சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

Obama to approve drone assassination manual                          

டிரோன் படுகொலை கையேட்டிற்கு ஒபமா ஒப்புதல் தரவுள்ளார்

By Patrick Martin
21 January 2013
use this version to print | Send feedback

ஞாயிறன்று வெளிவந்துள்ள அறிக்கை ஒன்றின்படி, தொலைதூரக் கட்டுப்பாட்டிற்கு உட்பட்டிருக்கும் டிரோன்கள் மூலம் வெள்ளை மாளிகை உத்திரவிட்டு நடத்தப்படும் கொலைகளுக்காக தயாரிக்கப்பட்டுள்ள அமைப்புமுறை வழிவகையைக் கொண்ட கையேடு ஒன்றில் ஜனாதிபதி ஒபாமா கையெழுத்திடவுள்ளார்.

பயங்கரவாத எதிர்ப்பு “விளையாட்டு நூல்” (“playbook”) என அழைக்கப்படுவது, CIA மற்றும் இராணுவத்தின் சிறப்புப் படைகள் கட்டுப்பாடு, ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், யேமன், சோமாலியா இன்னும் மத்திய கிழக்கு, ஆபிரிக்காவில் டிரோன்களைச் செயல்படுத்தும் இரு நிறுவனங்கள் எச்சூழ்நிலையில் உயிரைப் பறிக்கும் சக்தியைப் பயன்படுத்தலாம் என்பதை வரையறுக்கும்

வாஷிங்டன் போஸ்ட்டில் முதல் பக்கத்தில் வந்துள்ள கட்டுரை கிட்டத்தட்ட வெள்ளை மாளிகையின் பகுதி உத்தியோகபூர்வ அறிவிப்பிற்கு ஒப்பாகும்; பெயரிடப்படாத அரசாங்க அதிகாரிகளின் அறிக்கைகளை தளமாகக் கொண்டுள்ளது. ஒபாமா தான் இரண்டாம் முறையாக ஜனாதிபதிப் பதவிப் பிரமாணம் செய்துகொண்ட அதே தினத்தன்று இது வெளியிடப்பட்டுள்ளது, இராணுவ-உளவுத்துறை அமைப்பின் ஒரு கருவியாக அவருடைய நிர்வாகத்தின் பங்கை நிரூபிக்கிறது.

அமெரிக்க அரசாங்கம், உலகம் முழுவதும் ஆழ்ந்த முறையில் படுகொலைகளில் ஈடுபட்டிருப்பதை ஒட்டி, உயர்மட்ட அதிகாரிகள் இந்த வழிவகையை முறைப்படுத்துவதற்கு ஒரு கையேடு தேவை எனக் கருதினர். போஸ்ட் கூறியுள்ளபடி, டிரோன் போர்முறை கையேடு எழுதுவது CIA க்கும் பிற நிறுவனங்களுக்கும் இடையே உட்பூசல்களினால் தாமதமாகியுள்ளது; CIA, ஏவுகணைத் தாக்குதல்களை நடத்துவதில் கூடுதல் பரிமாணத்தைக் கேட்கிறது. இவற்றுள் அடையாள” தாக்குதல்கள் அடங்கும்; அதன் இலக்கு அல்குவேடா அல்லது பிற பயங்கரவாதக் குழுவில் உள்ளவர் எனக் கருதப்படும் அடையாளம் காட்டப்பட்ட உறுப்பினர் என்று அல்லாமல், பயங்கரவாதத்தின் “அடையாளம்” இருக்கும் செயலில் ஈடுபடுவது போல் தோன்றும் நபர்களும் அடங்குவர். அதாவது ஆயுதங்களைக் குவித்தல், வெடிமருந்துகள் எனத் தோன்றுபவற்றை வாகனங்களில் ஏற்றுவது ஆகியவற்றைச் செய்பவர்கள் என.

நடைமுறையில் இதன் பொருள் அமெரிக்க ஆக்கிரமிப்புக்கள் அல்லது மத்திய கிழக்கு, மத்திய ஆசியா, ஆபிரிக்கா ஆகியவற்றில் இராணுவ நடவடிக்கைகளுக்கு எதிரான நடவடிக்கைகளில் ஈடுபட்டிருப்பவர்கள் போல் தோன்றுபவர்களைக் கொலைக்கு இலக்காக்குவது ஆகும். மேலும் பெரும்பாலான டிரோன் தாக்குதல்கள் ஆப்கானிஸ்தான், பாக்கிஸ்தான், யேமன் இன்னும் பிற நாடுகளில், பழங்குடி மக்கள் ஒன்றாகக் கூடுமிடங்களில் நடத்தப்படுவது இயல்பாக இருக்கையில், ஆயுதங்கள் எங்கும் இருக்கையில், “அடையாள” தாக்குதல்களுக்கான கோரிக்கை என்பது CIA க்கு இப்பகுதிகளில் இருக்கும் மக்களில் எவரையும் கொல்லுவதற்கு உரிமம் அளிப்பது போல் ஆகும்.

