WSWS :Tamil : வரலாறு
150
ஆண்டுகளுக்கு முன்பு
1862
ம் ஆண்டு
செப்டம்பர்
17ம்
திகதி,
அமெரிக்க உள்நாட்டுப் போரின் இரண்டாம் ஆண்டில்,
மேரிலாந்திலுள்ள ஷார்ப்ஸ்பேர்க்கிற்கு அருகே ஆன்டியேட்டம் ஆற்றுத்துறைமுகத்தில்
மத்திய கூட்டரசின் படைகளும் சுதந்திர மாநிலங்களின்
படைகளும் சந்தித்துக்கொண்டன.
அமெரிக்க இராணுவ வரலாற்றில் அமெரிக்க துருப்புகளுக்காக ஒரு நாளில்
அதிக இரத்தம் சிந்தப்பட்ட இந்த யுத்தம் நடந்துள்ளது.
ஒரே நாளில் சுமார்
3700
இராணுவத்துடன்
23000பேர்
இந்த சண்டையில் கொல்லப்பட்டனர்.
இன்னும் இந்த
பாதிப்புகளின் எண்ணிக்கையைவிட ஆன்டியேட்டம் யுத்தத்தின் முக்கியத்துவம் இன்னும் அதிகமானதாகும்.
மேரிலாந்திலிருந்தும்
வடக்கிலிருந்தும் பாரிய பிரிவுகளைக் கொண்டிருந்த வடக்கு
வேர்ஜீனியாவின் ஜெனரல் ரோபர்ட் லீயின் இராணுவம் வெளியேற்றப்பட்டதின் விளைவாக மூலோபாயரீதியாக
மத்திய அரசின் வெற்றியமைந்தது.
மிகவும் முக்கியமான வகையில்,
ஜனாதிபதி ஆபிரகாம் லிங்கன் அதிகாரபூர்வமாக அடிமை ஒழிப்பு
பிரகடனத்தை வெளியிடுவதற்கு இடம் அமைத்துக் கொடுத்தது.
அந்நிறைவேற்று ஆணை அடிமைகளுடைய விடுதலைக்கு முக்கிய பங்காற்றியது.
லிங்கன் அடிமை
முறையை வெறுத்தார்
“அடிமை
முறை தவறு இல்லை என்றால் , எதுவுமே தவறில்லை.”
என்று அவர் கூறியிருந்தார்.
ஆனால் அவர்
1862
வரை ஏற்கனவேயிருந்த அனுமதிக்கப்பட்டிருந்த அடிமைமுறையுடனும் அது
புதிய பிராந்தியங்களுக்கு விரிவுபடுத்தப்படாமல் தடைசெய்யப்படுமானால் அது மத்திய
கூட்டரசை போருக்கு முன்னர் இருந்த நிலைக்கு மீட்டெடுத்துவிடுமென்ற ஒரு
நிலைப்பாட்டிலிருந்தார்.
உள்நாட்டுப்
போரின் முதலாம் ஆண்டு லிங்கனின் சிந்தனையை மாற்றியிருந்தது.
போரில் தெற்கில் கிடைத்த வெற்றியும் வடக்கில் போர்முனையில் பயனில்லாமல்
போனநிலைமையும்,
தெற்கின் முழு சமூக ஒழுங்கின்மைக்கு எதிராக மரண அடிகொடுக்காமல் மத்திய
மத்திய கூட்டரசினை பாதுகாப்பது சாத்தியமில்லை என்பதில் அவரை நம்பிக்கை கொள்ளவைத்தது.
அதாவது அடிமைமுறை ஒழிக்கப்படவேண்டும்.
அதன் எதிரிகள்
எதையும் இழக்க இல்லாதபோது,
அனைத்தையும் பணயம் வைத்து
இந்த அரசாங்கம் நீண்ட ஒரு விளையாட்டை விளையாட முடியாதது”
என்று கூறினார்.
அடிமைகளின் விடுதலை
”ஒரு
இராணுவரீதியாக அவசியமானதும் மத்திய கூட்டரசின் பாதுகாப்புக்கு அத்தியாவசியமான ஒன்றுமாகும்.
