WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Europe in
2013
2013ல் ஐரோப்பா
Peter Schwarz
10 January 2013
இரண்டாம்
உலகப்
போருக்குப்
பின்
ஐரோப்பா
அதன்
மிகத்
தீவிர
பொருளாதார,
சமூக
நெருக்கடியின்
சதுப்புநிலத்தினுள் ஆழ்ந்துள்ளது.
2012ல்
கடந்த
இரு
தசாப்தங்களிலும்
எந்த
ஆண்டையும்
தவிர
அதிகம
மக்கள்
தங்களை
வேலைகளை
இழந்து
விட்டனர்;
செவ்வாயன்று
ஐரோப்பிய
ஒன்றியத்தின்
ஆணையரான
Laszlo Andor,
“ஐரோப்பிய
வேலைகள்
மற்றும்
சமூக
அறிக்கை
2012” ஐ
முன்வைக்கையில்
இவ்வாறு
கூறினார்.
வேலையில்
இருப்போர்களின் பைகளில்
குறைந்த
பணம்தான்
இருக்கிறது,
வறுமைக்குள் ஆழ்ந்துவிடும்
நிலை
தொடர்ந்தும் அதிகரித்துவருகிறது
என்று
அவர்
குறிப்பிட்டுள்ளார்.
“ஐரோப்பாவில்
சமூகப்-பொருளாதார
நிலைமை
2013ல்
கணிசமாக
முன்னேற்றம்
அடையும்
என்று
கூறுவதற்கில்லை”
என்று
அவர்
சேர்த்துக்
கொண்டார்.
இந்தநிலைமை
குறிப்பாக
தெற்கு,
கிழக்கு
ஐரோப்பிய
நாடுகளில்
பேரழிவுகரமான தன்மையை
கொண்டுள்ளது.
ஐரோப்பிய
ஒன்றியத்தின் சிக்கன
நடவடிக்கைகளினால் ஏற்பட்டுள்ளது போன்ற
இந்த
அளவிலான
பேரழிவை, முன்பு
போர்கள்தான் ஒரு குறுகிய
காலத்தில்
தேசியப்
பொருளாதாரங்களின் மீது ஏற்படுத்தியிருந்தன.
கிரேக்கத்திலும்
ஸ்பெயினிலும்,
நான்கில்
ஒருவர்
உத்தியோகபூர்வமாக
வேலையின்மையில்
உள்ளனர்.
இளைஞர்களில்
பாதிபேருக்கு
மேல்
வேலை
கிடைப்பதில்லை.
சராசரி
வீட்டு
வருமானம்
கிரேக்கத்தில்
கடந்த
மூன்று
ஆண்டுகளில்
17% உம்,
ஸ்பெயினில்
8% உம்
சரிந்துவிட்டது.
சுகாதாரப்
பாதுகாப்பு,
ஓய்வூதியம்
மற்றும்
சமூகப்
பாதுகாப்பு
ஆகியவை
முழுச்
சரிவை
முகங்கொடுக்கின்றன.
ஆனால்,
தங்கள்
சிக்கன
நடவடிக்கைகளினால்
இத்தகை
இத்தகைய
சமூகப்
பேரழிவு
தூண்டிவிடப்பட்டு
இருந்தும்கூட,
ஐரோப்பிய
அரசாங்கங்கள்
செலவுக்குறைப்புகளை முடுக்கிவிடுவதில்
தீவிரமாக
உள்ளன.
யூரோப்
பகுதியின்
சுற்றுப்
பகுதியுடன்
அவை
மட்டுப்படுத்திக்
கொள்ளவில்லை;
இன்னும்
மூர்க்கமான
முறையில்
மைய
நாடுகளில்
இருக்கும்
தொழிலாள
வர்க்கத்தின்
மீதும்
தாக்குதல்களை
நடத்துகின்றன.
