WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா :
இத்தாலி
Initial results indicate stalemate in Italian election
இத்தாலிய தேர்தலின் ஆரம்ப முடிவுகள் தேக்கநிலையை குறிக்கின்றன
By Peter Schwarz
26 February 2013
Back to screen version
ஞாயிறு மற்றும் திங்களன்று நடந்த இத்தாலிய பாராளுமன்றத்
தேர்தல்களின் முடிவுகள் வாக்குப் பதிவுகள் பிற்பகல் 3 மணிக்கு முடிந்து விட்டது
என்றாலும்கூட திங்கள் மாலை வரை இன்னும் தெளிவாகவில்லை. அனைத்துக் குறிப்புக்களும்
வாக்காளர்கள் தற்போதைய பிரதம மந்திரி மரியோ மொன்டி மீது பெரும் தோல்வியை
ஏற்படுத்தியுள்ளனர் என்பதோடு ஐரோப்பிய ஒன்றியம் கோரிய அவருடைய சிக்கன
நடவடிக்கைகளையும் நிராகரித்துள்ளனர் என்பதைத்தான் காட்டுகின்றன.
ஆனால், தொழிலாள வர்க்கத்தின் ஆழ்ந்த சமூக எதிர்ப்பை எக்கட்சியும்
வெளிப்படுத்தவில்லை என்பதோடு போட்டியிட்ட ஒவ்வொரு கட்சியும் வலதுசாரிக்
கொள்கையைத்தான் முன்வைத்தது. இச்சூழ்நிலையில் தெளிவான வெற்றியைப் பெற்றுக்கொண்டது
என்று எக்கட்சியும் வெளிப்படவில்லை.
பாராளுமன்ற உறுப்பினர்களின் கீழ் சபைக்கான தேர்தலில்
Pier Lugi Bersani
தலைமையிலான மைய-இடது
கூட்டணி மிகவும் குறைவாக முன்னணியில் இருக்கிறது எனத் தெரிவிக்கப்படுகிறது,
அதாவது
30
சதவீதத்திற்கும் சற்றே குறைந்த
வாக்குகளுடன் இது முதலாவதாக உள்ளது.
ஜனநாயகக் கட்சியிலிருந்து
உருவான பெர்சானியின் கூட்டணியானது 1991ல் கம்யூனிஸ்ட் கட்சி கலைக்கப்பட்டதிலிருந்து
வந்தவர்களையும், நிச்சி வென்டோலா தலைமையிலிருந்து பிரிந்து வந்துள்ள சுதந்திரக்
கட்சி (SEL),
இடது கட்சி மற்றும் சுற்றுச்சூழல்
கட்சி (Ecology)
ஆகியவற்றைக் கொண்டுள்ளது.
இத்தாலிய தேர்தல் சட்டத்தின்படி, வாக்குகளில் அதிகளவுகளை பெற்றுக்
கொண்ட கட்சி இயல்பாக பாராளுமன்ற உறுப்பினர்களின் கீழ் சபையில் 55 சதவீத இடங்களைப்
பெறும். இது 61 வயதான பெர்சானிக்கு பாதுகாப்பான பாராளுமன்றப் பெரும்பான்மையை
தெளிவாகக் கொடுக்கிறது.
பாராளுமன்றத்தின் இரண்டாவது சபையான செனட்டில் பெர்சானியின்
கூட்டணியுடன் மிக நெருக்கமான போட்டியில் மைய-வலதுக் கூட்டணியான முன்னாள் பிரதம
மந்திரி சில்வியோ பெர்லுஸ்கோனி தலைமையில் இருப்பதுடன் உள்ளது.
மைய-வலது கூட்டணியில்
பெர்லுஸ்கோனியின் சுதந்திரத்திற்காக மக்கள்
(PdL), வடக்கு லீக் மற்றும் இரு
சிறிய வலதுசாரிக் கட்சிகள் உள்ளன.
