WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
ஐரோப்பா மந்த
நிலைக்குள் ஆழமாகச் சரிகிறது
By Stefan
Steinberg
17 January 2012
ஐரோப்பிய ஒன்றியப்
புள்ளி விவரங்கள் நிறுவனமான யூரோஸ்டாட்
(Eurostat)
திங்களன்று
வெளியிட்ட தகவல்கள்படி, யூரோப் பகுதி நெடுகிலும் 17 நாடுகளின் தொழில்துறை உற்பத்தி
நவம்பர் மாதம் மூன்றாவது மாதமாக தொடர்ச்சியாக சரிந்தது.
நவம்பர் மாத 0.3
சதவிகிதம் சரிவு என்பது நிதிய ஆய்வாளர்கள் கணித்திருந்ததை விட மோசமானது ஆகும்.
அவர்கள் ஒரு சிறிய மீட்பை எதிர்பார்த்திருந்தனர். 2011 இன் இதே மாதத்துடன்
ஒப்பிடும்போது, தொழில்துறை உற்பத்தி யூரோப்பகுதியில் 3.7% வீழ்ச்சியடைந்துள்ளது.
திங்களன்று
வெளியிடப்பட்ட தனித்தனிப் புள்ளிவிவரங்கள் ஐரோப்பாவின் மிகப் பெரிய பொருளாதாரமான
ஜேர்மனி 2012 இன் கடைசிக் காலாண்டில் தீவிர சுருக்கத்தை அடைந்தது என்பதைக்
காட்டுகிறது. யூரோப் பகுதியின் அனைத்து மொத்த உள்நாட்டு உற்பத்தியிலும் 28% அளவைக்
கொண்டுள்ள ஜேர்மன் பொருளாதாரம் 0.5% சுருக்கம் அடைந்தது. இது ஜேர்மனியின் வளர்ச்சி
விகிதத்தை 2012 முழுவதற்கும் 0.7 சதவிகிதத்தால் குறைத்துவிட்டது. இது 2011ல் இருந்த
நாட்டின் வளர்ச்சி விகிதமான 3.0 சதவிகிதம் என்பதில் இருந்து ஒரு கூர்மையான
சரிவாகும்.
ஜேர்மனியின்
பொருளாதாரச் சரிவின் மிக முக்கியமான வெளிப்பாடு ஜேர்மனிய நிறுவனங்கள் ஆலை,
இயந்திரங்களில் முதலீடு செய்வதில் வந்துள்ள சரிவு ஆகும். ஐரோப்பிய மத்திய வங்கியால்
வட்டிவிகிதம் கிட்டத்தட்ட பூஜ்யமளவிற்கு அடையாளமாக நிர்ணயிக்கப்பட்டுள்ள போதிலும்,
இது ஓராண்டிற்கு முன் அத்தகைய முதலீட்டில் 7.3% வளர்ச்சி என்பதுடன் ஒப்பிடுகையிலும்
ஆலை, இயந்திரம் ஆகியவற்றில் முதலீடு 2012ல் 4.1% குறைந்துவிட்டது.
சமீபத்திய
புள்ளிவிவரங்களுடன் இணைந்த வகையில், ஜேர்மன் அரசாங்கம் 2013இற்கான அதன் பொருளாதார
வளர்ச்சி பற்றி கணிப்பை ஏற்கனவே அற்பமாக இருந்த 1.0% என்பதில் இருந்து 0.4%
என்பதற்குக் குறைத்துவிட்டது.
ஆலை மற்றும்
இயந்திரங்களில் முதலீடு சரிந்துவிட்டது என்பது ஜேர்மன் நிர்வாகிகள் ஐரோப்பாவிலுள்ள
அதன் முக்கிய பொருளாதாரச் சந்தைகளில் சுருக்கம் தொடருவதுடன் ஆழமடையும் என
எதிர்பார்க்கின்றன என்பதற்கு மிகத் தெளிவான அடையாளம் ஆகும். 2012இல் ஐரோப்பாவிற்கான
ஜேர்மன் ஏற்றுமதிகள் 2.0% சரிந்தன. ஒரு முழு அளவிலான பேரழிவு,
வட
அமெரிக்கா, மெக்சிகோ மற்றும் தூரகிழக்கு நாடுகளுக்கு ஜேர்மன் ஏற்றமதிகள்
அதிகரித்ததால் மட்டுமே தடுக்கப்பட்டது.
