WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
பிரான்ஸ்
பிரெஞ்சு வாகன
தயாரிப்புத் தொழில்துறை வேலைகள், பணிநிலைமைகள் மீது தாக்குதல்களுக்கு தயார்
செய்கிறது
By Pierre
Mabut
7 January 2013
2012ல் பிரான்சின் வாகன விற்பனைகள் 1997ல் இருந்து அவற்றின் மோசமான
நிலைமையைப் பதிவு செய்தன. புதிய கார் விற்பனைகள் மொத்தம் 14% குறைந்துவிட்டன.
பிரெஞ்சு கார்த்தயாரிப்பு நிறுவனங்கள்
Renault, PSA Peugeot-Citroën
மிக
மோசமான இடரில் உள்ளன; அவற்றின் விற்பனைகள் முறையே 22%, 17.5% எனச் சரிந்து விட்டன.
ஏற்கனவே
PSA
தேசிய மட்டத்தில் 11,000 தொழிலாளர்களை
பணிநீக்கம் செய்ய உள்ளது;
Aulnay-sous-Bois ஆலை என
பாரிசிற்கு அருகே உள்ளதையும் மூட உள்ளது—இதில் 3,500 தொழிலாளர்கள் உள்ளனர்; 10,000
வேலைகள் மறைமுகமாக உள்ளன. 2013ல் வாகனத்துறை வேலை வெட்டுக்கள்,
நேரடியாகவோ அல்லது மறைமுகமாகவோ பிரான்சின் தொழிலாளர் தொகுப்பில் 10% ஐ
அச்சுறுத்துகின்றன.
பிரெஞ்சு தொழிற்சங்கங்கள்,
அமெரிக்க தொழிற்சங்கங்கள்
பின்பற்றும் தொழிற்சந்தை "சீர்திருத்தங்கள்" மற்றும் பிரெஞ்சு நிறுவனங்களின்
போட்டித்தன்மைக்கு ஏற்றம் கொடுக்க விரும்புகின்றன. சோசலிஸ்ட் கட்சி அரசாங்கம்
(PS)
ஜனவரி நடுவில் “வளைந்து கொடுக்கும்
பாதுகாப்பு” குறித்த உடன்பாட்டை அடைய விரும்புகிறது; இதையொட்டி முதலாளிகள்,
குறைந்த நடவடிக்கைகள் உள்ள
காலத்தில் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்யலாம், அல்லது ஊதியங்களைக் குறைக்கலாம்.
அரசாங்கமும் முதலாளிகள் கூட்டமைப்பும்
(Medef)
குறைந்தப்பட்சம் வேலைப் பாதுகாப்பைக்
கொடுக்கும் நீண்டகால வேலை ஒப்பந்தங்களை அகற்ற விரும்புகின்றன,
அவற்றிற்குப் பதிலாக குறுகிய கால ஒப்பந்தங்களை விரும்புகின்றன—இதில் முதலாளிகள்
விரும்பும் வகையில் அவர்களை பணிக்கு அமர்த்தவும், பணிநீக்கம் செய்யவும் முடியும்.
தொழிற்சங்கங்கள் “வளைந்து கொடுக்கும் பாதுகாப்பு” குறித்த
கொள்கையளவில் எதிர்ப்புக்கள் எதையும் கொண்டிருக்கவில்லை; ஆனால் அடிக்கடி தற்காலிக
மற்றும் குறுகியகால பணி ஒப்பந்தத்திற்கு தொழிலாளர்களை அமர்த்தும் முதலாளிகள் மீது
வரிவிதிக்க வேண்டும் எனக் கூறுகின்றன. தற்பொழுது புதிதாக வேலைக்கு அமர்த்தப்படும்
தொழிலாளர்களில் முழுமையாக 75% இதன்படிதான் வேலையில் உள்ளனர். முதலாளிகள்
கூட்டமைப்பு
(Medef)
சார்பில் பேரம்பேசுபவர்கள் குறுகிய கால ஒப்பந்தங்களுக்கு வரி என்பதற்கு தங்கள்
எதிர்ப்பை அடையாளம் காட்டியுள்ளனர்; இது தற்பொழுது தொழிற்சங்கங்களுடனான உடன்பாட்டை
நிறுத்தி வைத்துள்ளது.