செனட்
சபைக்கான இடங்களானது தேசிய அளவில் என்று இல்லாமல் 20 பிராந்தியங்களின் தனித்தனி
முடிவுகளின் அடிப்படையில் வழங்கப்படும்.
செனட் சபையில் பெர்சானி பெரும்பான்மை பெறத்தவறினால், அவருடைய
கூட்டணி அரசாங்கமானது மேல் சபையின் மூலம் சட்டத்தை இயற்ற முடியாமற் போகலாம்; இது
மிகவும் உறுதியற்ற அரசியல் தேக்கத்தைத் தோற்றுவிக்கும்; அநேகமாக மிக விரைவில் ஒரு
புதிய தேர்தலுக்கு வழிவகுக்கும்.
நகைச்சுவை நடிகர் பெப்பி கிரிய்யோ தலைமையிலான ஐந்து நட்சத்திர
இயக்கமானது பெரும்பாலான கருத்துக் கணிப்புக்கள் கூறியதை விட அதிக வாக்குகளைப்
பெற்றுள்ளது. இது பாராளுமன்ற உறுப்பினர்களின் கீழ் சபையில் 27 சதவீதத்தை
பெறக்கூடும், அதாவது பெர்சானி மற்றும் பெர்லுஸ்கோனி ஆகியோரின் தேர்தல்
பட்டியல்களுக்கு அடுத்தாற்போல் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது. சிசிலியில் இந்த
இயக்கம் செனட் சபை தேர்தல்களில் மிக வலுவான கட்சியாக வெளிப்பட்டுள்ளது; 30
சதவீதத்தைப் பெற்ற நிலையில் கிரிய்யோ,
ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் பிற
நடைமுறையிலுள்ள கட்சிகளுக்கு எதிராக தேர்தலில் நின்றதோடு,
அவர்
அவைகளை உறுதியாகத் தாக்கியிருந்தார்.
தற்போதைய பிரதம மந்திரி மரியோ மொன்டி மற்றும் கிறிஸ்துவ ஜனநாயக
மற்றும் தாராளவாதக் கட்சிகளின் கூட்டு பெரும் தோல்வியை சந்தித்தது. நேற்று இரவு
இக்கட்சி பாராளுமன்றத்தில் இடம் பெறுமா என்பதே கேள்விக்குரியதாக இருந்தது; ஏனெனில்
பாராளுமன்றத்தின் பட்டியலில் நுழைவதற்குக் குறைந்தப்பட்சம் 10 சதவீத வாக்குகள்
தேவையாகும். செனட்டில் இதற்கான வரம்பு இன்னும் அதிகமாக 20 சதவீதமாக உள்ளது.
சிவில் புரட்சி
(Civil Revolution) கூட்டணி
என்ற மாபியா எதிர்ப்பு வக்கீலான அன்டோனியா இங்கிறயோ தலைமையில் இருப்பது கம்யூனிஸ்ட்
ரிபௌண்டேஷன் கட்சியை உள்ளடக்கியுள்ளதாகும்.
இது மொத்தத்தில்
2 சதவீத வாக்குகளைத்தான்
பெற்றது;
எனவே புதிய பாராளுமன்றத்தில் அது
பிரதிநிதித்துவத்தைப் பெறமுடியாது.
மொத்த வாக்குப் பதிவு 75 சதவீதமாக இருந்தது; இது 2008 தேர்தலுடன்
ஒப்பிடும்போது 6 சதவீதம் குறைவாகும்.
கணிப்புக்கள்,
ஒரு
வாக்குக் கூடத்திலிருந்து மற்றொன்றில் வேறுபட்டவைகள் என்னும் முறையில் மாலையில்
நிலைமையை மாற்றிவிட்டன. இதையொட்டி நிதிச் சந்தைகளில் தீவிரக் கொந்தளிப்பு
ஏற்பட்டது.
