WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
வரிவிதிப்பு உடன்பாட்டை அடுத்து,
வாஷிங்டனின் நிகழ்ச்சி நிரலை செலவு
வெட்டுக்கள் ஆதிக்கம் செலுத்துகின்றன
Patrick Martin
7 January 2013
“வரவு-செலவுத்
திட்ட நெருக்கடியை”
தவிர்ப்பதற்கு ஜனநாயகக் கட்சியும் குடியரசுக்
கட்சியும் உடன்பாட்டைக் கண்டபின்,
இரு பெரு வணிகக் கட்சிகளும் தங்கள் உள்நாட்டு
நிகழ்ச்சிநிரலில் இன்னும் ஒரு செயலைச் செய்ய வேண்டும் என்ற கருத்துடன புத்தாண்டில்
நுழைகின்றன.
அது சுகாதாரப் பாதுகாப்பு,
ஓய்வூதியச் செலவுகள்
மற்றும் மில்லியன் கணக்கான மக்கள் நம்பியிருக்கும் பிற திட்டங்களில் செலவுகளைக்
குறைக்க வேண்டும் என்பதே.
மோதல்களுக்கும் அரசியல் நாடகங்களுக்கும்
பின்,
நிதியப் பிரபுத்துவத்தின் பிரதிநிதிகள்
செய்தி ஊடகத்துடன் இணைந்து முன்பு அரசில்ரீதியாக முடியாதவை என்று கருதப்பட்ட சமூகத்
தாக்குதல்களை செயல்படுத்துவதற்கான நிலைமைக்கு உழைக்கின்றன.
சுகாதாரப் பாதுகாப்பில் நிதியைக் குறைத்தல்,
ஏற்கனவே அற்பமாக இருக்கும் ஓய்வூதிய நலன்களைக்
குறைத்தல்,
நலன்களைப் பெறும் முன்னர் மக்களை
இன்னும் நீடித்து உழைக்க வைத்தல் ஆகிய அத்தகைய நடவடிக்கைகள் தவிர்க்க முடியாதவை என்று
அவற்றால் காட்டப்படுகின்றன.
தன் சனிக்கிழமை வானொலி மற்றும்
இளையத்தள உரையை பயன்படுத்தி ஜனாதிபதி ஒபாமா கூட்டாட்சிக் கடன் உச்சவரம்பை
உயர்த்துவது குறித்து காங்கிரசில் இருக்கும் குடியரசுக் கட்சியினருடன் பேச்சுக்கள்
இராது என்று அறிவித்தார்.
இந்த வரம்பை அமெரிக்கக் கருவூலம் மீற
உள்ளது.
மன்றத்தலைவர் ஜோன் போஹ்னர் கடன் வரம்பை
நெம்புகோலாக பயன்படுத்தி சமூகநலத் திட்டங்களில் செலவுகள் வெட்டுக்களுக்கு
குடியரசுக் கட்சியினரை கட்டாயப்படுத்த உள்ளதாகக் கூறினார்.
கடன் உச்சவரம்பில்
ஒவ்வொரு டாலர் உயர்விற்கும் ஒரு பத்தாண்டு காலத்திற்கு செலவுகளில் ஒரு டாலரை
அதிகமாகக் குறைக்க வேண்டும் என அவர்கள் கோருகின்றனர்.
ஆளும் வர்க்கத்தைப் பொறுத்தவரை,
கடன் உச்ச வரம்பு என்பது ஒரு தந்திரோபாயப்
பிரச்சினை ஆகும்.
ஒரு பிரிவு அதை நெம்புகோலாகப் பயன்படுத்தி
வெட்டுக்களைக் கட்டாயப்படுத்துவது என்பது அமெரிக்க கடன்தர நிர்ணயத்திற்கும்,
டாலரின் நிலைக்கு ஊறு விளைவிக்கும்
என்றும் கருதுகின்றனர்.
இறுதி இலக்கான சமூகப் பாதுகாப்பு,
Medicare, Medicaid
ஆகியவற்றைக் குறைப்பதில் அனைவருக்கும் உடன்பாடு உள்ளது.
