ணின்
பெற்றோர்
தொடர்பு
கொள்ளப்பட்டதன்
பேரில்,
வெய்னர்
(ஜெரிமி
சிம்ஸ்)
அந்த
இளம்
பெண்ணைக்
காப்பாற்ற
முயற்சிக்கிறார்,
ஆனால்
துயரகரமாக
அவள்
இறந்துவிடுகிறாள்.
(1967க்கும்
1971க்கும்
இடையில்
ஆஸ்திரேலியாவில்,
பெரும்பான்மையான
உழைக்கும்
வர்க்கப்
பெண்கள்
இருக்கிற,
மிகுந்த
ஜனநெருக்கடியுள்ள
மாநிலங்களான,
நியூ
சவுத்
வேல்ஸ்
மற்றும்
விக்டோரியாவில்,
சட்டத்துக்கு
புறம்பான
கருக்கலைப்புகளே
பெண்கள்
இறப்புக்கான
ஒரே
முக்கிய
காரணம்.)
இந்த
ஆரம்பக்
காட்சிகள்,
விக்டோரியா
காவல்துறையின்
ஆட்கொலை
தடுப்புக்
குழுத்தலைவரான
ஜேக்
ஃபோர்டுக்கும்
(வில்லியம்
மெக்னெஸ்)
நீண்ட
அனுபவம்
வாய்ந்த
கருக்கலைப்பு
நிபுணரும்
பெண்கள்
மகப்பேறு
மருத்துவருமான
ட்ரூப்பின்
(நிகோலஸ்
பெல்),
வரவேற்பாளரான
பெக்கி
பெர்மனுக்கும்
(சுசீ
போர்டர்)
இடையிலான
உறவினை
சித்தரிக்கும்
இடைச்செருகல்
காட்சிகளாக
இருக்கின்றன.
பெர்மன்
போலீசாருக்கும்
மருத்துவருக்குமிடையில்
செயல்படுகிறார்.
Dangerous Remedy
இல்
சுசீ
போர்ட்டரும்
ஜெரிமி
சிம்ஸும்
1928ல்
கிளாஸ்கோவில்
வறுமை
தாக்கிய
கோர்பல்ஸ்
மாநிலத்தில்
பெருமந்த
காலகட்டத்தில்
பிறந்து
வளர்ந்த
வெய்னர்,
பாதுகாப்பான
கருக்கலைப்புகள்
பணக்காரர்களுக்கு
மட்டுமே
கிடைக்கக்கூடியதாக
இருக்கின்றன
என்ற
உண்மையைக்
கண்டு
கோபமடைந்தார்.
1968ல்,
ட்ரூப்பின்
அறுவை
சிகிச்சை
ஆவணங்களைக்
கைப்பற்றி,
நோயாளி-மருத்துவர்
இரகசியத்தை
மீறி
புலனாய்வு
செய்த
போலீசார்
மீது
இவர்
எரிச்சலடைந்தார்.
பின்,
ட்ரூப்
பெர்மன்
இருவரும்
கைது
செய்யப்பட்டனர்.
பத்திரிகையாளர்
பௌவின்
(மார்க்
லியோனர்ட்)
மற்றும்
அவரது
பல்கலைக்கழக
மாணவர்
பெண்தோழி
ஜோ
ரிச்சர்ட்சன்
(மேவி
டெர்மடி)
ஆகியோரது
ஒத்துழைப்பை
வெய்னர்
பட்டியலிடுகிறார்
மேலும்
கருக்கலைப்புக்கான
உரிமைகள்
குறித்த
ஆலோசனைகளுக்கு
பெண்கள்
தன்னைத்
தொடர்பு
கொள்ளலாம்
என்று
ஒரு
செய்த்தித்தாள்
விளம்பரமும்
கொடுத்தார்.
பின்பு
அவர்
அங்கீகாரமற்ற
கருக்கலைப்பாளர்களுக்கு
போலீசார்
பாதுகாப்பு
தருவதை
வெளிப்படையாக
குற்றம்
சாட்டினார்.
1969
மே
மாதத்தில்,
மருத்துவர்
சார்லஸ்
டேவிட்சன்
(மார்க்
ரேஃபர்டி)
ஒரு
கருக்கலைப்பிற்கு
“சட்டத்துக்கு
புறம்பாக
ஒரு
கருவியை
பயன்படுத்தியதற்காக”
குற்றம்
சாட்டப்படுகிறார்.