தேர்தல் முடிந்தபின் எடுக்கப்படும் கணிப்புக்களானது மாலை 3 மணிக்கு
பெர்சானிக்கு வெற்றி எனக் கூறின. அதையொட்டி மிலான் பங்குச் சந்தை 3 சதவீதம்
உயர்ந்தது; ஜெர்மன் DAX 2.3 சதவீதம் உயர்ந்தது. டாலருக்கு எதிராக யூரோவின் மதிப்பு
உயர்ந்ததுடன், இத்தாலியப் பத்திரங்களின் மீதான வட்டி விகிதங்கள் கணிசமாகக்
குறைந்தன. ஆனால் செனட்டில் பெர்லுஸ்கோனி வெற்றிபெற வாய்ப்பு உள்ளது என்னும் தகவல்
பரவியதுடன், குறியீடுகள் எதிர்மறைக்குத் திரும்பின.
தேர்தல் பிரச்சாரத்தின்போது பெர்லுஸ்கோனி ஐரோப்பிய ஒன்றியத்தையும்
குறிப்பாக ஜேர்மனிய அரசாங்கத்தையும் சாடினார்.
அவர்
மொன்டி அறிமுகப்படுத்தியுள்ள செல்வாக்கற்ற வரி அதிகரிப்புக்கள் மாற்றப்படும் என
உறுதியளித்தார்.
ஆனால் மொன்டியின் சிக்கனக் கொள்கைகளை தொடர்வதற்கு பெர்சானி
உறுதியளித்துள்ளார். எனவே அவர் அரசாங்கங்கள் மற்றும் ஐரோப்பா முழுவதுமுள்ள வணிக
வட்டங்களால் தொழிலாள வர்க்கத்தின் மீது இன்னும் தாக்குதல்கள் நடத்த நம்பகமானவர்
என்று கருதப்படுகிறார்.
தேர்தல்கள் தேக்க முடிவைக் கண்டால், நிதியச் சந்தைகள் வலுவான
எதிர்விளைவைக் காட்டும் என எதிர்பார்க்கப்படுகிறது; இது இத்தாலியை மட்டுமின்றி,
யூரோவையும் புதிய நெருக்கடிக்கு கொண்டுசெல்லும். இந்த இத்தாலியத் தேர்தல்
முடிவுகளானது கடுமையான சமூக மோதல்கள், அரசியல் எழுச்சிகள் ஆகியவற்றிற்கு
முன்னோடியாக இருக்கிறது.
மொன்டியின் மோசமான செயற்பாடு எந்த அளவிற்கு மக்கள் ஐரோப்பிய
ஒன்றியம் ஆணையிட்ட சிக்கன நடவடிக்கைகள் மீது வெறுப்புக் கொண்டுள்ளனர் என்பதை
நிரூபிக்கிறது. 2011 கடைசியிலும் ஐரோப்பிய ஒன்றியத்தின் அழுத்தத்தின் கீழும்
முன்னாள் ஐரோப்பிய ஒன்றிய ஆணையர் மொன்டி தேர்தலால் தேர்ந்தெடுக்கப்படாத
தொழில்நுட்பவாத அரசாங்கத்தின் தலைவர் பதவியை ஏற்றுக்கொண்டு கடுமையான சிக்கன
நடவடிக்கைகளை அறிமுகப்படுத்தினார். அவைகள் மக்களின் பரந்த பிரிவுகளின் வாழ்க்கைத்
தரங்களைக் குறைத்தன; அதே நேரத்தில் வேலையின்மை 37 சதவீதத்திற்கும் அதிகமாக
உயர்ந்துவிட்டது.
மொன்டிக்கு ஐரோப்பா முழுவதும் உள்ள ஆளும் வர்க்கங்களின் ஆதரவு
இருந்தது; செய்தி ஊடகமும் மிகவும் பாராட்டியது. ஆனால் இத்தாலிய வாக்காளர்கள் இந்த
ஆர்வத்தை ஏற்றுக் கொள்ளவில்லை; இதைத்தான் தேர்தல் முடிவுகள் தெளிவாக்கியுள்ளன.