நாம் அடிமைகளை விடுதலை செய்வது அவசியமாகும் அல்லது நாமே அடக்கவைக்கப்பட்டுவிடுவோம்.”
இது இந்தப்போரை
ஒரு சமூக மாற்றமாக,
அதாவது இரண்டாம் அமெரிக்கப் புரட்சியாக திறமையாக மாற்றியது.
ஜூன்
1862ல்
லிங்கன் அவருடைய அமைச்சர் குழுவினரிடம்,
அவர்கள் திகைப்படைந்த வகையில்,
விடுதலைப் பிரகடனத்தை நிர்வாக ஆணையாக வெளியிடும் நோக்கமாக கொண்டுள்ளதாகத்
தெரிவித்தார்.
மத்திய கூட்டரசினுள் இன்னும் இருந்ததும் அடிமைமுறையை தக்கவைத்திருந்தவையும்,
மிதவாத அடிமை எதிர்ப்பு நடவடிக்கைகளை மேற்கொண்ட எல்லைப்புற மாநிலங்களின்
ஆதரவு கூட கிடைக்காததால் விரக்தியுற்ற லிங்கன் காங்கிரஸின் ஈடுபாட்டை இதில் தவிர்ப்பதற்காக
தலைமைத் தளபதி என்றவகையில் இராணுவபலத்தை நாடுவதற்கு தீர்மானித்தார்.
ஆனால் லிங்கன் அவருடைய அரசுதுறைச் செயலாளர் வில்லியம் ஷேவரடின் யோசனையின்படி
அதிகாரபூர்வமாக தீர்மானத்தை வெளியிடுவதற்கு முன் யுத்தக்களத்திலிருந்து சில
வெற்றித்தகவல் வரும்வரை காத்திருப்பதற்கு ஒப்புக்கொண்டிருந்தார்.
அந்த வெற்றி ஆன்டியேட்டம் போரினால் நிரூபிக்கப்பட்டது.
வடக்கு
வேர்ஜீனியாவின் இராணுவம் 1862 பிந்திய கோடைகாலத்திற்குள் வடக்கு படையெடுப்புடன் தனது
வெற்றிகளை பின்தொடர்ந்தால் ஒரேநேரத்தில் கென்டக்கி மற்றும் சுதந்திர மாநிலங்களிடம்
இருக்கும் மிசிசிப்பியின் பகுதிகளை கைப்பற்றி தெற்கு தியெட்டரிலிருந்து தாக்கி
வெற்றிகொள்ளலாம் என தென்பகுதியின் தலைவர்கள் தங்களுடைய சொந்த கணிப்புகளின்படி செயற்பட்டுக்கொண்டிருந்தனர்.
இது வேர்ஜீனியாவின் கிராமப்புறங்களில் நாசகரமான விளைவுகளின் பாரங்களை இலகுவாக்கலாம்,
வடக்கின் மனவுறுதி மீதான தாக்கத்தை கொடுத்து மிகவும் முக்கியமாக சுதந்திர மாநிலங்களை
பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் இராஜதந்திரரீதியாக அங்கீகரிக்கும் வாய்ப்புக்களை
சாத்தியமாக்கலாம் மற்றும் அவை இந்த யுத்தத்தில் தலையீடு செய்யலாம் எனவும் கணிப்பிட்டனர்.
ரோபர்ட் ஈ. லீ
இந்த இலக்குகளை
நினைவில் கொண்டு 1862 ஆகஸ்ட் 30ல் புல் ரன்னில் (Bull Run) நடைபெற்ற இரண்டாம்
போரில் வெற்றி பெற்ற புத்துணர்விலிருந்த ரோபர்ட் ஈ. லீ போடோமக் ஊடாக சுதந்திர மாநிலங்களின்
இராணுவத்தை எதிர்கொண்டார்.
