WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Asia in 2013
2013ல் ஆசியா
Peter Symonds
18 January 2013
ஆசியாவில் தொழிலாள
வர்க்கமும் ஒடுக்கப்பட்ட மக்களும் இன்னும் ஆழ்ந்த பொருளாதார நெருக்கடி மற்றும்
அதிகரிக்கும் போர் அபாயம் ஆகியவற்றை எதிர்நோக்குகின்றனர். தேசியவாத, இராணுவ வாத
நச்சுகளில் ஆளும் வர்க்கங்கள் தங்கியிருக்கையில், தொழிலாளர்கள் சோசலிச
சர்வதேசியத்தின் அடிப்படையில் ஐக்கியப்படுவது ஓர் உடனடி அவசரத் தேவையாகிறது.
ஒரு புதிய உலகப்
போருக்கான வெடிப்புக்கோடுகள் ஆசியாவைத் தவிர வேறு எங்கும் இத்தனை வெளிப்படையாக
இல்லை. “ஆசிய பசிபிக்கில் முன்னிலை” என்னும் ஒபாமா நிர்வாகத்தில் நோக்கம்
பிராந்தியம் முழுவதும் பூகோள-அரசியல் அழுத்தங்களை உயர்த்தியுள்ளதுடன் பழைய இராணுவ
கூட்டுக்களை வலுப்படுத்தி, புதிய மூலோபாயப் பங்காளித்தனங்களை உருவாக்கி, சீனாவை
கட்டுப்படுத்தும் நோக்கத்தைக் கொண்டு புதிய தளங்களுக்கான ஏற்பாடுகளை நிறுவி மற்றும்
இராணுவ வளங்களை மறுநிலைப்படுத்தியுள்ளது.
கூட்டு நாடுகளும்
அவற்றின் நலன்களை மூர்க்கத்தனமாக உறுதிப்படுத்த ஊக்கம் கொடுக்கும் வகையில்,
அமெரிக்கா பிராந்தியத்தில் வெடிப்புத் தன்மை நிறைந்த நிலைமைக்கு எரியூட்டியுள்ளது.
வாஷிங்டன் கொடுத்த ஊக்கத்தினால், பிலிப்பைன்ஸ் மற்றும் வியட்நாம் ஆகியவை தென்
கிழக்கு ஆசிய நாடுகள் முன்னணியைக்
(Front
of South East Asian countries)
கொண்டுவர
முற்பட்டுள்ளன; இது தென்சீனக் கடலில் அவற்றின் சீனாவிற்கு எதிரான நிலப்பகுதிப்
பூசல்களுக்கு ஏற்றம் தரும் வகையில் உள்ளது. அமெரிக்க ஆதரவுடன் தென் கொரியா முந்தைய
சூரிய ஒளிக் கொள்கைக்கு முற்றுப்புள்ளி வைத்துவிட்டது; அதுவோ வட கொரியாவுடன்
உறவுகளைத் திறந்து கொள்ளும் நோக்கத்தைக் கொண்டிருந்தது; இதையொட்டி கொரியத்
தீபகற்பம் முழுவதும் அழுத்தங்கள் உயர்நிலையில் உள்ளன.
அமெரிக்க வெளியுறவுக்
கொள்கையின் பொறுப்பற்ற தன்மை ஜப்பானுக்கும் சீனாவிற்கும் இடையே கிழக்கு சீனக்கடலில்
பூசலுக்கு உட்பட்ட சென்காக்கு/டையோயு தீவுகள் குறித்து பிளவுகள் வெடித்திருப்பதில்
குறிப்பாக வெளிப்பட்டுள்ளது. செப்டம்பர் முதல்—அப்பொழுது டோக்கியோ சிறப்புக் கற்கள்
தாதுப்பொருட்களை “தேசியமயம் ஆக்கியதில் இருந்து”—ஜப்பானிய மற்றும் சீன கடற்படைக்
கப்பல்களும் இப்பொழுது விமானங்களும் ஆபத்து நிறைந்த செயற்பாடுகள்,
எதிர்செயற்பாடுகளில் அருகிலுள்ள நீர்நிலைகள் மற்றும் வான் பகுதியில் ஈடுபட்டு
வருகின்றன. உலகின் மூன்று பெரும் பொருளாதாரங்களான அமெரிக்கா, சீனா, ஜப்பான்
ஆகியவற்றின் மோதல்கள் தொடர்பான எந்த நிகழ்வையும் விரிவாக்கும் அச்சுறுத்தல்
ஏற்பட்டுவிட்டது.