விக்டோரியன்
உச்சநீதிமன்ற
நீதிபதி
க்ளிஃபோர்ட்
மெனெனிட்
வழக்கு
தொடரப்பட
வேண்டும்
என்றும்
ஆனால்,
“பெண்ணின்
உடல்
அல்லது
மன
நலத்தைப்
பாதுகாப்பதற்கு
தேவையானபட்சத்தில்”
கருக்கலைப்பு
சட்டபூர்வமானதாக
இருக்க
முடியும்”
என்றும்
அறிவிக்கிறார்.
ஆஸ்திரேலியாவில்
சட்டபூர்வமானது
எனக்குறித்த
முதல்
கருக்கலைப்பு
தீர்ப்பு
இதுவே.
டேவிட்சன்
குற்றமற்றவர்
என்று
அறிவிப்பாகிறது.
மெனெனிட்டின்
தீர்ப்பு
எப்படியாயினும்,
தனிப்பட்ட
மருத்துவர்களை
கூர்ந்து
கவனிக்கையில்,
“சட்டப்படியான”
கருக்கலைப்புக்கான
ஆதாரங்களின்
சிக்கலுடன்
விக்டோரியாவின்
சட்டங்கள்
மாறாமல்
இருக்கிறது.
ஏற்கெனவே
ஒன்பது
குழந்தைகள்
பெற்றிருக்கும்
இத்தாலியக்
குடியேறியான
ஒரு
ஏழை
தாய்
உள்ளிட்ட
மூன்று
பெண்களுக்கு
கருக்கலைப்பிற்கு
ஏற்பாடு
செய்ய
வெய்னர்
முடிவெடுப்பதுடன்
முடிந்தால்
குற்றம்சாட்டட்டும்
என்று
மாநிலத்திடம்
சவால்
விடுகிறார்.
அவர்
மீது
குற்றம்சாட்டப்படவில்லை,
அப்போது
ஃபோர்ட்
மற்றும்
ஆட்கொலை
தடுப்பு
போலீஸ்
குழுவுடன்
கருத்து
வேறுபாடு
கொண்டிருந்த
பெக்கி
பெர்மானின்
ஆதரவைப்
பெறுகிறார்.
பெர்மானும்
கருக்கலைப்பு
பாதுகாப்பு
முறைகேடுகளை
பற்றி
சாட்சியமளிக்கிறாள்.
காவல்துறையின்
ஊழல்
பற்றிய
உத்தியோகபூர்வ
புலனாய்வை
நிறுத்தி
வைப்பதற்கு
மாநில
அரசாங்கம்
நிர்பந்திக்கப்பட்டுள்ளது
என்கிற
வானொலி
செய்தி
ஒலிபரப்போடு
Dangerous Remedy திரைப்படம்
முடிவடைகிறது.
ஃபோர்ட்
உள்ளிட்ட
மூன்று
மூத்த
காவல்துறை
அதிகாரிகள்,
குற்றம்
சுமத்தப்பட்டு
சிறையிலடைக்கப்படுவதாக
இறுதி
தலைப்புகளில்
அறிகிறோம்.
வெய்னர்
பேசுகின்ற
சில
சுருக்கமான
உண்மைக்
காட்சிகள்
இணைக்கப்பட்டுள்ளது.
வெய்னருக்கு
துணிச்சல்
இருந்தது
என்றாலும்,
1972ல்
மெல்போர்னில்
அவரது
Fertility Control Clinic
அமைப்பு,
வெளிப்படையான
கட்டணமின்றி
பொதுமக்களுக்கு
கருக்கலைப்பு
செய்துகொள்ள
வகை
செய்தபோதும்,
தொழிற்கட்சி
மற்றும்
தாராளவாத
மாநில
அரசாங்கம்
சட்டத்
திருத்தத்தை
மறுத்தது.
1987ல்
வெய்னர்
இறந்து
20 ஆண்டுகளுக்கு
மேலாகியும்,
2008 வரை
விக்டோரியாவில்
கருக்கலைப்பு
சட்டமாக்கப்படவில்லை.
Dangerous Remedy
இல்
சிக்கல்கள்
இல்லாமல்
இல்லை,
ஆனால்
இது
மொத்தத்தில்
வெய்னரின்
முயற்சிகளின்
முக்கியத்துவத்தை
விளக்குவதற்கான
ஒரு
பயனுள்ள
முயற்சி.
இது
இன்றைய
இளைஞர்கள்
பெரும்பாலானோருக்கு
தெரியாமலே
இருக்கிறது.
வெய்னரின்
உறுதியான
தீர்மானம்,
உழைக்கும்
வர்க்கம்
பற்றிய
நேர்மையான
அக்கறை
மற்றும்
அதிகாரத்திலிருப்பவர்கள்
மீதான
நியாயமான
அலட்சியம்
ஆகியவற்றை
ஜெரிமி
சிம்ஸ்
(Idiot Box, Underbelly)
திறம்பட
வெளிப்படுத்துகிறார்.
