WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பிய ஒன்றியம்
அல்ஜீரிய
பணயக் கைதிகள்
நெருக்கடி தொடர்கிறது
By Alex Lantier
19 January 2013
Tinguentourine
இயற்கை
எரிவாயு தளத்தில் அல்ஜீரிய சிறப்புப் படைகளுக்கும், மாலியில் பிரான்சின் போருக்கு
விரோதப் போக்கைக்காட்டும் இஸ்லாமியவாத எழுச்சியாளரகளுக்கும் இடையேயான மோதல்
நேற்றும் தொடர்ந்தது; அண்டை மாலியில் பிரான்ஸ் தன் படையெடுப்பை விரிவாக்கியுள்ளது.
அல்ஜீரிய அதிகாரிகள்
இன்னமும்
BP-Statoil-Sonatrach
தளத்தின் மீதான
அல்ஜீரிய சிறப்புப் படைகளின் தாக்குதலில் வியாழன் அன்று ஏற்பட்ட இறப்பு எண்ணிக்கையை
கொடுக்கவில்லை. ஆனால், 35 பிணைக்கைதிகள் மற்றும் 11 முதல் 18 இஸ்லாமியவாதப்
போராளிகள் கொல்லப்பட்டனர் என்ற ஆரம்ப அறிக்கைகளை அவர்கள் மறுத்துள்ளனர்.
கிட்டத்தட்ட 650 பிணைக்கைதிகளுக்கும் மேலானவர்கள் விடுவிக்கப்பட்டுள்ளனர்; இதில்
573 அல்ஜீரிய தொழிலாளர்களும் கிட்டத்தட்ட 132 வெளிநாட்டுப் பிணைக் கைதிகளில் 100
பேரும் அடங்குவர்; ஜப்பானிய, அமெரிக்க, அயர்லாந்து, பிரித்தானிய, நோர்வீஜிய மற்றும்
பிரெஞ்சுக் குடிமக்களும் இதில் உள்ளனர்.
அல்குவேடாவுடன்
பிணைந்துள்ள இரத்தத்தில் கையெழுத்திட்டுள்ள இராணுவப் பிரிவு, புதன்கிழமை காலை
5.30க்கு பிணைக்கைதிச் செயற்பாட்டை தொடக்கியது, இப்பொழுது மாலியில் பிரான்ஸ்
நடத்தும் போர் முடிவடைவதற்கான பேச்சுக்களை கோரியுள்ளனர். இவர்கள் அமெரிக்க பிணை
கைதிகளை அமெரிக்காவில் காவலில் இருக்கும் இரு கைதிகளுடன் பறிமாற்றப்பட வேண்டும்
என்றும் கூறுகின்றனர்; அவர்கள் கண்பார்வையற்ற ஷேக் ஒமர் அப்தெல் ரஹ்மான் மற்றும்
பாக்கிஸ்தானிய விஞ்ஞானி ஆபியா சித்திக்கி ஆவர்.
இரத்தத்தில் கையெழுத்து
இட்டுள்ள இராணுவப்பிரிவு,
40 வயதான அல்ஜிரியரும் மற்றும் சிகெரெட்டுக்கள், ஆயுதங்கள் இன்னும் பிற பொருட்களை
சகாராவில் கடத்துவதில் முக்கியமாக இருக்கும் மொக்தார் பெல்மொக்தார் தலைமையில்
இருப்பதாகக் கூறப்படுகிறது. அவர் 19வயதில் ஆப்கானிஸ்தானுக்கு பயணித்து
அல்குவேடாவில் பயிற்சி பெற்றார்; அது அப்பொழுது வாஷிங்டனுக்கு சோவியத் ஆதரவு பெற்ற
ஆப்கானிய அரசாங்கத்திற்கு எதிராக அது நடத்திய போரில் உதவி செய்து வந்தது. 1993ம்
ஆண்டு அவர் அல்ஜீரியாவிற்குத் திரும்பி வந்து, 1991-2002 வரை அல்ஜீரிய உள்நாட்டுப்
போரில் போரிடும் சலாபிஸ்ட் குழுவின் உறுப்பினராக இராணுவ அரசாங்கத்திற்கு எதிராகப்
போரிட்டார். இக்குழு தன்னையே பின்னர் 2007ல் இஸ்லாமிய மெக்ரெப்பின் அல்குவேடா
(Al Qaeda in the Islamic
Maghreb -AQIM) என அழைத்துக்
கொண்டது.