ஒபாமா நிர்வாகத்தில்
பாசாங்குத்தனத்திற்கு எல்லைகளே இல்லை. அமெரிக்க உதவி வெளிவிவகாரச் செயலர் குர்ட்
காம்ப்பெல் நேற்று தீவு பற்றிய மோதலில் “அமைதியான நிலைப்பாடு தேவை” என
அழைப்புவிடுத்தார்; அதே நேரத்தில் அமெரிக்கா கூட்டுப் பயிற்சிகளை ஜப்பானுடன் அதன்
“தீவுப் பாதுகாப்பிற்காக” நடத்துகிறது. பிராந்திய மோதலில் வாஷிங்டனின் நடுநிலைமையை
அறிவிக்கும் அதே நேரத்தில் அமெரிக்க அதிகாரிகள் பலமுறையும் அமெரிக்கா தீவுகள்
குறித்து ஏதேனும் பூசல் எழுமாயின், ஜப்பானுடன் இராணுவரீதியாகச் சேரும் என்பதை
உறுதிபடுத்தியுள்ளது.
பெய்ஜிங்குடன் மோதுமாறு
டோக்கியோவிற்கு அழுத்தம் கொடுக்கையில், அமெரிக்கா ஜப்பானின் தேசியவாதம், இராணுவ
வாதம் ஆகியவற்றை புத்துயிர்ப்பூட்டுவதற்கு
உதவியுள்ளது; இவைதான் கடந்த மாதத் தேர்தல்களில் ஆதிக்கம் கொண்டிருந்து, ஒரு
வலதுசாரி அரசாங்கம் பிரதம மந்திரி சின்சோ அபே தலைமையில் நிறுவப்பட வகை
செய்துள்ளது. பதவிக்கு வந்த சில வாரங்களுக்குள்ளாக, இந்த அரசாங்கம் ஒரு
தசாப்தத்தில் முதல்முறையாக இராணுவச் செலவுகளில் அதிகரிப்பை அறிவித்து, பூசலுக்கு
உட்பட்ட தீவுகளை சுற்றியிருக்கும் ஜப்பானியப் படைகளுக்கு ஊக்கம் கொடுத்து,
இராஜதந்திர தாக்குதலில் தென் கிழக்கு ஆசியாவில் தன் பொருளாதார, மூலோபாய
பிணைப்புக்களை அதிகரிக்கவும் இறங்கிவிட்டது.
ஜப்பானின் போருக்குப்
பிந்தைய அரசியலமைப்பில் இருக்கும் “அமைதிவாத விதி” என அழைக்கப்படுவதை அபே
மாற்றித்திருத்த முயல்கிறார்; தற்பாதுகாப்பு படைகள் என்பதை “ஒரு சாதாரண இராணுவமாக”
மாற்ற; ஜப்பானிய ஏகாதிபத்தியத்தின் நலன்களைப் பெருக்கும் திறனுடையதாகச் செய்வதற்கு
முனைகின்றார். ஜப்பானிய இராணுவவாதத்தின் மறு எழுச்சி ஏற்கனவே பிராந்திய
உடன்பாடுகளில் மாற்றத்தைக் கொண்டுவந்துள்ளது; பிலிப்பைன்ஸ் அரசாங்கம் டோக்கியோவுடன்
நெருக்கமான ஒத்துழைப்பை அறிவித்துள்ளது, பகிரங்கமாக சீனாவிற்கு ஒரு எதிர்ச்
சமநிலையாக “இராணுவ முறையில் வலுவான ஜப்பானை” ஆதரிக்கிறது.