நீண்டகாலமாகவே பெர்சானி எதிர்ப்பில்லா ஆதரவு பெற்றுத் தேர்தலில்
வெற்றி அடைவார் எனக் கருதப்பட்டது. இரண்டு வாரங்களுக்கு முன்பு வெளியிடப்பட்ட
கடைசிக் கருத்துக் கணிப்பில் அவர் பெர்லுஸ்கோனியை விட அதிக வாக்குகளைத்தான்
பெற்றிருந்தார். ஆனால் மொன்டியின் சிக்கன நடவடிக்களை தான் தொடர இருப்பதாக அவர்
வலியுறுத்தியது, இந்த முன்னிலையை விரைவில் ஆவியாக்கிவிட்டது.
தேர்தல் பிரச்சாரத்தின்போது பெர்லுஸ்கோனி ஐரோப்பிய ஒன்றியத்தின்
எதிரிபோல் தன்னைக் காட்டிக் கொண்டார்; ஆனால் பிரதம மந்திரி என்னும் முறையில் அவர்
ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கன நடவடிக்கைக்கு ஆதரவை அளித்திருந்தார். தேர்தலைத்
தொடர்ந்து உடனடியாக தான் மொன்டி அறிமுகப்படுத்திய சொத்துவரியை அகற்றிவிடுவதாக,
குறிப்பாக சிறு சொத்து உரிமையாளர்களை தாக்குவதை அகற்றிவிடுவதாக
உறுதியளித்திருந்தார்.
ஆனால் பெப்பி கிரிய்யோதான் அரசியல் “சாதியை” இடைவிடாமல்
கண்டித்ததின் மூலம் அதிக எதிர்ப்பு வாக்குகளை பெறுவதில் வெற்றி அடைந்துள்ளார்.
ஆனால் அவருடைய இயக்கம் பெருகும் சமூக நெருக்கடிக்கு விடை ஏதும் கொடுக்கவில்லை.
வர்க்கப் பிரச்சினைகளில் தெளிவான நிலைப்பாட்டை கிரிய்யோ எடுக்கவில்லை; அவருடைய
பன்முகத் திட்டம் வலதுபுறம்தான் வலுவாகத் திரும்பியிருந்தது.
வாக்களிக்கச் சென்றவர்களில் பாதிக்கும் மேலானவர்கள் பெர்லுஸ்கோனி
அல்லது கிரிய்யோவின் ஐந்து நட்சத்திர இயக்கத்திற்கு வாக்களித்தனர் என்ற உண்மை,
அதுவும் இரண்டுமே ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரான பிரச்சாரத்தில் ஈடுபட்டன என்ற
நிலையில், மரபார்ந்த வகையில் ஐரோப்பிய ஒன்றிய சார்புடையது என்று கருதப்பட்ட ஒரு
நாட்டில் ஐரோப்பிய ஒன்றியத்திற்கான பெருகிய எதிர்ப்பின் வளர்ச்சியை இது
குறிக்கிறது.
மொன்டிக்கு எதிரானதும், ஐரோப்பிய ஒன்றியத்திற்கு எதிரானதுமான கோபம்
என்பது வலதுசாரி நபர்களால் பயன்படுத்தப்பட முடியும்; ஏனெனில் அவர்கள் பெயரளவு
“இடதில்” இருந்து எதிர்ப்பு எதையும் முகங்கொடுக்கவில்லை. மற்றய ஐரோப்பிய நாடுகளில்
இருக்கும் சமூக ஜனநாயகக் கட்சிகள் போலவே, இத்தாலியிலுள்ள ஜனநாயகக் கட்சி முற்றிலும்
ஐரோப்பிய ஒன்றியத்தின் சிக்கனக் கொள்கைகளுக்கு தனது ஆதரவைக் கொடுக்கிறது.
கம்யூனிஸ்ட் கட்சியிலிருந்து உருவாகிய கம்யூனிஸ்ட் ரிபௌண்டேஷன் கட்சியானது வலதுசாரி
அரசாங்கங்களுக்கு பலமுறை ஆதரவு கொடுத்ததால் முற்றிலும் மதிப்பிழந்து போய்விட்டது. |