அங்கே மத்திய
கூட்டரசின் இராணுவத்தின் எண்ணிக்கையிலும் இராணுவத்தளபாட மேலாதிக்கத்தன்மை
குறித்தும் சந்தேகப்பட ஒன்றுமில்லை. ஆனால் லீ தனக்கு எதிராளியான போடோமக்கின் இராணுவத்
தளபதி ஜெனரல் ஜோர்ஜ் மெக்லெலன் இன் நடவடிக்கையை தான் எடுத்திருந்தார். மெக்லெலன் தன்
முழு இராணுவத்தையும் ஒரு போரில் ஈடுபடுத்தமாட்டார், அவர் தன்னுடைய படைகளை ஒரு
தாக்குதலில் கவனத்தைக் குவிக்க மாட்டார், சுதந்திர மாநிலங்கள் ஒரு தந்திரோபாய
வெற்றி அடைந்திருந்தாலும் பின்தொடரமாட்டார் என அனுபவம் கற்பித்திருந்தது.
வேர்ஜீனியா
மீதான தாக்குதல் தேவை என்னும் லிங்கனின் வேண்டுகோளை ஓராண்டாக மெக்லெலன் எதிர்ந்து
வந்திருந்தார். மெக்லெலன் தான் எதிர்கொண்ட சுதந்திர மாநிலங்களின் படைகளை இரண்டு அல்லது
மூன்று மடங்கு அதிகமாக இருக்கலாம் என மிகைமதிப்பிட்டிருந்ததாக அவருடைய தந்திகள்,
நாட்குறிப்புக்கள் மற்றும் கடிதங்களில் இருந்து வரலாற்றாய்வாளர்கள் கண்டுபிடித்திருந்தனர்.
பாரிய பீரங்கிகள் என்று மெக்லெலன் நினைத்திருந்ததெல்லாம் வெறும் மரக்கட்டைகளாலானவையாக
மாறியிருந்தன. போடோமக்கின் இராணுவம் எக்காரணத்திற்காவோ தாக்குவதற்கு தயாராக இருக்கவில்லை.
வடக்குச் செய்தி ஊடகம் எள்ளி நகையாடியபடி,
“அனைத்தும்
போடோமக்கில் அமைதியாக இருந்தன.”
ஜோர்ஜ் மெக்லெலன்
ஆனால்
மெக்லெலன் ஒரு முட்டாள் அல்ல. பிலெடெல்பியா உயரடுக்குக் குடும்பத்தில் இருந்த வந்த
மெக்லெலன் பெரும் திறமையான அமைப்பாளர் ஆவார். புல் ரன்னில் நடந்த முதல் யுத்தத்தின்
தொடக்கத்தில் ”இளம்
படைத்தளபதி”
எழுச்சிபெற்ற அவமானகரமான மத்திய அரசின் படைக்கு ஏற்பட்ட தோல்வியின்போது
படைத்தலைவனாக உயர்த்தப்பட்டு, இந்த அதிகப்படியான திறமைக்காக லிங்கனால்
பாராட்டப்பட்டிருந்தார். அவர் ஆண்டியெட்டம் காலத்தில் போடோமக்கின் சாதாரண இராணுவ
வீரர்களாலும் அதிகமாக நேசிக்கப்பட்டிருந்தார். லிங்கனால் மெக்லெலன்
கைவிடப்படாமலிருப்பதை இந்தக் காரணிகள் தடுத்தன. லிங்கன் ஒரு
அவநம்பிக்கையடைந்திருந்த செயலாளரிடம்
”அவர்
எங்களுக்கு வெற்றிகளை கொண்டுவந்தால் நான் அவருடைய குதிரையைப் பிடித்துக்கொண்டு
நிற்பேன்.”
என்று கூறினார்.
மெக்லெலனின்
தவறுகளும் மற்றும் தொடர்ந்து போர்செய்வதற்கு விரும்பாமையும் அவரது அரசியல்
நிலைப்பாட்டிலிருந்து வெளிப்பட்டு வந்தது. இவர் அடிமை முறையை எதிர்க்கவில்லை மேலும்
அவர் தெற்குப்பகுதி முழுவதும் தோற்கடிக்கப்படுவதற்கு விரும்பவோ அல்லது முயற்சியெடுக்கவோ
செய்யவில்லை. சுதந்திர மாநிலங்களின் தலைநகரான வேர்ஜீனியாவின் ரிச்மண்ட் இல் போட்டோமக்
இராணுவத்தினரை ஏமாற்றுநடவடிக்கைகளின் மூலம் எதிர்த்து நிற்கலாம் என ஒரு வடக்கு ஜனநாயகவாதியான
மெக்லெலன் நம்பினார். அதாவது அடிமைமுறை பாதிக்காவண்ணம் தெற்கு மாநிலங்கள் மத்திய
அரசுக்காக மீட்கப்படலாம் அதனால் பேச்சுவார்த்தைகளுக்குட்பட்டு உடன்பாடு ஏற்படலாம்,
முன்பிருந்த நிலை தொடரும் என்று கருதினார்.
