சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

The return of German imperialism

ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் மீள்வருகை

Johannes Stern
21 February 2013

use this version to print | Send feedback

ஜேர்மனி, மூலப்பொருட்களை பெறுவதற்கு புதிய போர்களை நடத்துவதற்கான தீவிர தயாரிப்புக்களை செய்து கொண்டிருக்கிறது. இதுதான் ஜேர்மனியின் வணிக நாளேடான Handelsblatt ல் மூலப்பொருட்களுக்கான ஆய்வு: ஜேர்மனியின் புதிய போக்குஎன்னும் முதன்மை கட்டுரையில் எடுத்துக்காட்டப்படுகின்ற தகவலாகும்.

இக்கட்டுரை ஜேர்மன் முதலாளித்துவத்தின் உண்மையான முகத்தைக் காட்டுகிறது. 20ம் நூற்றாண்டின் முதல் பகுதியில் அது இருமுறை மனிதகுலத்தை உலகப் போரில் ஆழ்த்தியதில் முக்கிய பங்கை கொண்டு இருந்ததைப் போல், ஜேர்மனி மீண்டும் போர் மூலம் ஏகாதிபத்திய நலன்களை செயல்படுத்த முற்படுகிறது. மூலப் பொருட்களை அரசியல் நடவடிக்கைகள் மூலம் பெறுதல் என்னும் முந்தைய நடவடிக்கைகள் அதன் எல்லையை எட்டிவிட்டது.என்று Handelsblatt கூறுகிறது. இப்பொழுது ஜேர்மனிய பொருளாதாரத்திற்கு மூலப் பொருட்களை பெறுவதுதான் முக்கிய பிரச்சனையாகும் என்று செய்தித்தாள் எழுதுகிறது: ஜேர்மனியில் உள்ள உயர் தொழில்நுட்ப தொழிற்துறை அத்தியாவசிய விநியோகம் துண்டிக்கப்படும் அச்சத்தில் பீடிக்கப்பட்டுள்ளது.

ஹிட்லருக்கு நிதியளித்த அதே வணிக வட்டங்கள்தான் மீண்டும் போர் முரசுகளைக் கொட்டுகின்றன. இக்கட்டுரை 2011ல் நிறுவப்பட்ட மூலப்பொருட்களுக்கான கூட்டு (Resource Alliance -Rohstoffallianz) உடைய மேலாளர் டியர்க் பாஷ்கேர்ட் இன் ஒரு பேட்டியை மேற்கோளிடுகிறது. இந்த அமைப்பின் உறுப்பினர்களில், Volkswagen, ThyssenKrupp, Bayer மற்றும் BASF ஆகியவை அடங்கும்; இவை நேரடியாக நாஜிப் போர்த் திட்டங்களுக்கு ஆதரவளித்தன; அல்லது இவற்றின் முன்னோடி நிறுவனங்கள் செய்தன. இப்பொழுது அவை ஜேர்மன் அரசாங்கத்துடன் நெருக்கமாக ஒத்துழைத்து எப்படி பேர்லின் முக்கிய மூலப் பொருட்களை, அவசியமானால் பலத்தையும் பயன்படுத்தி உலகின் எந்தப் பகுதியில் இருந்தும் கொண்டுவரலாம் என முயல்கின்றன.

ஜேர்மனியின் ஏற்றுமதி சார்ந்த தொழில்துறைக்கு மூலப்பொருட்கள் மற்றும் சந்தைகளுக்கான பணி மிகப் பெரியது ஆகும். Handelsblatt கருத்துப்படி, ஜேர்மனியின் மூலப் பொருட்கள் இறக்குமதி கடந்த தசாப்தத்தில் கிட்டத்தட்ட மூன்று மடங்கு அதிகமாயின. மூலப்பொருட்களுக்கான போர்கள் எண்ணெய், எரிவாயு பற்றி மட்டும் என்று இல்லாமல் தாதுப் பொருட்களைப் பற்றியும் இருந்தன”. Handelsblatt அத்தகைய முக்கிய மூலப்பொருட்களான லிதியம், காலால்ட், குரோமியம், இண்டியம் மற்றும் அபூர்வ மண் கூறுபாடுகள் ஆகியவற்றைப் பற்றிய பட்டியலை விவரமாகக் கொடுத்து, இத்தகைய மூலப்பொருட்களுக்கு முக்கிய சக்திகளுக்கு இடையே உள்ள பெருகிய மோதலையும் மேற்கோளிட்டுள்ளது.

