தினசரி செய்திகள், ஆய்வுகள்
நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
|
மாலியில் கை வைக்காதே!
Alex Lantier use this version to print | Send feedbackபிரான்ஸ் மாலியில் போரில் ஈடுபட்டிருப்பதை உலக சோசலிச வலைத் தளம் ஒரு ஏகாதிபத்திய கடற் கொள்ளைச் செயல் எனக் கண்டிக்கிறது. வடக்கு மாலியில் இருக்கும் நகரங்களில் நூற்றுக்கணக்கான மக்களை கொன்றும் காயப்படுத்தியதுமான ஏராளமான குண்டுவீச்சுக்களுக்குப் பின்னர், பிரெஞ்சு டாங்குகள் நேற்று ஐவரி கோஸ்ட் வழியே மாலிக்குள் புகுந்தன. கடந்த இரண்டு ஆண்டுகளில், லிபியா, ஐவரி கோஸ்ட் மற்றும் சிரியா ஆகியவற்றிக்கு பின்னர் பிரான்ஸ் தாக்கும் நான்காவது நாடாக மாலி உள்ளது. இந்நாடுகளில் லிபியாவை தவிர மற்றவை அனைத்தும் பிரெஞ்சுக் காலனிகள் ஆகும். இப்போருக்கு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்டும் மற்ற பிரெஞ்சு அதிகாரிகளும் கொடுத்துள்ள விளக்கம் — பிரான்ஸின் “அடிப்படை நலன்கள்” அல் குவேடாவில் இருந்து மாலியின் “ஜனநாயகத்தைக்” காப்பாற்றும் நோக்கம் கொண்டது என்று ஹாலண்ட் கூறியுள்ளது—முற்றிலும் இழிந்த பொய்கள் ஆகும். பிரெஞ்சு ஏகாதிபத்தியம் தன் நலன்களை உறுதிப்படுத்துவதற்காக இராணுவ வலிமையைப் பயன்படுத்தி மேற்கு ஆபிரிக்காவில் மீண்டும் ஒரு மேலாதிக்க நிலைப்பாட்டை நிறுவ முயல்கிறது. மாலியில் நடக்கும் போர் 2011 லிபியப் போரில் இருந்து நேரடியாக வெளிப்படுவதாகும். வடக்கு மாலியில் பிரான்ஸ் போரிட்டுக் கொண்டிருக்கும் எழுச்சிப் போராளிகள், லிபியாவின் கேர்னல் முயம்மர் கடாபி அகற்றப்பட்டுக் கொலை செய்யப்பட்ட உதவிய அல் குவேடா உடன் பிணைந்துள்ள சக்திகள் ஆவர்; இதைத்தவிர லிபிய இராணுவத்தில் பணியாற்றிய இனவழி துவரெக் சிப்பாய்கள், நேட்டோ வெற்றிக்குப்பின் மாலிக்குத் தப்பியோடியவர்களும் உள்ளனர். இவர்களுள் மாலி நாட்டின் இராணுவத்தில் இருந்து நீங்கி, தலைநகர் பமாகோவில் இருக்கும் செல்வாக்கற்ற இராணுவ ஆட்சிக்குழுவிற்கு எதிரான எழுச்சியில் சேர்ந்தவர்களும் அடங்குவர். கடாபியின் தோல்வியினால் விளைந்துள்ள நன்மைகளை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் பயன்படுத்திக் கொள்ள முற்படுகிறது. கடாபி ஆட்சி அழிக்கப்பட்டு, நூற்றுக்கணக்கான பில்லியன் டாலர்கள் லிபிய எண்ணெய் நிதி, மேற்கத்தைய வங்கிகளால் கைப்பற்றப்பட்டதோடு, கடாபியினால் நிதியளிக்கப்பட்ட ஆபிரிக்க பிராந்திய அமைப்புக்கள் சரிந்துவிட்டன; அமெரிக்காவும் பிரான்ஸும் ஆபிரிக்கா முழுவதும் இராணுவத் தளங்களை விரைவாக நிறுவி வருகின்றன. பிரான்சின் நேட்டோ நட்பு நாடுகளும் மாலியில் உதவுவதற்கு உறுதியளித்துள்ளன; போரின் விளைவுகளில் ஏற்படும் நன்மைகளில் தங்கள் பங்கைப் பெறலாம் என அவை நம்புகின்றன. மேற்கு ஆபிரிக்க தேசிய முதலாளித்துவ ஆட்சிகளின் அழுகிய தன்மையை பாரிசும் சுரண்டுகிறது; அதன் போர்களுக்கு இவை இரை கொடுக்க வரிசையாய் நிற்கின்றன. ஐவரி