World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா India: Union calls off Chennai air cargo strikeஇந்தியா: சென்னை விமான சரக்கு வேலைநிறுத்தத்தை சங்கம் நிறுத்துகிறது
By Sasi Kumar and Moses Rajkumar தென்னிந்தியாவில் உள்ள சென்னை விமானநிலையத்தில் 1,500 க்கும் மேற்பட்ட ஒப்பந்த விமான சரக்கு (Air cargo) தொழிலாளர்களின் ஒரு வார கால வேலைநிறுத்த போராட்டத்தை இந்திய கம்யூனிஸ்ட் கட்சியுடன் (CPI) இணைக்கப்பட்ட அகில இந்திய தொழிற்சங்க காங்கிரஸ் (AITUC) காட்டிக் கொடுத்தை அடுத்து அங்கே தொழிலாளர்கள் மத்தியில் பரந்தளவில் கோபம் ஏற்பட்டுள்ளது. விமான நிலைய தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை நிரந்தரப்படுத்தல், அதிக சம்பளம், போனஸ், மருத்துவ மற்றும் கேன்டீன் வசதிகள், மற்றும் வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்து படிகளை கோரி, ஜனவரி 9 ம் தேதியிலிருந்து வேலைநிறுத்தம் தொடங்கினர். AITUC-உடன் இணைக்கப்பட்ட ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா பத்ரா எம்ப்ளாய்யீஸ் யூனியன் (AAIBEU) கடுமையான மற்றும் பாதுகாப்பற்ற வேலை நிலைமைகள் மீது தொழிலாளர்கள் மத்தியில் வளர்ந்து வரும் எதிர்ப்பை கட்டுப்படுத்த வேலை நிறுத்தத்திற்கு அழைப்பு விடுக்க நிர்ப்பந்திக்கப்பட்டது. அரசாங்க கட்டுப்பாட்டிலுள்ள ஏர்போர்ட் அத்தாரிட்டி ஆப் இந்தியா (AAI) சென்னை விமான நிலையத்தில் சரக்கு கையாளும் ஒப்பந்தத்தை 2010 இல் பத்ரா சர்வதேச இந்திய லிமிடெட்க்கு (BIIL) வழங்கியது. ஜனவரி 15 அன்று புது தில்லி தொழிலாளர் ஆணையத்தில் AAI மற்றும் BIIL அதிகாரிகளின் பேச்சுவார்த்தையை தொடர்ந்து, தொழிலாளர்களின் முக்கிய கோரிக்கைகள் எதையுமே நிறைவேற்றாத நிலையில் அவர்களை வேலைக்கு திரும்பும்படி AITUC தலைவர்கள் உத்தரவிட்டனர். AITUC பொது செயலாளர் குருதாஸ் தாஸ்குப்தா தனிப்பட்ட முறையில் இந்த பேச்சுவார்த்தைகளில் பங்கெடுத்தார். உலக சோசலிச வலைத் தள நிருபர்கள் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கையில் AITUC தலைவர் H. மகாதேவன், மாத ஊதிய உயர்வாக ரூ 200 ரூபா ($ 3.60) ஒப்புக்கொள்ளப்பட்டதாக கூறினார், ஆனால் நிறுவனம் எந்த எழுதப்பட்ட ஒப்பந்தத்திலும் கையெழுத்திடவில்லை என்று கூறினார். அதற்குப் பதிலாக, வேலை நிறுத்தம் செய்த தொழிலாளர்கள் பழிவாங்கப்படமாட்டார்கள் என்றும் மற்றும் வேலை நிறுத்த காலத்திற்கு சம்பளம் கழிக்கப்பட மாட்டாது என்றும் "உத்தரவாதம்" வழங்கப்பட்டது. ஒரு கேன்டீன் வசதிக்கு ‘’வாக்குறுதி’’ அளிக்கப்பட்டது, மற்றும் தொழிலாளர்களுக்கு சட்டபூர்வமான