நடைமுறையில்,
தொழிற்சங்கங்கள் ஏற்கனவே வடக்கு
பிரான்சில் Sevelnord
ஆலையில்
PSA உடைய வளைந்து கொடுக்கும்
தன்மைக் கோரிக்கைக்கு சரணடைந்து விட்டன; இதுதான் முதலாளிகள் புதிதாகக் கொண்டுள்ள
அடையாளத் தரமாகும். வேலையின்மையால் பேரழிவிற்குட்பட்டுள்ள பகுதியில் செவல்நோர்ட்
2,700 தொழிலாளர்களை வேலையில் வைத்துள்ளது. மொத்தத்தில்,
PSA
ஓய்வூதிய வயதிற்கு
அருகில் இருக்கும் தொழிலாளர்களை பணிநீக்கம் செய்ய விரும்புகிறது. அதன் பிரெஞ்சுத்
தொழிலாளர் தொகுப்பு தற்பொழுதுள்ள 67,112 என்பதில் இருந்து 2014 நடுப்பகுதிக்கும்
55,989 எனக் குறைக்க திட்டமிட்டுள்ளது.
இது
PS
ன் கொள்கையான பிரான்சில் “மறு
தொழிற்துறைமயமாக்கல்” என்னும் கொள்கையுடன் இயைந்து உள்ளது;
PSA
தொழிற்சங்கங்கள் கடந்த ஜூலை மாதம்
செவல்நோர்ட் நிர்வாகத்துடன் ஓர்
5 ஆண்டு
“போட்டித்தன்மை உடன்பாட்டில்” கையெழுத்திட்டன; அதையொட்டி ஊதியங்கள் முடங்கின,
விடுமுறை நாட்கள் குறைக்கப்பட்டு விட்டன.
ஒரு புதிய
K-Zero
பயன்பாட்டு வாகனம் ஸ்பெயினில்
Vigo
என்பதற்குப் பதிலாக, செவல்நோர்டில்
உற்பத்தி செய்ய உத்தரவாதம் அளிப்பதாக இந்த உடன்பாடு கருதப்பட்டது. தொழிற்சங்கங்கள்
உடன்பாட்டில் கையெழுத்திட்டன; இது ஒரு மாதிரியாக
GM
பாணியிலான நிலைமைகளை அனைத்துக் கார்த்
தொழிலாளர்கள் மீதும் சுமத்தும் நோக்கம் கொண்டது.
CGT
தொழிற்சங்கம் (பொதுத் தொழிலாளர்கள்
கூட்டமைப்பு) உடன்பாட்டை “மிரட்டல்” என்று விமர்சித்து அதில் கையெழுத்திட
மறுத்தாலும், CGT
தான் உடன்பாட்டை எளிதாக்கி
Aulnay
ஆலையை மூட ஒப்புக் கொண்டது.
அந்த நேரத்தில்
Aulnay
தொழிற்சங்கப் பிரதிநிதி
Jean-Pierre Mercier,
ஒரு
CGT
உறுப்பினரும் குட்டி முதலாளித்துவ
“இடது” கட்சியான Lutte
Ouvrière (LO
தொழிலாளர் போராட்டம்) உடைய செய்தித் தொடர்பாளரும் கூறினார்: “நான்
ஒரு பொழுதும் ஒரு தொழிலாளியைப் பணிநீக்கம் செய்யப் பேச்சுக்களை நடத்த மாட்டேன்....
ஆனால் நம் தோலை எப்படியும் விற்கும் கட்டாயத்திற்கு உட்பட்டால், பின் நாம் மறு
வேலை, பயிற்சி, விடுப்பு நிதி ஆகியவற்றிற்கான உத்தரவாதங்களுடன் அதற்கு மிக உயர்ந்த
விலையை நிர்ணயிப்போம்.”
LO
வினால் உதவப்பட்ட
CGT
இப்பொழுது மீண்டும் அதன் துரோகக்
கொள்கையை 2009ல் Continental
Tires Clairoix
ல் செயல்படுத்தியதைப் பழையபடி செய்ய முயல்கிறது; அங்கு அது
தொழிலாளர் எதிர்ப்பை படிப்படியாகக் குறைத்து, ஆலை மூடலுக்கு எதிரான போராட்டத்தை
தனிமைப்படுத்தியது—இதற்கு ஈடாக பணிநீக்க நிதிகளுக்கு ஒப்புக் கொண்டது.