கோஸ்ட் ஜனாதிபதி அலசானே க்வட்டரா, 2011ல் ஐவரி கோஸ்ட்டில் பிரான்சுப் போரினால் இருத்தப்பட்டவர், மாலியில் பாரிசுக்கு ஆதரவைக் கொடுக்கிறார். செனகலின் ஜனாதிபதி மாக்கி சால், கடந்த ஆண்டு ஜனாதிபதி அப்டௌலயே வேடுக்கு எதிரான எதிர்ப்புகளுக்கு அமெரிக்க மற்றும் பிரெஞ்சுப் படைகளின் ஆதரவு இருந்ததை ஒட்டி பதவிக்கு வந்தவரும் மாலிக்குப் படைகளை அனுப்புகிறார்; இவற்றைத் தவிர நைஜீரியா, நைஜெர் மற்றும் கானாவும் படைகளை அனுப்புகின்றன. மேற்கு ஆபிரிக்க முதலாளித்துவம் இத்தகைய நவ-காலனித்துவ ஆட்சிக்கு அடிபணிந்து நிற்கையில், அல்ஜீரியா ஒரு முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. 1990களில் அல்ஜீரிய உள்நாட்டுப் போரின்போது அல் குவேடா பிணைப்புடைய படைகளுக்கு எதிராக அது போரிட்டதை நினைத்து அஞ்சி, அல்லது துனிசிய, எகிப்திய ஜனாதிபதிகளை 2011ல் அகற்றிய தொழிலாள வர்க்க எழுச்சிகள் போல் வருமோ என அஞ்சி, இது தன் முன்னாள் காலனித்துவ எஜமானர்களுடன் இணக்கம் காண முற்பட்டுள்ளது. கடந்த மாதம் அல்ஜீயர்ஸ் பல பில்லியன் யூரோ மதிப்புடைய ஒப்பந்தங்களை பிரான்ஸுடன் கையெழுத்திட்டது; ஹாலண்ட் அப்பொழு அந்நாட்டிற்கு விஜயம் செய்திருந்திருந்தார். இப்பொழுது அது தன்னுடைய வான் பகுதியை மாலியைத் தாக்கும் பிரெஞ்சுப் போர் விமானங்களுக்கு திறந்துவிட்டுள்ளது. எரிசக்தி விற்பனையில் கிடைத்த ரொக்கப் பணம் 200 பில்லியன் டாலரை வசதியாகக் கொண்டுள்ள அல்ஜீரிய ஆளும் உயரடுக்கு பாரிஸுக்கு ஒரு உடன்படிக்கையை அளிக்க உள்ளது. அதன் சலுகைகளை பிரெஞ்சு ஏகாதிபத்தியம் பாதுகாக்குமேயானால், பாரிஸிற்கு அல்ஜீரியாவில் புதிய சந்தைகள் கிடைக்கும்; இது ஹாலண்ட் தன் தொழிலாளர் சிக்கனக் கொள்கைகளை தீவிரப்படுத்துகையில் சரியும் பிரெஞ்சு நுகர்வோர் சந்தைகளுக்குப் பதிலாக இருக்கும். மீண்டுமொரு முறை ஆபிரிக்க முதலளித்துவ ஆட்சிகளின் இத்தகைய பிற்போக்குத்தனப் பங்கு, கண்டத்திலும் சர்வதேச அளவிலும் ஒரு சோசலிசப் புரட்சிப் போராட்டத்திற்குப் புறத்தே ஆபிரிக்க நாடுகள் ஏகாதிபத்தியத்தின் பிடியில் இருந்து விடுதலை பெற முடியாத நிலைமையைத்தான் காட்டுகிறது. ஹாலண்டின் சோசலிஸ்ட் கட்சி, கருத்துக் கணிப்புக்களில், அதன் சிக்கனக் கொள்கைகள் மற்றும் பெரிதும் இழிவுபடுத்தப்பட்ட முந்தைய ஜனாதிபதி நிக்கோலோ சார்க்கோசியின் போர்களைத் தொடரும் முடிவு ஆகியவற்றால் சரிந்துள்ளன. இப்பொழுது அதன் சொந்த குருதிகொட்டும் ஏகாதிபத்தியப் போரைத் தொடக்கியுள்ளது. கடந்த ஆண்டு தேர்தல்களின்போது ஹாலண்டிற்கு நிபந்தனையற்று வாக்களிக்க வேண்டும் எனக் கோரிய குட்டி முதலாளித்துவக் கட்சிகள், இடது முன்னணியும், புதிய முதலாளித்துவ எதிர்ப்புக் கட்சியும் (NPA) மாலிப் போருக்கு அரசியல் பொறுப்பைக் கொண்டுள்ளன. NPA தன்னுடைய வலைத் தளத்தில் வெளியிட்டுள்ள குறுகிய, பெயரளவிற்கான குறைகூறல் அதன் ஹாலண்டிற்குக் கொடுக்கும் ஆதரவை மாற்றிவிடவில்லை. பல