தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
Obama’s second inaugurationஒபாமாவின் இரண்டாம் பதவியேற்பு
Barry Grey and David North use this version to print | Send feedbackநான்கு ஆண்டுகளுக்கு முன்னர் கிட்டத்தட்ட 2 மில்லியன் மக்கள் வாஷிங்டன் டி.சி.யில் பாரக் ஒபாமா அமெரிக்காவின் 44வது ஜனாதிபதியாக பதவிப் பிரமாணம் செய்து கொள்வதை காணக் குழுமினர். அப்பொழுது ஒரு ஆபிரிக்க அமெரிக்கரை அமெரிக்காவின் மிக உயர்ந்த பதவிக்கு உயர்த்தியுள்ளமை, வெறுப்பிற்கு உட்பட்டிருந்த புஷ் நிர்வாகத்தின் போர், சமூகப் பிற்போக்குத்தன கொள்கையில் இருந்து ஒரு முறிவை அடையாளம் காட்டும், மற்றும் ஒரு முற்போக்கான சீர்திருத்த வேலைத்திட்டத்தை ஏற்க வைக்கும் என்ற பரந்த நப்பாசைகள் அமெரிக்காவில் மட்டுமின்றி உலகம் முழுவதும் இருந்தன. இன்று, தன்னுடைய இரண்டாம் பதவிக்காலத்தை ஒபாமா உத்தியோகபூர்வமாக ஆரம்பிக்கையில், மக்களுடைய உணர்வு பெரிதும் மாறிவிட்டது. செய்தி ஊடகத்தின் முயற்சிகள் இருந்தாலும்கூட, நிகழ்வு குறித்து பொது மக்களிடையே அதிக ஆர்வம் காணப்படவில்லை. ஏமாற்றப்பட்டுவிட்டோம் என்பதும், அந்நியப்பட்ட தன்மையும்தான் பொதுவான உணர்வாக உள்ளது. தொழிலாள வர்க்க வாக்காளர்களிடம் ஒபாமா தக்கவைத்துக் கொண்டிருக்கும் அடித்தளம், அவருடைய ஆதரவு ஒரு நம்பிக்கை என்பதைவிட வேறுவழியின்றி ஏற்றுக்கொள்ளுதல் என்பதை உள்ளடக்கிய செயலற்ற தன்மையையே கொண்டுள்ளது. இத்தகைய பொதுமக்களின் ஏமாற்றம், அதிருப்தி ஆகியவற்றிற்குக் காரணம் என்ன? “நம்பிக்கை”, “மாற்றம்” இவற்றின் வேட்பாளர், தன்னுடைய முதல் பதவிக்காலத்தில், முந்தையதை நெரித்து, பிந்தையதற்கு அதிகம் ஏதும் கொடுக்கவும் இல்லை. ஜனாதிபதி என்னும் முறையில் ஒபாமா, வங்கிப் பிணையெடுப்புக்கள், ஊதிய வெட்டுக்கள், உள்நாட்டின் சிக்கன நடவடிக்கைகள், வெளிநாட்டில் போர் விரிவாக்கம், சித்திரவதை மற்றும் அரசாங்கப் படுகொலைகளுக்கு தலைமை தாங்கினார். முன்னாள் அரசியலமைப்புச் சட்ட பேராசிரியர் அடிப்படை அரசியலமைப்பு உரிமைகள் மீதான முறையான தாக்குதலைக் கண்காணித்தார். இதில் டிரோன் தாக்குதல், படுகொலைத் திட்ட விரிவாக்கம் மற்றும் காலவரையற்ற இராணுவக் காவலுக்கு உரிமை வழங்கல் ஆகியவையும் அடங்கும். இந்த நடவடிக்கைகள் அமெரிக்கக் குடிமக்களுக்கு எதிராகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இவை பெரும்பாலும் முறையான சட்ட வகையின்றி உயிர், சுதந்திரம் ஆகியவை பறிக்கப்படுவதற்கு எதிரான அரசியலமைப்புப் பாதுகாப்பை அகற்றிவிட்டன. ஒபாமாவின் ஆதரவாளர்கள் பலருக்கு, குறிப்பாக அவருடைய பிரச்சார வார்த்தைஜாலங்களை முக்கியமாக கருதியவர்களுக்கு, புதிய ஜனாதிபதி தன்னை கிட்டத்தட்ட பிரயத்தனமெதுவுமில்லாமலே புஷ்ஷின் ஈராக் போரை, பதவியில் முன்னால் இருந்தவரின் மனித