“உண்மையில்
சில
நேரங்களில்
வெய்னர்
வலுவான,
சுவாரஸ்யமான,
இரகசியமான
மற்றும்
சிக்கலான
விரும்பத்தகாத
குணாதிசயமுள்ளவராக
இருந்தார்”
என்று
Sydney Morning Herald
இற்கு
வழங்கிய
நேர்காணல்
ஒன்றில்
சிம்ஸ்
கூறினார்.
குறிப்பிட்ட
அந்த
மருத்துவர்
மற்றும்
அவரது
வாழ்வின்
சிக்கல்களை
அவர்
தெளிவாக
புரிந்துகொள்கிறார்.
ஃபோர்டாக
வில்லியம்
மெக்லெனஸும்
முக்கிய
போலீஸ்
அதிகாரிகள்
கதாப்பாத்திரங்களும்
அந்த
அளவுக்கு
ஏற்றுக்கொள்ளும்படி
இல்லை.
அவர்கள்
இந்த
குற்றவியல்
நாடக
வகையில்
சிக்குண்டவர்களைப்
போல
இருக்கிறார்கள்.
பெக்கி
பெர்மானைப்
போன்று
சுசீ
போர்ட்டரும்
நன்றாக
நடித்துள்ளார்,
ஆனால்
அவருக்கான
பாத்திரம்
குறைவானதே.
போலீசாரின்
கூட்டாக
இருந்த
பெர்மான்,
வெய்னரின்
அரசியல்
பிரச்சாரங்களில்
கலந்து
கொள்கிற
மாற்றம்
எதிர்பாராததாகவும்
விளக்கப்படாமலும்
இருக்கிறது.
சிக்கலான
உழைக்கும்
வர்க்கப்
பின்னணியில்
ஓர்
ஆதரவற்ற
தாயாக,
தன்
வாழ்க்கையை
கத்தோலிக்க
குழந்தைகள்
காப்பகம்
ஒன்றில்
ஆரம்பித்த
அவளது
ஆரம்பகால
வாழ்க்கை
பற்றி
எதுவும்
காட்டப்படவில்லை.
இதன்
தயாரிப்பாளரான
நெட்
லேண்டர்,
“முதலில்
இதனை
ஒரு
திகில்
படமாக
ரசிகர்கள்
மத்தியில்
உணர
வைத்து...
அதன்
பிறகு
சமுதாய
சூழல்கள்
பற்றிய
ஒரு
பெரும்
கதையாக
விரிவுபடுத்தலாம்
என்ற
அடிப்படையுடன்...
இதை
ஒரு
திகில்,
ஒரு
குற்றவியல்
பற்றிய
கதையாக
எடுக்க
முடிவெடுத்தோம்...
” என்கிறார்.
துரதிர்ஷ்டவசமாக,
“சமுதாய
நிலை
பற்றிய
பெரும்
கதை”
முழுவதுமாக
நடைமுறைப்படுத்தப்படவில்லை.
தீவிர
கதாப்பாத்திரங்கள்
மற்றும்
வர்ணனை
மேம்பாடுகளின்
பாதிப்புடன்,
இத்திரைப்படம்
குற்றவியல்
திகில்
பாங்கினுள்
சிக்கிவிட்டது
பெர்மானுடனான
ஒரு
விவாதத்தில்,
கிளாஸ்கோவில்
தனது
குழந்தைப்பருவம்
குறித்து
சிலவற்றை
வெய்னர்
விவரிக்கிறார்.
ஆனால்
வெய்னரை
உருவாக்கிய
காரணிகள்
பற்றி
- இந்த
அளவுக்கு
சமுதாய
நீதிகளுக்கான
ஒரு
போராளியாக
இருந்த
அவரை
உருவாக்கியது
எது
என்பவை
பற்றி
வெய்னர்
மிகவும்
குறைவாகவே
சொல்லியிருக்கிறார்.
தனது
21வது
வயதில்
வெய்னர்
ஆஸ்திரேலியாவில்
குடியேறியதும்,
தனது
கல்வியை
மீண்டும்
தொடர்ந்து,
மருத்துவம்
படிப்பதற்கான
உதவித்தொகை
பெறுவதற்கு
முன்பாக
பல்வேறு
பணிகளைச்
செய்து
வந்தார்.