செப்டம்பர்
3ம் திகதி லீ தன்னுடைய 55,000 பேர் கொண்ட இராணுவத்தை மேரிலாந்திற்குக் கொண்டு
சென்று அவற்றை மூன்றாகப் பிரித்தார்; ஒரு பகுதி மத்திய கூட்டரசின் தளபதிகளைக்
குழப்பமேற்படுத்துவதற்கும், ஒரு பகுதி சுதந்திர மாநிலங்களின் இராணுவத்தின் (Confederate
army)
பிரசன்னம் மேரிலாந்தை தெற்கு நோக்கிய பாதைக்கு வரச்செய்யும் என்ற நம்பிக்கையுடன்
ஏற்படுத்தப்பட்டது. இதில் லீ ஏமாற்றம் அடைந்தார். அவருடைய இராணுவம் அணிவகுத்துச்
சென்றபோது, மேரிலாந்து மக்கள் தங்கள் கதவுகளையும் சன்னல்களையும் அடைத்தனர். அவர்கள்
முன்னேறிச் சென்ற மத்திய கூட்டரசின் இராணுவத்தை கண்டு ஆரவாரித்தனர்.
செப்டம்பர் 15
காலையில்,
மெக்லெலன் லீயை ஷார்ப்ஸ்பர்க்கிற்கு அருகே உள்ள ஆன்டியேட்டம் ஆற்று
துறைமுகத்தில் எதிர்கொண்டார். லீ யின் 18,000 படைகளைவிட மத்திய கூட்டரசின் படைகள்
மூன்று மடங்கு அதிகமாக இருந்தபோதிலும் மெக்லெலன் தாக்குவதில்லையென
தீர்மானித்திருந்ததுடன், 100000 சுதந்திர மாநிலங்களின் வீரர்கள்
காத்திருக்கின்றனர் என்றும் மதிப்பிட்டார். இந்தத் தாமதம் சுதந்திர மாநிலங்களின்
படையினரை மறுஅணிதிரளல் செய்வதற்கு அனுமதியளித்திருந்தது. தளபதிகளான ஜோர்ஜ்
லாங்ஸ்ட்ரீட் மற்றும் தோமஸ்
“ஸ்டோன்வோல்”
ஜாக்சன் ஆகியோர் மத்திய கூட்டரசின் சாதகமான தன்மையை இரண்டுக்கு
ஒன்று
(2:1)
என்ற விகிதத்திற்கு திருப்பி கொண்டுவந்துவிட்டனர்.
செப்டம்பர் 17
அதிகாலையில் மிக ஆக்கிரோசமான யுத்தம் தொடங்கியது.
அதன் முதல்கட்டமாக
“the
Cornfield”
என்று
தற்போது அழைக்கப்படுகின்ற பண்ணைக்குள்ளும் வெளியிலும் யுத்தம் விரிவடைந்தது.
போர் நடைபெற்ற இடம் ஒரு மதிப்பீட்டின் படி
15
தடவைகள் ஒருவருக்கு எதிராக ஒருவரிடம் கைமாறிக்கொண்டது.
ஆனால் இரண்டு பகுதியினராலும் தமக்கு சாதகமாக மாற்றிக்கொள்ள
முடியவில்லை.
சோளக்கொல்லைக்குள் ஏற்பட்ட தாக்குதல் பீரங்கித் தொகுதிகளாலும்
(artillery batteries),
எறிகணைகளாலும்
(canister fire)
மற்றும் நீண்ட
துப்பாக்கிகளாலும்
(rifle volleys),
குறைந்த
உயரத்திலிருந்து தாக்கும் விமானங்களுடனும்(strafed)
தொடர்ந்து இரண்டுபிரிவினரும் மிக நெருங்கிய கைகலப்பு நிலையை
அடைந்தது.
