தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஐரோப்பா : பிரான்ஸ் French unions agree to pro-corporate labor “reforms” பிரெஞ்சுத் தொழிற்சங்கங்கள் பெருநிறுவனச் சார்பு தொழிலாளர்துறை “சீர்திருத்தங்களுக்கு” உடன்படுகின்றன
By Pierre Mabut use this version to print | Send feedbackகடந்த வெள்ளியன்று பிரெஞ்சு முதலாளிகள் சங்கமான மெடெபிற்கும் (Medef) தொழிற்சங்கங்களுக்கும் இடையே முதலாளிகளுக்கு கூடுதலான “வளைந்து கொடுக்கும் தன்மையை” சுமத்த அனுமதிக்கும் உடன்பாடு ஏற்பட்டது—“வளைந்து கொடுக்கும் தன்மை” என்பது வேலைப் பாதுகாப்புக்களை விரைவாக அகற்றுவது என்பதற்கு குறியீட்டுச் சொல் ஆகும். தொழிற்சங்கங்கள் மற்றும் வணிக அதிகாரிகள் இந்நடவடிக்கைகளை போட்டித்தன்மை வேலை தோற்றுவித்தல் ஆகியவற்றிற்கு ஒரு வரம் என விவரித்தனர். இம் முன்மொழிவுகள், ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி (PS) அரசாங்கத்தால் விரைவுபடுத்தப்பட்டன. இவை ஒருதலைப்பட்ச ஊதிய வெட்டுக்கள், பணிநேர அதிகரிப்புக்கள், பணிநீக்கங்களுக்கு சாதகமாக, தொழிலாளர்களின் சட்டபூர்வ பாதுகாப்புக்களை குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாகும். பேச்சுக்களுக்கு முன், ஹாலண்ட் “வரலாற்றுத் தன்மை கொண்ட சமரசத்திற்கு” அழைப்பு விடுத்தார். உண்மையில் இந்த உடன்பாடு தொழிற்சங்கங்கள் முதலாளிகள் மற்றும் அரசாங்கம் ஆகியவை தொழிலாள வர்க்கத்திற்கு எதிராக நடத்தும் தாக்குதலுக்கு இன்னும் கூடுதலான நிபந்தனையற்ற சரணடைவாகும். மெடப் சார்பில் பிரதான பேரம்பேச்சாளரான பாட்ரிக் பெர்னஸ்கோனி தொழிற்சங்கங்களின் சரணடைவை அடிக்கோடிட்டு அறிவித்தார்: “மூன்று மாதங்களாக இப்பணியில் நாங்கள் ஈடுபட்டபின் மகிழ்ச்சியாக உள்ளோம்.” மெடப்பின் தலைவர் லோரென்ஸ் பாரிசோ அரசாங்கம் பெருநிறுவன சமூகச் செலவுகளில் 22 பில்லியன் யூரோக்கள் வெட்டுக்களை ஏற்படுத்தியது மற்றும் புதிய “வளைந்து கொடுக்கும் தன்மை உடைய” உடன்பாடு ஆகியவற்றினால் “பிரான்ஸ் தன் போட்டித்தன்மையை மீண்டும் பெறுவதில் கணிசமான வெற்றியைப் பெறத் தொடங்கும்” எனக் கொள்ளலாம் என்றார். ஜனாதிபதி ஹாலண்ட் இந் உடன்பாடு “சமூக உரையாடலுக்கு ஒரு வெற்றி” எனக் கூறினார். தொழிலாளர்களுக்கு மிகப் பெரிய அடி, முதலாளிகளுக்கு வரம்பற்ற குறைந்த கால உழைப்பு நேரத்தை இரண்டு ஆண்டுக் காலத்திற்கு அறிமுகப்படுத்தும் உரிமை ஏற்கப்பட்டுள்ளது ஆகும்; இதையொட்டி தொழிலாளர்களின் வருமானங்களில் குறைவு ஏற்படும். முதலாளிகள் பணிநீக்க அச்சுறுத்தலைப் பயன்படுத்தி குறுகிய கால பணிநேர ஆட்சியைச் சுமத்த முடியும்: பெரும்பாலான தொழிலாளர்களை கொண்ட தொழிற்சங்கம் அத்தகைய திட்டத்தை