சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : வட அமெரிக்கா

US deploys troops, drones to Niger

நைஜருக்கு அமெரிக்கா துருப்புக்களையும் ஆளில்லா விமானங்களையும் அனுப்புகிறது

By Barry Grey
23 February 2013

use this version to print | Send feedback

வெள்ளியன்று ஜனாதிபதி பாரக் ஒபாமா அமெரிக்கக் காங்கிரசிடம் தான்கிட்டத்தட்ட” 100 அமெரிக்கத் துருப்புக்களை மேற்கு ஆபிரிக்க நாடான நைஜரில் நிலைப்படுத்தியிருப்பதாகத் தெரிவித்தார்.

ஒரு மேலோட்டமான ஆறு வசனங்கள் கொண்ட கடிதம் ஒன்றை மன்றத் தலைவர் ஜோர் போஹ்னர் மற்றும் செனட்டின் தற்காலிகத் தலைவரான செனட்டர் பாட்ரிக் லீகி இற்கு அனுப்புகையில், ஒபாமாஉளவுத்தகவல் சேகரிப்பிற்கு ஆதரவளிக்கவும்”, “மாலியில் செயற்பாடுகளை நடத்திவரும் பிரெஞ்சுத் துருப்புக்களுடன் உளவுத்துறைத் தகவல்களைப் பகிர்ந்து கொள்ள வசதியாகவும், அப்பிராந்தியத்தில் உள்ள ஏனைய பங்காளிகளுக்கு உதவவும்கடைசி 40 துருப்பினர் புதன் அன்று அங்கு சென்றடைந்தனர் என்று எழுதியுள்ளார்.

உளவுத்துறைத் தகவல் சேமிப்பு என்னும் தெளிவற்ற கருத்தைத்தவிர இராணுவப் படையை அனுப்பி வைப்பதற்கான மற்றைய ஒரே நியாயப்படுத்துதல், அமெரிக்க தேசியப் பாதுகாப்பு நலன்களை அதிகரித்தல்என்பதாகும். இக்கடிதத்தில், ஒபாமா தலைமைத் தளபதி, தலைமை நிர்வாகி என்னும் முறையில் காங்கிரசிற்கு, 1973 போர் அதிகாரங்கள் தீர்மானத்தின் -War Powers Resolution- தேவைகளின்படி தெரிவிப்பதாகக் கூறியுள்ளார். இச்சட்டம் ஜனாதிபதி காங்கிரசில் இசைவு இல்லாமல் இராணுவப் படைகளை அனுப்புவதைத் தடைசெய்யும் நோக்கத்தை கொண்டது.

போர் அதிகாரங்கள் தீர்மானம், ஜனாதிபதி, காங்கிரசின் அனுமதியுடன் அல்லது, “அமெரிக்கா, அதன் நிலப்பகுதிகள் அல்லது இருப்புக்கள் மீது அல்லது அதன் படைகள் மீதான தாக்குதலால் தோற்றுவிக்கப்படும் ஒரு தேசிய நெருக்கடி என வரும்போது வெளிநாட்டிற்குப் படைகளை அனுப்பலாம் எனக் கூறுகிறது. இதற்கு ஜனாதிபதி காங்கிரசிற்கு படைகளை அனுப்பிய 48 மணி நேரத்திற்குள் தெரிவிக்கப்பட வேண்டும் என்று உள்ளது. மேலும் காங்கிரஸ் அனுமதி இல்லாமல் 60 நாட்களுக்கு மேல் அவற்றை அங்கு வைத்திருக்கக் கூடாது என்றும் கூறப்பட்டுள்ளது.

