சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The Middle East in 2013

2013இல் மத்திய கிழக்கு

Chris Marsden
12 January 2013

use this version to print | Send feedback

மத்திய கிழக்கில் தொழிலாளர்களும் ஒடுக்கப்படுவோரும்  குருதிகொட்டும் குறுங்குழுவாதப் போர்கள், அரச அடக்குமுறை மற்றும் தொடர்ந்து வறுமையில் சரியும் எதிர்காலத்தை முகங்கொடுக்கின்றனர். அனைத்துமே 2011இல் ஆரம்பித்த புரட்சிகர எழுச்சியை புதுப்பிப்பதில்தான் தங்கியிருக்கின்றது. ஆனால் இம்முறை அது தொழிலாள வர்க்கத்தின் சுயாதீன அரசியல் நலன்களை வெளிப்படுத்தும் வேலைத்திட்டத்தைத் அடித்தளமாகக் கொண்டிருக்க வேண்டும்.

இரண்டு ஆண்டுகளுக்குப் பின்னர், “அரபு வசந்தத்துடன்இணைந்து வந்த கபடமற்ற நப்பாசைகளான மத்திய கிழக்கில் அனைத்து வர்க்கத்தினரும் பிரதான சக்திகளின் ஆதரவுடனான ஒரு ஜனநாயகத்திற்கான விருப்பத்தைப் பகிர்ந்து கொள்கின்றனர் என்னும் நம்பிக்கை சிதைந்துவிட்டன.

2013, துருக்கிய-சிரிய எல்லைக்கு 6 பிரிவு பாட்ரியட் ஏவுகணைகள் அனுப்பப்பட்டதுடன் ஆரம்பித்தது. இது உலகம், அமெரிக்காவும் மற்றும் அதன் நேட்டோ நட்பு நாடுகளும் வேண்டுமென்றே உருவாக்கிய குறுங்குழுவாத உள்நாட்டுப் போரெனும் ஒரு இராணுவ தலையீட்டின்  விளிம்பில் உள்ளது என்பதற்கான தெளிவான அடையாளம் ஆகும்.

இந்த ஏவுகணைகளுடன் கிட்டத்தட்ட 1,200 துருப்பினர், ஏற்கனவே பஹ்ரைன், கட்டார், ஐக்கிய அரபு எமிரேட்டுக்கள், குவைத், லெபனான், ஜோர்டான் மற்றும் சிரியாவில் இருக்கும் பல்லாயிரக்கணக்கான படையினருடனும் மற்றும் சிரியாவில் களத்தில் இருக்கும் உளவுத்துறை பிரிவினர் ஆகியோருடன் இணைந்துள்ளனர். அமெரிக்கா, பிரித்தானியா, பிரான்ஸ் ஆகியவற்றில் இருந்து 17 போர்க்கப்பல்கள் இப்பொழுது சிரியாவை அண்மித்த நீர்நிலையில் உள்ளன. மேற்கு இராணுவப் படையினர் துருக்கி மற்றும் வளைகுடா முடியரசுகள் ஆகியவற்றின் மூலம் வாஷிங்டன் செயல்படுத்தக்கூடிய எத்தலையீட்டிற்கும் ஆதரவு கொடுப்பதற்குத் தயாராக இருக்கின்றனர்.

வெளிப்படையான இராணுவ ஆக்கிரோஷம் இல்லை என்றாலும், மேற்கத்தைய சக்திகள் முஸ்லிம் சகோதரத்துவம மற்றும் அல்-குவைதா  மாதிரி இயக்கங்களான ஜபத் அல்-நுஸ்ரோ போன்றவை அடங்கியுள்ள ஒரு சுன்னி எழுச்சிக்கு ஆதரவு கொடுக்கும் வகையில் இழிந்த குற்றம் ஒன்றைச் செய்துவிட்டன. இந்த ஏகாதிபத்திய சதித்திட்டத்திற்கு கொடுக்கப்படும் விலை பல்லாயிரக்கணக்கான மக்கள் இறந்ததும், காயமுற்றதும் மற்றும் சிரியாவின் பொருளாதாரம், உள்கட்டமைப்பு ஆகியவை அழிக்கப்பட்டுவிட்டதும் ஆகும்.

