World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா  : மாலி

Imperialist powers escalate war in Mali

ஏகாதிபத்திய சக்திகள் மாலியில் போரை விரிவாக்குகின்றன

By Ernst Wolff
22 January 2013
Back to screen version

மாலியில் பிரெஞ்சுத் துருப்புக்களின் தொடர்ந்த தாக்குதல்களின் மத்தியில், ஏகாதிபத்திய சக்திகள் மாலியின் மீதான தாக்குதல், மேற்கு ஆபிரிக்கா மற்றும் அதற்கு அப்பாலும் நீடித்த, நவ-காலனித்துவ வகை இராணுவத் தலையீட்டின் ஒரு பாகம் என்பதை தெளிவுபடுத்தியுள்ளன.

“இது ஒரு உலகளாவிய அச்சுறுத்தல், இதற்கு உலகளாவிய விடையிறுப்பு தேவை.... இது வெறும் மாதங்கள் என இல்லாமல் பல ஆண்டுகள், ஏன் தசாப்தங்கள் என்று கூட நீடிக்கலாம்” என்று பிரித்தானிய பிரதம மந்திரி டேவிட் காமெரோன் வார இறுதியில் கூறினார்.

பிரெஞ்சுப் பாதுகாப்பு மந்திரி Jean-Yves Le Drian மாலியில் தன் இலக்கு, மேற்கு ஆபிரிக்க அரசுகளின் பொருளாதார சமூகம் (Economic Community of West African States -ECOWAS) என்னும் அமைப்பு அளித்துள்ள துருப்புக்களைக் கொண்டு நாட்டை முற்றிலும் மறுபடியும் வெற்றி கொள்வது என்பதாகும்” என வரையறுத்தார். தற்பொழுது மாலியில் போருக்குத் தலைமை தாங்கி நடத்தும் பிரான்ஸ், மாலியில் இருந்து தன் நிகழ்ச்சி நிரலைத் தொடர்வதற்காக துவாரெக் மற்றும் இஸ்லாமியவாதப் போராளிகளை வெளியேற்றும் திட்டத்தைக் கொண்டுள்ளது. அதன் இலக்கு பமாகோவில் இராணுவ ஆட்சிக்குழு காப்டன் அமடௌ சனோகோ தலைமையில் இருக்கும் ஊழல் மிகுந்த கைப்பாவை ஆட்சிக்கு உறுதிப்பாடு அளிப்பது; மாலியில் பிரான்ஸிற்குக் கணிசமான பெருநிறுவன நலன்கள் உள்ளன. 

இதேபோல் பிரித்தானிய வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேக்கும் சோமாலியாவில் தற்பொழுது நடக்கும் போரை எப்படி மாலிக்கு “முறையான ஒரு அரசாங்கம்” செயல்பட வேண்டும் என்பதற்கு நெறியை கொடுக்கிறது என உயர்த்திக் காட்டியுள்ளார். “இது சோமாலியாவில் நிறையை முன்னேற்றத்தைக் கொடுத்துள்ளது. மாலி போன்ற நாடுகளில் நாங்கள் விரும்பாதது இருபது ஆண்டுகளாக ஒரு தோற்றுவிட்ட அரசாக இருப்பது, சோமாலியில் முன்பு நடந்தவை எல்லாம் நாளின்நடப்பு என்பதைத்தான்” என்றார்.

இத்தகைய கருத்து பெரிதும் உள்ளத்தை உறைய வைக்கிறது. உண்மையில், சோமாலியா தொடர்ந்து ஓர் ஆழ்ந்த வறிய நிலையலுள்ள நாடாகவும், உள்நாட்டுப்போரினால் சிதைந்தும், வாஷிங்டன் வாடிக்கையாக டிரோன் தாக்குதல்கள் மூலம் இலக்கு வைக்கப்படும் நாடாகவும் இருக்கிறது. ஹேக்கின் கருத்துக்கள் நேட்டோ சக்திகள் அத்தகைய விளைவு மாலிக்கு முற்றிலும் ஏற்கத்தக்கது, ஏன் விரும்புவும் தக்கது எனக் காண்கின்றன என்பதைத்தான் குறிக்கின்றன.