2வது
மாசசூசெட்ஸ் தரைப்படை மற்றும் லூசியானா
”புலி”
படையணி இரண்டுமே இறப்புகளாலும் காயமடைந்ததாலும் தங்களது மூன்றில்
இரண்டு பகுதி வீரர்களை இழந்தனர்.
நண்பகலுக்குள் இறந்தவர்கள் எண்ணிக்கை
13000
ஆகியிருந்தது.
“சோள
புலம்”
”வடக்கிலிருந்த
ஒவ்வொரு சோள வரிசையும் வயலின் அதிகளவிலாளான பகுதியும் நெருங்கிவந்து கத்தியின்
துணைகொண்டு வெட்டப்பட்டிருந்தது போலிருந்ததாகவும்,
அவர்கள் ஒரு சில நிமிடங்களுக்கு முன்னால் வரிசையில் நின்றவர்கள்
போல் கொல்லப்பட்டு அவ்வாறே வரிசையில் கிடத்தப்பட்டிருந்தனர்.”
என்று மத்திய கூட்டரசின் படைத்தளபதி ஜோசப் ஹூக்கர் அதன் பின்விளைவுகளை
விபரித்திருந்தார்.
காலை பிற்பகுதியில்,
போரின் ஈர்ப்புமையம்
”பள்ளமான
சாலை”
(“The
Sunken Road”
)
அல்லது
”கொடூரமான
சந்து”
(“Bloody
Lane.”)
என்று பெயர்பெற்றிருந்த லீயின் பாதுகாப்பு பகுதி கோட்டின் மையப்
புள்ளிக்கு நகர்த்தப்பட்டது.
அங்கு சுமார் 2,500 சுதந்திர மாநிலங்களின் படையினர் சிறிய மலையின்
உச்சிக்கு அருகே இருந்த சாலையின் தாழ்வான பகுதியில் ஒரு நல்ல பாதுகாப்பான நிலையைக்
கண்டுபிடித்திருந்தனர். இப்போது சிக்கிவிட்ட சுதந்திர மாநிலங்களின் பாதுகாவலர்கள்
மீது 64வது நியூயோர்க் பிரிவு முன்னெருங்கி தங்களது சூட்டுத்தாக்குதலை நடாத்தும் வரை
அந்த இடத்தில் இரண்டு மணிநேரம் வரை தாக்குப்பிடித்தனர்.
ஆயினும்,
பலமான பீரங்கித் தாக்குதலின் கீழ்,
மத்திய கூட்டமைப்பு படையினரால் ஆரம்பகட்ட ஊடுருவலை தமக்கு சாதகமாக
பயன்படுத்த முடியவில்லை.
சுதந்திர மாநிலங்களின் படைகளின் பாதுகாப்பை நிலையை உடைத்திருக்க
கூடிய அருகில் காத்திருந்த
20000
இற்கு மேலான படையினரை முன்னோக்கி அனுப்புவதில்லையென மெக்லெலன்
தீர்மானித்தார்.
போருக்குப்
பின்
யுத்தத்தின்
இறுதிக்கட்டம் பிற்பகல் லீ யின் வலதுபக்க அணியில் நடந்தது.
பாதுகாப்பாக நிலைகொண்டிருந்த சுதந்திர மாநிலங்களின் படையினரை ஆன்டியேட்டம்
துறையினை கடக்கும் பாலத்தின் ஊடாக துரத்துவதற்கு எடுத்த முயற்சியின் போது ஆயிரம் மத்திய
கூட்டரசின் படையினர் கொல்லப்பட்டனர். இறுதியில் சுதந்திர மாநிலங்களின் படையினர் உடைந்துபோனாலும்,
அப்போது வந்திருந்த தளபதி ஏ.பி.ஹில்
கீழான அவர்களின் படையினரால் பின்னர் முறியடிக்கப்பட்டனர். மீண்டும்
கையிருப்பிலிருந்த படையினரை தாக்குலுக்கு அனுப்பிவைக்கப்போவதில்லை எனவும் மெக்லெலன்
தீர்மானித்தார்.