இச் சர்ச்சை, CIA குறைந்தப்பட்சம் பாக்கிஸ்தானில் இன்னும் ஓராண்டிற்கேனும், இரண்டு ஆண்டுகளாகவும் போகலாம், பரந்த தாக்குதல்களை நடத்த விலக்கு பெற்றுள்ளதை அடுத்து தீர்வு காணப்பட்டது; ஒருவேளை இன்னும் அதிக காலத்திற்குக்கூட இந்த விலக்கு போகலாம் என்று செய்தித்தாள் கூறியுள்ளது. வடமேற்கு பாக்கிஸ்தானின் மலைப்பகுதிகள், ஆப்கானிய எல்லையை நெடுகிலும், டிரோன் ஏவுகணைத் தாக்குதல்களின் அடிக்கடி இலக்காக உள்ளன; நூற்றுக்கணக்கான மகளிர், குழந்தைகள் உட்பட ஆயிரக்கணக்கானவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.

டிரோன் ஏவுகணை “விளையாட்டு நூல்” ஒபாமாவிடம் சில வாரங்களுக்குள் சமர்ப்பிக்கப்படும் என்று போஸ்ட் தெரிவித்துள்ளது. “இது, வெள்ளை மாளிகை அதன் பயங்கரவாத எதிர்ப்புக் கொள்கைகளை நெறிமுறைப்படுத்த, உயிராபத்துச் செயற்பாடுகளுக்கு ஒரு வழிகாட்டியை தோற்றுவிக்க அதன் ஓராண்டு கால முயற்சியைக் குறிக்கிறது; இது ஒபாமாவின் இரண்டாம் காலம் முழுவதும் இது நடைபெறும்.” என்று செய்தித்தாள் கூறுகிறது.

வேறுவிதமாகக் கூறினால் ஒபாமாவின் மறுதேர்தல் பிரச்சாரக்காலம் முழுவதும் உயர்மட்ட வெள்ளை மாளிகை அதிகாரிகள் ஒரு இரகசிய ஆவணத்தின் விவரங்கள் குறித்துப் பேச்சுக்களையும் அதை எழுத்துமூலம் கொண்டுவருவது பற்றியும் செயல்பட்டு வந்தனர்; இது ஜனாதிபதி, சட்டத்தை விட உயர்ந்தவர் என்ற கொள்கையை புறப்பாட்டு புள்ளியாக கொண்டுள்ளது; அதையொட்டி அவர் இந்த நிலவுலகின் எந்தத் தனிநபரையும், அமெரிக்கக் குடிமக்கள் உட்பட, எத்தகைய சட்டபூர்வ வழிவகை, தடையின்றி மரணத்திற்கு உட்படுத்தலாம்.

இந்த அறிக்கையின்படி, “விளையாட்டு நூலில் தொகுக்கப்பட்டுள்ள பொருளுரைகளின்படி, கொலைப்பட்டியலில் பெயர்களைச் சேர்க்கும் வழிவகை, வெளிநாட்டில் இருக்கும் அமெரிக்கக் குடிமக்களை இலக்கு வைக்கும்போது கருத்திற்கொள்ள வேண்டிய சட்டக் கொள்கைகள் மற்றும் CIA அல்லது அமெரிக்க இராணுவம் போர்ப்பகுதிகளுக்கு வெளியே டிரோன் தாக்குதல்களை நடத்துகையில் பெறவேண்டிய தொடர்ச்சியான ஒப்புதல்கள் ஆகியவையும் அடங்கியுள்ளன.

எந்த “சட்டக் கோட்பாடுகள்” ஜனாதிபதிக்கு, மனிதகுலம் அனைத்தின் மீதும் வாழ்வு அல்லது மரணத்தைக் கொடுப்பதாகக் கருதப்படுகின்றன என்பதை ஒபாமா நிர்வாகம் வெளிப்படுத்த மறுத்துவிட்டது. நீதித்துறை இயற்றியுள்ள சட்டக் குறிப்பு அமெரிக்க மக்களிடம் இருந்து இரகசியமாக வைக்கப்பட்டுள்ளது; பல தொடர்ச்சியான நீதிமன்ற வழக்குகளில் நிர்வாகம் தனக்கு “அரசாங்க இரகசியங்களைக்” காக்கும் முழு உரிமை உள்ளது என்பதற்கு நீதிபதிகள் தலைவணங்கிய நிலையில்; உரிமைகள் சட்டத்தின் விதிகளைப் பற்றி இது பொருட்படுத்தவில்லை.

