World Socialist Web Site www.wsws.org


WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : ஆசியா : இந்தியா

Prime Minister Cameron’s India tour highlights UK’s weakening global position

பிரதம மந்திரி கமெரோனுடைய இந்தியப் பயணம் ஐக்கிய இராச்சியத்தின் உலக நிலைமையின் வலுவற்ற தன்மையை உயர்த்திக் காட்டுகிறது.

By Julie Hyland
22 February 2013

Back to screen version

தன்னுடைய மூன்று நாட்கள் இந்தியப் பயணத்திற்கு ஒரு பிரித்தானியப் பிரதமர் இதுகாறும் அழைத்துச் சென்றிராத அளவிற்கு மிகப் பெரிய வெளிநாட்டு வர்த்தக குழுவை டேவிட் காமெரோன் திரட்டியிருந்தார்.

கிட்டத்தட்ட100 நிறுவனங்கள், நான்கு மந்திரிகள் மற்றும் 9 பாராளுமன்ற பிரதிநிதிகள் பலர் இந்திய மரபியத்துடன்கூடகுழுவில் இருந்தனர். Rolls-Royce, Serco, BAE, Eads, Thales  போன்ற பாதுகாப்புத் தளவாட நிறுவனங்களுடன், HSBC, Lloyd’s, போன்ற வங்கிகள், லண்டன் பங்குச் சந்தை உறுப்பினர்கள் மற்றும் பல பல்கலைக்கழகப் பிரதிநிதிகள் ஆகியோர் அடங்கியிருந்தனர்.

இந்தியாவுடன் வணிகத்தை உயர்த்துவதற்கான கமெரோனின் முயற்சிதான் இத்தகைய தூதுக்குழு ஆகும். பிரித்தானியாவில் புலம்பெயர்ந்து வாழும் இந்திய மக்கள் 1.5 மில்லியன் உட்பட்டோரை அடக்கி, பகிர்ந்து கொள்ளப்படும் மொழி, பண்பாடு, பிணைப்புக்கள் ஆகியவற்றை மேற்கோளிட்டு, கமெரோன் இந்தியாவுடன் ஒரு சிறப்பு உறவை இணைக்கத் தான் உறுதிபூண்டுள்ளதாக தெரிவித்தார்; இந்நாடு இந்நூற்றாண்டில் முக்கிய நாடுகளில் ஒன்றாகத் திகழும் என்றும் கூறினார்.

 ஆகாயம்தான் வரம்பு என்ற தன்மையில், பிரதம மந்திரி இப்பங்காளித்தனம் ஒன்றும் எளிதில் கிடைத்திருப்பது இல்லை என்பதையும் ஒப்புக் கொண்டார்.

1919ம் ஆண்டு ஏப்ரல் 13 அன்று அமிருதசரஸில் உள்ள ஜாலியன்வாலா பாக்கில் ஆயுதமற்ற குடிமக்கள்பெரும்பாலும் சீக்கியர்கள்இழிந்த முறையில் படுகொலை செய்யப்பட்டது குறித்த காமெரோனின் பரிவுணர்வுக் குரல் இப்பின்னணியில்தான் வெளிப்பட்டுள்ளது. பஞ்சாபில் ஒரு முக்கிய மத திருவிழாவான பைசாகி அன்று ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்தனர். பிரிகேடியர் ஜெனரல் ரெஜெனால்ட் டையர் வெளியேறும் வழிகள் மூடப்பட உத்திரவிட்டு 50 பிரிட்டிஷ் இந்திய இராணுவத்தினர்கள் வெடிமருந்து தீரும் வரை கூட்டத்தின்மீது சுடவும் உத்திரவிட்டார். பிரித்தானியர்கள் 379 பேர் கொல்லப்பட்டனர் எனக் கூறுகின்றனர்; ஆனால் இந்தியர்கள் கொடுக்கும் எண்ணிக்கை 1,000க்கும் மேல் உள்ளது.

