WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்:
ஆசியா :சீனா
Island dispute continues to
fuel China-Japan tensions
தீவு
பற்றிய
சர்ச்சை
சீன-ஜப்பானிய
அழுத்தங்களுக்கு
தொடர்ந்து
எரியூட்டுகிறது
By Peter Symonds
8 January 2013
கிழக்குச்
சீன
கடலில்
அமைந்துள்ள
சர்ச்சைக்கு
உட்பட்ட
சென்மாகு/டயோயு
தீவுகளுக்கு
அருகே
நடந்த
இரு
நிகழ்வுகள்
சீனாவிற்கும்
ஜப்பானுக்கும்
இடையே
எழுந்துள்ள
அழுத்த
ஆபத்துக்கள்
ஒரு
பெரிய
மோதலாக
உருவெடுக்கலாம்
என்பதை
எடுத்துக்காட்டியுள்ளன.
ஜப்பானியக்
கடலோர
காவற்படையினர்
நேற்று
நான்கு
சீன
கடல்
கண்காணிப்புக்
கப்பல்கள்
ஜப்பானின்
கட்டுப்பாட்டிற்குள்
இருக்கும்
சென்காகு
என்று
ஜப்பானிலும்
டயோயு
என்று
சீனாவிலும்
அறியப்படும்
தீவுகளில்
இருந்து
12
கடல்
மைல்களுக்குள்
சென்றன
எனத்
தகவல்
கொடுத்துள்ளனர்.
ஜப்பானிய
வெளியுறவு
அமைச்சரகம்
டோக்கியோவில்
இருக்கும்
சீனத்
தூதரகத்திடம்
ஒரு
பொதுவான
எதிர்ப்பைத்
தெரிவித்துள்ளது.
இத்தகைய
ஊடுருவல்
இந்த
ஆண்டு
முதல்
முறையாகவும்,
செப்டம்பர்
மாதம்
டோக்கியோ
அத்தீவுகளைத்
“தேசியமயமாக்கியதில்”
இருந்து
21
ஆவது
தடவையாகவும்
நடக்கின்றது.
தேசியமயமாக்கப்பட்டமை
சீனாவிடம்
இருந்து
தீவிர
எதிர்ப்புக்களைத்
தூண்டியது.
சனிக்கிழமை
அன்று
ஜப்பானிய
இராணுவம்
தீவுகளை
நோக்கிச்
சென்று
கொண்டிருந்த
ஒரு
சீன
இராணுவமற்ற
கண்காணிப்பு
விமானத்தை
திசை
திருப்ப
போர்
விமானங்களைப்
பயன்படுத்தியது.
ஜப்பானிய
அதிகாரிகள்
கூற்றின்படி,
சீன
விமானம்
ஜப்பான்
தன்
வான்
பகுதி
எனக்
கருதும்
இடத்தில்
நுழையவில்லை.
இத்தகைய
நிகழ்வில்
இது
இரண்டாவது
ஆகும்.
டிசம்பர்
13ம்
திகதி,
எட்டு
ஜப்பானிய
F15
போர்
விமானங்கள்
ஒரு
சீன
விமானத்தை
தடுத்து
நிறுத்த
அனுப்பப்பட்டன.
சென்காகு/டயோயு
தீவுகள்
மட்டுமே
அழுத்தங்களுக்கான
மூலகாரணமல்ல.
டிசம்பர்
29ம்
திகதி,
ஜப்பானிய
கடலோரக்
காவற்படையினர்
ஒரு
சீன
மீன்பிடிக்கும்
கப்பல்
தெற்கில்
உள்ள
ஜப்பானியத்
தீவான
200
மைல்
பரப்பளவுள்ள,
யசுஷிமாவைச்
சுற்றியுள்ள
சிறப்புப்
பொருளாதாரப்
பகுதியினுள்
நுழைந்தது.
இது
பிடித்துக்
காவலில்
வைக்கப்பட்டது.
கப்பல்
தலைமை
மாலுமி
மற்றும்
இரண்டு
பணியாட்கள்
விடுதலை
செய்யப்படுவதற்கு
முன்
கியூஷுவிலுள்ள
ககோஷிமான
நகரத்திற்கு
அழைத்துச்
செல்லப்பட்டனர்.
செப்டம்பர்
2010ல்
ஜப்பான்
சென்காகு/டயோயு
தீவுகளுக்கு
அருகே
உள்ள
நீர்நிலையில்
ஜப்பானிய
கடலோரப்
படையினரின்
கப்பலுடன்
மோதியதாகக்
கூறி
ஒரு
சீன
மீன்பிடிக்
கப்பலின்
தலைமை
மாலுமியை
காவலில்
வைத்து
அவர்
மீது
விசாரணை
நடத்துவதாக
அச்சுறுத்தியது.