மாலியில் நடக்கும் போரின் விரிவாக்கத்தின் பரந்த உட்குறிப்புக்கள் நேற்று நியூ யோர்க் டைம்ஸில் ஒரு கட்டுரையில் கூறப்பட்டுள்ளன. ஒரு முன்னாள் பென்டகன் பயங்கரவாத எதிர்ப்பு அதிகாரியான ருடோல்ப் அட்டலாவை டைம்ஸ் மேற்கோளிடுகிறது.”அவர்களுடைய [இஸ்லாமிய மெக்ராபில் உள்ள அல்குவேடா] இணையத்தை தகர்க்க, அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளும் மிகவும் சிந்திக்கப்பட்ட பிராந்திய மூலோபாயத்தை ஏற்க வேண்டும்.”

இதில் தெளிவாக்கப்படும் கருத்தாவது: மாலிப் போர் மாலியை மட்டும் பற்றியது அல்ல, மேற்கு ஆபிரிக்கா முழுவதையும் ஏகாதிபத்திய சக்திகள் தீவிர இராஜதந்திர, இராணுவ செயல்கள் மூலம் உருவாக்கும் முயற்சி இதில் உள்ளது—அதில் அல்ஜீரியா, நைஜீரியா, 2011ல் நேட்டோப் போரை அடுத்து இருத்தப்பட்ட லிபிய ஆட்சி அனைத்தும் அடங்கும். வாஷிங்டனும் பாரிஸும் “பல மாதங்களாக அல்ஜீரியாவுடன்” மாலி குறித்து அல்ஜீரிய உதவியைப் பெறுவதற்குப் பெரிதும் உழைத்து வருகின்றன என்று டைம்ஸ் கூறியுள்ளது.

டைம்ஸ் மேலும் கூறுகிறது: “அந்த மூலோபாயத்தை இணைத்தல் என்பது இருக்கும் நிலையைக் காணும்போது மிகவும் கடினமாகும். அல்ஜீரியர்கள் திறமையானவர்கள், ஆற்றல் மிகுந்த இராணுவத்தைக் கொண்டிருந்தாலும், ஆனால் தங்கள் அண்டை நாட்டினருடன் பரந்த அளவில் ஒத்துழைக்க ஆர்வம் காட்டவில்லை. லிபியாவின் புதிய அரசாங்கம் ஒத்துழைக்க விரும்புகிறது, ஆனால் அதிக திறனைக் கொண்டிருக்கவில்லை. மாலி குறைந்த இராணுவத்திறனை கொண்டுள்ளது; எனவே எந்த நீடித்த தீர்விற்கும் உள் அரசியலில் ஒரு பார்வையை எடுத்துக் கொள்வது தேவையாகும்.”

Georgetown பல்கலைக்கழகத்தில் பயங்கரவாதம் குறித்த ஒரு வல்லுனரான ப்ரூஸ் ஹாப்மன் டைம்ஸிடம், அமெரிக்கா இராணுவ உதவி, டிரோன் தாக்குதல் ஆகியவற்றை பிரான்ஸுக்கு உதவ விரிவுபடுத்த வேண்டும். “அமெரிக்கா பிரெஞ்சுத் தலையீட்டிற்கு ஆதரவை முடுக்கி விடுவதைப் பரிசீலிக்க வேண்டும்; அதையொட்டி பிரெஞ்சு இராணுவம் அதன் செயற்பாடுகளை நல்ல முறையில் செயல்படுத்த முடியும், பணியை விரைவில் ஆபிரிக்க துருப்புக்களிடம் ஒப்படைக்க முடியும்.”

செய்தி ஊடகங்களும் பிரெஞ்சு ஏகாதிபத்தியம் மாலியில் நடத்தும் போருக்கு “ஆதரவில்லை” என்னும் குறைகூறலை முடுக்கி விட்டு, அவற்றின் அரசாங்கங்கள் உதவிக்கு விரைய வேண்டும் எனக் கூறுகின்றன. மாலியில் முன்னாள் அமெரிக்கத் தூதராக இருந்த விக்கி ஹடில்ஸ்டன் சமீபத்திய வானொலிப் பேட்டி ஒன்றில் ஒபாமா நிர்வாகத்தை அதன் “செயலற்ற தன்மைக்கு” குறைகூறினார்.