எளிய பயன்பாட்டு வாகனங்களின் விற்பனையும் 10.4%
குறைந்துவிட்டது; டிரக்குகள் விற்பனை 8.4% குறைந்துவிட்டது; இது பிரெஞ்சு மற்றும்
ஐரோப்பிய பொருளாதாரத்தின் சுருக்கத்துடைய உறுதியான அடையாளம் ஆகும். தொழில்துறை
கணிப்புக்களின்படி, பிரெஞ்சு கார்த்தயாரிப்பு உலக மட்டத்திலான உற்பத்தியில் 3%தான்
உள்ளது; ஜேர்மனியோ 2011ல் 10% உற்பத்தி செய்தது.
கடந்த மார்ச் மாதம் ஃபியட் முதலாளி
Sergio Marchionne,
ஐரோப்பிய கார்த்தயாரிப்பு சங்கத்தின் தலைவர், தயாரிப்பாளர்கள் ஐரோப்பாவில் 20%
உற்பத்தித் திறனைக் குறைக்கும் நோக்கத்தை வெளிப்படுத்தினார். ஐரோப்பிய ஆணையத்திடம்
அவர் “நம் தொழிலாளர் சந்தை இன்னும் வளைந்து கொடுக்க வேண்டும், அப்பொழுதுதான்
கூடுதலான உற்பத்தித் திறன் இருக்கும். நாம் விரைவில் இந்தச் சரிசெய்யும் வழிவகையைத்
தொடக்க வேண்டும். மீண்டும் பூஜ்யத்தில் இருந்து தொடங்கி ஆராக்கியமானத் தளத்தை அடைய
வேண்டும்.”
ஐரோப்பிய கார்த்தயாரிப்பாளர்கள் அமெரிக்க கார்த்தயாரிப்பு
பெருநிறுவனங்களிடம் இருந்து குறிப்பை எடுத்துக் கொள்கின்றனர்; அமெரிக்க
கார்த்தயாரிப்பு பெருநிறுவனங்கள் 18 ஆலைகளை முடி 2007ல் இருந்து 35,000
தொழிலாளர்களை பணிநீக்கம் செய்துள்ளது. புதிதாக வேலைக்கு எடுக்கப்பட்டவர்ளின்
ஊதியங்களை 50% ஆக குறைத்தனர். இதில் அவர்கள் ஐக்கிய கார்த் தொழிலாளர்கள் சங்கத்தின்
(UAW)
உதவியைக் கொண்டிருந்னர்; அது ஜெனரல் மோட்டார்ஸில் நிதியப் பங்கை கொண்டுள்ளது.
ஜேர்மனியில்
போஹுமில்
உள்ள
GM-Opel
ஆலை, 2016 ஐ ஒட்டிமூடப்பட உள்ளது; 3,000 வேலைகள் இதையொட்டி இழக்கப்படும்.
ஜேர்மனியில் இரண்டாம் உலகப் போருக்குப் பின் இத்தகைய ஆலைமூடல் முதல் தடவையாகும்.
கார்த்தயாரிப்பாளர்
Renault,
56,000 தொழிலாளர்களை
கொண்டது, பிரெஞ்சு அரசாங்கம் இதில் 15% பங்கு கொண்டுள்ளது, தான் 2013ல் தொழிலாளர்
செலவுகளின் மீது சலுகைகளை பெறும் பட்சத்தில் அதன் பிரெஞ்சு ஆலைகளைத் தொடர்ந்து
நடத்தும் என்று கூறியுள்ளது.
CGT,
பரந்த பணிநீக்கங்களை ஏற்றுள்ள அதே
நேரத்தில் ஒரு மாற்றீட்டு B
திட்டத்தை கடந்த மாதம்
PSA Citroën
கார் நிறுவனத்தின் வருங்காலத்தை
பாதுகாக்க அளித்துள்ளது. இத்திட்டம்
Secafi
ஆலோசகர்கள்
PSA
இன்
பொருளாதார மேம்பாட்டு நிலை குறித்த அறிக்கையைத் தளமாகக் கொண்டுள்ளது; தொழிற்சங்கம்
அதைத் தயாரிக்க ஏற்பாடு செய்தது.