ஜேர்மனியின் ஏற்றுமதித்
தொழில்துறை,
யூரோவின்
மதிப்பு உயர்ந்திருப்பதாலும் அச்சறுத்தலுக்கு உட்பட்டுள்ளது. இது கடந்த ஆறு
மாதங்களில் அமெரிக்க டாலருக்கு எதிராக 8% மதிப்பு உயர்ந்து காணப்படுகிறது. இந்த வார
ஆரம்பத்தில் லக்சம்பேர்க்கில் நடைபெற்ற வணிகத் தலைவர்கள் கூட்டத்தில், யூரோப் பகுதி
நிதி மந்திரிகளின் வெளியேறும் தலைவரான ஜோன் கிளவ்ட யுங்கர்,
ஐரோப்பிய
ஏற்றுமதிகளுக்கு யூரோவின் மதிப்பு உயர்ந்துள்ளதால் ஏற்பட்ட பாதிப்பு குறித்துக்
கவலை தெரிவித்தார்.
ஒரு மிகக்
குறைந்தப்பட்ச அளவு வளர்ச்சியையேனும் கொண்டுள்ள ஒரே முக்கிய ஐரோப்பிய நாடு
தற்பொழுது ஜேர்மனி ஒன்றுதான். பிரெஞ்சு மத்திய வங்கி கொடுத்துள்ள
புள்ளிவிவரங்களின்படி, கண்டத்தின் இரண்டாம் பெரிய பொருளாதாரமான பிரான்ஸ்
உத்தியோகபூர்வமாக மந்தநிலையில் ஆழ்வதை 2012ன் மூன்றாம் காலாண்டுக் காலத்தில் 0.1%
வளர்ச்சியைக் காட்டியதால் தவிர்க்க முடிந்தது. இரண்டு மற்றும் நான்காம் காலாண்டு
காலத்தில் தேசியப் பொருளாதாரம் சுருங்கியது.
யூரோப்
பகுதிக்குள்ளேயே, ஏழு நாடுகள் உத்தியோகபூர்வமாக மந்த நிலையில் உள்ளன. கிரேக்கம்,
போர்த்துக்கல் மற்றும் இத்தாலி ஆகியவை ஆழ்ந்த சரிவுகளில் சிக்கியுள்ளன.
யூரோப்பகுதிக்கு வெளியே இங்கிலாந்து 2013ல் “மூன்று இறக்க” மந்தநிலைக்குள் சரியும்
என எதிர்பார்க்கப்படுகிறது.
அதிகரித்தளவில்
ஐரோப்பிய பொருளாதாரம் ஆபத்தான தன்மையுடன் இருப்பது அதன் முக்கிய தொழில்களின் ஒன்றான
கார்த்தயாரிப்புத் துறையில் இருக்கும் நிலைமையினால் எடுத்தக்காட்டப்படுகிறது. சில
ஜேர்மனிய நிறுவனங்கள், குறிப்பாக வோக்ஸ்வாகன், தங்கள் விற்பனைகளை உலகின் சில
பாகங்களில் விரிவாக்க முடிந்தது என்றாலும்கூட, ஐரோப்பாவிலுள்ள கார்ச் சந்தைகள்
பாரியளவு சுருக்கம் அடைந்து வருகின்றன.
VW
உடைய விற்பனை ஜேர்மனி
தவிர்ந்து மேற்கு ஐரோப்பாவில்
6.5%
சரிவுற்றது.
பிராந்தியத்தின் மிகப்
பெரிய கார்த்தயாரிப்பாளர்களுடைய கருத்தின்படி, ஐரோப்பிய ஒன்றியத்தில் புதிய
கார்களுக்கான பதிவுகள் 2012ல் 8.2% சரிந்து 12 மில்லியன் அலகுகளுக்குச் சற்றே மேலே
இருந்தது. இது 1995க்குப் பின் மிகக் குறைந்த அளவு ஆகும். ஜேர்மனியில் கார்
விற்பனைச் சரிவு ஒப்புமையில் நிதானமாக இருந்தது. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும்போது
இது 2012ல் 2.9% என இருந்தது. ஆனால் மற்ற ஐரோப்பிய நாடுகளில் சரிவு மிகவும்
குறிப்பிடும்படி இருந்தது.
ஸ்பெயினில் கார்
விற்பனை 13.4% உம், பிரான்ஸில் 13.9% உம் இத்தாலியில் 19.9% உம் சரிவுற்றது.
கிரேக்கத்தில் கார்களுக்கான பதிவுகள் 2011உடன் ஒப்பிடும்போது 40%க்கும் மேலாகச்
சரிந்தது.