ஆனால் ஒபாமா நிர்வாகம் இயற்றியுள்ள சட்டபூர்வ தேவைகள் கூட நடைமுறையில் CIA அல்லது இராணுவத்திற்கு எத்தகைய வரம்புகளையும் ஏற்படுத்தாது. ஒரு முன்னாள் அதிகாரி போஸ்ட்டிடம் பாக்கிஸ்தானில் CIA பெற்றுள்ள விதிவிலக்கு குறைந்தபட்டம் இரண்டு ஆண்டுகளுக்குக் குறைவாக, ஆனால் ஓராண்டிற்கு மேலாக இருக்கும்” என்றார்; ஆனால் இறுதி முடிவு “தளத்தில் இருக்கும் உண்மை நிலைமைகளை அடிப்படையாக ஐயத்திற்கு இடமின்றிக் கொண்டிருக்கும்.” என்று சேர்த்துக் கொண்டார்.

போஸ்ட்டில் வந்துள்ள குறிப்பின் ஒரு நோக்கம் வெள்ளை மாளிகை பயங்கரவாத எதிர்ப்புப் பிரிவின் ஒருங்கிணைப்பாளர் ஜோன் பிரென்னன் தோற்றத்திற்கு ஏற்றம் கொடுப்பதாகும்; இவரை ஒபாமா CIA தலைவராக நியமித்துள்ளார். 2009ல் பிரென்னன்தான் CIA தலைமைக்கு முதல் விருப்பம் ஆவார்; ஆனால் புதிய ஜனாதிபதி இவரை நியமிக்கத் தயங்கினார்; ஏனெனில் இவர் புஷ் நிர்வாகத்தின்போது உயர்மட்ட CIA அதிகாரியாக இருக்கையில் கடத்தல் மற்றும் சித்திரவதை ஆகியவற்றில் பங்கு கொண்டிருந்தார்.

ஞாயிறன்று வெளிவந்துள்ள கட்டுரை, டிரோன் போரை நடத்துகையில், நிதானம், முறையான முயற்சி ஆகியவற்றின் வக்கீல் என்று பிரென்னனை காட்டும் வெள்ளை மாளிகையின் சமீபத்திய முயற்சிகளுடன் இயைந்துள்ளது. இவர் “விளையாட்டு நூலின்” உந்து சக்தி என்று விவரிக்கப்படுகிறார்; இவருடைய நோக்கம் “இன்னும் தொடர்ச்சியாகவும் கடுமையாகவும் பயங்கரவாதத் திட்டங்கள்மீது கட்டுப்பாடுகளைச் சுமத்த வேண்டும்; அவை பெரும்பாலும் செப்டம்பர் 11 தாக்குதல்களுக்குப் பின் தற்காலிக முறைகளாகத்தான் இருந்திருக்கின்றன.”

பிரென்னன் நியமனம் குறித்து அடுத்த மாதம் கேள்வி வருகையில் இது நகைப்பிற்கானது அல்ல எனக் காட்டும் வகையில், செய்தித்தாள் குறிப்பு பிரென்னனுடைய பங்கு இறுதித் தீர்வு என்னும் செயற்பாட்டில் ஒழுங்கு, முறை இவற்றை விரும்பிய நாஜி அதிகாரத்துவத்தினரின் பங்கு போல் இருந்தது எனத் தெரிவிக்கிறது -- கட்டப்பாடற்ற, அவ்வப்பொழுது பரவலாக பயன்ற்று காட்டப்படும் வன்முறை என்று இல்லாமல்.

இதற்கிடையில் அமெரிக்கக் கொலைக்கார இயந்திரம் அதன் கொடுரமான செயற்பாடுகளைத் தொடர்கிறது. வார இறுதியில் அமெரிக்க டிரோன் தாக்குதல்கள் குறைந்தபட்சம் 6 பேரை கொன்றுள்ளது, தெற்கு யேமனில் நடத்திய பல தாக்குதல்களில் 16 பேர் வரை கொன்றுள்ளது. ஏவப்பட்ட டிரோன் தாக்குதல்கள் சனிக்கிழமை மாரப் மாநிலத்தில் மூன்று பேரையும் அதே மாநிலத்தில் ஞாயிறன்று ஒரு காரில் பயணித்த மூன்று பேரையும் கொன்றது. மற்றொரு பத்து பேர்கள் அல் பேடா மாநிலத்தில் ஒரு வீட்டில் ஏற்பட்ட வெடிப்பில் கொல்லப்பட்டனர்; இது குண்டு தயாரிக்கும்போது தற்செயலாக நிகழ்ந்த வெடிப்பு எனக் கூறப்படுகிறது; ஆனால் மற்றொரு அமெரிக்கத் தாக்குதலின் விளைவாக இருக்கலாம்; ஏனெனில் அமெரிக்க அரசாங்கம் டிரோன் செயற்பாடுகள் குறித்து பகிரங்கமாகக் கருத்துத் தெரிவிப்பதில்லை.