இத்தாலி,
பிரான்ஸ்
மற்றும்
ஜேர்மன்
ஆகிய நாடுகளில்
புதிய
கடுமையான
சிக்கனத்
திட்டங்கள்
இருப்பதை
ஒட்டி
இது
உறுதிப்படுத்தப்படுகிறது. இதைத்தவிர,
ஐரோப்பாவில்
கார்த்தயாரிப்பு
ஆலைகளும்
மூடப்படுகின்றன.
புத்தாண்டுக்கு
நாட்டிற்கு
ஆற்றிய
உரையில்
ஜேர்மனிய
சான்ஸ்லர்
அங்கேலா
மேர்க்கெல்
பொருளாதார
நிலைமை
“அடுத்து
ஆண்டு
ஒன்றும்
எளிதாகிவிடாது,
மாறாக
இன்னும்
கடுமையாக
இருக்கும்”
என்று
அறிவித்தார்.
இது
ஒரு
தெளிவான
எச்சரிக்கையாகும்.
கிட்டத்தட்ட
மக்களில்
கால்
பகுதியினர்
ஏற்கனவே
வறுமையில்
வாடும்
பிரித்தானியாவில்,
காமெரோன்
அரசாங்கம்
முறையாக
தேசிய
சுகாதார
அமைப்புமுறை,
பொதுக்
கல்வி,
சமூக
நலன்புரி
அமைப்பு
ஆகியவற்றைத்
தகர்த்து
வருகிறது.
உத்தியோகபூர்வ
அரசியல்
தொகுப்பில்
உள்ள
ஒரு
கட்சிகூட
இந்த
சிக்கனம்,
மந்தநிலை,
சமூக
சீரழிவு
என்னும்
நச்சு
வட்டத்தில்
இருந்து
வெளியேற
வழியைக்
காட்டவில்லை.
பெயரளவிற்கு
இடது
அல்லது
வலது
என
எப்படி
இருந்தாலும்,
அவை
அனைத்தும்
நிதிய
உறுதிப்படுத்தலுக்கு மாற்றீடு
ஏதும்
இல்லை
என்றும்,
சமூக
நலன்
பணிகள்,
கல்வித்துறை,
சுகாதாரப்
பாதுகாப்பு
ஆகியவற்றின்
இழப்பில்
நிதியச்
சந்தைகள்
திருப்தி
செய்யப்பட
வேண்டும்
என்பதிலும்
உடன்பாட்டைக்
கொண்டுள்ளன.
இந்த
ஆண்டு
வரவிருக்கும்
இத்தாலி,
ஜேர்மனியத்
தேர்தல்களில்
நிதியத்
தன்னலக்குழுவின்
ஆணைகளை
சிறப்பாகச்
செயல்படுத்த
எந்தக்
கட்சி
அல்லது
கூட்டணி
உகந்தது
என்பதுதான்
ஒரே
பிரச்சினையாகும்.
இத்தாலியில்
தேர்தலில்
மூன்று
முகாம்கள்
நிற்கின்றன:
முதலாளித்துவத்தின்
மிகவும்
குற்றம்மிக்க கூறுபாடுகளுடன் வடக்கு
லீக்கில்
இருக்கும் வெளிப்படையான
இன
வெறியாளர்களை
இணைத்துள்ள
சில்வியோ
பெர்லுஸ்கோனியின் முகாம்;
மரியோ
மொன்டியின்
முகாம்—இவர்
சர்வதேச
வங்கிகளின்
விருப்பத்திற்குரிய
நபர்,
கடந்த
ஆண்டில்
நாட்டின்
வரலாற்றிலேயே
மிகவும்
கடுமையாக
சமூகநலச்
செலவுகளை
குறைத்துவிட்டவர்;
மூன்றாவதாக
பீர்
லுயுகி
பெர்சானியின்
முகாம்—இதுவரை
மொன்டிக்கு
மிகவும்
நம்பிக்கைக்கு
உரிய
நட்பு
அமைப்பாக
இருந்தது. இதன்
முக்கிய
ஈர்க்கும்
கருத்து
அவர்
தொழிற்சங்கங்களையும்
இடது
என
அழைக்கப்படும்
அமைப்புக்களையும்
அரசாங்கக்
கொள்கையைச்
செயல்படுத்தும்
வழிவகையினுள் இணைத்துக்கொள்வது சிறந்தது என்று
கூறுவதாகும்.