ஜேர்மன் முதலாளித்துவம் தன் போட்டி நாடுகளுக்கு எதிராக இத்தகைய மூலப்பொருட்களைப் பெறுவதற்கு இராணுவ வலிமையை பயன்படுத்தத் தயார் என்று பாஷ்கேர்ட் தெளிவாக்கியுள்ளார். மூலப்பொருட்களுக்கான போர்கள் மீண்டும் இருக்குமா என்று Handelsblatt கேட்டதற்கு, அவர் விளக்குவதாவது: பல மோதல்கள் அவற்றின் ஆரம்பத்தை மூலப்பொருட்களுக்கான மோதலில்தான் கொண்டிருந்தன என்பதை வரலாறு காட்டுகிறது. இதுவரை அது பெரும்பாலும் எண்ணெய் அல்லது எரிவாயு என்று மட்டுமே இருந்தது. ஆனால் இப்பொழுது பெருகிய முறையில் தாதுப் பொருட்களுக்கும் வந்துள்ளது. மூலப் பொருட்களின் விநியோகம் என்பதுதான் மொத்தப் பொருளாதாரத்திற்கும் மற்றும் ஒரு நாட்டின் நலனுக்கும் அடித்தளம் ஆகும். அதனால் பூகோள-அரசியல் முக்கியத்துவம் உள்ளது. பாரசீக வளைகுடாவில் அமெரிக்க இராணுவத்தின் நிலைப்பாடு அல்லது சீனக் கடற்படை பாரிய விரிவாக்கம் கொண்டுள்ளது என்பவை அத்தகைய நலன்களை பாதுகாக்கும் நோக்கம் கொண்டவை”. Handelsblatt, இக்கருத்து அரசியல் வட்டங்களில் ஆதரவைக் கொண்டுள்ளதாகவும், மத்திய அரசாங்கத்திற்கு மூலப் பொருட்கள் கட்டுப்பாடு என்பது வெளியுறவுக் கொள்கையில் ஒரு மூலோபாயப் பிரச்சினைஎன்று அதன் வாசகர்களுக்கு உறுதியளிக்கிறது. இதனால் தற்போதுள்ள மூலப்பொருட்களுக்கான கூட்டுக்கள் போதாதவை மற்றும் அது புதிய சூழ்நிலைக்கு தயார்செய்ய கூடுதல் பாதுகாப்பு மற்றும் இராணுவக் அமைப்புகள் தேவைப்படுகின்றன.

ஜேர்மன் ஏகாதிபத்தியத்தின் ஆக்கிரோஷமான திருப்பம் என்பது ஏகாதிபத்தியங்களுக்கு இடையேயான மோதலில் ஒரு புதிய கட்டத்தை குறிப்பதோடு, ஒரு மூன்றாம் உலகப் போருக்கான அச்சுறுத்தலும் அதிகரித்துள்ளது.

ஜேர்மன் முதலாளித்துவம் ஒரு அமைதிவாத நிலைப்பாட்டைக் கொண்டிருந்ததும் மற்றும் உலக ஏகாதிபத்தியம் போர்கள் மற்றும் பிற இராணுவச் செயற்பாடுகளுக்கு வாஷிங்டனை நம்பி இருந்த இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய காலம் ஒரு வரலாற்று இடைக்காலகட்டம் என்பது அதிகரித்தளவில் தெளிவாகிறது.

உலக பொருளாதார நெருக்கடி வெடித்த பின்னர் ஐரோப்பிய ஒன்றியம் தொடரும் சிக்கன கொள்கைகள், சமீபத்திய தசாப்தங்களில் ஜேர்மன் வர்த்தக மற்றும் உற்பத்தி விரிவாக்கத்திற்கு அடிப்படையை வழங்கிய ஐரோப்பிய சந்தைகளை குறைமதிப்பிற்கு உட்படுத்திவிட்டன. இதன் விளைவு கடந்த காலத்தில் புதைக்கப்பட்டுவிட்டது என நினைக்கப்பட்ட ஆவியுருவங்கள் மீண்டும் வந்துள்ளதுதான்; ஏனெனில் அனைத்து ஏகாதிபத்திய சக்திகளும் போருக்குத் தயாராகின்றன.

19ம் நூற்றாண்டில், ஜேர்மனி உலகைப் பங்கிடும் போட்டியின் அரங்கிற்கு தாமதமாக வந்தது. அது அதன் போட்டியாளர்களுக்கு எதிராகத் தன் நலன்களை ஆக்கிரோஷத்துடன் செயல்படுத்த முற்பட்டு இரு முறை உலகைப் போரில் ஆழ்த்தியது. உலக முதலாளித்துவத்தின் நிதிய, பொருளாதார நெருக்கடி தீவிரமாக உள்ள நிலையில், ஜேர்மன் ஏகாதிபத்தியம் மீண்டும் அரங்கில் நுழையும் கட்டாயத்தில் உள்ளது.

சோவியத் ஒன்றியத்தின் சரிவுக்குப்பின், அமெரிக்க ஆளும் வட்டம் உலகெங்கிலும் சவாலற்ற செயற்பாடுகளுக்கான வாய்ப்பைக் கண்டது. மத்திய கிழக்கு முழுவதும் ஒரு தசாப்தத்திற்கும் மேலாக அது முன்கூட்டி தாக்கும் போர்களை மேற்கொண்டது. இப்பொழுது அது பெருகிய முறையில் ஆசியா நோக்கி திரும்பியுள்ளதோடு அதன் மூலோபாய, பொருளாதார நலன்களை பாதுகாக்க ஒரு உலக அளவிலான டிரோன் (ஆளில்லா விமான) போர் முறையை ஏற்பாடு செய்துள்ளது. அமெரிக்க ஜனாதிபதி பாரக் ஒபாமா, டிரோன் தாக்குதல்கள் மூலம் அமெரிக்கக் குடிமக்களைக்கூடப் படுகொலை செய்யும் அதிகாரத்தைத் தான் கொண்டுள்ளதாகக் கூறுகிறார்.