இஸ்லாமியவாத தாக்குல்
குழுவில் லிபிய, சிரிய மற்றும் அல்ஜீரியப் போராளிகள் உள்ளனர் என்ற கூறப்படுகிறது;
தவிரவும் ஒரு பிரெஞ்சுக் குடிமகனும் ஒரு வடக்கு ஐரோப்பியனும் உள்ளனர்; அவரை இவர்கள்
“நோர்வீஜியன்” என அழைக்கின்றனர்.
இத்தாக்குதல்,
லிபியாவில் 2011ல் நடந்த குருதி கொட்டிய நேட்டோப் போரின் அரசியலின் ஒரு பாகம்
ஆகும்; அது லிபியாவிற்குள் அல் குவேடாவின் லிபியத் தொடர்புடையவர்களை அதிகாரப்
பதவிகளுக்குள் இருத்தியது. இப்போர் பரந்த பிராந்தியத்திலும் ஆயுதங்களை வெள்ளமென
அளித்தது; அவை இப்பொழுது அல்ஜீரியாவிலும் அண்டை மாலியிலும் எழுச்சியாளர்களால்
பயன்படுத்தப்படுகின்றன.
அல்ஜீரிய இராணுவம்
இஸ்லாமியவாதிகளை
Tinguentourine
தளத்தை அழிப்பதில் இருந்து
தடுப்பதற்காகத் தாக்க முடிவெடுத்திருக்க வேண்டும்.
இது அல்ஜீரியாவின் இயற்கை
எரிவாயு ஏற்றுமதிகளில 18%
ஐ உற்பத்தி செய்கிறது.
தாக்குதலுக்கு முன்,
இஸ்லாமிய வாதிகள்
“இனி
திரும்புவதற்கில்லை என்ற கட்டத்திற்கும் அப்பால் சென்றுவிட்டனர்.... இது
நூற்றுக்கணக்கான பிணைக்கைதிகளுக்கு உண்மையான பேரழிவாகும்; அதேபோல் இயற்கை எரிவாயுத்
தளத்தில் நிறுவப்பட்டிருப்பவற்றிற்கும் பேரழிவாகும்” என்று அறிக்கை ஒன்றில்
கூறியுள்ளனர்.
ஓர் எழுத்தாளரும்
முன்னாள் அல்ஜீரிய இராணுவ அதிகாரியுமான யஸ்மினா கத்ரா, பிரெஞ்சு நாளேடான
Le
Parisien
இடம் இஸ்லாமிய வாதிகள்
“மிக
அதிக பாதிப்பாளர்களை இலக்கு கொண்டுள்ளனர், ஒருவேளை எரிவாயு நிலையத்தையும்
தகர்க்கலாம்—இதுதான் அல்ஜீரியப் படைகளின் உடனடி எதிர்நடவடிக்கைக்கு விளக்கம்
கொடுக்கிறது” என்றார்.
ஏகாதிபத்திய சக்திகள்
பிணைக்கைதிகள் நெருக்கடியில் எக்கொள்கையை பின்பற்றுவது என்பது குறித்து கருத்து
வேறுபாடுகளைக் கொண்டுள்ளன. ஜப்பானிய பிரதம மந்திரி ஷின்சோ அபே அல்ஜீரியப் பிரதம
மந்திரி அப்தெல்மாலிக் செல்லலைக் கூப்பிட்டு தாக்குதல்களை நிறுத்துமாறும்,
செயற்பாட்டிற்கு எதிரான “உறுதியான எதிர்ப்பை” பதிவு செய்யுமாறும் கோரினார்.
டோக்கியோ அல்ஜீரியத் தூதரையும் அழைத்துச் செயற்பாடுகள் குறித்து விளக்கம்
நாடியுள்ளது.