ஏற்கும். இப்புதிய சட்டம் நடைமுறையில், தொழிலாளர்களின் வருமானங்களைக் குறைக்குமாறு மிரட்ட முதலாளிகளுக்கு ஊக்கம் அளிக்கிறது. இதைத்தவிர, நிறுவனங்கள் தொழிலாளர்களை ஒரு பணியில் இருந்து வேறு பணியில் ஈடுபடுத்தும் உள் இயக்க விதிகளும் உள்ளன. பல தசாப்தங்கள் போராடிப் பெற்ற வேலைப் பாதுகாப்புக்கள் மற்றும் பணிநேர உரிமைகளை தியாகம் செய்துள்ளதற்கு ஈடாக, நிறுவனங்கள் மீண்டும் இலாபம் அடையத் தொடங்கினால் அதன் நலன்களை பகிர்ந்துகொள்ளும் என்னும் உறுதிமொழியை தொழிற்சங்கங்கள் கூறுகின்றன. இந்த உடன்பாட்டில் 50 தொழிலாளிகள் அல்லது அதற்கும் குறைவானவர்களைக் கொண்டிருக்கும் நிறுவனங்களுக்கு “ஒரு பரிசோதனையாக” புதிய “தற்காலிக நிரந்தர ஒப்பந்தம்” அடங்கியுள்ளது. இந்த உடன்பாடு நிறுவனங்களை “நிரந்தரத்” தொழிலாளர்களை அவ்வப்பொழுது வேலையில் அமர்த்தவும் நீக்கவும் அனுமதிக்கும்; ஒரு குறிப்பிட்ட வேலை முடிந்தவுடன் பதவியில் இருந்து தொழிலாளர்கள் நீக்கப்பட முடியும். இந்த உடன்பாடு ஐந்து உத்தியோகபூர்வ தொழிற்சங்கக் கூட்டமைப்புக்களில் மூன்று —CDFT (பிரெஞ்சு ஜனநாயகத் தொழிலாளர்கள் கூட்டமைப்பு), CFTC (பிரெஞ்சு கிறிஸ்துவ தொழிலாளர் கூட்டமைப்பு), நடுநிலை மேலாளர்கள் சங்கம் CFE-CGC— ஆகியவை முதலாளிகளுக்கான சலுகையை ஏற்றவுடன் நடைமுறைக்கு வந்தது; அவை தங்கள் சமூகச் செலவுகளை ஒரு மாத குறுகிய கால ஒப்பந்தமாக ஊதியத்தில் 7% என்பதற்கு ஒப்புக்கொண்டன; மூன்று மாத ஒப்பந்தங்களுக்கு 5.5% எனவும் ஒப்புக்கொண்டன. இச்சலுகையினால் முதலாளிகளுக்கு கிடைக்கும் செலவுக் குறைப்பான 110 மில்லியன் யூரோக்கள் அவர்ளுக்கு விலக்களிக்கப்படும், சமூகச் செலவுகள், முதல் மூன்று மாதங்கள் நிரந்த ஒப்பந்தம் என புதிய தொழிலாளர் 26 வயதுக்குள் இருப்பவர்களுக்கு என்பதில் சரி செய்யப்படும்; இதையொட்டி முதலாளிகள் 155 மில்லியன் யூரோக்களைச் சேமிப்பர். தொழிற்சங்கங்களை இன்னும் அதிக அளவு நிர்வாகத்துடன் ஒருங்கிணைக்க, அவற்றிற்கு இயக்குனர் குழுவில் இரு இடங்கள் கொடுக்கப்பட்டுள்ளன; இது உலகெங்கிலும் 10,000க்கும் மேற்பட்ட ஊழியர்களைக் கொண்ட நிறுவனங்களுக்கும், பிரான்சில் 5,000 அல்லது அதற்கும் அதிகமாக தொழிலளர்கள் உள்ள நிறுவனங்களுக்கும் பொருந்தும். சோசலிஸ்ட் கட்சியுடன் பிணைந்துள்ள CFDT யின் சார்பில் பேச்சுக்களை நடத்தியவர், இந்த உடன்பாட்டை “வேலைகளுக்கு விழைவுகளை ஏற்படுத்தும், வேலைப் பாதுகாப்பின்மையை பின்னுக்குத் தள்ளும்” என விபரித்தார். இரண்டு பிற உத்தியோகபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ள தொழிற்சங்கங்கள், CGT எனப்படும் பொதுத் தொழிலாளர் கூட்டமைப்பு, மற்றும் தொழிலாளர் சக்தி FO ஆகியவை உடன்பாட்டில் கையெழுத்திட