ஒரு குறுங்குழுவாதப் போர் என்னும் உண்மையை ஐக்கிய நாடுகள் சபை  ஒப்புக் கொள்ளும கட்டாயத்தில் உள்ளது. இது யூகோஸ்லாவியா  மாதிரியான இனச்சுத்திகரிப்பு முழுச் சமூகங்களையும் அச்சறுத்தி இறப்பு ஆபத்துக்களையும் கொடுக்கும். ஆனால் இவ்வாறான கொலைகள்  தலையிடுவதற்கு ஒரு வாதமாகத்தான் பயன்படுத்தப்படும். முக்கிய செய்தி ஊடகங்கள் போர்ப்பிரச்சாரத்திற்கு குரல் கொடுக்கும் வேலையைத்தான் செய்கிறது. அல்-குவைதாவுடன் அமெரிக்கா கொண்டுள்ள நட்பைப் பொருட்படுத்தவில்லை, முதலில் அசாத் ஆட்சி இரசாயன மற்றும் கண்டம் கடக்கும் ஆயுதங்களைப் பயன்படுத்தத் தயாராக உள்ளது என்று கூறுவதும், பின்னர் இந்த ஆயுதங்களை எதிர்த்தரப்பு சக்திகள் கைப்பற்றிவிடுவதால் வரும் ஆபத்துக்களைக் குறித்து எச்சரிப்பதுமான ஒரு அங்குமிங்குமான நிரந்தரமற்ற பாதையை தொடர்கின்றன.

அசாத் ஆட்சியின் வீழ்ச்சி இதில் அமைதியைக் கொண்டுவந்து விடப்போவதில்லை. அதற்குப் பதிலாக ஒரு மிருகத்தன அரசாங்கம் பதவியில் இருத்தப்படும். அது அலவைட்டுக்கள், கிறிஸ்துவர்கள் இன்னும் பிற சிறுபான்மையினர் மீது பழிதீர்க்கும் நடவடிக்கைகளை தொடரும். அது நாடு பல இனவழிச் சிறுபகுதிகளாக சிதைந்து போவதில் முடிவுறும். லிபியாவில் நடைபெற்றது இதற்கு ஒரு எச்சரிக்கையாகும். பிரதம மந்திரி அலி ஜெய்டன் இந்த வாரம் போட்டிக் குழுக்களிடையே முக்கிய எண்ணெய் விநியோகங்கள் மீது உள்ள கட்டுப்பாடு தொடர்பான மோதல்களை எதிர்கொள்ளும் வகையில்நாட்டைப் பாதுகாக்க பலம் பயன்படுத்தப்படும்என்று அச்சுறுத்தியுள்ளார்.

மத்திய கிழக்கில் மேலாதிக்கத்தைப் பெற விரும்பும் நீண்டக்கால அமெரிக்க முயற்சிகளில் அசாத்தின் வீழ்ச்சி ஒரு முக்கிய கூறுபாடு ஆகும். இம்முயற்சிகள் அமெரிக்காவின் பிராந்திய முக்கிய நண்பர்களான துனிசியாவின் பென் அலி, மற்றும் எகிப்தின் ஹொஸ்னி முபாராக் 2011 இல் தூக்கிவீசப்பட்டதை எதிர்கொள்ளும்வகையில் முடுக்கிவிடப்பட்டது.  அமெரிக்கக் கொள்கை லிபியாவில் நடத்தப்பட்டது போன்ற ஆக்கிரோஷ இராணுவத் தலையீடுகள் மற்றும் சுன்னி அரபு ஆட்சிகளின் கூட்டைப் பெறுவது மற்றும் ஈரானில் இருக்கும் ஷியைட் ஆட்சிக்கும் அதன்  ஆதரவாளருக்கும் எதிரான இயக்கங்களுடனான கூட்டு என்பது அதில் உள்ளது. இதன் இலக்கு ஆட்சி மாற்றத்தை டமாஸ்கஸிலும் தெஹ்ரானிலும் கொண்டுவருவது என்பதுடன், தொழிலாள வர்க்கம் இணைந்த நடவடிக்கை எடுப்பதை தடுக்க பிராந்தியம் முழுவதும் பிளவுகளைத் தூவுதல் மற்றும் இஸ்லாமியவாதிகளின் அதிகாரத்தைக் சமூகப் புரட்சிக்கு எதிரான ஒரு அரணாகக் கட்டமைத்தலுமாகும்.