இந்தியாவில் பிரித்தானிய காலனித்துவத்திற்கு எதிராக பெருகிய சமூக, அரசியல் அமைதியின்மை நிலவிய நேரத்தில்தான் இப்படுகொலை நடைபெற்றது. இது பஞ்சாபில் வெகுஜன எதிர்ப்புக்களைத் தூண்டியது; பெரும்பாலான பகுதிகள் அம்மாநிலத்தில் அப்பொழுது இராணுவச் சட்டத்தின்கீழ் இருந்தன. இறுதியாக அமைதியின்மையை மௌனமாக்க பிரித்தானிய அதிகாரிகள் ஒரு விசாரணை நடத்தினர்; அக்குழு டையரை கட்டுட்டுப்பாட்டில் இருந்து அகற்றி அவருக்கு ஓய்வும் கொடுத்து விட்டது.

படுகொலை நடந்த இடத்தில் இரங்கற் புத்தகத்தில் கையெழுத்திட்ட காமெரோன் 1920ல் வின்ஸ்டன் சேர்ச்சில் கூறிய புகழ்பெற்ற அறிக்கையை வலியுறுத்தி, கொலைகள் அரக்கத்தனமானவை என்றார்இக்கருத்து, வெகுஜனப் படுகொலைகளை பிரித்தானிய ஏகாதிபத்தியத்தின் நலன்பயந்த ஆட்சியில் ஒரு பிறழ்ச்சி என்று சித்தரிக்கும் முயற்சி ஆகும். ஆனால் படுகொலைகள் குறித்து குறுகிய மன்னிப்புத் தெரிவிக்கும் நிலையில் காமரோன் இருந்தார்; தான் பிறப்பதற்கு 40 ஆண்டுகளுக்கு முன்னால் நடந்த நிகழ்ச்சி பற்றி, தான் அவ்வாறு தெரிவிப்பது தவறாகப் போகும் எனப் பரிதாபமாக வாதிட்டார்.

காலனித்துவ ஆட்சியின் குருதிகொட்டிய மரபியம் இந்தியாவில் இன்னும் வலுவான வணிக நிலைப்பாட்டை நிறுவ முயலும் பிரித்தானியா எதிர்கொள்ளும் ஒரே பிரச்சினை அல்ல. காமெரோன் அந்நாட்டிற்கு ஜூலை 2010ல் முதல் வருகை புரிந்தார்; அது 2015 ஐ ஒட்டி வணிகத்தை இருமடங்காக்கும் உந்துதலின் ஒரு பகுதி ஆகும். அதன்பின் குறைந்த முன்னேற்றம்தான் ஏற்பட்டுள்ளது; ஐக்கிய இராச்சியம் மற்ற ஐரோப்பிய நாடுகளைவிட இத்துறையில் பின்தங்கித்தான் உள்ளது.

2010ல் கமெரோன் இந்தியாவிற்கு 126 விமானங்கள் வழங்குவதற்கான 1.2 பில்லியன் டாலர்கள் ஒப்பந்த Eurofighter ஜெட்டின் பின்புலத்தில் இருந்து இங்கிலாந்து பிரிவிற்காகவும் கடுமையாக உழைத்தார். மாறாக இந்தியா அதன் பிரெஞ்சுப் போட்டி நாட்டின் Rafale ஜெட்டுக்களை தேர்ந்தெடுத்தது. கமெரோனுக்கு சற்றே முன்பு பிரான்சின் ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் அந்த உடன்பாட்டை இறுதிப்படுத்தும் முயற்சிகளுக்காக டெல்லிக்கு வந்திருந்தார். உடன்பாடு முடிவற்றவுடன், இந்தியாவுடனான வணிகத்தில் அது பிரித்தானியாவை கடந்து நிற்கிறது என்ற பொருளைத்தரும்.