சனிக்கிழமை உரையில்,
ஒபாமா தன் நிர்வாகத்தின் கீழ் இயற்றப்பட்ட
கடன் குறைப்பு நடவடிக்கைகள் எப்படி
2.4 டிரில்லியன் டாலர்களை குறைத்துள்ளது
என்பதைச் சுட்டிக்காட்டினார்.
அதே நேரத்தில்
Medicare இன்னும் பிற உதவித்திட்டங்களில்
“சீர்திருத்தங்களைச்”
சுமத்தத் தான் தயார் என்றும் அறிவித்தார்.
“இன்னும்
கூடுதலாகவும் செய்ய நான் விரும்புகிறேன்”
என்றார் அவர்.
மன்றத்தில் சிறுபான்மை தலைவர்
நான்சி பெலோசி
CBS நிகழ்ச்சியான
“Face
the Nation”
இல் மற்ற பற்றாக்குறை குறைப்பு
நடவடிக்கைகளுடன் Medicare
வழங்குவதற்கு கூடுதலான பரிசோதனை
வழிமுறைகளை பரிசீலிக்கத் தயார் என்றார்.
குடியரசுக் கட்சியினரைப்
பொறுத்தவரை,
செனட்டர் மிட்ச் மக்கானல் பல வலைத்தள
பேட்டி நிகழ்வுகளில் தோன்றினார்.
ஞாயிறு காலை அவர் வரவு-செலவுத்
திட்ட வெட்டு உடன்பாட்டிற்குப் பின்,
“வரிவிதிப்புப்
பிரச்சினை முடிந்துவிட்டது”
என்று வலியுறுத்தினார்.
“இப்பொழுதுள்ள
பிரச்சினை இதுதான்:
எமது நாடு மற்றும் எதிர்காலத்தை எதிர்நோக்கும்
மிகப்பெரிய பிரச்சினை குறித்து நாம் என்ன செய்யப்போகிறோம்?
அதுதான் நாம் செலவழிப்பதற்கு
அடிமையாகியுள்ளதாகும்.”
என்றார் அவர்.
வெள்ளை மாளிகை ஒபாமாவும்
போஹ்னரும் ஜூலை
2011ல் பேச்சுவார்த்தைகள் மூலம்
“பெரும்
பேரத்திட்டத்தில்”
அடங்கும் சமூக நல வெட்டுக்கள் பலவற்றைப்
புதிப்பிக்கத் திட்டமிட்டுள்ளது என்று ஞாயிறன்று வாஷிங்டன் போஸ்ட் தகவல்
கொடுத்துள்ளது.
இந்த பேச்சுவார்த்தைகள் இறுதியில் தோல்வியடைந்து
போயின.
மொத்தத்தில் நிர்வாகம்
$900 பில்லியன் செலவுக் குறைப்புக்களைப்
பரிசீலிப்பதாகச் செய்தித்தாள் கூறுகிறது.
இதில்
$600 பில்லியன் சமூக உதவித்திட்டங்களில்
இருக்கும்.
இந்த வெட்டுக்களில்
Medicare இற்கான தகுதி பெறும் வயது
65ல் இருந்து
67க்கு உயர்த்தப்படலாம்,
சமூகப் பாதுகாப்பு
நலன்களுக்கான வாழ்க்கைச்செலவு அதிகரிப்பு குறைக்கப்படலாம் என்பவை அடங்கும்.
ஆளும் வர்க்கத்தைப் பொறுத்தவரை,
இத்தகைய நடவடிக்கைகள் ஓர் உடனடிப் பணம்
கிடைப்பது போல் கருதப்படுகிறது.
அவர்கள் இதைவிட மிகப் பெரிய திட்டங்களை
சிந்தித்துள்ளனர்.
இதுபற்றி குறிப்பிடத்தக்க வகையிலான ஆய்வு
ஞாயிறன்று நியூயோர்க் டைம்ஸில் வெளியானது;
அக்கட்டுரை பொருளாதார வல்லுனர்கள் ஹரி
கிங் மற்றும் சமீர் சோனேஜியால் எழுதப்பட்டுள்ளது.
