World Socialist Web Site www.wsws.org |
WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆபிரிக்கா : எகிப்து Mursi declares state of emergency as protests escalate in Egyptஎகிப்தில் எதிர்ப்புகள் அதிகரிக்கையில் முர்சி அவசரகால நிலையை பிரகடனப்படுத்துகிறார்
By Alex
Lantier and Johannes Stern எகிப்திய புரட்சியின் இரண்டாவது ஆண்டு நிறைவில் போராட்டங்கள் நாடு முழுவதும் பரவிவிட்ட நிலையில் ஜனாதிபதி முகமத் முர்சி நேற்று மூன்று சூயஸ் கால்வாய் நகரங்களில் 30 நாட்களுக்கு அவசரகால நிலையை அறிவித்தார். பொலிஸ் மற்றும் இராணுவப் பிரிவுகள் டஜன் கணக்கான மக்களைக் கொன்று, நூற்றுக்கணக்கானவர்களை காயப்படுத்துகையில் எதிர்ப்பாளர்கள் பொலிஸ் நிலையங்கள், முர்சியின் முஸ்லிம் சகோதரத்துவத்தின் (MB) அலுவலகங்களை எகிப்தின் நகரங்கள் முழுவதிலும் தாக்கினர். இன்று ஜனவரி 28, 2011 “சீற்றமிகு வெள்ளி” எதிர்ப்புக்களின் ஆண்டு நிறைவுதினத்தில் இந்த செயற்பாடு, வெகுஜன எதிர்ப்புக்கள் பொலிசுடன் மோதும் என்ற உறுதிப்பாடு கொண்ட திட்டமிடப்பட்டிருந்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே வந்துள்ளது. அன்று நூறாயிரக்கணக்கான எதிர்ப்பாளர்கள், அப்போது ஜனாதிபதியாக இருந்த ஹொஸ்னி முபாரக்கால் திரட்டப்பட்டிருந்த பொலிசை எதிர்த்து கெய்ரோ தெருக்களில் போராடினர். இரண்டு வாரங்களுக்குப் பின் எகிப்திய தொழிலாள வர்க்கத்தால் அலையென நடத்தப்பட்ட புரட்சிகர வேலைநிறுத்தத்தின் நடுவே முபராக் கவிழ்க்கப்பட்டார். முர்சி, சைட் துறைமுகம், சூயஸ் மற்றும் இஸ்மாலியா போன்ற இடங்களில் 30 நாட்கள் அவசரகால நிலையை அறிவித்துள்ளதுடன் இரவு 9 முதல் காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவையும் பிறப்பித்துள்ளார். இந்த அவசரகால நிலமை பொலிஸ் மற்றும் இராணுவம் எதிர்ப்பாளர்களை எதுவித குற்றச்சாட்டுகளும் இல்லாமலே காலவரையின்றிக் காவலில் வைக்கவும், இராணுவ நீதிமன்றங்களில் அவர்கள் மீது வழக்குகளை தொடுக்கவும், அரசியல் அமைப்பு உரிமைகளை தற்காலிகமாக நிறுத்தி வைக்கவும், மேலும் செய்தி ஊடகங்களை தணிக்கை செய்யவும் அனுமதிக்கிறது. எகிப்து முழுவதும் அவசரகால நிலை மீண்டும் நிறுவப்படும் என்று முர்சி எச்சரித்துள்ளார். “எந்த அசாதாரண நடவடிக்கைகளுக்கும் எதிரானவன் என்று நான் எப்பொழுதும் கூறிவருகிறேன்; ஆனால் நான் அத்தகைய நடவடிக்கைகளைத் தேவையானால் எடுப்பேன் என்றும் கூறியிருந்தேன். எகிப்தின் நன்மைக்காக இதையும் விட அதிகமாகச் செய்வேன், அது என்னுடைய கடமை..... நான் உள்துறை அமைச்சரக அதிகாரிகளுக்கு, மக்கள், பொதுமக்கள், தனியார் நிறுவனங்களை அச்சுறுத்தும் எவரையும் கடுமையாக நடத்தும்படி உத்தரவிட்டுள்ளேன்.” இது அரசாங்கத்திற்கு எதிரான அனைத்து எதிர்ப்புக்களும் நசுக்கப்படும் என்ற வெளிப்படையான அச்சுறுத்தல் ஆகும். முபராக் அருடைய 30 ஆண்டு கால ஜனாதிபதிக் காலம் முழுவதிலும் அவசரகால நிலமைகளுக்கு கீழேதான் ஆட்சி செய்தார். முர்சி இந்த ஆட்சிமுறையை மீண்டும் சுமத்தி எதிர்ப்புக்களை நசுக்குகையில் அது அவருடைய ஆட்சியின் எதிர்ப்புரட்சித் தன்மையையே சான்று பகர்கின்றது. முர்சியின் அறிவிப்புக்கள், கூடுதலான