ஜேர்மனியில்
சமூக
ஜனநாயகக்
கட்சி
(SPD)
மற்றும்
பசுமைக்
கட்சியினர்
தற்பொழுது
மேர்க்கெல்
தலைமையிலுள்ள
பழைமைவாத,புதிய
தாராளவாத
கூட்டணியை
அகற்றி
இன்னும்
திறமையுடன்
சிக்கனத்தையும்
வெட்டுக்களையும்
சமூகநலப்
பணிகளில்
செயல்படுத்த
விரும்புகின்றனர்.
தங்கள்
தகுதிகளை
அவர்கள்
சிவப்பு-பசுமை
கூட்டணி
அரசாங்கத்தினால் சமூக
ஜனநாயக
சான்ஸ்லர்
ஹெகார்ட்
ஷ்ரோடர்
தலைமையிலான
அரசாங்கம்
பதவியில்
இருந்துபோது
நிரூபித்தனர்.
ஒரு
குறிப்பிடத்தக்
வகையில்
நயவஞ்சகமான
பாத்திரம்
ஐரோப்பா
முழுவதும்
உள்ள
பெயரளவிலான
“இடதுசாரி”க்
கட்சிகளால்
மேற்கொள்ளப்பட்டுள்ளன.
அவை
தங்கள்
முக்கிய
பணி
வர்க்கப்
போராட்டத்தை
கட்டுப்பாட்டிற்குள்
வைத்திருத்தல்,
தொழிலாள
வர்க்கத்தின்
ஒரு
சுயாதீன
இயக்கம்
வளர்வதைத்
தடுத்தல்
எனக்
கொண்டுள்ளன.
இந்த
இலக்கிற்காக,
அவை
சிக்கன
நடவடிக்கைகள்
குறித்து
வாயளவில்
குறைகூறுகின்றன,
ஆனால்
சமூக
எதிர்ப்பைத்
தொழிற்சங்கங்களின்
பின்னே
திருப்ப
முயல்கின்றன. அவை
முதலாளித்துவத்தின்
சிக்கனத்
திட்டங்களுக்கு
ஆதரவைக்
கொடுப்பதுடன்
அவற்றைச்
செயல்படுத்த
ஒத்துழைப்பையும்
கொடுக்கின்றன.
அதே
நேரத்தில்
போலி
இடது
கட்சிகள்
தொழிலாள
வர்க்கத்தின்
மீதான
தாக்குதல்களை
செயல்படுத்துவதற்குக்
அரசாங்கங்களுக்கு
தேவையான
பாராளுமன்ற
பெரும்பான்மையையும்
கொடுக்கின்றன அல்லது
தாங்களே
தாக்குதல்களை
செயல்படுத்துகின்றன.
டென்மார்க்கில்
“இடது”
சமூக
ஜனநாயக
வாதிகள்,
ஸ்ராலினிஸ்ட்டுக்கள்,
மாவோயிஸ்ட்டுக்கள்,
பப்லோவாதிகள்
அடங்கிய
சிவப்பு-பசுமைக்
கூட்டணி
ஒன்று
சமீபத்தில்
சமூக
ஜனநாயகக்
கட்சி
தலைமையிலான
அரசாங்கம்
முன்வைத்த வரவு-செலவுத்
திட்டத்திற்கு
ஆதரவாக
வாக்களித்தன.
இவை
சிறிதும்
இடைவெளி
இன்றி
முந்தைய
பழைமைவாத அரசாங்கத்தின்
சிக்கனக்
கொள்கையைகளையே
பின்பற்றுகின்றன.