மறுத்துவிட்டன. ஆனால் அடுத்தமே இந்த உடன்படிக்கையின் அடிப்படையில் தயாரிக்க இருக்கும் புதிய சட்டத்தை எதிர்க்கத் தொழிலாளர்களை அணிதிரட்டும் நோக்கத்தை கொண்டிருக்கவில்லை. அவை முந்தைய வலதுசாரி நிக்கோலோ சார்க்கோசியின் அரசாங்கத்துடனும் தொழிலாளர் சந்தை “சீர்திருத்தம்” 2008 ல் வந்தபோது ஒத்துழைத்தன. Nouvel Observateur, ஓய்வுபெறும் CGT தலைவர் பேர்னார்ட் தீபோ, வளைந்து கொடுக்கும் தன்மை பற்றிய சலுகைகள் குறித்து PS அரசாங்கம் இயற்றும் சட்டங்களுக்கு ஆதரவு கொடுப்பார் எனக் கூறியுள்ளது; அவருடைய கருத்தில் இது தொழிலாளர்களுக்குக் கூடுதல் பாதுகாப்பைத் தரும். ஆனால், ஹாலண்ட் தொழிலாளர் சார்பு நடவடிக்களுக்கு ஆதரவு கொடுப்பார் என்னும் போலித்தனம் கடந்த ஆண்டு அவர் பதவிக்கு வந்ததில் இருந்து எடுத்துள்ள நடவடிக்கைகளில் இருந்து நன்கு தெரிகிறது. அவர் சிக்கனக் கொள்கைகளை அறிவித்துள்ளதுடன், பெருவணிகத்தின் போட்டித்தன்மையை அதிகரிக்கும் வகையில் தொழிலாளர் செலவுகளைக் குறைக்க உறுதியளித்துள்ளார். PSA Peugeot-Citroën உடைய ஒல்னே ஆலை, பிளோரஞ்சில் இருக்கும் ஆர்சிலோர் மெட்டால் ஆலை மூடல்களில், PS அரசாங்கம் கூட்டுத் தொழிற்சங்க உடன்பாடுகளில் பங்கு பெற்றது, இது அதன் தொழிலாள வர்க்க விரோதத் தன்மைக்கு மேலதிக சான்றுகள் ஆகும். தொழிலாளர் சந்தை வல்லுனரும் Manpower குழுவின் பொது விவகாரங்கள் பிரிவின் தலைவருமான Charles de Froment முதலாளிகள் பெற்றுள்ள “வளைந்து கொடுக்கும் தன்மை” உடன்பாட்டின் மிக முக்கியமான விளைவாகும் ஏன்றார். “இது இறுதியில் நிரந்தர, குறுகிய கால ஒப்பந்தங்கள் என பிரெஞ்சுத் தொழிலாளர் சந்தையில் இருக்கும் இரட்டை முறையை படிப்படியாக மாற்றிவிடும்.” என்றார் அவர். CGT ஒப்புதலுடன் Manpower தான் பிரான்சில் 1969ல் அவை சட்டபூர்வமாக 1972ல் வருவதற்கு முன் தற்காலிக ஒப்பந்தங்களை அறிமுகப்படுத்திய முதல் நிறுவனம் ஆகும். முன்னாள் ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசிக்கு ஆலோசகராக இருந்த Raymond Soubie, “வளைந்து கொடுக்கும் தன்மை” புதிய செயற்பாடா என வினவப்பட்டதற்கு கூறினார்: “ஒவ்வொரு ஆண்டும் தொழிற்சங்கங்கள், முதலாளிகளுடன் நிறுவப்பட்ட தொழிலாளர் உறவுகள் செயற்பட்டியலை நாம் விரைவில் மறந்துவிட்டோம்; அதேபோல் சமூகப் பங்காளிகளுடன் முடிக்கப்பட்ட அனைத்து உடன்படிக்கைகளையும் மறந்து விட்டோம். அவற்றுள் சில ஒருமனதாக சார்க்கோசியின் கீழான கடைசிப் பாராளுமன்றத்தில் இயற்றப்பட்டன.” இது சோசலிஸ்ட் கட்சி அரசாங்கத்தின் தொழிலாளர் சமூக உரிமைகள் மீதான தாக்குதல் எப்படி முந்தைய அரசாங்கத்துடன் தொடர்ந்து வருகிறது என்பதை சுருக்கமாகக் காட்டுகிறது. |
|
|