அமெரிக்க சிந்தனைக் குழாம்களும் உளவுத்துறைச் சக்திகளும் போரை விரிவுடுத்துவதற்கான வழிவகைகளை தீவிரமாக சிந்தித்துக் கொண்டிருக்கும்போது, மாலியில் போர் தீவிரமடைந்துள்ளது. வார இறுதியில் பிரெஞ்சு Rafale போர் விமானங்கள் மற்றும் Gazelle ஹெலிகாப்டர் துப்பாக்கிக் கப்பல்கள் டஜனுக்கும் மேற்பட்ட செயற்பாடுகளை நடத்தின.

திங்களன்று கிட்டத்தட்ட 200 பிரெஞ்சுத் துருப்புக்கள், 21வது கடற்படைத் தரைப்பிரிவில் இருந்து வருபவர்கள், ஆறு போர் ஹெலிகாப்டர்கள், கண்காணிப்பு விமானங்களின் ஆதரவுடன், டியபலி மற்றும் டௌவென்ட்சா சிறு நகரங்களைக் கைப்பற்றினர். தரைப்படையினர் அதிகாலையில் அருகில் இருந்த அரசாங்கத்தின் கட்டுப்பாட்டிற்குள் இருக்கும், டியபலியில் இருந்து தெற்கே 30 மைல்களில் இருக்கும் தியோனோ சிறுநகரத்தில் இருந்து புறப்பட்டனர்.

போரைப் பற்றிய அதிக விவரங்கள் தெரியவில்லை; நிருபர்கள் போர்ப் பகுதியில் தடைக்கு உட்படுத்தப்பட்டுவிட்டனர் ஆனால் மனித உரிமைகள் கண்காணிப்பு (Human Rights Watch) தங்களுக்குத் தீவிரத் தவறுகள் பற்றித் தகவல்கள் வந்துள்ளன, அதில் இனவழிக் கொலைகள் பிரெஞ்சு ஆதரவு பெற்ற மாலியப் படைகளால் நியோனாக் குடிமக்களுக்கு எதிராக நிகழ்ந்தன என்று கூறினர்.

HRW கருத்துப்படி, துவாரெக்குகள் மற்றும் அரேபியர்கள், வடக்கு மாலியில் எழுச்சியாளர்களுடன் அதிகத் தொடர்புடைய இனவழிக் குழுக்கள் குறிப்பாக இலக்கு வைக்கப்பட்டுள்ளனர். இது இதேபோன்ற வகுப்புவாதத் தாக்குதல்கள், நேட்டோ ஆதரவுடைய படைகள் லிபியாவில் நேட்டோப் போரின்போது கேர்னல் முயம்மர் கடாபிக்கு ஆதரவு கொடுப்பவை எனக் கருதப்படும் இனவழிக் குழுக்களில் இருந்த குடியேறிய தொழிலாளர்கள்மீது நடத்தப்பட்டதைத்தான் நினைவிற்குக் கொண்டுவருகிறது.

சனிக்கிழமை அன்று பிரெஞ்சு வெளியுறவு மந்திரி Laurent Fabius, ECOWAS அவசரகால உச்சிமாநாட்டில் ஐவரியன் தலைநகரான அபித்ஜானில் பங்கு பற்றி ஆபிரிக்கத் தலைவர்களிடம் அவர்களுடைய நாடுகள் மாலியில் இராணுவ நடவடிக்கைகள் எடுக்கும் நேரம் “விரைவில் வந்துவிட்டது” என்றார்.