கிரேக்கத்தில்
சிரிசா
(SYRIZA)
எனப்படும்
தீவிர
இடது
கூட்டணி,
பிரதம
மந்திரி
அன்டோனிஸ்
சமரஸின்
உறுதியற்ற
கூட்டணி
அரசாங்கத்தை பிரதியீடு செய்யத்
தயாராக
உள்ளது.
பலமுறையும்
சிரிசா
சர்வதேச
வங்கிகளுக்கு
கிரேக்க
அரசாங்கத்தின்
கடனைத்
திருப்பித்
தரத்
தான்
தயாராக
இருப்பதையும்
ஐரோப்பிய
ஒன்றியத்துள்
நாட்டை
நிலைநிறுத்திக்
கொள்ளவும்
தயார்
எனக்
கூறியுள்ளது
இத்தாலியில்
Sinistra Ecologia Liberta (Left Econlogy Liberty)
மற்றும்
கம்யூனிஸ்ட்
ரிபௌண்டேஷன்
ஆகிய
கட்சிகள்
பெர்சானி
அல்லது
மொன்டி
தலைமையிலான
அரசாங்கத்திற்கு
ஆதரவு
கொடுக்கத்
தயாரிப்புக்களைக்
கொண்டுள்ளன. இப்படித்தான்
அவை
முன்பு
ரோமனோ
புரோடியின்
அரசாங்கத்திற்கு
ஆதரவு
கொடுத்தன.
ஜேர்மனியில்
இடது
கட்சி
இப்பொழுது மாநில
அளவில்
செய்வதைப்போல் சமூக ஜனநாயக-பசுமைக்
கட்சி
கூட்டணிக்குத்
தேவையான
பெரும்பான்மைக்கு
ஆதரவு
கொடுக்கத்
தயாராக
உள்ளது.
இக்கட்சிகள்
அனைத்தும்
பெயரில்
மட்டுந்தான்
இடது
ஆகும்.
அவை
மத்தியதர
வர்க்கத்தின்
வசதியான
அடுக்குகளைப்
பிரதிநிதித்துவப்படுத்துகின்றன. அந்த
அடுக்கு
வர்க்கப்
போராட்டம்
தீவிரமடைகையில்
இன்னும்
வலதிற்குத்தான்
நகர்கின்றன.
அவை
தம்மை
முதலாளித்துவ
முகாமில்
முழுமையாக
ஒருங்கிணைத்துக்
கொண்டுள்ளன.
தற்போது உள்ள அரசியல்
கட்டமைப்புக்களுக்குள் இந்த
நெருக்கடிக்கு
எத்தகைய
தீர்வும்
சாத்தியமில்லாத சூழ்நிலையில் சமூக மோதல்கள்
தவிர்க்க
முடியாமல்
இன்னும்
வெளிப்படையாக
வடிவங்களை எடுக்கும்.
தீவிர
வர்க்கப்
போராட்டங்கள்
ஐரோப்பா
முழுவதும்
செயற்பட்டியலில்
உள்ளன.
இது
ஏற்கனவே
கிரேக்கம்,
ஸ்பெயின்
மற்றும்
போர்த்துக்கல்லில்
சென்ற
ஆண்டு
நடைபெற்ற
வெகுஜன
எதிர்ப்புக்கள்
மூலம்
அறிவிக்கப்பட்டுவிட்டது.
நூறாயிரக்கணக்கான
மில்லியன்
ஐரோப்பிய
தொழிலாளிகள்
ஒரு
போராட்டமின்றி
தங்கள்
அழிவை
ஏற்பர்
என்பது
நினைத்துப்
பார்க்க
முடியாதது
ஆகும்.
ஆயினும்
வர்க்கப்
போராட்டம்
தீவிரமடைதல்
என்பது
அரசியல்
முன்னோக்குப்
பிரச்சினையை
தானாகவே
தீர்த்துவிடப்போவதில்லை.