மாலையின் முற்பகுதியிலேயே
போர் முடிந்துவிட்டது . மத்திய கூட்டமைப்பின் இழப்பு
14,500 ஆகவும்
சுதந்திர மாநிலங்களின் இழப்பு
12,000
ஆகவும் இருந்தது. ஆனால் லீ தன்னுடைய மிகச் சிறிய இராணுவத்தின்
பெரும்பங்கை அதாவது இறந்தவர்கள், காயம்பட்டவர்கள் என ஒரு நாள் சண்டையில் மூன்றில்
ஒரு பகுதியினை இழந்துவிட்டார்.
ஆயினும் மெக்லெலனின் இராணுவத்தினர் சுமார் மூன்றில் ஒரு பகுதி
போரில் ஈடுபடுத்தப்படாமல் இருந்தனர்.
ஒவ்வொரு பக்கத்திலும் மூன்று தளபதிகளை இழந்துவிட்டனர்.
போட்டோமக்கில்
அசையவிடாமல் செய்யப்பட்ட லீ, மிகப்பெரியதும் நன்கு சிறந்த ஆயுதம்தரித்த மத்திய கூட்டமைப்பின்
படையினரின் தாக்குதலை எதிர்பார்த்து. அது வரவேயில்லை. மெக்லெலன் வடக்கு
வேர்ஜீனியாவின் இராணுவத்தை போட்டோமக் ஊடாக எவ்வித பாதிப்புமின்றி நழுவிச் செல்ல அனுமதித்திருந்தார்.
அடுத்தமாதம் வேர்ஜீனியாவிற்குள் லீ யை பின்தொடர்ந்து செல்லவேண்டும் என்று வாஷிங்டனிலிருந்து
வந்த கோரிக்கையை மெக்லெலன் மறுத்துவிட்டார்.
இறுதியாக 1862
நவம்பர் 7ம் திகதியன்று லிங்கன் மெக்லெலனை பொறுப்பிலிருந்து நீக்கினார். சரியாக இரண்டு
வருடம் கழித்து ஜனநாயகக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளராக மெக்லெலன் லிங்கனை எதிர்த்து
நிற்கவேண்டியிருந்தது. ஜனநாயக கட்சியினரின் கோரிக்கையாக தெற்கின் சுதந்திரத்தை அங்கீகரிப்பது
மற்றும் அடிமை முறையை நிரந்தரமாக்குவதற்கு இட்டுச்செல்வதாக இருந்தது. தேர்தல் ஆண்டான
1864
இல் வாக்காளர்கள்
மெக்லெலனையும் அவருடைய கட்சியையும் நிராகரித்தனர். லிங்கன் மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டார்.
ஒரு தீவிர குடியரசுக் காங்கிரஸ் கட்சி பதவியில் அமர்த்தப்பட்டது. அது அடிமை முறையை
அகற்றிய அமெரிக்க அரசியலமைப்பின் 13வது திருத்தத்தை நிறைவேற்றியிருந்தது.
ஆன்டியேட்டமில்
லிங்கன் மெக்லெலனைச் சந்திக்கிறார்
ஒரு குறுகிய
காலத்தில் மேரிலாந்தில் பெற்ற தந்திரோபாய வெற்றி லிங்கனை அவருடைய அடிமை ஒழிப்பு
பிரகடனத்தை பகிரங்கமாக வெளியிட அனுமதித்தது. இது 13 ஆவது திருத்தத்தை
கொண்டுவந்ததால் மட்டுமல்லாது, போரில் மத்திய கூட்டரசின் படை வெற்றிபெற்றதாலும்தான்
சாத்தியமானது. உண்மையில் யுத்தம் மத்திய கூட்டமைப்பின் வெற்றிதான் என்பதை
உறுதிப்படுத்திக்கொள்ளும்வரை அறிவிப்பு வெளியிடுவதை தாமதித்து, ஆன்டியேட்ட போரின்
ஐந்து நாட்களுக்குப்பின் லிங்கன் பிரகடனத்தை அறிவித்தார்.