பல நாடுகளும் மாலிக்குள் 5,800 துருப்புக்கள் அனுப்புவதாக உறுதியளித்துள்ளன. அவை நைஜீரியாவின் மேஜர் ஜேனரல் ஷேஹு உஸ்மான் அப்துல்கதிர் மற்றும் நைஜரின் பிரிகேடியர் ஜெனரல் யாயே கார்பா ஆகியோர் படைத்தளபதி மற்றும் துணைத் தளபதியாக ஆபிரிக்க தலைமையில் சர்வதேச மாலிக்கான ஆதரவுப் பணியில் இருப்பதற்கு இசைவு கொடுத்துள்ளன. (AFISMA)

AFISMA மேற்கு ஆபிரிக்காவில் உள்ள முன்னாள் பிரெஞ்சு, பிரித்தானிய வறிய காலனிகளுக்கு 500 மில்லியன் டாலருக்கும் மேல் செலவைக் கொடுக்கும். சர்வதேச நன்கொடையாளர்கள் ஜனவரி 29ம் திகதி எதியோப்பிய தலைநகரான அட்டிஸ் அபாபாவில் நிதி குறித்து விவாதிக்கக் கூடுகின்றனர்.

நைஜீரியா, டோகோ, பெனின் மற்றும் சாட்டில் இருந்து கிட்டத்தட்ட 150 துருப்புக்கள் ஞாயிறன்று பமாகோவிற்கு வந்தன.

வரும் வழியில் மத்திய நைஜீரியாவில் கோகி மாநிலத்தில் நைஜீரியத் துருப்புக்கள் தாக்கப்பட்டன; இதில் இரண்டு அதிகாரிகள் இறந்து போயினர், எட்டு துருப்புக்கள் காயம் அடைந்தனர் ஆன்லைன் செய்தித்தாள் ஒன்று இத்தாக்குதல் நைஜீரியத் துருப்புக்கள் மேற்கத்தைய சக்திகளுடன் “அவர்களுடைய நோக்கமான இஸ்லாமிய மாலிப் பேரரசை அழிக்கும் இலக்கில் சேருவதைத் தடுக்கும் நடவடிக்கை என்று கூறியுள்ளது. போகோ ஹரமின் இஸ்லாமியவாதிகள் குழு, அன்சரு என அழைக்கப்படுவது இத்தாக்குதலுக்குப் பின் இருந்ததாகக் கூறப்படுகிறது.

ஐரோப்பிய ஏகாதிபத்தியத்தின் ஆதரவை பிரான்ஸ் உறுதியாக நம்பலாம். ஐரோப்பிய ஒன்றியம் பிரெஞ்சு பிரிகேடியர் ஜெனரல் Francois Lecointre ஐ மாலிக்கு பெப்ருவரி மாதம் அனுப்ப இருக்கும் ஒரு பணிக்குழுவிற்குத் தளபதியாக நியமித்துள்ளது. இது எகோவாஸ் படைகளுக்கு 50 மில்லியன் யூரோக்களை ($66 மில்லியன்களை) கொடுப்பதோடு மட்டும் இல்லாமல், மார்ச் 2012 ல் இராணுவ ஆட்சிமாற்றத்தின்போது மாலிக்கு உதவியாக வந்த 250 மில்லியன் யூரோக்களை தடையில் இருந்து அகற்றும் எனவும் அறிவித்துள்ளது.

இது மேலும் International support and follow-up குழு மாலி நிலைமை பற்றி உதவுவதற்கு மந்திரிகள் மட்ட கூட்டத்தை பெப்ருவரி 5ல் நடத்தவும் முன்வந்துள்ளது. கனடா, கிரேட் பிரிட்டன், ஜேர்மனி, பெல்ஜியம், டென்மார்க்கைத் தொடர்ந்து இத்தாலியும் இப்பொழுது தளவாட ஆதரவைக் கொடுக்க முன்வந்துள்ளது.

அமெரிக்க வெளிவிவகாரச் செயலகத்தின் செய்தித் தொடர்பாளர் விக்டோரியா நியூலாந்தின் கருத்துப்படி, 100 அமெரிக்கப் பயிற்சியாளர்கள் நைஜர், நைஜீரியா, பர்க்கினா பாசோ, டோகோ, செனேகல், கானா ஆகிய நாடுகள் மாலியில் போராடுவதற்குத் துருப்புக்களை தயாரிக்க அனுப்பப்பட்டுள்ளனர்.