இக்கைது
விரைவில்
அழுத்தமான
மோதலாக
வளர்ச்சியுற்றது;
இதில்
சீனா
ஜப்பானுக்கு
முக்கியமான
அபூர்வ
மண்கள்
ஏற்றுமதியை
நிறுத்திவிடுவதாக
அச்சுறுத்தியது.
இம்முரண்பாடு
பின்
ஜப்பானிய
அதிகாரிகள்
தலைமை
மாலுமியை
விடுவித்தபின்
தீர்க்க்ப்பட்டது.
இத்தகைய
சமீபத்திய
நிகழ்வுகள்
ஆபத்தான
இராஜதந்திர
மோதலாக
விரிவடையவில்லை
என்றாலும்,
ஒவ்வொன்றும்
அத்தகைய
சாத்தியப்பாட்டை
கொண்டிருந்தது.
இரு
நாடுகளின்
அரசாங்கங்களும்
வேண்டுமென்றே
பிரச்சனைக்குள்ளான
தீவு
பற்றித்
தேசிய
உணர்வை
தூண்டுகின்றன.
இதற்குக்
காரணம்
உள்நாட்டில்
பெருகியிருக்கும்
மோசமான
பொருளாதார
இடர்களிலிருந்தும்
மற்றும்
அதிகரிக்கும்
சமூக
அழுத்தங்களிலிருந்தும்
திசைதிருப்ப
வேண்டும்
என்பதுதான்.
செப்டம்பர்
மாதம்
பரந்த
ஜப்பானிய
எதிர்ப்பு
ஆர்ப்பாட்டங்களுக்கு
சீன
ஆட்சி
பச்சை
விளக்கைக்
காட்டியது.
அவ்
எதிர்ப்புகள்
டோக்கியோவின்
முடிவான
முறையாக
சென்காகு/டையோயுதீவுகளை
அவற்றின்
தனி
நபர்
ஜப்பானிய
உரிமையாளரிடம்
இருந்து
வாங்குதல்
என்பதை
எதிர்த்தவை.
சீன
அதிகாரிகள்
தீவுகளை
மீது
ஜப்பானிய
கட்டுப்பாட்டை
சவால்
விடும்
நோக்கத்தைக்
கொண்ட
கண்காணிப்பு
ரோந்துகளை
படிப்படியாக
விரிவாக்கம்
செய்துள்ளனர்.
இது
மோதலுக்கான
ஆபத்தை
உயர்த்தியுள்ளது.
அரசாங்கத்திற்குச்
சொந்தமான
செய்து
ஊடகம்
பலமுறையும்
ஜப்பானுக்கு
எதிராக
கடுமையான
நிலைப்பாடு
தேவை
என
வாதிட்டுள்ளது.
கடந்த
மாதம்
வலதுசாரி
தாராளவாத
ஜனநாயககட்சி
(LDP)
அரசாங்கம்
ஜப்பானில்
தேர்ந்தெடுக்கப்பட்டிருப்பது
சீனாவுடன்
அழுத்தங்களைத்தான்
அதிகரிக்கும்.
தேர்தல்
பிரச்சாரத்தின்போது
இப்பொழுது
பிரதம
மந்திரியாக
இருக்கும்
ஷின்சோ
அபே
தீவுகளைக்
பாதுகாக்க
வலுவான
நடவடிக்கைகள்
வேண்டும்
என
அழைப்பு
விட்டதுடன்,
அதேபோல்
நாட்டின்
பாதுகாப்பிற்கான
படைகள்
என்பதை
ஒரு
முறையான
இராணுவமாக்க
ஜப்பானின்
அமைதிவாத
அரசியலமைப்பு
சட்டத்தை
மாற்றவேண்டும்
என்றும்
கூறினார்.
தன்னுடைய
புத்தாண்டுச்
செய்தியில்
அவர்
“நம்
நிலப்பகுதி,
வான்
பகுதி,
கடற்பிராந்தியம்”
ஆகியவை
பாதுகாக்கப்படும்
என்றும்
உறுதிமொழி
கொடுத்தார்.
ஏற்கனவே
ஜப்பானிய
அரசாங்கம்
தேசிய
இராணுவ
மூலோபாயத்தை
மறுபரிசீலனை
செய்ய
இருப்பதாக
நேற்று
அறிவித்துள்ளது.
இதனால்
முந்தைய
அரசாங்கத்தின்
ஐந்து
ஆண்டுக்
கால
பாதுகாப்புத்துறை
செலவுத்திட்டம்,
பாதுகாப்பு
வழிகாட்டி
நெறிகள்
ஆகியவை
மாற்றப்படும்.