நெருக்கடியை அல்ஜியர்ஸ்
கையாளும் முறை குறித்து வாஷிங்டனும் அதிருப்தியைக் குறிப்பிட்டுள்ளது. வெள்ளை
மாளிகையின் தேசியப் பாதுகாப்புக் குழுவின் செய்தித் தொடர்பாளர்
Tommy Vietor,
ஜனாதிபதி பாரக் ஒபாமா
நெருக்கடியை கவனமாக கவனிக்கிறார் என்றும் அதுபற்றி பிரித்தானியப் பிரதம மந்திரி
டேவிட் காமரோனுடன் விவாதித்துள்ளார் என்றும் கூறினார். “அல்ஜீரிய அரசாங்கத்துடன்
இடைவிடா தொடர்பு கொண்டுள்ளோம், நம் முதல் முன்னுரிமை பிணைக் கைதிகளின் பாதுகாப்பு”
என்றார் Vietor.
அதே நேரத்தில்
வாஷிங்டன் அதன் அச்சுறுத்தும் வனப்புரையையும் தீவிரப்படுத்தி, அப்பிராந்தியத்தில்
தன் இராணுவத் தலையீட்டை விரிவாக்குவது குறித்துப் பரிசீலிப்பதாக அடையாளம்
காட்டியுள்ளது. அமெரிக்க அதிகாரிகள்,
அமெரிக்க டிரோன்கள்
அல்ஜீரியாவிற்கு மேலே பறக்கின்றன என்பதை உறுதிபடுத்தியுள்ளனர். இவை
Tinguentourine
தளத்தில் தகவல்களைச் சேகரிக்கின்றன
போலும்.
புதன் அன்று பாதுகாப்பு மந்திரி லியோன்
பானெட்டா ABC News
இடம் வாஷிங்டன் அல்ஜீரிய பிணைக்கைதிகள்
நெருக்கடியில்
“நம்
இராணுவச் சொத்துக்களை எப்படிக் கொண்டு வரலாம்”
என ஆராய்வதாகக் கூறினார்.
நேற்று பானெட்டா
காமெரோனைச் சந்தித்து அல்ஜீரிய பிணைக்கைதிகள் நெருக்கடி மற்றும் சிரியா, ஈரான்
குறித்த கொள்கைகளையும் விவாதித்தார். கூட்டத்திற்குப்பின் அவர் அல்ஜீரியா மற்றும்
பிராந்தியம் முழுவதும் இருக்கும் இஸ்லாமியவாதிகளை அச்சுறுத்தினார். “பயங்கரவாதிகள்
முன்னறிவிப்புப் பெற வேண்டும்—அவர்களுக்கு புகலிடம் இல்லை, அகதிகள் தகுதியும்
இல்லை—அல்ஜீரியா, வடக்கு ஆபிரிக்கா இன்னும் எந்த இடத்திலும் இல்லை.”
வியாழன் அன்று பானெட்டா
சிரிய ஜனாதிபதி பஷர் அல்-அசாத்தை அச்சுறுத்திய அறிக்கைகளையும் வெளியிட்டார்;
இவருக்கு எதிராக வாஷிங்டன் பினாமிப் போரை அதிதீவிர இஸ்லாமிய வாத கூறுபாடுகளுடன்
இணைந்து நடத்துகிறது. சரியான குறிப்பு இல்லாத தகவல் ஒன்றை மேற்கோளிட்டு அவர் அசாத்
சிரியாவிற்குள் இரசாயன ஆயுதங்களைப் பயன்படுத்த தயாரிப்புக்களைக் கொண்டுள்ளதாகக்
கூறினார்; இது சிரியா மீது அமெரிக்கப் படையெடுப்பைத் தூண்டும் என்றார். “எங்கள்
மிகப் பெரிய கவலை நாங்கள் பெற்றுள்ள உளவுத் தகவல் தான்—உண்மையில் அவர்கள்
இவற்றையெல்லாம் கூடுகளாக ஒன்றுபடுத்திப் பின் தங்கள் மக்களுக்கு எதிராகவே
பயன்படுத்த உள்ளனர் என்பதுதான்” என்றார் பானெட்டா.
அல்ஜீரிய செயற்பாட்டை
“சிக்கல் வாய்ந்தது” என்று அழைப்பதில் பாரிஸ் தனிமைப்படுத்தப்பட்டது; அதேபோல்
அல்ஜீயர்ஸ் மீது அழுத்தம் கொடுக்கவும் வாதிட்டுள்ளது. பிரெஞ்சு ஆளும்
வர்க்கத்திற்குள் பிணைக்கைதிகள் நெருக்கடி ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் மாலிப்
போருக்கு இருக்கும் பரந்த ஆதரவை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிடும் என்ற கவலைகளும்,
இது
தொழிலாள வர்க்கத்தின் நேரடி எதிர்ப்பிற்கும் வகை செய்யலாம் என்ற கருத்தும்
எழுந்துள்ளது.