சமூகப்பாதுகாப்பு செலவிற்கான வரவு-செலவுத்
திட்ட நெருக்கடி என்பது “நாம்
நினைப்பதை விட மோசமாக உள்ளது”
என்று வாதிட்ட அவர்கள்,
ஓய்வூதிய வயதை
69 அல்லது
70க்கு உயர்த்துவது,
அனைவருக்கும் பல வசதிகளை குறைத்தல்,
ஆண்டு ஒன்றிற்கு
$43,000 க்கு மேல் உள்ள தொழிலாளர்களுக்கு
ஒரு புதிய,
குறைந்த,
சமூகநல விகிதங்களை
அறிமுகப்படுத்துதல் ஆகியவை தேவை எனக் கூறியுள்ளனர்.
இத்தகைய ஆய்வு முதியோர் மீது அது
காட்டும் விரோதப் போக்கை ஒட்டி குறிப்பிடத்தக்கது ஆகும்.
ஓய்வு பெறுதல் என்பது ஒரு நேரியத் தீமை என
இது தெரிவித்து,
மத்திய அரசின் கொள்கை
“ஒய்வு பெறுதலுக்கு”
ஊக்கம் கொடுக்காமல் இருக்குமாறு
மறுகட்டமைக்கப்பட வேண்டும்,
ஓய்வு பெறுதல் ஒரு
“விருப்பத் தேர்வுதான்
”எனக் கூற
வேண்டும் என்கிறது.
கட்டுரையாளர்களில் ஒருவரான சோனேஜி
Dartmouth Institute for Health Policy
என்னும் அமைப்பில் இருந்து வருகிறார் என்பது ஒரு தற்செயல் நிகழ்வு அல்ல இந்த
நிறுவனம் ஒபாமா நிர்வாகத்துடன் நெருக்கமாகப் பிணைந்து,
செலவுகளைக்குறைப்பதற்கு
“தேவையற்ற”
மருத்துவ
வழிமுறைகளை குறைக்க வேண்டும் எனக் கூறுவதில் முன்னணியில் நின்றது.
சமுதாயத்தை முதியவர்கள்தான்
உறிஞ்சி வாழ்கின்றனர் என்பதை நாம் நம்ப வேண்டுமாம்.
ஏனெனில் அவர்கள் கடந்த வாரம் டைம்ஸ்
கட்டுரையாளர் டேவிட் ப்ரூக்ஸ் எழுதியுள்ளபடி,
“தங்களுக்கே
நிறையச் செலவு செய்து கொள்ளுகின்றனர்”;
அதே நேரத்தில்
“தங்கள் குழந்தைகள் அல்லது பேரக்
குழுந்தைகளிடம் செலவுகளை தள்ளி விடுகின்றனர்.”
அமெரிக்க நிதியப் பிரபுத்துவம் பல
தசாப்தங்களாக ஒரே நோக்கம்கொண்ட இலக்கினால் உந்தப்பட்டு ஊக,
ஒட்டுண்ணித்தன செயல்கள் மூலம் இயன்றளவு
பணம் சேமிக்கப்பட வேண்டும் என்ற கருத்தியலை செயல்படுகிறது.
இச்செயலுக்கு கடந்த நான்கு ஆண்டுகளாக அது
தன் கவனத்தை இரட்டிப்பாகச் செய்துள்ளது.
இதனால் செல்வந்தர்கள்
தாங்களே காரணமான பொருளாதார நெருக்கடியினால் தங்கள் செல்வம் குறைந்துவிடக்கூடாது என்பதை
உறுதிப்படுத்த விரும்புகின்றனர்.
ஆனால் இதற்கு இந்த பல
மில்லியன்களை உடைய தனியார் முதலீட்டு நிதிய மேலாளர்களோ,
பெருநிறுவன நிர்வாகிகளோ விலை கொடுக்கத்
தயாராக இல்லை,
மாறாக முதியோரும் இயலாதவரும் கொடுக்க வேண்டும் என
விரும்புகின்றனர்.