FRANCE 24 செய்தி நிறுவனம், இதை பாரிசின் இத் தற்செயல், வரவேற்பிற்குரிய நிகழ்வு” என விவரித்து, ஹாலண்டின் வருகை மேற்கு ஆபிரிக்க நாடான மாலி மீது பிரெஞ்சு ஏகாதிபத்தியம் தலையிட்ட உடனேயே வந்துள்ளது என்ற உண்மையையும் விளம்பியது. அதன் சர்வதேச விவகாரங்கள் நிருபர் லீலா ஜாசின்டோ, “மாலி நடவடிக்கை பிரான்சின் Rafale போர் விமானங்களின் சிறப்பை உயர்த்திக் காட்ட அனுமதித்தது” என்று கூறியுள்ளார்.

இதற்கு மாறாக, கமெரோன் இந்தியா 483 மில்லியன் பவுண்டுகள் உடன்பாட்டை 12 Augusta Westland Luxury AWE 101 ஹெலிகாப்டர்கள், ஐக்கிய இராச்சியத்தில் தயாரிக்கப்படுவதை, வாங்குதவதை நிறுத்தி வைப்பதாக அறிவித்துள்ளபோது வந்துள்ளார். அந்த உடன்பாடும் அவருடைய கடைசி வருகையின்போது ஒப்புக் கொள்ளப்பட்டு இருந்தது. இத்தாலிய பொலிசார் அகஸ்டா வெஸ்ட்லாந்தின் தாய்நிறுவனமான Finmeccanica உடைய தலைமை நிர்வாகியை உடன்பாட்டை முடிக்க இந்திய அரசாங்க அதிகாரிகளுக்கு இலஞ்சம் கொடுக்கப்பட்டது என்று கூறப்படும் குற்றச்சாட்டுக்களுக்காக கைது செய்துள்ளனர்.

ஒரு செய்தியாளர் மாநாட்டில் பேசிய இந்தியப் பிரதம மந்திரி மன்மோகன் சிங்க இந்த ஊழல் விசாரணையில் பிரித்தானியா உதவும் என்று உறுதியளித்ததற்காக பகிரங்கமாக கமெரோனைப் பாராட்டியுள்ளார்.

பிரித்தானிய பல்கலைக்கழகங்களுக்கு இந்திய மாணவர்களை ஈர்க்கும் ஐக்கிய இராச்சியத்தின் முயற்சிகளிலும் காமெரோன் பின்தங்கிவிட்டார். பிரித்தானிய செய்தி ஊடகம் இழிந்த இனவாதப்பிரச்சாரத்தை ஐக்கிய இராச்சியத்தில் நுழையும் வெளிநாட்டு மாணவர்களுக்கு எதிராக நடத்துகையில், அங்கு எண்ணிக்கை குறைந்து, பல்கலைக்கழகங்களுக்கு வருமான இழப்பை ஒட்டி பீதியைக் கிளப்பியுள்ளது.

தனது வலதுசாரி ஆதரவாளர்களுக்கும் வணிகத் தேவைகளுக்கும் இடையே சம நிலையை பேணும் வகையில், காமெரோன் பிரித்தானிய பல்கலைக்கழகங்களில் படிக்க விரும்பும் இந்தி மாணவர்களுடைய எண்ணிக்கைக்கு எந்த வரம்பும் கிடையாதுஇடமும் கிடைத்து, அவர்கள் ஆங்கில மொழித் தகுதி பெற்றுள்ளவரை என்று உறுதியளித்தார்.

இது இந்தியாவின் 1 டிரில்லியன் டாலர்கள் உள்கட்டுமானத் திட்டத்திற்கு அணுகும் வாய்ப்பு கிடைக்குமா என கமெரோனை நிறுத்தியது, இத்திட்டத்தில் 600 மைல் நீளப் பொருளாதார வழி ஒன்று, மும்பை, பெங்களூர் என்னும் உயர் தொழில்நுட்ப மையங்களுக்கு இடையேயான சாலை வளர்த்தலும் அடங்கும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் திட்டமிட்டு முடிக்கப்படும் இந்த வளர்ச்சி கிட்டத்தட்ட 25 பில்லியன் டாலர்கள் மதிப்புடைய முதலீட்டுத் திட்டங்களை தோற்றுவிக்கும். கமெரோன் வழங்கக் கூடியதோ அற்ப 1 மில்லியன் பவுண்டுகள்தான். இது வளர்ச்சி குறித்த இயலும் ஆய்வுக்கு நிதி அளிப்பதற்குத்தான் உதவும், அது கூட, சமமான இந்திய நிதி இதற்கேற்ப முன்வந்தால்தான்.