“நிகழ்வுகளினால்
தெளிவாகப் பெரிதும் பாதிக்கப்பட்ட அரசியல் தலைவர்” என்று ஹாலண்டைக் கேலிசெய்து
செய்தி ஏடு
Rue89
எழுதியது:
“இப்படித்தான்
இருபது வெறிபிடித்த இஸ்லாமிய வாதிகள் விரைவில் இக்கொள்கையைச் சுற்றி இருக்கும்
சர்வதேச ஒருமித்த உணர்வைச் சிதைக்க முடியும். இப்படித்தான் சந்தேகம், அதிருப்தி
ஆகிவற்றின் முதல் விதைகள் தேசிய பொதுக்கருத்தில் வெளிப்படும்.”
மாலிக்குள் பிரெஞ்சு
மற்றும் மாலித் துருப்புக்கள் எழுச்சியாளர்கள் வசம் இருந்த சிறுநகரங்களான மத்திய
மாலியில் இருக்கும் கொன்னா மற்றும் டியாபலி ஆகியவற்றை மீண்டும் எடுத்துக் கொண்டன;
இது பலமுறை பிரெஞ்சு வான் தாக்குதல்களுக்குப் பின் வந்துள்ளது. பிரெஞ்சுப்
பாதுகாப்பு மந்திரி
Jean-Yves Le Drian
பிரெஞ்சுப் படைகள்
1,200 அல்லது
1,300 எழுச்சிப் படைகளைச்
சந்திக்கின்றன என்றார்.
ஐரோப்பிய ஒன்றியம்.
மேற்கு
ஆபிரிக்க துருப்புகள் பிரெஞ்சுப் போருக்கு உதவுவதற்கு ஈடுபடுத்திக் கொள்ள 50
மில்லியன் டாலர்கள் நிதி அளிப்பதாக உறுதியளித்துள்ளது. ஆனால் தங்கள் படைகளை அனுப்ப
மறுத்துவிட்டது.
இதற்கு முன் நடைபெற்ற
லிபியப் போர் போல், மாலிப்போர் பிராந்தியத்தில் வன்முறை விரிவாக வழிவகுக்கும் என்ற
அச்சங்கள் ஏற்கனவே வந்துள்ளன. நேற்று அமெரிக்கா ஆபிரிக்க கட்டுப்பாட்டுத் தளபதி
ஜெனரல் கார்ட்டர் ஹாம்
AQIM
வடக்கு மாலியின் நைஜீரிய இஸ்லாமியவாதக்
குழுவான Boko Haram
உடன் நிதிய மற்றும் செயற்பாட்டு
பிணைப்புக்களைக் கொண்டுள்ளது எனக் கூறியுள்ளார்.
ஐ.நா. அதிகாரிகள்
அறிக்கை ஒன்றை வெளியிட்டு, மாலியில் உணவுத் தட்டுப்பாடுகள் குறித்து எச்சரித்து,
பிரெஞ்சுபோர் தொடர்ந்தால் அகதிகள் எண்ணிக்கை 230,000ல் இருந்து 700,000 என உயரும்
என்றும் எதிர்பார்க்கின்றது.
World Food Program
உடைய
Zlatan Milisic கருத்துப்படி,
“பாதிக்கப்பட்ட
பகுதிகளில் கிட்டத்தட்ட 1.8 மில்லியன் மக்கள் வசிக்கின்றனர், அவர்களுள் மூன்றில்
ஒரு பகுதியினர் ஏற்கனவே உணவுப் பாதுகாப்பு இல்லாமல் இருகின்றனர்.”
மிக அதிக உணவுத்
தட்டுப்பாடுகள், சமைப்பதற்கான கருவிகள் தட்டுப்பாடு மற்றும் மத்திய மாலியில்
மருத்துவப் பொருட்கள் தட்டுப்பாடு என்ற தகவல்கள் உள்ளன; அங்கு இப்பொழுது போர் மையம்
கொண்டுள்ளது. |