உரிமைகள் மீறல்களை இரக்கமற்ற ஏகாதிபத்திய போராக மாற்றியதை குறைகூறியவர், வாஷிங்டனின் புதிய விருப்பத்திற்கு உள்ளாகியிருக்கும் ஆயுதமான டிரோன் ஏவுகணைக்கு பக்தராக மாறியிருப்பது ஒரு வியப்பாகப் போயிற்று. ஒரே இரவில் வேட்பாளர் ஜெகில் ஜனாதிபதி ஹைடாக மாறியது, அரசியல் நிகழ்ச்சிப்போக்கின் வெளிப்பாடு ஆகும். எவர் பதவியில் இருந்தாலும், வெள்ளை மாளிகை உலக அடக்குமுறை, பிற்போக்குத்தனம், கொலை என்னும் பேரரசின் மையத்தானம் ஆகும். வெள்ளை மாளிகையில் நுழைந்தபின், ஒரு தனிநபர் முற்றிலும், முழுமையாக அரசாங்கத்தின் கருவியாகவும் சொத்தாகவும் மாறிவிடுகிறார். தன்னையே தாழ்த்திக்கொள்ளும் நீண்டக்கால தேர்தல் முறைக்கும் பின் எப்படியோ தப்பிப் பிழைத்துவிட்ட மனிதாபிமானத்தின் சுவடுகள், புதிய ஜனாதிபதி ஓவல் அலுவலகத்திற்குள் நுழைந்தபின் முற்றிலும் அழிக்கப்பட்டுவிடுகிறது. ஒரு தெளிவற்ற, அனுபவமற்ற அரசியல்வாதி என்னும் நிலையில் இருந்து உலகக் கொலைகார இயந்திரத்தின் தலைவர் என்னும் மாற்றத்தை ஒபாமா எந்தவித உட்போராட்டமும் இன்றி நடத்தியிருப்பதாகத்தான் தோன்றுகிறது. தன்னுடைய நேரத்தின் பெரும்பகுதியை “கொலை செய்யப்பட வேண்டியவர்கள் பட்டியலை”த் தயாரித்தல், டிரோன் கொலைகளுக்கு இசைவு கொடுத்தல் என்பவை இந்த ஜனாதிபதிக்கு கிட்டத்தட்ட இயல்பாகவே வந்துவிட்டது. அமெரிக்க குடிமகன் அன்வர் அல் அவ்லகியை டிரோன் தாக்குதல் மூலம் படுகொலை செய்யவேண்டும் என்ற தன்னுடைய முடிவை அவர் “மூளையைக் கசக்கிக் கொள்ளாத முடிவு” என்று கூறியதாகத் தெரிகிறது. அமெரிக்கப் படுகொலைத் திட்டத்திற்கு ஒபாமாவின் குறிப்பிடத்தக்க பங்களிப்பு அதை நிறுவனப்படுத்தி, அதிகாரத்துவமயமாகவும் ஆக்கி, இன்னும் துல்லியமான முறைகளை அறிமுகப்படுத்தி, வாடிக்கையான செயல்கள், வழிவகைகள் என்பவற்றை நிர்ணயித்து, மக்களைக் கொலை செய்வதை இன்னும் திறமையான வழிவகையாக செய்துள்ளதுதான். கொலை என்று வரும்போது இவருடைய அலட்சியப் போக்கு அவருடைய வெளிப்படையான தோற்றத்தில் காணப்படும் விந்தையான குருதி கொட்டாத தன்மைக்கு முற்றிலும் மாறாகத்தான் உள்ளது. இம்மனிதர்தான் உண்மையான உணர்வையோ உணர்ச்சி நிறைந்த சொற்றொடரையோ வெளிப்படுத்தும் திறன் அற்றவர் போல் தோன்றியவர் ஆவார். அவருடைய முதல் தேர்தலுக்கு முன்பும் அதற்குப் பின்னரும் பெரும் பேச்சாளர் என்று வர்ணிக்கப்பட்ட நிலையில், பதவியில் இருக்கும் முதல் நான்கு ஆண்டுகளில் நினைவிற்கொள்ளத்தக்க ஒரு சொற்றொடரைக்கூட அவர் கூறவில்லை. இவருடைய உரைகள் அனைத்தும் CIA எடுத்துக்கூறும் நூலின் கவிதையாகத்தான் உள்ளன. சொற்கள் மற்றும் இலக்கணம் என்னும் கண்ணோட்டத்தில் அவை ஜோர்ஜ் புஷ்ஷினுடையதை விட சற்று நேர்த்தியானதாகவே இருந்தன. ஆனால் உள்ளடக்கத்தை பொறுத்தவரை அவை அதே வெற்றுத்தனத்தைத்தான் கொண்டுள்ளன. ஒபாமாவிடம் நாம் ஜனாதிபதியின் ஆளுமை