ஜனவரி 1,
1863ல் இந்த நிறைவேற்று ஆணை நடைமுறைப்படுத்தப்படும் மற்றும் எழுச்சிப் பகுதியில்
இருக்கும் அனைத்து அடிமைகளையும் விடுதலை செய்துவிடும். ஆனால் இது ஒரு இராணுவ கட்டளை
என்பதால் அடிமைகளை வைத்திருந்த கூட்டரசின் மாநிலங்களான)மிசோரி, கென்டக்கி,
மேரிலாந்து( ஆகியவற்றில் அல்லது கூட்டரசின் அரசியல் நிர்வாகத்தின் கீழிருந்த
முன்னாள் கிளர்ச்சி செய்த மாநிலங்களில் அடிமைகளை விடுவிக்கவில்லை.
இது சில அவதானிகளை
“எங்கு
விடுவிக்க முடியாதோ அங்கு விடுவித்ததாகவும், எங்கு முடியுமோ அங்கு தொடர்ச்சியாக அடிமையாக
இருக்கவிட்டதாக”
எள்ளி நகையாட வைத்தது.
எவ்வாறாயினும்
அடிமை ஒழிப்பு பிரகடனத்தின் முக்கியத்துவம் அக்காலத்திய அவதானிகள் பெரும்பாலானவர்களிடம்
இருந்து தப்பவில்லை. கூட்டமைப்பை பாதுகாப்பதற்கான போர் இப்பொழுது அடிமை முறையை இல்லாதொழிக்கும்
போராகிவிட்டது.
வடக்கே ஜனநாயகக்
கட்சியின் பத்திரிகை லிங்கன் மீது அவதூறை வெளியிட்டும்,
இனவெறித் தாக்குதலையும் நடத்தியது.
தெற்கில் இருந்த உயரடுக்கினர் நிலைகுலைந்து போயிருந்தனர். இப்பிரகடனம்
அடிமைகள் எழுச்சி செய்வதற்கு ஒரு அழைப்பு என்பதை அவர்கள் நன்கு அறிந்திருந்தனர்.
சுதந்திர மாநிலங்களின்
தலைவரான ஜெபர்சன் டேவிஸ் இதை
“ஒரு
குற்ற உணர்வுடைய மனிதனின் வரலாற்றில் மிக இழிந்த நடவடிக்கையாகும்”
என்றார். ஆன்டியேட்டமில் இன்னும் முகாமிட்டிருந்த மெக்லெலன் பெரும்
சீற்றம் கொண்டிருந்தார்.
”அடிமை
எழுச்சிக்கான இத்தகைய சபிக்கப்பட்ட கோட்பாட்டிற்காக போரிடவேண்டுமா என்று இன்னும்
நான் முடிவெடுக்கவில்லை”
என்று இந்த உயர்மட்ட கூட்டரசின் தளபதி எழுதியிருந்தார்.
ஜெபர்சன்
டேவிஸ்
வடக்கே பலரும்
பிரகடனத்தை வரவேற்றனர். குறிப்பாக அடிமைமுறை ஒழிப்புக் கோட்பாட்டினர்,
“அடிமைச்
சக்தியை”
அதன் அடிவேரைத் தாக்க வேண்டும் என்று லிங்கன் மீது அழுத்தம் கொடுத்தனர்.
“அடிமைத்தனத்திற்கு
எதிராகப் போராடாமல் அடிமை வைத்திருப்போருக்கு எதிராகப் போரிடல் என்பது அரைகுறை
விருப்பத்துடனான செயலாகும்”
என்று பிரெடெரிக் டுக்லாஸ் லிங்கனிடம் கூறினார்:
“சுதந்திரத்தை
அழிப்பதற்கான போர்,
அடிமை முறையை அழிப்பதற்கான போரினால் எதிர்கொள்ளப்பட வேண்டும்.”
போரின்
பிந்தைய ஆண்டுகளில் இந்த உணர்வு பெருகியது; ஆனால் 1862 லிங்கன் எதிர்பார்த்தது போல்
நவம்பர் கூட்டாட்சித் தேர்தல்களில் குடியரசுக் கட்சி பெரும் தோல்விகளை அடைந்திருந்தது.