இந்த இலக்கைக் கருத்திற் கொண்டு, வாஷிங்டன் சிரிய எதிர்ப்பின் ஜனநாயக மதிப்புகளுக்கு ஆதரவைக் கொடுத்து, பஹ்ரைன், யேமன், சவுதி அரேபியா போன்ற நாடுகளில் எதிர்ப்புக்களை அடக்குவதற்கும் ஆதரவு கொடுக்கிறது. இத்தகைய வழிவகையில் வாஷிங்டன் இந்த அரசாங்கங்களை அரசியல்ரீதியாகவும் இராணுவரீதியாகவும் அமெரிக்கவை நம்பியிருக்குமாறு உறுதிப்படுத்திக்கொள்வதுடன், தெஹ்ரான், மாஸ்கோ மற்றும் பெய்ஜிங் ஆகியவற்றின் இப்பிராந்திய விழைவுகளைத் தடைக்கு உட்படுத்த ஒரு கூட்டாக இயங்க தயாராக இருக்குமாறும்  செய்கின்றது.

இந்த இலக்கிற்காக ஒபாமா நிர்வாகம் தற்பொழுது எகிப்திற்கு 200 M1A1 ஆப்ராம் போர் டாங்கிகள் மற்றும் 20 F16 போர்விமானங்கள் என்று முபாரக்கின் கீழ் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒப்பந்தத்தின்கீழ் கொடுக்கிறது. இம்மாதம் அது லெபனானுக்கு 200 கூடுதலான  படையினரை இட்டுச் செல்லும் M113 கவச வாகனங்களைக் (APCs) கொடுத்தது. இது இராணுவத்தின் மொத்த APC க்களை 1,200க்கு உயர்த்தியுள்ளது. இதற்கு கூறப்படும் நோக்கம்எல்லைகளையும் உள்நாட்டு உறுதிப்பாட்டையும் பாதுகாப்பதை வலுப்படுத்துவது என்பதாகும்.

ஈரான் தற்பொழுது முடக்கும், ஸ்திரப்பாட்டை குலைக்கும் பாதிப்பைக் கொண்டுள்ள பொருளாதாரத் தடைகளின் இலக்காக உள்ளது. இதனால் அந்நாட்டில் முக்கிய எண்ணெய் இறக்குமதிகளில் 55% சரிவும் அதன் நாணய மதிப்பில் சரிவும் ஏற்பட்டுள்ளன. ஆனால் ஒரு இராணுவத் தாக்குதல் திரும்பதிரும்ப இஸ்ரேலினால் அச்சுறுத்தப்பட்டுள்ளது.

மத்திய கிழக்கில் எந்த நாட்டிலும் உள்ள சர்வாதிகார ஆட்சியும் பெருகும் மக்கள் எதிர்ப்பை முகங்கொடுக்காத நிலையில் இல்லை. ஆனால் எங்கும் தொழிலாள வர்க்கம் தன்னுடைய அரசியல் விருப்பத்தை உறுதிப்படுத்தவும் முடியவில்லை. மாறாக அது ஆளும் வர்க்கத்தின் போட்டிக்குழுக்களைப் பிரதிபலிக்கும் இஸ்லாமியவாத, தேசிய அல்லது தாராளவாதம் என்ற பொறியில் அகப்பட்டுள்ளது. இது எதிர்க்கப்படவில்லை என்றால், சிரியாவில் தோற்றுவிக்கப்பட்டுள்ள குறுங்குழுவாத சதுப்புநிலம் ஈராக், ஜோர்டான், லெபனான் மற்றும் துருக்கியில் ஏற்படும்.

முபாரக்கை அகற்ற வேண்டும் என்பதற்கான அடிப்படை உந்துதல் தொழிலாள வர்க்கத்திடம் இருந்து வந்தது. பல தசாப்தங்களாக உள்ள சமூக, அரசியல் அடக்குமுறைக்குத் தீர்வு காண்பதற்கு மில்லியன் கணக்கான தொழிலாளர்கள் செயல்படத் தொடங்கியபின்தான், முபாராக் ஆட்சியை விட்ட அகன்றார். ஆனால் இன்று, எகிப்தின் 80 மில்லியன் மக்களில் கிட்டத்தட்ட 25% இனர் அவநம்பிக்கையான வறுமையில் உள்ளனர். பணவீக்கம் மிகப் பெரிய அளவு உயர்ந்துவிட்டது. ஜனாதிபதி மொர்சி சர்வதேச நாணய நிதியத்தின் உத்தரவுப்படி மிருகத்தன வெட்டுக்களை சுமத்த இருக்கிறார்.