ஒபாமாவின் “ஆசியாவில்
முன்னிலை” என்பதற்குப் பின் இருக்கும் உந்து சக்தி மோசமாகிவரும் உலகப் பொருளாதார
நெருக்கடியாகும். அமெரிக்க அதன் பொருளாதாரச் சரிவை ஈடுகட்டும் வகையில் தன் உலக
மேலாதிக்கத்தை, குறிப்பாக ஆசியாவில் தக்க வைத்துக் கொள்ள இராணுவத்தைப்
பயன்படுத்துகிறது: இதுவோ பூகோளமயமாக்கப்பட்ட உற்பத்தியின் மையமாக உள்ளது. ஆனால்,
ஆசியப் பொருளாதாரங்கள், பொருளாதார வளர்ச்சிக்கு சுதந்திரமான உந்துசக்தியை
கொண்டிருப்பதற்கு முற்றிலும் மாறாக ஐரோப்பிய, அமெரிக்க ஏற்றுமதிச் சந்தைகளின் தீவிர
சரிவினால் பாதிக்கப்பட்டுள்ளன. சீனாவில் வளர்ச்சி விகிதம் 2012ல் 10.4ல் இருந்து
7.7 எனக்குறைந்து விட்டது; இந்தியாவில் 8.9 ல் இருந்து 5.5 எனக் குறைந்துவிட்டது.
ஜப்பான் மீண்டும் மந்தநிலைக்குச் சென்றுவிட்டது.
ஐரோப்பா, அமெரிக்காவில்
தம்மை ஒத்த ஆளும் வர்க்கங்களைப் போலவே, ஆசியாவிலும் பெருகும் பொருளாதாரப்
பிரச்சினைகளுக்கு ஒரு தீர்வுதான் உள்ளது: பொருளாதாரச் சுமையை தொழிலாள
வர்க்கத்தின்மீது உள்நாட்டிலும் போட்டியாளர்கள்மீது அயல்நாட்டிலும் ஏற்றுதல் என்பதே
அது. தேசியவாதம் என்னும் நச்சுப் புகைகள் பிராந்தியம் முழுவதும் எழுந்துள்ளன;
அரசாங்கங்கள் தங்கள் சிக்கன நடவடிக்கைகளால் தோற்றுவிக்கப்பட்டுள்ள பெருகிய சமூக
அழுத்தங்களை வெளிநாட்டு “விரோதிக்கு” எதிராகக் காட்ட முற்படுகின்றன.
தேசியவாத கூக்குரல்கள்
ஜப்பானிலும், சீனாவிலும் பெரிதும் தூண்டப்படுபவை, அந்த அரசாங்கங்களின்
பொருளாதாரங்கள் சுருங்குகையில் எழும் சமூக எழுச்சி குறித்த அச்சத்தில்
வேரூன்றியுள்ளன. இதேபோல் இந்தியாவிற்கும் பாக்கிஸ்தானுக்கும் இடையே காஷ்மீர்
எல்லைப்பிரச்சினை, ஏற்கனவே இரண்டு போர்களை ஏற்படுத்தியது, மீண்டும் புது டெல்லியும்
இஸ்லாமாபாத்தும் வகுப்புவாத விரோதங்களை தங்கள் நெருக்கடியில் இருந்து கவனத்தைத்
திசைதிருப்பத் தூண்டிவிடுகையில் வெடித்தெழச் செய்துள்ளன.
தேசியவாத உணர்வின்
பெருக்கு ஆயுதப் போட்டிகளை வளர்ச்சியுடன் இணைந்து வருகிறது. வாஷிங்டன் சீனாவின்
பாதுகாப்பு செலவினை உயர்த்திக் காட்ட விரும்புகையில், இராணுவச் செலவுகள்
பிராந்தியம் முழுவதும் அதிகரித்துள்ளன.
International
Institutte for Strategic Studies உடைய கருத்தின்படி, கடந்த ஆண்டு இராணுவச்
செலவினங்களில் ஆசியா ஐரோப்பாவை
தாண்டிச்செல்லவுள்ளது.
2011ல்
சீனா,
ஜப்பான்
மற்றும் இந்தியாவின் பாதுகாப்புத்துறை செலவினங்கள்
முறையே
89.9
பில்லியன் அமெரிக்க டாலர்கள்,
58.2
பில்லியன் அமெரிக்க டாலர்கள் மற்றும்
37
பில்லியன் அமெரிக்க டாலர்கள் என உள்ளன.
தென்கிழக்கு ஆசிய நாடுகள் கூட்டாக அவற்றின் பெருகிய செலவினங்களை 13.5% என உயர்த்தி
$24.5 பில்லியனாக்கியுள்ளன.
அமெரிக்கப் பாதுகாப்பு, கிட்டத்தட்ட $670 பில்லியன் என்ற நிலையில்,
அனைத்து
போட்டியாளல்கள்
அனைவரையும்
அற்பமாக்கிவிடுகிறது.