 முளைத்துப் பெருகும் பங்காளித்தனத்தில் சான்றாக எஞ்சியிருப்பது, ஒரு கூட்டு சைபர் பணித் தொகுப்பு ஆகும். இம்முயற்சி இந்தியக் கணினி வழங்கிகளில் சேர்த்து வைக்கப்பட்டுள்ள மில்லியன் கணக்கான பிரித்தானியர்கள் பற்றிய சொந்த தகவல்களை பயங்கரவாதிகள், குற்றவாளிகள், விரோத நாடுகள் ஆகியவற்றின் சைபர் தாக்குதல்களிடம் இருந்து காக்கும் முயற்சியின் ஒரு பகுதியாக பின் தங்கிய நிலையில் உள்ளது. இந்த உடன்பாடு சீனாவிற்கு எதிரானது என்று உணரப்படுகிறது.

சீனாவை சூழும் அமெரிக்கத் தலைமையிலான முயற்சிகளில் இந்தியா முக்கிய பங்கைக் கொண்டுள்ளது. இதன் உயரும் இராணுவச்செலவு பிரித்தானியா, பிரான்ஸ் இன்னும் பிற போட்டியிடுவது இக்கொள்கையின் ஒரு பகுதி ஆகும். ஐரோப்பிய ஏகாதிபத்திய சக்திகள் ஆபிரிக்காவிற்குள் சமீபத்தில் தலையிட்டிருப்பது லிபியா, மாலிஇதே போல் கண்டத்தில் சீனச் செல்வாக்கிற்கு எதிரான தங்கள் சொந்த புவி மூலோபாய நலன்களைப் பாதுகாக்கும் முயற்சிகளால்தான் உந்துதல் பெற்றுள்ளது.

இந்தக் கூட்டுப் பணித் துவக்க முயற்சி அமெரிக்க சைபர் பாதுகாப்பு நிறுவனம் மான்டியன்ட், சீன அரசாங்கம் அமெரிக்க நிறுவனங்கள், அரசாங்க அமைப்புக்கள் கணினிகளில் ஊடுருவியிருப்பதற்காக சான்றுகள் உள்ளன எனக் கூறிய நிலையில் வந்துள்ளது. இந்த அறிக்கை சீனாவால் நிராகரிக்கப்பட்டது; ஆனால் ஒமாமா நிர்வாகம் பதிலடி கொடுக்கத் தயாரிப்புக்களை நடத்துவதாகக் கூறப்படுகிறது.

இத்தகைய தந்திரோபாயங்களின் பலாபலன்கள் வெடிப்புத் தன்மை உடையவை; இந்தியா மற்றும் பாக்கிஸ்தானுக்கும் இடையே ஏற்கனவே அழுத்தம் கொண்டுள்ள உறவுகள் இதில் சற்றும் குறைந்தவை அல்ல. திங்களன்று பாக்கிஸ்தானிய அரசாங்கம் பல பில்லியன் டாலர் ஒப்பந்தத்தை க்வாடர் துறைமுக வளர்ச்சி செயற்பாட்டிற்கு சீனாவிற்கு கொடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. 2007ல் இந்த ஒப்பந்தத்தை சீனாவிற்கு கொடுக்க, அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்ததை அடுத்து சிங்கப்பூர் துறைமுக அதிகாரத்திற்கு (PSA) கொடுக்கப்பட்டது. தன்னுடைய செயற்பாடுகளை பாக்கிஸ்தான் செய்யாதது காரணமாக PSA இதைக் கைவிட்டதாகக் கூறப்படுகிறது.