கார்த் தொழிலின் மந்த
நிலை மோசமாகிக் கொண்டிருக்கிறது. 2012ல் புதிய கார்களுக்கான பதிவுகளில் டிசம்பர்
மிக மோசமான மாதம் ஆகும். அப்பொழுது ஐரோப்பிய ஒன்றியம் முழுவதும் சரிவு 16.3% என
இருந்தது. கார் விற்பனைகள் இப்பொழுது கடந்த 15 மாதங்களாகக் குறைந்து
கொண்டிருக்கின்றன.
கார்த்தயாரிப்பாளர்கள்
விற்பனையில் சரிவை எதிர்கொள்ளும் வகையில் புதிய அலை பணிநீக்கங்களை நடத்தியுள்ளனர்.
ஒரு மாதத்திற்கு முன்பு,
GM-Opel
தான் அதன்
போஹுமில் உள்ள ஜேர்மனிய ஆலையில் செயற்பாடுகளை மூட இருப்பதாக அறிவித்தது.
கடந்த வாரம்தான்
பிரான்சின்
Peugeot-Citroen
நிறுவனம் உலகெங்கிலும் அதன் விற்பனைகள்
16.5% சரிந்துவிட்டதாகத் தகவல்
கொடுத்துள்ளது.
“ஐரோப்பியக்
கார்ச்
சந்தையை
பாதித்துள்ள
நெருக்கடியை”
இதற்கு காரணமாக
குற்றம்
சாட்டியுள்ளது. செவ்வாயன்று
ரெனோல்ட்
2016 அளவில் பிரான்சில்
7,500
வேலைகள்
அகற்றப்படும்
என
அறிவித்துள்ளது.
கடலுக்கு அப்பால்,
ஜப்பானிய கார்த்தயாரிப்பாளர் ஹொண்டா வெள்ளியன்று
Swindon
இல் இருக்கும்
அதன் ஐக்கிய இராஜ்ஜிய தொழிற்சாலையில் 800 பணிநீக்கங்களை அறிவித்துள்ளது. ஐரோப்பா
முழுவதிலும் உள்ள தேவையின் வீழ்ச்சி அதற்குக் காரணமாக கூறப்பட்டுள்ளது.
ஐரோப்பாவை சூழ்ந்துள்ள
பொருளாதார, சமூகப் பேரழிவு ஐரோப்பிய ஆளும் வர்க்கத்தால் தீவிரமாக்கப்பட்டும்
பயன்படுத்தப்பட்டும் கண்டத்தின் தொழிலாளர்களின் ஊதியங்களும் சமூக நிலைமைகளும் சீனா
மற்றும் தூரக்கிழக்கில் இருக்கும் சிறப்புப் பொருளாதாரப் பகுதிகளின் உள்ள அளவை
அடையும் வகையில் குறைக்கப்பட்டுள்ளன.
பயங்கரமான சமூக
தாக்கங்கள் குறித்து நன்கு அறிந்துள்ள ஐரோப்பியத் தலைவர்கள் சிக்கன நடவடிக்கைகளை
இன்னும் தீவிரப்படுத்துவதற்கு உறுதியாக உள்ளனர். திங்களன்று கிரேக்கத்தின் சிரிசா
இயக்கத் தலைவர் அலெக்சிஸ் சிப்ரஸுடன் நடத்திய விவாதங்களில், ஜேர்மனிய நிதி மந்திரி
வொல்ப்காங் ஷொய்பிள ஐரோப்பாவில் சிக்கன நடவடிக்கைகளுக்கு மாற்றீடு இல்லை என்று
மீண்டும் அறிவித்தார்.
ஐரோப்பிய
தொழில்துறையில் இருந்து இலாபகரமான ஆதாயங்கள் இல்லாமல் இருப்பது, உலகின் முக்கிய
மத்திய வங்கிகள் கிட்டத்தட்ட வட்டியில்லான கடனை வங்கிகளுக்குக் கொடுப்பது என்பதுடன்
இணைந்து, ஒரு புதிய குப்பைப் பத்திர குமிழிக்கு எரியூட்டியுள்ளது. திங்களன்று
பைனான்சியல் டைம்ஸ் 2012 “உலகச் சந்தைகளில் குப்பைகளுக்கான போட்டி விரைந்து
நடக்கிறது” என்ற தன்மையைக் கொண்டிருந்தது என எழுதியுள்ளது 2008 நிதியச் சரிவைப்
பற்றி குறிப்பிட்டு அது ஒரு “முன்னரே பார்த்த உணர்வை” கொடுக்கிறது என்றும்
கூறியுள்ளது. |