உரிமையாக இருந்தால் நிர்வாகம் போனஸ் பிரச்சினையை "மறுபரிசீலனை" செய்யும். மேலும் போனஸ் பிரச்சினை தொடர்பான பேச்சுவார்த்தைகள் ஜனவரி 23 ம் தேதி நடைபெற உள்ளது. நிர்வாகத்தினால் ஒப்புக் கொள்ளப்பட்டது என்று கூறப்படும் எதுவுமே தொழிலாளர்களின் கோரிக்கைகளுக்கு அருகில் இல்லை, அது Handymen க்கு 4,000 ரூபா சம்பள உயர்வு மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு 7,000 ரூபாய் உயர்வையும் உள்ளடக்கும். வேலைகளை நிரந்தரப்படுத்தல், மருத்துவ மற்றும் வீட்டு வாடகை மற்றும் போக்குவரத்து படிகள் பற்றிய கோரிக்கைகளை AITUC தலைவர்கள் முற்றிலும் கைவிட்டனர். நிறுவனம் தனது "உத்தரவாதம்" மற்றும் "வாக்குறுதிகளை" நிறைவேற்றும் என்பதற்கு எந்த உத்தரவாதமும் கிடையாது. ஒரு விமான சரக்கு தொழிலாளி WSWS இடம் கூறினார்: "நாங்கள் அற்பமான 200 ரூபாய் ஊதிய உயர்வைத் தான் பெற்றோம். நாம் குறைந்தபட்சமாக Handymen க்கு 10,000 ரூபாய் மற்றும் மேற்பார்வையாளர்களுக்கு 15,000 ரூபாய் கோரினோம். தற்போது நமக்கு முறையே கிட்டத்தட்ட 6,000 ரூபாய் மற்றும் 8,000 ரூபாய் வழங்கப்படுகிறது." மற்றொரு தொழிலாளி கூறியதாவது: ‘’வேலைக்கு திரும்புவதில் தொழிலாளர்கள் மகிழ்ச்சியாக இல்லை, ஏனெனில் எங்கள் பிரதான கோரிக்கைகளை நாங்கள் வென்றது இல்லை, எதிர்கால பேச்சுவார்த்தைகளில் எங்கள் கோரிக்கைகள் நிறைவேற்றப்படாவிட்டால் நாங்கள் மீண்டும் வேலைநிறுத்தம் செய்வோம்." வேலை நிறுத்தம் காரணமாக சரக்கு கையாளல் அனேகமாக முழுமையாக ஸ்தம்பித்தது, தொலைத் தொடர்பு மற்றும் வாகன உற்பத்தியாளர்கள் உட்பட அந்த பகுதியில் பெரும் நிறுவனங்கள் பாதிக்கப்பட்டன, அது பெரும் இழப்புகளுக்கு வழிவகுத்தது. தினசரி சென்னை விமான சரக்ககம் 50 விமானங்களை கையாளுகிறது. வேலைநிறுத்தத்தை முறியடிக்கும் முயற்சியில் விமான நிலைய அதிகாரிகள் போலீஸ் உதவியை நாடினர், வேலைநிறுத்தகாரர்களுக்கு பதிலாக "சிறப்பு அனுமதி" நிலையின் கீழ் புதிய பணியாளர்களையும் கொண்டு வர முயன்றனர். "பாதுகாப்பு காரணங்களுக்காக" சரக்கு கையாளர்கள் போலீஸ் அனுமதி பெற வேண்டியது அவசியம் என்ற விதிமுறைகளை அதிகாரிகள் கைவிட தயாராக இருந்தனர் என்று தொழிற்சங்கம் கூறியது. அத்தியாவசிய சேவைகள் பராமரிப்பு சட்டத்தை பயன்படுத்தி வேலைநிறுத்தத்தை தடை செய்யமுடியும் என்றும் கூட விமான நிலைய அதிகாரிகள் எச்சரித்தனர். வேலைநிறுத்ததை நிறுத்துவதற்காக இடைக்கால தடை வாங்க AAI நீதிமன்றத்திற்கு சென்றது. வழக்கு விசாரணை ஜனவரி 17க்கு தேதியிடப்பட்டது. அந்த வழக்கிற்கு இரண்டு நாட்களுக்கு முன், எப்படியாவது வேலைநிறுத்தத்தை ஒரு முடிவுக்கு