தசாப்தங்களாக இச் சக்திகளும், மூன்றாம் உலக முதலாளித்துவ தேசிய வாதிகளும் வலதிற்கு சென்றுள்ள தூரம் அவற்றை இப்பொழுது ஏகாதிபத்தியப் போருக்கு ஆதரவைக் கொடுக்க வைத்துள்ளன. காலனித்துவ நீக்கம் என்பது ஒரு வரலாற்று இடைவெளிக்காலம்தான் என்பது பெருகிய முறையில் தெளிவாக்கியுள்ளது. இது ரஷ்யப் புரட்சியை தொடர்ந்து வந்த அரசியல் பின்னதிர்வுகளுடன் பிணைந்திருந்தன; அப்புரட்சி, சக்தி வாய்ந்த ஏகாதிபத்திய எதிர்ப்புப் போராட்டங்களை தோற்றுவித்தது. சோவியத் கலைப்பிற்கு பிந்தைய காலம் ஏகாதிபத்திய போர்களை அலைவரிசையெனக் கண்டுள்ளது —ஈராக், சோமாலியா, ஆப்கானிஸ்தான், பால்கன்கள் என்று 1990கள், 2000 ங்களில்— இவற்றைத் தொடர்ந்து எகிப்திய ஜனாதிபதி ஹொஸ்னி முபாரக் 2011ல் “அரபு வசந்தம்” என அழைக்கப்பட்ட வெடிப்புக்களில் தொழிலாள வர்க்கத்தால் அகற்றப்பட்ட பின்னும் போர்கள் வெடித்துள்ளன. 1991ம் ஆண்டு நான்காம் அகிலத்தின் அனைத்துலகக் குழு, சோவியத் சரிவின் பின்னணியில், “தற்பொழுது நடக்கும் நடைமுறையில், ஈராக் துண்டாடப்படவது என்பது ஏகாதிபத்தியவாதிகள் உலகத்தை புதிதாக துண்டாட முயற்சிப்பதை அடையாளப்படுத்துகிறது. நேற்றைய காலனிகள் மீண்டும் அடிமைப்படுத்தப்பட உள்ளன. ஏகாதிபத்தியத்திற்கு சந்தர்ப்பவாத முறையில் வாதிடுபவர்கள், வெற்றிகொள்ளல்கள் மற்றும் இணைப்புக்கள் என்பவை கடந்த காலத்திற்குரியவை என்று கூறியவை எல்லாம் மீண்டும் அன்றாட நடவடிக்கையாகிவிட்டது” என எழுதியிருந்தது. இப்பொழுது முதலாம் உலகப் போரின் 100வது ஆண்டு நிறைவை அணுகுகையில், உலகம், பிரெஞ்சு மற்றும் உலக ஏகாதிபத்தியத்தின் புதிய வெடிப்பைக் காண்கிறது. ஆனால் பாரிஸின் இறுதி இலட்சியம்—இருபதாம் நூற்றாண்டின் தொடக்கத்தில் அது கொண்டிருந்த உயர்நிலைக்கு திரும்புதல் என்பது அப்பொழுது அது 100 மில்லியன் காலனித்துவநாட்டு அடிமைகள்மீது ஆட்சி செலுத்தியது, மேற்கு ஆபிரிக்காவில் இருந்து மத்தியக்கிழக்கு, கிழக்கு ஆசியா வரை—ஒரு பிற்போக்குத்தன போலித்தோற்றம் ஆகும். செல்வாக்கற்ற மாலிய ஆட்சிக்கு பாரிஸ் ஆதரவு கொடுப்பது என்பதும்—மாலி ஆட்சியின் இராணுவம் இஸ்லாமியவாதிகளுக்கு எதிராகக் களத்தில் கரைந்துகொண்டிருக்கிறது—வடக்கு, மேற்கு ஆபிரிக்காவில் மீண்டும் பிரெஞ்சு செல்வாக்கை மீட்பதற்கான பரந்த தாக்குதலும் அதை இன்னும் ஆழ்ந்த சகதியில்தான் அமிழ்த்தும். பிரெஞ்சு ஏகாதிபத்தியம், ஆபிரிக்க தொழிலாளர்கள் மற்றும் ஒடுக்கப்பட்ட மக்கள் மீது தன் காலனித்துவ கைவிலங்குகளை மீண்டும் சுமத்த முடியாது, அதேபோல் போர்ச் செலவுகளுக்காக ஐரோப்பாவில் தொழிலாள வர்க்கத்தை முடிவிலா சிக்கனக் கொள்கைகளிலும் கட்டிவிட முடியாது. மாலிக்கு எதிராகப் போரைத் தொடக்கியுள்ள நிலையில், இது பேரழிவை எதிர்கொள்ளும் போக்கைத்தான் கொண்டுள்ளது. அரசியல் நனவுடைய தொழிலாளர்களின் சுலோகம்: பிரெஞ்சு படைகள் ஆபிரிக்காவில் இருந்து வெளியேறு! என்பதுதான். |
|
|