ஒபாமாவின் இழிந்த, ஏமாற்றுத்தன கடிதத்தின் பின்னணியில் வட ஆபிரிக்காவில் அமெரிக்க இராணுவத் தலையீடு என்னும் முடிவிலா, தொலை விளைவுடைய நிகழ்வின் ஆரம்பமாக உள்ளது. வெள்ளியன்று ஒபாமாவால் அறிவிக்கப்பட்ட இந்த நடவடிக்கை அமெரிக்காவும் அதேபோல் பிற ஏகாதிபத்திய சக்திகளும் கண்டத்தை மறு காலனித்துவமுறைக்கு உட்படுத்தி அதன் செழிப்பான மூலோபாய இயற்கை வளங்களின் மீது கட்டுப்பாட்டைக் கொள்ளுவதை இலக்காக வைத்துள்ள உந்துதலில் முக்கிய விரிவாக்கத்தைக் குறிக்கிறது.

ஆளில்லா விமானங்கள் (டிரோன்கள்) பயன்படுத்தப்படுவது நைஜர் நடவடிக்கையின் குற்றத்தன்மையை எடுத்துக் காட்டுகிறது. அவை ஆபிரிக்க மக்களை அச்சுறுத்தவும், வாஷிங்டனின் ஆக்கிரமிப்பு மற்றும் கண்டத்தை அடிமைப்படுத்துதல் என்னும் உந்துதலுக்கு விரோதிகள் எனக் அடையாளம் காணப்படுபவோர் அனைவரையும் கூட்டாக கொலை செய்ய பென்டகனாலும் CIA  ஆலும் பயன்படுத்தப்படும்.

இந்த கொள்ளைமுறை உந்துதல், அனைத்து நோக்கமுடைய போலிக்காரணமான பயங்கரவாதத்தின் மீதான போர் என்பதன் ஒரு பகுதியாக மாலி மற்றும் சகாரா பிராந்தியத்தின் ஏனைய பகுதிகளில் அல்குவைடா தொடர்புடைய இஸ்லாமிய அடிப்படைவாதப் போராளிகளுக்கு எதிராக போராடுதல் என்பதன் பின் மறைக்கப்பட்டுள்ளது.

கடந்த இரு ஆண்டுகள் ஏற்கனவே லிபியாவில் ஆட்சி மாற்றத்திற்காக அமெரிக்க தலைமையிலான போர், சிரியாவில் அமெரிக்க, நேட்டோ ஆதரவுடைய குறுங்குழுவாத உள்நாட்டுப்போர் மற்றும் கடந்த மாதம் அமெரிக்க ஆதரவுடைய பிரான்சின் நைஜரின் அண்டை நாடான மாலி மீதான படையெடுப்பு ஆகியவற்றைக் கண்டுள்ளன. அமெரிக்க இராணுவத் தளம் ஒன்று நைஜரில் நிறுவப்பட்டுள்ளமை இப்பொழுது குடிமக்களை பாதுகாக்க, மனிதஉரிமையை பாதுகாக்க என்ற போர்வையின் கீழும் மற்றும் லிபியத் தலைவர் முயம்மர் கடாபியை கொலை செய்யும் திட்டத்தையும் உள்ளடக்கியிருந்த 2011ல் லிபியாவிற்கு எதிரான போரின் உண்மையான முக்கியத்துவத்தை வெளிப்படையாக முன்வைக்கிறது. லிபியக் கொடுமையைத் தொடர்ந்த அனைத்து நடவடிக்கைகளும் ஏற்கனவே செயற்பாட்டில் உள்ளதுடன், இன்னும் பல இரத்தம்தோய்ந்த கொடுமைகள் வரவுள்ளன.

அமெரிக்க துருப்புக்கள் நைஜரில் அறிமுகப்படுத்தப்படுவதின் உண்மை நோக்கம் வட மேற்கு ஆபிரிக்காவில் அமெரிக்க ஆதிக்கத்தை உறுதிப்படுத்துவதும், பிரெஞ்சு ஏகாதிபத்திய நோக்கங்களை அப்பிராந்தியத்தில் தடுக்கவும் மற்றும் சீனாவின் அதிகரிக்கும் செல்வாக்கை எதிர்ப்பதற்கும் ஆகும்.