கொண்டுவர AAI மற்றும் BIIL, AITUC தலைவர்கள் மீது சார்ந்திருந்தன. பல மாதங்களாக விமான நிலைய தொழிலாளர்கள் மத்தியில் அதிருப்தி பெருகிவந்தது. தொழிலாளர்கள் தங்களது வேலை நிலை குறித்து சட்டரீதியான விஷயங்களை எழுப்பவதை தடுக்க BIIL தொடர்ந்து தொழிலாளர்களை வேலை நீக்கம் செய்து வந்தது என்று ஒரு தொழிலாளி விளக்கினார்;‘’ஒரு ஆறு மாதங்களுக்கு தினக்கூலிகளாக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்தி விட்டு பின்னர் மற்றொரு ஆறு மாதங்களுக்கு அவர்களை வேலையிலிருந்து நீக்குவது என்ற ஒரு முறையை நிறுவனம் வைத்திருந்தது.’’ அவர் மேலும் கூறினார்: "இப்போது கூட, அதே பத்ரா சர்வதேச நிறுவனத்தில் மூன்று ஆண்டுகளாக வேலை பார்த்தாலும் கூட நாம் இன்னும் நிரந்தரப்படுத்தப்படவில்லை." ஒரு வேலை தொடர்பான விபத்தில் ஒரு தொழிலாளி காயமடைந்தால் கூட அவரை மருத்துவமனைக்கு எடுத்துச்செல்ல அவருக்கு போக்குவரத்து மறுக்கப்பட்டுள்ளது என்று தொழிலாளர்கள் புகார் கூறினார்கள். அவர்கள் ஒரு சக தொழிலாளியின் மோட்டார் சைக்கிளை பயன்படுத்த தள்ளப்பட்டனர். ஒப்பந்த தொழிலாளர்களுக்கு ஒரு தொழிற்சங்கம் அமைக்க முயன்ற மாணிக்கம் என்ற ஒரு தொழிலாளி, ஏழு மாதங்களுக்கு முன்பு பணி நீக்கம் செய்யப்பட்டார். அவரை மீண்டும் வேலையில் அமர்த்தும்படி தொழிலாளர் கமிஷனர் விடுத்த அறிவுறுத்தலை நிறுவனம் நிராகரித்தது, அரசாங்கமோ அல்லது தொழிற்சங்கமோ அவரை மீண்டும் வேலையில் அமர்த்த அழுத்தம் கொடுக்காது என்று நிறுவனத்திற்கு நன்கு தெரியும். இது பற்றி AITUC தமிழ்நாடு மாநில செயலாளர் ரவியை உலக சோசலிச வலைத் தளம், எதிர்கொண்டபோது, அவர் மாணிக்கத்தை மீண்டும் வேலையில் வைப்பது பற்றி ஜனவரி 15 பேச்சுக்களின் போது எழுப்பப்பட கூட இல்லை என்று ஒப்புக் கொண்டார். மற்றொரு விஷயத்தில், சதீஷ் குமார் கடந்த மார்ச் மாதம் ஒரு வேலை விபத்தில் தீவிர காயங்களால் பாதிக்கப்பட்டார். அவர் ஒரு அரசு மருத்துவமனையில் 45 நாட்களுக்கு மேல் சிகிச்சை பெற வேண்டியிருந்தது. அவர் மருத்துவ விடுப்பு அலவன்ஸ் கோரியபோது அது மறுக்கப்பட்டது. ஏனெனில் நிறுவனம் மருத்துவ அலவன்சிற்கான தனது பங்களிப்பை செலுத்தவில்லை. ஒரு துண்டு பிரசுரத்தில், AITUC வாய் வீச்சுடன் கேட்டதாவது: “சட்டபூர்வமான கோரிக்கைகளை மத்திய அரசின் நிறுவனமான ஏர்போர்ட் அத்தாரிட்டியும் அதனுடைய ஏஜெண்டான பத்ரா நிர்வாகமும் என்ன தைரியத்தில் நிராகரிக்கின்றன?’’ எவ்வாறாயினும் ஜனவரி 15 பேச்சுக்களின் போது இந்த உரிமைகள் மறுக்கப்படுவதற்கு AITUC தலைவர்கள் ஒப்பு கொண்டனர். AITUC இன் காட்டிக்கொடுப்புகளுக்கு ஒரு நீண்ட வரலாறு உண்டு. கடந்த ஜூன் இந்த தொழிற்சங்க கூட்டமைப்பு தென் இந்தியாவில் மத்திய அரசாங்கத்திற்கு சொந்தமான நெய்வேலி லிக்னைட் கார்ப்பரேஷனில் (என்எல்சி) உள்ள 13,000 ஒப்பந்த தொழிலாளர்களின் 44 நாள் வேலை நிறுத்தத்தை கைவிட்டது. தொழிலாளர்கள் தங்கள் வேலைகளை நிரந்தரப்படுத்தல் மற்றும் சம்பள உயர்வு கோரினார்கள், ஆனால் அந்த கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமலேயே அவர்கள் வேலைக்கு திரும்ப அனுப்பப்பட்டனர். கடந்த ஆண்டு வட இந்திய மாநிலமான ஹரியானாவில் மானேசரில் உள்ள மாருதி சுசூகி கார் ஆலையில் நிரந்தர மற்றும் ஒப்பந்த தொழிலாளர்கள் வேலை நிறுத்தங்கள், உள்ளிருப்புகள் மற்றும் கதவடைப்புகளில் பல மாதங்களாக ஈடுபட்டனர். AITUC மற்றும் பிற தொழிற்சங்க கூட்டமைப்புகள் இணைந்து முறையாக இந்த தொழிலாளர்களை தனிமைப்படுத்தினர், மற்றும் கம்பனியுடன் இணைந்து செயல்படும் காங்கிரஸ் அரசாங்கத்தின் ஆதரவை பெற அதன் பக்கம் திரும்பும்படி வலியுறுத்தினர், AITUC இன் பாத்திரம் ஸ்ராலினிச சிபிஐ, அரசியலில் இருந்து எழுகிறது, அது மற்ற முக்கிய ஸ்ராலினிச பாராளுமன்ற கட்சியான, இந்தியா கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்), அல்லது சிபிஎம் உடன் இணைந்து, முதலாளித்துவ ஆட்சியின் பிரதானமான முட்டாக பல ஆண்டுகளாக செயல்பட்டு வந்தன. இந்து மத மேலாதிக்க பாரதிய ஜனதா கட்சியை (BJP) ஆட்சியிலிருந்து விலக்கி வைப்பது என்ற பெயரில் சிறுபான்மை காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு (UPA) 2004 முதல் 2008 வரை ஆதரவு அளித்தன, அதே சமயம் பாரதிய ஜனதா கட்சியை போன்ற சந்தை சார்பு வேலைத்திட்டத்தை ஐக்கிய முற்போக்கு கூட்டணியும் முன்னெடுப்பதாக ஒப்புக் கொண்டன. அவர்கள் ஆட்சி நடத்திய இடங்களில் - மேற்கு வங்காளம் மற்றும் கேரளாவில்- சிபிஎம் மற்றும் சிபிஐ முதலீட்டாளர் சார்பு கொள்கைகளை தீவிரமாக அமுல்படுத்தியது, மற்றும் அதன் விளைவாக உழைக்கும் மக்கள் மற்றும் கிராமப்புற உழைக்கும் மக்களின் எதிர்ப்பின் காரணமாக ஆட்சியை இழந்தது. இப்போது சிபிஐ மற்றும் சிபிஎம் தொழிற்சங்க தலைவர்கள் தற்போதைய ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கத்தின் திறந்த சந்தை பொருளாதார "சீர்திருத்தங்களை" எதிர்ப்பதாக கூறி பா.ஜ.க மற்றும் காங்கிரஸ் தொழிற்சங்கங்களுடன் கைகோர்த்துள்ளன. இவ்வாறாக அவர்கள், வலதுசாரி மற்றும் வகுப்புவாத பா.ஜ.க. உள்ளிட்ட இந்திய ஆளும் உயரடுக்கின் இந்த இரண்டு பிரதான கட்சிகளுக்கு நற்சான்றிதழ் வழங்கும் அதேசமயம் தொழிலாளர்கள் தாம் எதிர் கொள்ளும் மோசமான நிலைமைகளை எதிர்த்து போராடுவதை அடக்குகிறது. |
|