இவை அனைத்துமே முதலாளித்துவத் தாராளவாத எதிர்ப்பினால் பொருட்படுத்தவில்லை. அதன் நோக்கம் முஸ்லீம் சகோதரத்துவம் மற்றும் இராணுவத்துடன் புதிய அரசியல், பொருளாதார கட்டமைப்பை  உறுதி செய்து கொள்ளுவதாக இருக்கிறது. இதே அடிப்படை உந்துதல்தான் மத்தியக் கிழக்கில் எதிர்த்தரப்பு முதலாளித்துவ போக்கின் ஒவ்வொரு பிரிவிற்கும் தங்கள் சொந்த தொழிலாளர்களை சுரண்டும் உரிமையை பாதுகாத்தல், மேலைச் சக்திகளுடன் தங்கள் தொடர்புகளைத் தக்க வைத்தல் மற்றும் சர்வதேச நிறுவனங்கள், வங்கிகளுடன் தொடர்புகளைத் தக்க வைக்க ஊக்கம் கொடுக்கிறது.

பிராந்தியத்தின் தொழிலாளர்கள் மற்றும் இளைஞர்களின் முக்கிய அரசியல் பணி, ஆளும் ஆட்சிகளுக்கும் அவற்றின் முதலாளித்துவ போட்டியாளர்களுக்கும் மற்றும் இவற்றிற்கு நிதி கொடுக்கும் ஏகாதிபத்திய சக்திகளுக்கும் எதிரான ஒரு ஐக்கியப்பட்ட சோசலிச இயக்கத்தை இணைத்துக் கொண்டுவருதலாகும். தொழிலாள வர்க்கத்தின் நோக்கம் வறிய விவசாயிகள் மற்றும் ஒடுக்கப்பட்ட மத்தியதர அடுக்குகளை தம்பின்னே அணிதிரட்டி இதன் மூலம் மத்திய கிழக்கு ஐக்கிய சோசலிச அரசுகளை அமைக்க ட்ரொட்ஸ்கியின் நிரந்தரப் புரட்சி தத்துவத்தின் கீழ் சுயாதீன புரட்சிகரக் கட்சிகளை கட்டுவதாக இருக்கவேண்டும்.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பாவில் தொழிலாளர்கள் தங்கள் சக்திக்கு ஏற்ப தங்கள் அரசாங்கங்கள் மற்றும் மத்திய கிழக்கின் ஆளும் உயரடுக்குகளின் கொள்ளை நோக்கங்களை எதிர்க்க வேண்டும். இதற்கென, ஒரு புதிய போர் எதிர்ப்பு இயக்கம் கட்டமைக்கப்பட வேண்டும். இது ஐக்கிய செயலகம் மற்றும் சர்வதேச சோசலிஸ்ட்டுக்களுடன் இணைந்துள்ள பல குட்டி முதலாளித்துவ, போலி இடது கட்சிகளுக்கு நேரடி எதிர்ப்பைக் காட்ட வேண்டும். அவை இப்பொழுது ஏகாதிபத்தியத்தால் ஆதரிக்கப்படும்  ஆட்சி மாற்றத்திற்காக CIA ஆதரவாளர்கள், நேட்டோ ஆயுத உதவியுடனான முன்னாள் அரசாங்கங்களின் நபர்கள், இஸ்லாமியவாதிகளுடன் இணைந்து செயல்பட வாதிடுகின்றன.

 “முழங்கால் நடுக்கத்துடன் கூடிய ஏகாதிபத்திய எதிர்ப்பைகண்டித்தல் என்பது இந்த வட்டங்களில் வாடிக்கையாகி விட்டது. Pham Binh என்பவரால் இராணுவத் தலையீட்டை எதிர்ப்பவர்கள்முதலில் லிபியா, இப்பொழுது சிரியப் புரட்சிகர மக்களின் வெளிப்படையான கோரிக்கைகளுடன் இயைந்திருக்கவில்லைஎன்று கண்டிக்கப்படுகின்றது. அமெரிக்க சர்வதேச சோசலிச அமைப்பின் (ISO) சொற்களில் அப்புரட்சியாளர்கள் கிடைக்கும் எந்த உதவியையும் எடுத்துக் கொள்ளத் தயாராக உள்ளனர்.”

இப்போக்குகள் அனைத்தும் ஏகாதிபத்திய பிற்போக்குத்தன முகாமில் நுழைந்துவிட்டன. ஒரு போர் எதிர்ப்பு இயக்கத்திற்குத் தலைமை தாங்குவதும், ஏகாதிபத்திய எதிர்ப்பிற்கும், தொழிலாள வர்க்கத்தின் சோசலிச விருப்புகளுக்கும் குரல் கொடுக்கும் பொறுப்பு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழுவினுடையது ஆகும்.