தெளிவான வேறுபாடுகள்
இருந்தபோதிலும், தற்போதைய நிலைமை போருக்கு முந்தைய 1930களின் காலத்துடன்
ஒற்றுமைகளைக் கொண்டுள்ளது; அப்பொழுது ஜப்பானிய ஏகாதிபத்தியம் தன்னை பொருளாதார மந்த
நிலையில் இருந்து காலனித்துவ முறை வெற்றி மூலம் மீட்டுக் கொள்ள முற்பட்டது.
சீனாவில் அதன் இராணுவ ஆக்கிரமிப்பு ஜப்பானை அமெரிக்க ஏகாதிபத்தியத்துடனான மோதல்
போக்கில் கொண்டுவந்துவிட்டது: இதையொட்டி ஆசியா மற்றும் பசிபிக் பிராந்தியம்
முழுவதும் போர் ஏற்பட்டது. கடந்த இரு தசாப்தங்களில் சோவியத் ஒன்றியத்தின் சரிவு,
சீனா முதலாளித்துவ மறுபுனருத்தானம் மற்றும் இந்தியா சந்தைச் சார்புடைய
கொள்கைகளுக்குத் திரும்பியிருப்பது ஆகியவை பெரும் விழைவுடைய முதலாளித்துவ
உயரடுக்குகளை ஏகாதிபத்திய ஒழுங்கமைப்பில்
தங்களுடைய இடத்தைத் தேட வைத்துள்ளன; இது பிராந்தியப் போட்டியைப் பெரிதும்
உயர்த்தியுள்ளதுடன், பேரழிவு தரும் அணுவாயுத மோதல் என்னும் ஆபத்தையும்
அதிகரித்துவிட்டது.
இதே நிகழ்ச்சிப்போக்கு
ஆசியாவில் தொழிலாளர் வர்க்கம் பரந்து விரிவடையவும் வழிவகுத்துள்ளது. இது இப்பொழுது
உலகின் மக்கட்தொகையில் பாதிக்கும் மேலானவர்களுக்குத் தாயகம் ஆகும். உலகெங்கிலும்
இருக்கும் தன் வர்க்கச் சகோதரர்கள், சகோதரிகளுடன் இந்த ஒரு சமூக சக்திதான்
மோசமாகிவரும் சமூக இழிநிலையைத் தடுத்து நிறுத்தவும் போர் என்னும்
காட்டிமிராண்டித்தனத்திற்குள் வீழ்ச்சியடையாமல் இருக்கவும் அதன் மூலகாரணமாகிய
முதலாளித்துவத்தை இல்லாதொழித்து திட்டமிட்ட சோசலிச பொருளாதாரத்தை உருவாக்கும் திறனை
உடையது. எல்லாவற்றிற்கும் மேலாக, அதற்கு அனைத்துவித தேசியவாதம், வகுப்புவாதம்
இவற்றிற்கு எதிரான அரசியல் போராட்டம் தேவைப்படுகிறது; இதற்கு சர்வதேச அளவில்
தொழிலாளர்கள் ஐக்கியப்படுத்தப்பட வேண்டும். அதையொட்டி, தொழிலாள வர்க்கம்
ஸ்ராலினிசத்துடனும்
அதிலும்
குறிப்பாக அதன் மாவோயிச வகையறாக்களுடனும்
அரசியல்
கணக்கை தீர்த்துக் கொள்ள வேண்டும்.
இது
தொழிலாள வர்க்கத்தை தேசிய முதலாளித்துவத்திற்கு அடிபணியச்செய்துவிட்ட நிலையில்
பேரழிவு தரும் ஒரு காட்டிக் கொடுப்பில் இருந்து மற்றொரு காட்டிக் கொடுப்பிற்கு
பொறுப்பைக் கொண்டுள்ளது.
இதன் அர்த்தம் 20ம்
நூற்றாண்டு முழுவதும் ஸ்ராலிசத்திற்கு எதிரான சர்வதேச ட்ரொட்ஸ்கிச
இயக்கத்தின் நீடித்த போராட்டத்தில் இருந்து
அவசியமான
படிப்பினைகளை எடுத்துக் கொண்டு எதிர்விருக்கும் புரட்சிகரப் போராட்டங்களுக்குத்
தலைமை தாங்க நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவின் பிரிவுகளை ஆசியா முழுவதும்
கட்டமைக்கவேண்டும். |