பிரெஞ்சு ஏகாதிபத்தியம் பெருகிய முறையில் ஆபிரிக்கா, மத்திய கிழக்கில் தன் நலன்களைக் பாதுகாக்க இராணுவத்தை பயன்படுத்துகிறது. லிபியாவில் போரைத் தொடக்க முக்கிய பங்கை கொண்டபின், இரண்டு முன்னாள் காலனிகளான ஐவரி கோஸ்ட், சிரியாவில் போர்களைத் தொடக்கியபின், இப்பொழுது அது நான்காம் நாடான மாலி மீது படையெடுத்துள்ளது.

ஜேர்மன் முதலாளித்துவத்தைப் போல், இரண்டாம் உலகப் போரில் அதன் மூலோபாய நட்பு நாடான ஜப்பானும் நெருக்கடியை எதிர்கொள்ளும் வகையில் உள்நாட்டில் தொழிலாள வர்க்கத்தின் மீதான தாக்குதல்கள் மற்றும் வெளியில் பெருகும் இராணுவ வாதத்தைக் கடைப்படிக்கிறது. 1930 களில் நடந்தது போலவே, இந்த இராணுவவாதம் குறிப்பாக சீனாவிற்கு எதிராக இயக்கப்படுகிறது. தற்பொழுது கிழக்கு சீனக்கடலில் சென்காகு/டயோயு தீவுகள் பற்றிய மோதலில் கொழுந்துவிட்டெரிகிறது.

இச்சூழ்நிலையில் ஜேர்மன் முதலாளித்துவம் மீண்டும் ஆயுதங்களை வலுப்படுத்திக் கொள்ளுகிறது. Handelsblatt ஜேர்மன் இராணுவம் உலகெங்கிலும் பயன்படுத்தப்படும் வகையில் மறுகட்டமைக்கப்படும்என்று அப்பட்டமாக வலியுறுத்தியுள்ளது. பெரும்பாலான ஜேர்மன் மக்கள் இந்த இராணுவ வாதத்தைக் கடுமையாக எதிர்க்கின்றனர். ஆனால் Handelsblatt இவ்வளவு பகிரங்கமாக ஜேர்மனிய முதலாளித்துவத்தின் இலக்குகளை உருவாக்கி கூறியிருப்பது, எல்லாவற்றிற்கும் மேலாக பசுமைக்கட்சி, சமூக ஜனநாயகக் கட்சி மற்றும் இடது கட்சி மீதான பேரழிவான குற்றச்சாட்டு ஆகும். இவை பலமுறையும் பொய்யாக, இப்போர்கள் ஜனநாயக, மனிதாபிமான கருத்துக்களைத் அடித்தளமாக கொண்டவை எனக் கூறி ஜேர்மன் வெளியுறவுக் கொள்கை மற்றும் இராணுவ நடவடிக்கைகளை கொசோவோ மற்றும் ஆப்கானிஸ்தானில் நியாயப்படுத்தியுள்ளன.

கடந்த 15 ஆண்டுகளில், இத்தகைய சக்திகள் தீவிரமாக வலதிற்கு நகர்ந்துள்ளன; தம்மை பெருகிய முறையிலும் வெளிப்படையாகவும் ஜேர்மனிய பெருவணிக, ஜேர்மன் இராணுவவாத நலன்களுடன் இணைத்துள்ளன. Handelsblatt கட்டுரை பற்றி இவை மௌனம் சாதிப்பது நிறையவே எடுத்துரைக்கிறது. இவை போர்த்தயாரிப்புக்களை ஒப்புக் கொள்கின்றன.

கடந்த நூற்றாண்டின் இரண்டு உலகப் போர்கள் காலத்தைக் காட்டிலும் ஆளும் வர்க்கங்களின் அழிக்கும் சக்தி பெருகியுள்ள சூழ்நிலையில் முதலாளித்துவம் மீண்டும் மனிதகுலத்தை பேரழிவை நோக்கி இழுத்துச்செல்கிறது. ஒரு புதிய உலகப் போர், முழு மனித குலத்தின் எதிர்காலம் குறித்தும் கேள்விக்குறியை முன்வைக்கும் என்றாலும், இந்த இலக்கிற்குத்தான் ஆளும் வர்க்கங்களும் அவற்றின் திவாலான சமூகப் பொருளாதாரமுறைகளும் உலகை துல்லியமாக இட்டுச் செல்கின்றன. ஏகாதிபத்திய காட்டுமிராண்டித்தனம் மற்றும் தேசிய முரண்பாட்டுக் கொள்கைகளுக்கு, ஜேர்மனி, ஐரோப்பா மற்றும் உலகெங்கிலும் இருக்கும் தொழிலாள வர்க்கம், சர்வதேச ஐக்கியம் மற்றும் சோசலிசப் புரட்சி என்ற வேலைத்திட்டத்தை முன்வைக்க வேண்டும்.