ஒரு
உள்ளகப்படிப்பை
முடித்தபின்,
பிரின்ஸ்பேனில்
உள்ள
ஆஸ்திரேலியாவின்
மிகப்பெரும்
இராணுவ
மருத்துவமனையில்
பொறுப்பெடுத்துக்
கொள்வதற்கு
முன்பாக,
ஆஸ்திரேலிய
இராணுவத்தில்
சேர்ந்து,
பப்புவா
நியூ
கினியாவில்
இரண்டு
வருடங்கள்
பணியாற்றினார்.
அங்கு
வியட்நாமிலிருந்து
வரும்
காயம்பட்ட
ஆஸ்திரேலிய
இராணுவத்தினருக்கு
அவர்
சிகிச்சையளித்தார்.
1966ல்
வியட்னாம்
போருக்கு
எதிர்ப்பை
தெரிவித்து
இராணுவத்திலிருந்து
வெளியேறி,
மெல்போர்னில்
ஒரு
தனியார்
மருத்துவமனையை
நிறுவினார்.
“அமெரிக்க-ஆஸ்திரேலிய
கூட்டுறவு
மற்றும்
மாபெரும்
கூட்டுஸ்தாபனங்களின்
ஏகபோகங்களின்
பாதுகாப்பு
ஆகிய
பலிபீடத்தில்
முட்டாள்தனமான,
பயனற்ற,
தேவையற்ற
ஒரு
தியாகமே
இப்
போர்”
என்று
தனது
புத்தகம்
ஒன்றில்
வெய்னர்
எழுதினார்.
Dangerous Remedy
இல்
வியட்னாம்
போருக்கான
பரந்த
எதிர்ப்பு
உணர்ச்சியை
காட்டுவதற்காக
ஆவணப்படக்
காட்சிகள்
பயன்படுத்தப்பட்டுள்ளன,
ஆனால்
அந்த
நேரத்தில்
வெய்னர்
மற்றும்
தீவிரமயமாக்கவடைய
வைத்த
ஒரு
விஷயத்தின்
ஒரு
சிறு
கண்ணோட்டம்
மட்டுமே
அது.
1960, 1970களில்
முக்கிய
ஜனநாயக
கோரிக்கைகளுக்கான
தொடர்
போராட்டங்களின்
ஒரு
பகுதியே
ஆஸ்திரேலியாவில்
கருக்கலைப்பு
உரிமைப்
போராட்டம்.
தனிப்பெற்றோர்களுக்கான
சமுதாயப்
பாதுகாப்பு
ஆதாயங்கள்,
“குற்றமில்லாத”
விவாகரத்து
சட்டத்திருத்தங்கள்,
பொது
சுகாதார
காப்பீடு
மற்றும்
பரந்தளவிலான
பல்கலைக்கழகக்
கல்வி
பெறுவது
போன்றவற்றுக்கான
விரிவாக்கங்களும்
அதில்
அடங்கியது.
வர்க்கத்தை
சமுதாயத்தில்
ஒரு
முதன்மையான
பிரிக்கும்
கோடாக
அங்கீகரிப்பதுடன்
கருக்கலைப்புக்கான
உரிமைப்
போராட்டத்தை
ஒரு
வர்க்கக்
கேள்வியாகவும்
வெய்னர்
கருதுகிறார்.
“எந்த
சமுதாயத்திலும்
கருக்கலைப்பின்
துயரம்....
உங்களிடம்
பணமும்
செல்வாக்கும்
இருந்தால்,
மருத்துவரீதியில்
பாதுகாப்பான
கருக்கலைப்புக்கு
ஏற்பாடு
செய்வதென்பது
கடினமான
ஒன்றல்ல,
ஆனால்
நீங்கள்
ஒரு
ஏழையாக
இருக்கும்போதும்,
குடும்பத்தின்
பிற
நபர்களின்
நலனுக்காக
கருக்கலைப்பு
உங்களுக்கு
தேவைப்படுகிறது
எனும்பட்சத்திலும்
சட்டத்தின்
முழு
பலமும்
தகுதியற்ற
அல்லது
சுயமாக-தூண்டப்பட்ட
கருக்கலைப்பு
போன்ற
அவமானம்
மற்றும்
அபாயங்கள்
உங்களை
நோக்கி
இட்டுச்
செல்லும்”
என்று
அவர்
தனது
It Isn’t Nice
இல்
எழுதுகிறார்.
ஒரு
குற்றவியல்
கதையாக
உருவாக்கப்பட்ட
Dangerous Remedy, வெய்னரின்
அரசியல்
மற்றும்
வெளிப்பார்வையை
சித்தரிக்கிறது,
ஆனால்
அக்காலகட்டத்தின்
பரந்த
அரசியல்
விடயங்களை
ஆராயவில்லை.
|