பிரெடெரிக்
டுக்லாஸ்
ஆன்டியேட்டத்தின்
யுத்தம் மற்றும் அடிமை ஒழிப்பு பிரகடனமானது பிரித்தானிய மற்றும் பிரான்ஸ் ஆகியவைகள்
தெற்குப் பகுதியை அங்கீகரிப்பதற்கான சாத்தியப்பாடுகளை அகற்றியது. அங்கீகரிப்பதற்கு
இருந்த சாத்தியப்பாடு பிரித்தானிய ஆளும் வர்க்கம் அடிமைமுறையை எதிர்த்ததால் அல்ல.
மாறாக தெற்கின் பருத்தி வணிகத்தில் பெரும் பங்கைக் கட்டுப்பாட்டிற்குள் வைத்திருந்த
பிரித்தானிய உயரடுக்கு, தெற்கின் வெற்றியை எதிர்பார்த்திருந்தது.
ஆனால்
பிரித்தானிய ஆளும் வட்டங்கள் அடிமைத்தனத்திற்குத் தொழிலாள வர்க்கம் கொண்டிருந்த
வெறுப்புணர்வைக் கருத்திற் கொள்ள வேண்டியதாயிற்று. பிரகடனத்திற்குப் பின் அது ஒரு
வெகுஜன அரசியல் இயக்கமாக ஒருங்கிணைய தொடங்கியது.
“லங்காஷயர்
தொழிலாள வர்க்கம் தான் [அவர்கள் மட்டும்தான்], ஒரு வர்க்கமாக எமக்கு எதிரான தீவிர
பகையாளிகளாக இருக்கிறார்கள்”
என்று இங்கிலாந்தில் இருந்து செயல்படும் தெற்கின் ஒற்றர் ஒருவர் எழுதினார்.
கார்ல்
மார்க்ஸ்
தெற்குப் பகுதி
பருத்தியை அவர்களுடைய ஆலைகளுக்கு விநியோகிப்பதை மத்திய கூட்டாட்சி தடைசெய்திருந்த
போதிலும் இது தொடர்ந்தது.
“பொருளாதார
அழிவை முகங்கொடுத்திருந்தபோதும், பிரித்தானிய தொழிலாளர்கள் தெற்கின் அடிமை முறையுடன்
இணங்கியிருத்தலை ஏற்கவில்லை; 1963ல் ஜனவரியில் இருந்து மார்ச் மாத இடைவெளிக்குள்,
மான்செஸ்டர் மற்றும் லண்டனில் தொடர்ச்சியான வெகுஜன ஆர்ப்பாட்டங்கள் லிங்கனையும் அவருடைய
அடிமை ஒழிப்புப் பிரகடனத்தையும் பாராட்டின.”
என்று வரலாற்று ஆய்வாளர் அலன் கியுல்ஷொ எழுதியிருக்கிறார்.
லண்டனில் இருந்து
உள்நாட்டுப் போரின் போக்கினை நெருக்கமாகக் கவனித்து வந்த கார்ல் மார்க்ஸ் ஆன்டியேட்டத்தின்
அடுத்த உடனடி நிகழ்வுகள் குறித்து சுருக்கமாக
“இந்த
யுத்தம் அமெரிக்க உள்நாட்டுப் போரின் விதியை முடிவு கட்டிவிட்டது. அமெரிக்க சுதந்திரப்
போர் மத்தியதர வர்க்கத்தின் ஏற்றத்திற்கு ஒரு புதிய சகாப்தத்தை வழங்கியுள்ளது, அமெரிக்காவின்
அடிமை முறை எதிர்ப்புப் போராட்டம் அதேபோல் உழைக்கும் மக்களுக்கும் நலன்களை
செய்யும்.”
என்று அவர் கூறினார்.
Note : The Union was a name used to refer to the
federal government of the
United States
http://en.wikipedia.org/wiki/Union_%28American_Civil_War%29
The Confederate States Army was the army of the
Confederate States of America (or "Confederacy")
|