காங்கிரசிற்கு எழுதிய கடிதத்தில் ஒபாமாவின் கூற்றான நைஜர் அரசாங்கம் அமெரிக்க நிலைப்பாட்டிற்கு ஒப்புக் கொண்டுள்ளது என்பது அதிகம் அர்த்தமற்றது. ஏனெனில் அப்பிராந்தியத்தில் உள்ள அனைத்து முதலாளித்துவ ஆட்சிகளும் அமெரிக்க ஏகாதிபத்தியத்தினதும், அவற்றின் முன்னாள் ஐரோப்பிய காலனித்துவ சக்திகளினதும் கைக்கூலிகளாகவே செயல்படுகின்றன.

ஆளில்லா விமானங்கள் பற்றித் தன் கடிதத்தில் ஒபாமா குறிப்பிடவில்லை என்றாலும், பெயரிடப்படாத பென்டகன் அதிகாரிகள் செய்தி ஊடகங்களிடம் வெள்ளியன்று டிரோன் விமானங்கள் ஏற்கனவே வறிய நாட்டிற்கு அனுப்பப்பட்டுவிட்டன என்றும், இதில்முதல் அலையில்இரண்டு ராப்டர் கண்காணிப்பு டிரோன்கள் -Raptor surveillance drones- உள்ளன என்றும் கூறினர். இவர்கள், தூரத்திலிருந்து இயக்கும் விமானிகள், பாதுகாப்பு, பராமரிப்புக் குழுவினர் உட்பட 250 முதல் 300 இராணுவத்தினர்  நிலைப்படுத்தப்படுவர் என்றும் கூறினர்.

ABC News, அமெரிக்க அதிகாரிகள் வாஷிங்டன் ஏற்கனவே பிரடேட்டர் ஆளில்லா விமானங்களை மாலியின் மீது பிரெஞ்சு படையெடுப்பிற்கு அமெரிக்க இராணுவத்தின் ஆதரவாக பறக்கவிட ஆரம்பித்துவிட்டது என்று கூறியதாக மேற்கோளிட்டுள்ளது. இதைத்தவிர பிரெஞ்சு மற்றும் கூட்டு ஆபிரிக்கத் துருப்புக்கள் விமானம் மூலம் கொண்டுவிடப்படுவது, டௌரெக் இஸ்லாமியவாத எழுச்சியாளர்களின் கட்டுப்பாட்டின் கீழ் இருந்த பெருநகரங்கள், சிறுநகரங்கள் ஆகியவற்றின் மீது குண்டு போட்ட பிரெஞ்சு இராணுவ விமானங்களுக்கு எரிபொருள் மீள்நிரப்புதல் ஆகியவை அடங்கும்.

இதைத்தவிர, மாலி செயற்பாட்டின் ஒரு பகுதியாக அமெரிக்கச் சிறப்புப் படைகள் நைஜர், நைஜீரியா, பர்க்கினா பாசோ, செனகல், டோகோ மற்றும் கானாவிற்கும் அனுப்பப்பட்டுள்ளன.

நைஜர் தலைநகரான நியமேயில் இப்போது நிலைகொண்டுள்ள போதிலும் இது வடக்கு நகரான அகாடெஸிற்கு அனுப்பப்படலாம்.

ஒபாமா தன்னுடைய காங்கிரஸுக்கு அனுப்பிய கடிதத்தில் இந்த ஈடுபடுத்தல் மட்டுப்படுத்தப்பட்ட, குறுகிய கால வரம்பை கொண்டு கண்காணிப்பு டிரோன்கள் மட்டும் இருக்கும் என்ற உணர்வை அளிக்க முற்படுகையில், உண்மையில் எடுக்கப்பட்ட நடவடிக்கை விரிவாக்கப்பட்ட செயலாகும். இது பாக்கிஸ்தான், யேமன், மற்றும் சோமாலியா ஆகியவற்றில் நிர்வாகத்தால் நடத்தப்படும் ஆயுதம்தரித்த டிரோன் அமெரிக்கப் படுகொலைகள் திட்டம் தவிர்க்கப்படமுடியாதவாறு வட ஆபிரிக்காவில் விரிவாக்கப்பட இட்டுச்செல்லும்.