எதிர்ப்புக்களுக்குத்தான் வகை செய்துள்ளன என்று செய்திகள் குறிப்பிடுகின்றன. இஸ்மாலியாவில் ஒரு புதிய ஊர்வலம் “முர்சி வீழ்க, அவசரகால சட்ட நிலைமை வீழ்க” என்ற கோஷங்களுடன் ஆரம்பித்துள்ளது. எகிப்தின் முதலாளித்துவ எதிர்ப்பினர் இழிந்த முறையில், தங்கள் செல்வாக்கை எதிர்ப்பாளர்கள் மீது தக்கவைத்துக் கொள்வதற்காக, தாம் அவர்களுடன் இருந்தாலும் அல்லது இல்லாவிட்டாலும் எதிர்ப்புகளுக்கு அழைப்பு விடுக்கும் அதே சமயம் தங்கள் ஆதரவை முர்சியின் அடக்குமுறைக்கும் கொடுத்துள்ளனர். தேசிய மீட்பு முன்னணி, MB ஆல் முன்வைக்கப்பட்ட அரசியலமைப்பு சட்டம் (constitution) நிறுத்தப்பட வேண்டும் எனவும், எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டதற்கு “பழிவாங்கப்பட வேண்டும்” எனவும் அத்துடன் அரசாங்கம் கலைக்கப்பட வேண்டும் எனவும் கூறி ஓர் அறிக்கையை வெளியிட்டுள்ளது. NSF-ன் பேச்சாளர் காலெட் தாவுத் — தாராளவாத முகம்மது எல்பரடேய், நாசரிச ஹம்தீம் சபாஹி மற்றும் முன்னாள் முபாரக் ஆட்சி அதிகாரி அம்ர் மௌசா ஆகியோர் வழிநடத்தும் கூட்டணி — அறிவித்துள்ளார், “ஜனாதிபதி, தளத்தில் நடைபெறும் உண்மை பிரச்சினையை அறியவில்லை என்று நாங்கள் உணர்கிறோம், அது அவருடைய சொந்த நடவடிக்கைதான். நாட்டில் வன்முறையும், குற்ற நடவடிக்கைகளும் நடக்கையில், அவசரகால நிலையை செயல்படுத்துவதற்கான அவருடைய அழைப்பு எதிர்பார்க்ககூடியதே.” முர்சி மற்றும் எகிப்தின் சக்திவாய்ந்த இராணுவ அதிகாரிகள் பிரிவினால் வழிநடத்தப்படும் தேசிய பாதுகாப்புக்குழு, எதிர்த்தரப்பை “பரந்த தேசிய உரையாடலுக்கு, சுதந்திர தேசிய தலைவர்கள் கலந்துகொள்ளும் உரையாடலுக்கு” அழைத்துள்ளது. சையத் துறைமுகத்தின் Al-Masry கால்பந்துக் குழுவின் 21 ரசிகர்களுக்கு கொடுக்கப்பட்ட மரணதண்டனையை எதிர்த்து ஆர்ப்பாட்டங்கள் பெருகிய நிலையில் நேற்று சையத் துறைமுகம் மற்றும் சூயசில் இராணுவப் பிரிவுகள் நிலைகொண்டன. கடந்த ஆண்டு அவர்கள் பொலிசுடன் ஒத்துழைத்து கெய்ரோவின் Al-Ahly club ஆதரவாளர்களை தாக்கினர், அவர்கள் தெருச்சண்டைகளில் முபாரக்கின் குண்டர்களுக்கு எதிராக 2011 கெய்ரோ எதிர்ப்புக்களில் போராடிய முக்கிய பாத்திரத்தை வகித்தனர். கிட்டத்தட்ட 73 Ahly ரசிகர்கள் கொல்லப்பட்டனர், 1000 பேர் காயமுற்றனர் (See also: Mass protests in Egypt against pro-junta football riot ). MB அதிகாரிகள், இது பொலிஸ் மற்றும் இராணுவ யுந்தாவின் ஆளுமை “வேண்டுமென்று தயக்கம் காட்டியதின் முடிவுதான்” இப்பெரும் சோகம் என அந்த நேரத்தில் கூறினர். ஆனால் இப்பொழுது MB அதிகாரத்தில் இருக்கையில் அவர்கள் பொலிசுக்கு ஆதரவைக் கொடுக்கின்றனர். Al-Masry குண்டர்கள் தாக்குதல் நடைபெறுகையில் சையத் துறைமுகப் பொலிஸ் அதிகாரிகளுடன் ஒத்துழைத்தனர், பொலிஸ் அதிகாரிகளுக்கான தண்டனை மார்ச் 9 வரையில் ஒத்திப்போடப்பட்டுள்ளது என்னும் அறிவிப்பானது அவர்கள் விடப்பட்டுவிடுவர் என்ற பரந்த சந்தேகங்களை உருவாக்கியுள்ளது. மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ள Al-Masry ரசிகர்களின் நண்பர்களும் உறவினர்களும் சிறைகளை உடைத்து அவர்களை விடுவிக்க முற்படுகையில் ஏற்பட்ட பொலிஸ் அதிகாரிகளுடனான மோதலில் 