அவருடைய நிர்வாகம் சேவை செய்யும் உண்மையான அமைப்புகளுடன் முற்றிலும் இணைந்து நிற்கும் தன்மையைத்தான் காண்கிறோம். அதாவது பெருநிறுவன-நிதிய உயரடுக்கும் இராணுவ-உளவுத்துறைக் கருவியும். ஒபாமாவைப் பதவியில் இருத்தித் தக்க வைப்பதற்கு இச்சக்திகள் மத்தியதர மேல்மட்ட தாராளவாத மற்றும் “இடது” பிரிவுகள் வளர்த்துள்ள இனவழி, அடையாள அரசியலின் கூறுபாடுகளை பயன்படுத்தியுள்ளன. அவர்கள்தான் அமெரிக்காவின் ஆளும் வர்க்கத்தின் அரசியலுக்கு சிந்தனை வடிவமைப்பு வழங்குபவர்கள். தாராளவாத ஜனநாயகவாதிகள், போலி இடது அரசியல் குழுக்கள் மற்றும் தொழிற்சங்க அதிகாரத்துவத்தினரின் பிற்போக்குத்தன கலவை ஒபாமாவிற்கு அரசியல் மூடுதிரையை தொடர்ந்து கொடுத்து வருகிறது. இரண்டாம் பதவிக்காலம் முதலாவது பதவிக்காலத்தின் வலதுசாரிக் கொள்கைகள் தீவிரப்படுத்தப்படுவதைத்தான் குறிக்கும் என்பது ஏற்கனவே தெளிவாகிவிட்டது. உள்நாட்டுக் கொள்கையில் முக்கிய கருத்து சிக்கனம் என்று உள்ளது. இது 1930கள், 1960களில் இருந்து எஞ்சியிருக்கும் அடிப்படைத் திட்டங்களான சமூகப் பாதுகாப்பு மற்றும் மருத்துவப் பாதுகாப்புத் திட்டங்களை இலக்கு கொண்டுவிட்டது. முன்னாள் வோல் ஸ்ட்ரீட் வங்கியாளரை, குடியரசுக் கட்சியினருடன் வரவு-செலவுத் திட்ட பேச்சுக்களை நடத்தும் முக்கிய நபர் ஜாகொப் லீ ஐ நிதி மந்திரியாக நியமித்துள்ளது தவறாக கருதமுடியாத அடையாளமாகும். வெளியுறவுக் கொள்கையில், ஒபாமாவின் டிரோன் தாக்குதல்கள் நிர்வாகி ஜோன் பிரென்னனை, புஷ்ஷின் கீழ் சித்திரவதையை பகிரங்கமாக ஆதரித்வரை CIA இயக்குனராக உயர்த்தியுள்ளது இராணுவவாத ஆக்கிரோஷம் மற்றும் நீதிமன்றத்திற்கு புறம்பான கொலைகளுக்கு ஒரு விரிவாக்கம் என்பதை அடையாளம் காட்டுகிறது. மேலும் இது ஜனநாயக உரிமைகள் மீதான இன்னும் வரவிருக்கும் தாக்குதல்களையும் குறித்து நிற்கிறது. ஆயினும்கூட, அதன் அனைத்து இரக்கமற்றதன்மை மற்றும் குற்றத்தன்மைகள் இருந்தபோதிலும்கூட, ஆளும் வர்க்கத்திடம் அமெரிக்க முதலாளித்துவத்தின் தவிர்க்க முடியாத சரிவை பின்நோக்கி திருப்புவதற்கு எவ்வித வழிகளும் இல்லை. இறுதி ஆய்வில், தன் உலக நிலைப்பாட்டிற்காக நம்பியுள்ள இராணுவ வன்முறை அமெரிக்க ஏகாதிபத்தியத்தின் நெருக்கடியை குறைக்கப்போவதில்லை மாறாக தீவிரப்படுத்தத்தான் செய்யும். ஒபாமாவின் இரண்டாம் பதவிக்காலம் பரந்த வேலையின்மை, வறுமை, அடக்குமுறை மற்றும் போருக்கு எதிரான மக்களின் சீற்றம் எதிர்ப்பு என்பவற்றின் வளர்ச்சியைத்தான் காணும். உலகெங்கிலும் இருப்பதைப் போலவே அமெரிக்காவிலும், தொழிலாள வர்க்கம் பெரும் போராட்டங்களில் நுழையும். அது அதிர்ச்சி தரும் வேகத்தில் ஒபாமா நிர்வாகத்தின் திவால்தன்மையையும் அதேபோல் அது தங்கியுள்ள பரந்த பொருளாதார மோசடி மற்றும் அரசியல் ஏமாற்றுத்தனத்தையும் அம்பலப்படுத்தும். |
|
|