ABC News, அமெரிக்க ஆபிரிக்க கட்டளையகம் சில வாரங்களுக்கு முன்பு ஒரு திட்டத்தை வரைந்துள்ளது. அதன்படி நைஜரில் ஒரு தளம் அமைக்கப்படும், அது நீண்டகால அடிப்படையில் மேற்கு ஆபிரிக்காவில் கண்காணிப்புச் செயலைச் செயல்படுத்தும்.” மேலும் அரசாங்க அதிகாரி ஒருவர் இப்புதிய நடவடிக்கைகள் ஆபிரிக்க கட்டளையகம் முன்வைக்கும் தனிக் கருத்துக்களுக்கு உருக்கொடுக்கக் கூடும்என்று கூறியதாகவும் மேற்கோளிட்டுள்ளது.

அமெரிக்க பாதுகாப்புத் துறை அதிகாரி ஒருவர்அமெரிக்க துருப்புக்களின் எண்ணிக்கை அதிகமாகும் என்று நான் கூறுவது சரியாகும் என நினைக்கிறேன்என்றதாக வாஷிங்டன் போஸ்ட் மேற்கோளிட்டுள்ளது. மற்றைய அதிகாரிகள்பிரிடேட்டர்களில் ஆயுதங்களையும், ஏவுகணைகளையும் இயக்கும் முறைகள் எதிர்காலத்தில் வைப்பதை நிர்வாகம் நிராகரிக்கவில்லைஎனக் கூறியதாகவும் அது தெரிவித்துள்ளது.

பல வாரங்களாக அமெரிக்கச் செய்தி ஊடகம் ஒபாமா நிர்வாகம் அதன் டிரோன் தாக்குதல் திட்டத்தை வட ஆபிரிக்காவிலும் விரிவாக்கும் திட்டங்களை கொண்டது என்ற தகவல்களைக் கொடுத்துள்ளது. ஜனவரி மாத இறுதியில் அமெரிக்கா நைஜர் அரசாங்கத்துடன் அந்நாட்டில் அமெரிக்க இராணுவத் தளம் ஒன்றை நிறுவும் உடன்பாட்டை கொண்டுள்ளதாகத் தெரிவித்தது. வெள்ளியன்று கார்டியன் அந்த உடன்பாட்டிற்குள்இராணுவங்கள் இரண்டும் ஒத்துழைப்பதில் தடைகள் ஏதும் இல்லைஎன்று கூறியுள்ளது.

முன்னதாக ஜனவரி மாதம், அல்ஜீரியாவில் எரிவாயு நிலையம் ஒன்றில் இஸ்லாமிய மெகரெப்பின் அல்குவைடா நடத்திய பணயக்கைதி முற்றுகையை தொடர்ந்து, அமெரிக்கப் பாதுகாப்பு மந்திரி லியோன் பானெட்டா உட்குறிப்பாக வட ஆபிரிக்காவில் உள்ள பயங்கரவாதிகள் எனப்படுவோருக்கு எதிராக டிரோன் தாக்குதல்கள் நடத்தப்படும் என்று அச்சுறுத்தினார். எங்கு அல் குவைடாவினர் இருந்தாலும் அங்கு நடவடிக்கை எடுக்கும் பொறுப்பு எங்களுக்கு உண்டு என்றார் பானெட்டா. மேலும் அமெரிக்கா அவ்வாறுதான் தொடர்ச்சியான டிரோன் ஏவுகணைத் தாக்குதல்கள் நடத்தும் பாக்கிஸ்தான், யேமன் மற்றும் சோமாலியில் செய்கிறது என்றார். இது அல்குவைடாவிற்கு வட ஆபிரிக்கா மற்றும் மாலியில் தமது செயற்பாடுகளைத் தொடக்க ஒரு தளம் கிடைப்பதை தடுக்கும் என்றும் கூறினார்.