PSA-Sochaux
ஆலையில்
CGT
செய்தித் தொடர்பாளராக இருக்கும்
Bruno Lemerle,
பரந்த பணிநீக்கங்கள்
என்பது ஒரு “நிதியத் திட்டம், தொழில்துறைத் திட்டம் அல்ல. நிறுவனத்தின் திறனுக்கு
நிதியச்சுமையைக் கொடுப்பதால் ஆபத்தானது; தொழில்துறை செயல்கள் 2016 அல்லது அதற்கு
சற்றுபின் ஆதாயத்திற்கு ஏற்பத்தான் விளைவுகளைக் காட்ட வேண்டும்.” இத்தகைய
கூற்றுக்கள் தொழிலாளர்களிடம் தங்கள் நம்பிக்கைகளை முதலாளித்துவ பொருளாதாரத்தின்
நெருக்கடியான நிலைமை மாறக்கூடும் என்ற கருத்தில் நம்பிக்கை கொள்ளுமாறு கூறுவதற்கு
ஒப்பாகும்.
தொழிலாளர்கள் இத்தகை
Plan B
எனப்படும் திட்டத்தை இகழ்வுடன்
நிராகரிக்க வேண்டும்; இது முழு நனவுடன் நிறுவனத்தின் தேவைகளை தொழிலாளர்ளின்
தேவையுடன் போட்டுக் குழப்புகிறது. இத்தகைய தொழிலாள வர்க்க விரோதப் பார்வை
டெட்ரோயிட்டில் GM
உடைய ஐக்கிய கார்த் தொழிலாளர்கள்
சங்கத்தின் நிலையை ஒத்தே உள்ளது; அதனுடன்தான் சமீபத்தில்
Lemerle
ஆலோசனைகளை
கொண்டிருந்தார்.
இதேபோன்ற சரணடைதல்,
PSA ல்
உள்ள CFDT (பிரெஞ்சு
ஜனநாயகத் தொழிலாளர் கூட்டமைப்பு) இடம் இருந்தும் வந்துள்ளது.
Aulnay
மூடலுக்குப் பின் பணிநீக்கம்
செய்யப்பட்ட தொழிலாளர்களை மறுபடி ஒருங்கிணைக்க
CFDT
வாரப் பணி நேரத்தை 32 மணி எனக்
குறைக்கும் (தொடர்புடைய
ஊதிய வெட்டுடன்)
திட்டத்தைக்
கொண்டுள்ளது.
ஒரு பரந்த
GM
வகையிலான மறுகட்டமைப்பை செயல்படுத்தும்
PSA
இன் பிடிவாதத்தை ஒட்டி
CFDT, CGT
உடைய கருத்துக்களை எதிரொலித்தது;
“பங்குதாரர்களின் நிதியக் கொள்கை இன்னும்
PSA
உடைய ஆரோக்கியத்தை
பெரிதும் கீழே குறைக்கும் வகையில் இருப்பதும், இலாபத்திற்காக அவர்கள் செய்யும்
தந்திர உத்தியும், அவர்கள் முழுப் பொறுப்பை ஏற்க வேண்டும், தங்கள் கைகளை பைகளில்
வைத்திருக்க வேண்டும் என்பதைத்தான் காட்டுகிறது.”
இத்தகைய கருத்துக்கள் தொழிற்சங்கங்களின் திவால்தன்மையான வணிகச்
சார்பு மனோநிலையை அடிக்கோடிட்டு காட்டுகிறது. தொழிலாளர்கள் சோசலிஸ்ட் கட்சி
அரசாங்கம் மற்றும் முதலாளிகளுடன் மட்டும் போராடாமல், தொழிற்சங்கங்களுடனும் போராட
வேண்டும்; இவைதான் திட்டமிட்டவகையில்
PS
அரசாங்கத்துடன்
ஒத்துழைத்து வேலைகள், பணிநிலைகள் ஆகியவற்றின் இழப்பில் பிரெஞ்சு முதலாளித்துவத்தின்
போட்டித்திறனை வலுப்படுத்த உழைக்கின்றன. |