Mainichi செய்தித்தாளின்
கூற்றுப்படி,
அரசாங்கம்
இராணுவத்திற்கான
செலவை
2%இனால்,
அதாவது
4.7
டிரில்லியன்
யென்
என
($அமெரிக்க
54
பில்லியன்)
அதிகமாக்குவதைப்
பரிசீலிப்பதாகக்
கூறியுள்ளது.
ஏற்கனவே
ஜப்பான்
உலகில்
ஆறாம்
மிகப்
பெரிய
இராணுவச்
செலவை
கொண்டுள்ளது.
ஆசியாவில்
முன்னிலை
என்ற
திட்டத்தின்
ஒரு
பகுதியாக,
ஒபாமா
நிர்வாகம்
ஜப்பான்
சீனாவுடன்
இன்னும்
ஆக்கிரோஷ
நிலைப்பாட்டைக்
கொள்ள
வேண்டும்
என
ஊக்குவித்துள்ளது.
அதில்
தீவுகள்
குறித்த
பூசலும்
அடங்கும்
பிராந்திய
பிரச்சினையில்
நடுநிலை
வகிப்பதாகக்
கூறிக்கொண்டாலும்கூட,
அமெரிக்க
அதிகாரிகள்
பலமுறையும்
அமெரிக்கா
சென்காக்கு/டயோயு
தீவுகள்
குறித்து
மோதல்
ஏற்பட்டால்
தான்
ஜப்பானுக்கு
இராணுரீதியான
உதவியளிக்கும்
எனக்
கூறியுள்ளது.
அமெரிக்கக்
காங்கிரஸும்
அந்த
நிலைப்பாட்டை
உறுதிப்படுத்தும்
வகையில்
கடந்த
மாதம்
தீவுகள்
மீது
ஜப்பானின்
நிர்வாகக்
கட்டுப்பாடு
உள்ளது
என்பதை
ஒப்புக்கொள்ளும்
வகையில்
பாதுகாப்பு
ஒப்புதல்
திருத்தத்தைச்
சேர்த்துள்ளது.
ஜப்பானின்
புதிய
அரசாங்கம்
தென்
கொரியாவுடனான
அழுத்தங்களைக்
குறைக்கும்
வகையில்
கடந்த
வாரம்
ஒரு
சிறப்புத்
தூதரை
ஜப்பானியப்
பிரதமரின்
கடிதம்
ஒன்றை
கொடுப்பதற்காக
சியோலுக்கு
அனுப்பி
வைத்துள்ளது.
இரண்டு
அமெரிக்க
நட்பு
நாடுகளுக்கு
இடையே
மற்றொரு
தீவு
குறித்த
கடந்த
ஆண்டு
மோதல்
வாஷிங்டனின்
உந்துதலுடனான
உளவுத்தகவல்கள்
பகிர்ந்து
கொள்ளும்
உடன்பாட்டை
தடைக்கு
உட்படுத்திவிட்டது.
பதவியேற்கவிருக்கும்
தென்
கொரிய
ஜனாதிபதி
பார்
கியூன்
ஹை
தூதரின்
வருகையை
வரவேற்றார்.
ஆனால்
ஒத்துழைப்பு
என்பது
“வரலாற்றைச்
சரியாக
விளங்கிக்கொள்வதன்
மூலம்தான்”
சாதிக்கப்பட
முடியும்
என்றும்
வலியுறுத்தினார்.
அவருடைய
வலதுசாரிக்
கருத்துக்களுக்காக
அபே
நன்கு
அறியப்பட்டுள்ளார்.
இவற்றில்
நாட்டின்
வரலாற்று
நூல்களைத்
திருத்துதல்
மற்றும்
1930,1940ளில்
முந்தைய
முறையான
ஜப்பானிய
மன்னிப்புக்கள்
திருத்தப்பட
வேண்டும்
என்று
கூறியுள்ளார்.
ஜப்பானின்
ஆக்கிரமிக்கப்பட்ட
நிலப்பகுதிகளில்
வசதிப்
பெண்கள்
(comfort women)
என
அழைக்கப்படுவோரை
ஜப்பானிய
இராணுவம்
பாலியல்
அடிமைகளாக
மாற்றியது
என்பதையும்
அபே
முன்னதாக
மறுத்தார்.
ஆனால்,
தென்
கொரியா
மற்றும்
சீனாவிடம்
இருந்து
இதற்குக்
கோபமான
பிரதிபலிப்புகள்
வெளிப்பட்டன.
19உறுப்பினர்களைக்
கொண்ட
ஜப்பானிய
அமைச்சரவையில்
பெரும்பான்மையினர்
அபேயின்
கருத்துக்களைத்தான்
பகிர்ந்து
கொள்ளுகின்றனர்:
“அமைச்சரவையில்
14
பேர்
பிரச்சினைக்குரிய
டோக்கியோ
நினைவாலயத்திற்குச்
செல்ல
வேண்டும்
என்னும்
Yasukuni
இலுள்ள
League for Going to Worship Together
என்னும்
அமைப்பில்
உள்ளனர்.