வடக்கு, மேற்கு ஆபிரிக்காவில் கிளர்ச்சியாளர்களுக்கு எதிராக ஒருகாலவரையறையற்றநடவடிக்கை நடக்கும் என்று வோல் ஸ்ட்ரீட் ஜேர்னல் எழுதியுள்ளது. அதே சமயம் ஒரு அமெரிக்க வெளிவிவகாரத்துறை அதிகாரி மாலியில் நடத்தப்படும் தாக்குதல்பல ஆண்டுகள் நீடிக்கலாம்என்றும் இப்பொழுது நடப்பதுமுதல் கட்டம்தான்என்றும் எச்சரித்தார்.

இரண்டு வாரங்களுக்கு முன்பு ஜேர்னல்அமெரிக்கக் கொலைசெய்யப்படுவோர் பட்டியலை விரிவாக்கும் முயற்சிஎன்னும் தலைப்பில் ஒரு முதல் பக்கக் கட்டுரையை வெளியிட்டது. இக்கட்டுரை ஒபாமா நிர்வாகத்திற்குள் சகாரா மற்றும் வடமேற்கு ஆபிரிக்க நாடுகளில் அதன் டிரோன் படுகொலைத் திட்டத்தை விரிவாக்குவது குறித்த விவாதங்கள் நடைபெறுவதாகக் கூறியுள்ளது.

நைஜரில் அமெரிக்க இராணுவத் தலையீடு என்பது இன்னும் பரந்த மோதலுக்கு விதைகள் ஊன்றுவதைப் போன்றதுதான். பல தசாப்தங்களாக மாலியின் மத்திய அரசாங்கத்திற்கு எதிராக அவ்வப்போது போராட்டங்களை நடத்தும் அலைந்து திரியும் டௌரக் மக்கள்கூட்டம், நைஜரின் கிழக்கேயும் இருக்கின்றது. அமெரிக்கத் துருப்புக்கள் மற்றும் டிரோன்கள் அறிமுகப்படுத்தப்படுவது டௌரெக் எழுச்சியை தூண்டிவிட்டு இன அடித்தளம் கொண்ட நாடுகளுக்கு இடையிலான ஒரு உள்நாட்டுப் போரைத் தூண்டும் சாத்தியத்தை கொண்டுள்ளது.

விக்கிலீக்கஸில் வெளிப்படுத்தியுள்ள நியமேயில் இருக்கும் அமெரிக்க தூதர்களின் தூதரக செய்திக்குறிப்புகள் தெளிவுபடுத்தியது போல், சீனா இப்பிராந்தியத்தில் கொண்டுள்ள பொருளாதார நடவடிக்கைகள் அமெரிக்காவின் கவனத்தின் குவிப்பாக உள்ளன. ஒரு தகவல் செய்தி, “சீனா நைஜரின் மூலவளத்துறைகளில் பெரிய செல்வாக்கைக் கொண்டுள்ளதாகவும் நைஜரில் அது பிரான்ஸுக்குப் பதிலாக மிக அதிக முதலீடு செய்யும் நாடாக வரக்கூடும் எனத் தெரிவிக்கிறது.

நைஜரில் அமெரிக்க நடவடிக்கை, அமெரிக்காவிற்கும் உலகின் இரண்டாம் பெரிய பொருளாதார சக்திக்கும் இடையே உறவுகளுக்கு இன்னும் எரியூட்டும். ஏற்கனவே இவை, ஒபாமாவின்ஆசியாவில் முன்னிலைஎன்னும் திட்டத்தின் ஒரு பாகமாக நடத்தப்படும் அமெரிக்க ஆத்திரமூட்டுதல்களின் விளைவாக சிதைந்துள்ளன.