30 எதிர்ப்பாளர்கள் கொல்லப்பட்டனர். இவர்கள் உயிரைக்கொல்லும் தோட்டாக்கள், பறவைகளைக் கொல்லும் தோட்டாக்களால் சுடப்பட்டு கொல்லப்பட்டனர். ஞாயிறன்று, இராணுவம் சனிக்கிழமை கொல்லப்பட்டவர்களின் இறுதிப் பயணத்தின் மீது துப்பாக்கிச் சூடு நடத்தி அந்த அணிவகுப்பைக் கலைத்தனர், அதில் குறைந்தபட்சம் மூன்று உயிர்கள் பலியாயின. வெள்ளியன்று பொலிசார் 9 எதிர்ப்பாளர்களைக் கொன்ற பின், சனிக்கிழமை சூயசில் மோதல்கள் தீவிரமடைந்தன. எதிர்ப்பாளர்களை உயிரைக்கொல்லும் தோட்டாக்கள் மூலமும் சிலர் பின்புறமாகவும் மிக அருகில் வைத்து சுட்டுக்கொல்லப்பட்டனர். எதிர்ப்பாளர்கள் சூயஸ் பொலிஸ் நிலையத்தை முற்றுகையிட்டு, கைதிகளை விடுவித்து, பொலிசாரின் ஆயுதங்களையும் கைப்பற்றி கொண்டனர். பாதுகாப்பு அதிகாரிகளை துரத்திவிட்டு, அவர்கள் கட்டிடத்தை எரித்தனர். “சீற்ற வெள்ளி” ஜனவரி 28-ம் திகதி, இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு நடந்தது போலவே பொலிஸ் சூயஸில் இருந்து பின்வாங்கிக்கொள்ள இராணுவத்தின் மூன்றாம் பிரிவு நகரத்தின் பாதுகாப்பை வலியுறுத்தவும், எதிர்ப்பாளர்களை நசுக்கவும் அனுப்பப்பட்டது. இராணுவம், சூயஸ் கால்வாயில் இருக்கும் மற்றொரு நகரமான இஸ்மாலியாவிற்குள் சென்றது, பெருமளவில் இராணுவப்படைகள் சூயஸ் கால்வாய் தலைமையகத்திற்கு அனுப்பப்பட்டன. முர்சியும், எகிப்திய இராணுவமும் மூலோபாய நீர்ப்பாதையில் தமது கட்டுப்பாட்டை இழந்துவிடுவோமோ என்று கவலைப்பட்டனர். முபாரக்கின் வீழ்ச்சியில் இருந்தே சூயஸ் கால்வாய் தொழிலாளர்களுடைய வேலைநிறுத்தங்கள் கால்வாய் நடவடிக்கைகளை இடைவிடாமல் அச்சுறுத்தின, இந்நிலமை உலக வாணிபம் மற்றும் மத்திய கிழக்கில் நிலைகொண்டு இருக்கும் அமெரிக்க இராணுவத்துக்கும் தாக்கத்தை கொடுத்துள்ளன. வார இறுதியில், எதிர்ப்புக்கள் எகிப்து நகரங்கள் முழுவதிலும் தீவிரமாயின. மாகாலா தொழில்துறை நகரத்தில், எதிர்ப்பாளர்கள் நகரப் பொலிஸ் நிலையத்தை கற்களால் தாக்கி அதை முற்றுகையிட முயன்றனர். பாதுகாப்புப் படைகள் எதிர்ப்பாளர்கள்மீது கண்ணீர்ப்புகை குண்டுகளை போட்டனர். எதிர்ப்பாளர்கள் அதற்குப்பதிலாக மாகாலா நகரவையை Molotov cocktails வீசித் தாக்கி, அக் கட்டிடத்திற்குள் கற்களையும் வீசினர். இக்கட்டுரையை எழுதுகையில் தலைநகரான கெய்ரோவில் எதிர்புக்களும் மோதல்களும் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. எகிப்திய புரட்சியின் புகழ்பெற்ற சின்னமான தாகிரீர் சதுக்கம் (Tahrir Square) மற்றும் அதைச் சுற்றியுள்ள தெருக்களில் எதிர்ப்பாளர்கள் எகிப்தியப் பாதுகாப்புப் படையினரின் தாக்குதல்களை மும்முரமாக எதிர்த்து நிற்கின்றனர். ஞாயிறன்று, ஆர்ப்பாட்டக்காரர்கள் கெய்ரோ நகர மையத்திற்குச் செல்லும் அக்டோபர் 6 பாலம் மற்றும் சதாத் மெட்ரோ நிலையத்தை மறித்தனர், இதனால் மெட்ரோ போக்குவரத்து தடைப்பட்டது. Corniche al-Nil என்னும் இடத்தில் பாதுகாப்புப் படையினர் எதிர்ப்பாளர்கள்மீது கண்ணீர்ப்புகைக் குண்டுகளை வீசுகையில் எதிர்ப்பாளர்கள் தம்மை பாதுகாக்க அவர்கள் மீது கற்களை வீசினர். மேலும் எதிர்ப்பாளர்கள், கொடுப்பனவு–சமூக விவகாரங்கள் அமைச்சரகத்தை தாக்கி அதற்கும் தீ வைத்தனர். |
|