இதைப்பற்றிய வலதுசாரிச்
செய்தி ஊடக உயர் அறிவுரைகள் அனைத்தும் சமூகத்தில் மக்கள் வயதானவர்களாகவோ
நோய்வாய்ப்பட்டோ இருக்க முடியாது என்பதை கேள்விக்கு இடமின்றி ஏற்றுக்கொண்டுள்ளதை
அடிப்படையாக கொண்டுள்ளது.
இப்படிச் சிக்கன நடவடிக்களுக்கு
அழைப்பு விடுகையில்,
அமெரிக்கப் பங்குச் சந்தை ஐந்து ஆண்டு
இல்லாத உச்ச நிலையில் உள்ளது.
2008 நிதியச் சரிவில் ஏற்பட்ட
இழப்புக்களைப் பெரும்பாலும் மீள்ச்சியடைந்துவிட்டது.
அமெரிக்கப்
பெருநிறுவனங்கள் இப்பொழுது டிரில்லியன் கணக்கான டாலர்கள் என்றும் பணக்குவியலில்
அமர்ந்துள்ளன.
அரசியல் மற்றும் செய்தி ஊடக
நடைமுறை பரந்த முறையில் சொத்துக்கள் மற்றும் வருமானங்கள் பகிர்ந்து கொள்ளப்படுவதை
வாழ்வின் மாற்ற இயலாத உண்மை எனக் கருதுகின்றனர்.
ஆளும் வர்க்கம் கொள்ளை முறையைத்
அடித்தளமாக கொண்டு குவித்துள்ள பரந்த நிதியங்கள் எப்படியும் தொடர வேண்டும் என
கருதுகின்றன.
இலாபங்கள் மற்றும் தனிச் சொத்துக்களில் என்ன
இழப்பு இருந்தாலும்,
சமூகநலத் திட்டங்கள் என்று போருக்குப் பிந்தைய
சமூக,
அரசியல் ஒழுங்கின் அடித்தளமாக
இருந்தவையும் அகற்றப்பட வேண்டும் என்ற இலக்கிற்கு உட்பட்டுள்ளன.
இத்தகைய நிலைமைகள் அனைத்து வரலாற்று
நியாயபூர்வத்தன்மையையும் இழந்து விட்ட ஒரு சமூக ஒழுங்கான முதலாளித்துவத்தினைப் பற்றி
பேசுகின்றன.
இந்த சமூக அமைப்பு முறையால் பல வருட உழைப்பால்
பல மில்லியன் கணக்கான ஓய்வூதியம் பெற்றுள்ள தொழிலாளர்களுக்கு ஓய்வூதியங்கள் மற்றும்
சுகாதாரப் பாதுகாப்பிற்கான நிதியைக் கொடுக்க இயலாது என்பது முதியோருக்கு எதிரான வாதமல்ல,
மாறாக இலாப
முறைக்கு எதிரானதாகும்.
ஓய்வூதியத் தொழிலாளர்களின் தேவைகளை
நிறைவு செய்யும் வளங்கள்,
முழு மக்களின் தேவைகள்,
வேலைகளுக்கு,
கௌரவமான வருமானங்கள்,
கல்வி,
சுகாதாரப் பாதுகாப்பு,
கலாச்சார மற்றும் இன்னும் பிற சமூக நலன்களைப்
பெறுவதற்கான வளங்களை பில்லியனர்கள் மற்றும் பெருநிறுவனங்களின் நிதியங்களை சுவீகரித்துக்
கொள்வதின் மூலமே முடியும்.
பொருளாதார வாழ்வு
மிகச் சிறிய எண்ணிக்கையிலுள்ள செல்வம் நிறைந்த உயர்மட்ட ஒட்டுண்ணிகளால் அல்லாது அனைத்துச்
செல்வங்களையும் உற்பத்தி செய்யும் தொழிலாளர்களின் தேவைகளுக்கு ஏற்றவகையில் மறுசீரமைக்கப்பட
வேண்டும். |