World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : வரலாறு

This week in History

25 years ago: Soviet regime proposes Afghan pullout

வரலாற்றில் இந்த வாரம்

25 வருடங்களுக்குமுன்னர்: சோவியத் படை ஆப்கானைவிட்டு வெளியேற்ற தீர்மானித்தது

Back to screen version

1988 சோவியத் இராணுவம் ஆப்கானைவிட்டு வெளியேற்றப்படுகிறது.

ஆப்கான் ஜனாதிபதி முகமது நஜிபுல்லாவை (Mohammad Najibullah) காபூலில் 1988 ஜனவரி 4ம் தேதி சந்திப்பதற்கு சோவியத் வெளிவிவகார அமைச்சர் எட்வார்ட் ஷெவார்ட்நாட்ஸ (Eduard Shevardnadze) வந்துசேர்ந்தார். உத்தியோகபூர்வ செய்தி நிறுவனம் டாஸ் (Tass) முதல் 48 மணிநேரம் நடந்த கலந்துரையாடலின் உள்ளடக்கச் செய்திகளை இருட்டடிப்பு செய்தது. அவர், எட்டு வருட தலையீட்டின் இறுதிக்கட்டத்தில், மீதமுள்ள படைகளை 1988 இறுதிக்குள் வெளியேற்றும் சோவியத் ஒன்றியத்தின் எண்ணத்தை அறிவித்தபோது அந்த நாடு ஆப்கானிஸ்தானை விட்டு வெளியே செல்லும் ஊகத்தையும் இறுதியில் ஷெவார்ட்நாட்ஸ உறுதியளித்தார். ஆகக்குறைந்த்து ஆரம்பகட்டத்தில் வெளியேற்றத்தை நஜிபுல்லா எதிர்த்ததற்கான ஒரு உறுதியான அறிகுறிகள் இருந்தன.

ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சியின் (PDPA) தலைவராக நஜிபுல்லா சோவியத் ஆதரவு ஆப்கான் அரசாங்கத்தால் ஒரு வருடத்திற்கு முன்னர் ஒருதலைப்பட்சமான அமைதி ஒப்பந்தத்தை அறிவித்தார். அதில் சோவியத் வெளிவிவகாரக் கொள்கையில் திரும்ப அழைக்கும் கட்டமானது ஒரு சமிக்கையாக காணப்பட்டது. அமெரிக்க நிதிஉதவிபெற்ற இஸ்லாமிய முஜ்ஜாஹிதீன் அமைப்பு இந்த ஒப்பந்தத்தை எதிர்த்ததுடன் அதற்கெதிரான யுத்தத்தை தொடர்ந்து நடத்தியது. நஜிபுல்லா அவருடைய ஆப்கான் ரகசிய பொலிஸாரின் மிருக்கத்தனமான சித்திரவதைகளாலும், மரண தண்டனைகளாலும் பெரும்பான்மையான மக்களால் வெறுக்கப்பட்டிருந்தார். இந்தச் சன்டையினால் 1987ல் மூன்று மில்லியனுக்கு அதிகமான ஆப்கானிஸ்தானியர்கள் அவர்களுடைய இடங்களைவிட்டு வெளியேறி பாகிஸ்தான் அகதிகள் முகாம்களுக்கு செல்லத் தள்ளப்பட்டனர்.

1988 ஜனவரியில் நஜிபுல்லாவுடனான சந்திப்பிற்குப் பின்னர் ஷெவார்ட்நாட்ஸ திரும்ப அழைக்கும் ஒப்பந்தமானது ஆப்கானிஸ்தானின் எதிர்கால ஆட்சியை உருவாக்குவது பற்றிய உடன்பாட்டில் இனி சார்ந்திருக்கும் என்று அறிவித்தார். நஜிபுல்லாவினுடைய ஆப்கானிஸ்தான் மக்கள் ஜனநாயகக் கட்சி சிறுபான்மையைக் கொண்டிருக்கும்  முதலாளித்துவ அரசியல்வாதிகளின் ஆதிக்கத்தை கொண்ட ஒரு பரந்த அடிப்படையிலான கூட்டணி அரசாங்கத்தின் அமைக்க விரும்புவதை மாஸ்கோவின் ஸ்ராலினிச அதிகாரத்துவமானது தெளிவாக கூறியிருந்தது.

1992ல் சோவியத்தின் ஆதரவு தொடர்ந்து கிடைக்காத நிலையில் நஜிபுல்லா பதவியிலிருந்து வெளியேற்றப்பட்டார். அமெரிக்காவின் ஆதரவுடன் 1996ன் இறுதியில் தலிபான் அதிகாரத்தை எடுத்துக்கொண்டதுடன் நஜிபுல்லாவை மின்கம்பத்தில் தூக்கிலிட்டுக் கொன்றது. ஆப்கானிஸ்தானில் அமெரிக்காவின் கொள்கைகளே சோவியத்தின் தலையீட்டுக்கு எதிராக இஸ்லாமிய எதிர்ப்புக் குழுக்களுக்கு ஆயுத உதவி மற்றும் நிதிஉதவியளித்து தலிபான் மற்றும் அல்-கொய்தா போன்றவைகள் எழுச்சி பெறுவதற்கும் மற்றும் பேரழிவான விளைவுகளுக்கும் முக்கிய பொறுப்பாகும்.