அந்த
நினைவாலையம்
போர்குற்றங்களுக்காக
மரணதண்டனை
பெற்ற
தலைவர்களைக்
கௌரவிக்கிறது.
13 பேர்
“மரபார்ந்த
மதிப்புகளுக்கு”
திரும்ப
வேண்டும்
என்றும்
யுத்தகாலங்களில்
அதன்
‘தவறுகளுக்கான
மன்னிப்புக்கோரும்’
இராஜதந்திரத்தை
கைவிடவேண்டும்
எனக்கூறும்
தேசியச்
சிந்தனைக்குழுவான
நிஹோனுக்கு
ஆதரவு
கொடுக்கின்றனர்.
9 பேர்
பள்ளிகளில்
கற்பிக்கப்படும்
வரலாறு
ஜப்பானின்
இராணுவச்
சகாப்தம்
குறித்து
இன்னும்
கூடுதலாக
தேவை
என
விரும்புகின்றனர்.
ஜப்பானின்
போர்க்காலக்
கொடுமைகள்
பலவற்றை
அவர்கள்
மறுக்கின்றனர்.”
கடந்த
வெள்ளியன்று
தலைமை
அமைச்சரவை
செயலர்
யோஷிஹிடே
சுகா
நிருபர்களின்
அரசாங்கம்
பாராளுமன்றத்தில்
1995
இல்
ஒப்புதல்
கொடுக்கப்பட்ட
ஜப்பானின்
போர்க்கால
ஆக்கிரமிப்பு
குறித்த
மன்னிப்புகோரலை
நீடிக்கும்
என்றார்.
ஆனால்
வரலாற்றுப்
பிரச்சினைகளில்
அமைச்சரவையின்
கருத்துக்களை
ஐயத்திற்கு
இடமின்றி
பிரதிபலிக்கும்
“வருங்காலச்
சார்புடைய”
தனி
அறிக்கையை
சுகா
முன்னிழலிட்டு
காட்டுகிறார்.
அதே
நேரத்தில்
அவர்
1933ம்
ஆண்டு
அறிக்கை
ஒன்று
திருத்தப்படும்
என்று
அடையாளம்
காட்டியுள்ளார்.
இது
“வசதிப்
பெண்கள்”
(comfort women) குறித்தது
ஆகும்.
அவர்
வரலாற்றாளர்கள்
இப்பிரச்சினையை
மறு
ஆய்வு
செய்ய
வேண்டும்
என்றும்
அழைப்பு
விடுத்துள்ளார்.
இந்த
வரலாற்றுப்
பிரச்சினைகளில்
எதுவுமே
சீனா
மற்றும்
தென்
கொரியாவுடனான
உறவுகளை
எரியூட்டுவதுடன்,
ஏற்கனவே
அழுத்தம்
கொடுக்கும்
பிராந்தியமோதல்களுடன்
இணைந்துகொள்ளும்.
உலகப்
பொருளாதார
நெருக்கடி
மோசமாக
இருக்கும்
நிலையில்,
இந்த
அழுத்தங்கள்
ஆசியாவில்
பொருளாதார,
மூலோபாயப்
போட்டி
ஆழமடைந்துவிட்டதைப்
பிரதிபலிக்கின்றன.
இவையும்
ஒரு
மோதலைத்
தூண்டும்
சாத்தியப்பாட்டை
கொண்டவை.
பைனான்சியல்
டைம்ஸின்
ஆய்வாளர்
கிடியோன்
ராஹமன்
சமீபத்தில்
ஜப்பானுக்கும்
சீனாவிற்கும்
இடையேயான
உராய்வை
அடையாளம்
காட்டியுள்ளார்; “கடந்த
ஆண்டை
உருவமைத்த
பெரும்
நிகழ்வுகள்
ஐந்தில்
இதுவும்
ஒன்றாகும்”
எனக்
கூறியுள்ளார்.
அவர்
குறிப்பிடுவதாவது:
சீனாவும்
ஜப்பானும்
கிழக்குச்
சீனக்கடலில்
மக்கள்
வசிக்காத
தீவுகளுடைய
உரிமை
பற்றி
ஒரு
இராணுவரீதியாக
நிழல்
போரை
நடத்துகின்றன.
இது
அமெரிக்க-ஜப்பானிய
உடன்பாட்டில்
இத்தீவுகளும்
அடங்கும்
என்று
அமெரிக்கா
தெளிவாக்கியபின்
வருங்காலத்தின்
ஆபத்தைக்
குறிப்பாகச்
சுட்டிகாட்டுகிறது.
|