மாறாக,
அப்பிரச்சனையை இன்னும்
தீவிரமாக
முன்வைக்கின்றது.
போலி
இடது
கட்சிகள்
வகிக்கும் பங்கின்மூலம் நெருக்கடிக்கு
ஒரு
முற்போக்கான
தீர்வு
தடுக்கப்பட்டால்,
பின்
தீவிர
வலது
அமைப்புக்கள்
சமூக
துயரங்கள்,
விரக்தி
ஆகியவற்றில்
இருந்து
இலாபமடைய
முடியும்.
இதுதான்
கடந்த
நூற்றாண்டின்
கசப்பான
அனுபவம்
ஆகும்.
இன்று
இதே
ஆபத்தை
இன்று
தீவிர
வலது
மற்றும்
பாசிச
அமைப்புக்களான
கிரேக்கத்தில்
கோல்டன்
டான்
(Chrysi
Avgi)
பிரான்சில்
தேசிய
முன்னணி
மற்றும்
ஹங்கரியில்
ஜோபிக்
ஆகியவற்றின்
வளர்ச்சியில்
காணப்பட
முடியும்.
சீரழிந்து
கொண்டிருக்கும்
முதலாளித்துவ
அமைப்புமுறையுடன்
அவர்களை
பிணைத்துவைக்க முற்படுகின்றன தொழிற்சங்கங்கள்
மற்றும்
போலி
இடது
அமைப்புக்களிடம்
இருந்து
தொழிலாளர்கள் முறித்துக்
கொள்ள
வேண்டும். மேலதிகமான வெட்டுக்களுக்கும் மற்றும் மக்களில்
பெரும்
பிரிவுகளை
வறிய
நிலையில்
தள்ளப்படுவதற்கும் வேறுமாற்றீடு
இல்லை
என
வலியுறுத்துகையில்,
ஆளும்
வர்க்கம்
தானாகவே
முதலாளித்துவத்தின்
திவால்தன்மையை ஒப்புக்
கொள்கின்றது.
பரந்த
வறியநிலை
மற்றும்
காட்டுமிராண்டித்தனத்திற்கு
ஒரே
மாற்றீடு
ஒரு
சோசலிச
வேலைத்திட்டத்திலேயே
உள்ளது.
வங்கிகளும்
பெரும்
நிறுவனங்களும்
தேசியமயமாக்கப்பட்டு
ஜனநாயகக்
கட்டுப்பாட்டின்கீழ்
கொண்டுவரப்பட
வேண்டும்.
உற்பத்தி
மறுஒழுங்கமைப்பட்டு நிதிய
ஊக
வணிகர்கள்
மற்றும்
ஒட்டுண்ணிகளின்
இலாப
நலன்களுக்காக இல்லாமல் சமூகத்தில்
இருக்கும்
மக்களின்
தேவைகளுக்கு
உதவ
வேண்டும்.
அத்தகைய
ஒரு
வேலைத்திட்டம்
ஐரோப்பிய,
சர்வதேச
தொழிலாள
வர்க்கத்தின்
ஐக்கியப்பட்ட
போராட்டத்தின்
மூலம்தான்
அடையப்பட
முடியும்.
இதற்கு
தொழிலாளர்
அரசாங்கங்கள்
உருவாக்கப்படுவதும் ஐக்கிய
ஐரோப்பிய
சோசலிச
அரசுகள்
நிறுவுவதும் தேவையாகும்.
மிகவும்
அவசரமான
கடமை,
சோசலிச
சமத்துவக்
கட்சிகள்
மற்றும்
நான்காம்
அகிலத்தின்
அனைத்துலகக்
குழு என்னும்
சர்வதேச
சோசலிச
இயக்கத்தின்
பாகமாக
புதிய புரட்சிகர
தொழிலாளர்களின்
கட்சிகள்
கட்டியமைக்கப்பட வேண்டும். |