ஜனாதிபதி ஆசிப் அலி ஜர்தாரி இந்தியாவால் கடுமையாகத் தாக்கப்படும் இந்த உடன்பாடு பாக்கிஸ்தான்-சீன உறவுகளுக்கு ஒரு புதிய உந்துதலைக் கொடுக்கும், வளைகுடா நாடுகளுக்கு க்வாடர் அருகே இருப்பதால், அப்பிராந்தியத்தில் இருந்து சீனாவிற்கு எண்ணெய் பாய்வுக்கு வசதியாக இருக்கும் என்றார்.

சைபர் பற்றிய உடன்பாட்டிற்கு விரோத நாடுகளின் பெயரைக் கூற கமெரோன் பகிரங்கமாக மறுத்தாலும், பிரித்தானிய உளவுத்துறை பலமுறையும் பெய்ஜிங்கை சைபர் ஒற்றுவேலைக்கு தாக்கியுள்ளது. ஆனால் கமெரோன் இந்தியாவிற்கு பயணிப்பதற்கு முன் சண்டே டைம்ஸ் சீனா குறித்த விடையிறுப்பு பற்றி அமைச்சரவையில் பிளவு உள்ளது எனக் கூறியுள்ளது.

கமெரோனின் உயர் நிலைப்பாடும், மே மாதம் வேண்டுமேன்றே தலாய் லாமாவைச் சந்தித்த ஆத்திரமூட்டும் செயற்பாடும் ஏற்பட்டதில் இருந்து, ஐக்கிய இராச்சியத்திற்கும் சீனாவிற்கும் இடையே உறவுகள் கிட்டத்தட்ட முறிந்துள்ளன. இதற்கு மாறாக சீனாவுடன் ஜேர்மனிய வணிகம் கணிசமாகப் பெருகியுள்ளது; அதே நேரத்தில் இந்தியப் பயணத்தை தொடர்ந்து ஹாலண்ட் பாரிஸுக்கும் பெய்ஜிங்கிற்கும் இடைய ஒரு புதியசுற்று ஒத்துழைப்பு குறித்து அறிவித்துள்ளார்.

டைம்ஸ் கருத்துப்படி, காமெரோனும் நிதிமந்திரி ஜோர்ஜ் ஓஸ்போர்னும் ஐக்கிய இராச்சிய-சீனா அழுத்தங்களை, சீனாவின் அரசாங்க நிதியத்தில் பங்கு பெற அதிகம் பேசாமல் இருப்பதில் ஆர்வம் கொண்டுள்ளனர். ஆனால் வெளியுறவு மந்திரி வில்லியம் ஹேகும் துணைப் பிரதமர் நிக் கிளெக்கும் இதை எதிர்க்கின்றனர்.

செய்தித்தாளின் இக்கருத்து சீனாவின் Global Times இடம் இருந்து ஒரு சீற்றமான விடையிறுப்பைக் கொண்டுவந்துள்ளது. பிரித்தானியாவின் சீன நலன்களுக்கு எதிரான பொறுப்பற்ற நடவடிக்கைகளை” கண்டிக்கையில் ஒரு தலையங்கம், “இரு தரப்பு உறவுகளில் பிரித்தானியாவை விட சீனா அதிக செல்வாக்குடையது. வடக்கு அயர்லாந்து, ஸ்காட்லாந்து ஆகியவற்றில் உள்ள பிரிவினை வாதிகளுடன் சீனா அதிக உறவுகளைக் கொண்டுள்ளது; இது லண்டனுக்கு உளைச்சலைக் கொடுக்கிறது. சீனாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தி ஜேர்மனி, பிரான்ஸ் மற்றும் பிரித்தானியா ஆகியவற்றின் இணைந்த மொத்தத்திற்கு அருகே உள்ளது. பிரித்தானியாவும் சீனாவும் எவர் மற்றவரை விடக் கடினமாக இருப்பர் எனப் பூசலிட்டால், பிரித்தானியா வெற்றி அடைய முடியுமா? “ என அது எழுதியுள்ளது.