WSWS :Tamil : செய்திகள்
ஆய்வுகள் :
முன்னோக்கு
Brennan
refuses to rule out drone assassinations within the US
அமெரிக்காவிற்குள்
ஆளில்லா விமானம் மூலம் படுகொலைகள் நடத்தப்பட மாட்டாது என்பதை பிரென்னன்
நிராகரிக்கிறார்
Tom Carter
and Barry Grey
19 February 2013
Back to screen version
செனட் உளவுத்துறைக்
குழு சமர்ப்பித்திருந்த வினாக்களுக்கு எழுத்து மூலம் பதிலில் ஒபாமா நிர்வாகத்தால்
CIA
மத்திய
உளவுத்துறை அமைப்பிற்கு இயக்குனராக நியமிக்கப்பட்டுள்ள ஜோன் பிரென்னன், அமெரிக்க
மண்ணில் அமெரிக்க குடிமக்கள் மீது டிரோன்
(ஆளில்லா
விமானம்)
மூலம்
படுகொலைகள் நடத்தப்படமாட்டாது என்பதை நிராகரித்துவிட்டார். இக்குழு வெள்ளியன்று
பிரென்னன் பதில்களில் இரகசியமற்றவை என்பவற்றை வெளியிட்டது.
தற்பொழுது ஜனாதிபதி
ஒபாமாவின் தலைமை பயங்கரவாத எதிர்ப்பு ஆலோசகராக இருக்கும் பிரென்னன், டிரோன்
ஏவுகணைகள் மூலம் நடத்தப்படும் படுகொலைகள் திட்டத்தை இயற்றியவரும், இயக்குனரும்
ஆவார். இத்திட்டம் ஒபாமாவின் நேரடிப் பங்கைக் கொண்டு வெள்ளை மாளிகையில் இருந்து
நடத்தப்படுகிறது. “நிர்வாகம் அமெரிக்காவிற்குள் டிரோன் தாக்குதல்களை நடத்துமா?”
என்று நேரடியாகக் கேட்கப்பட்டதற்கு, பிரென்னன் பின்வருமாறு விடையிறுத்தார்: “இந்த
நிர்வாகம் அமெரிக்காவிற்குள் டிரோன் தாக்குதல்களை நடத்தியதில்லை, அவ்வாறு செய்யும்
நோக்கத்தையும் கொண்டிருக்கவில்லை.”
இதுதான் சரியான
விடைகூறப்படாத பதில் என தெரிந்த ஒன்றாகும். பதில் “இல்லை” என்று இருந்திருந்தால்,
பிரென்னன் சாதாரணமாக “இல்லை” என்று விடையளித்திருக்கவேண்டும். மாறாக நேரடியாக “ஆம்”
என்று கூறுவதை தவிர்ப்பதற்காக, அவர் கேட்கப்பட்டதைத் தவிர வேறு வினாவிற்குத்தான்
பதிலளித்தார்.
எழுத்து மூலமான
வினாக்களுக்கு பிரென்னனுடைய விடைகள், பெப்ருவரி 7ம் திகதி செனட் குழுவின்
உறுதிசெய்யும் விசாரணைக் கூட்டத்தில், அமெரிக்காவிற்குள் டிரோன் படுகொலைகள்
இருக்காது என அவர் கூற மறுத்திருப்பது தற்செயல் நிகழ்வு அல்ல என்பதைத்
தெளிவாக்குகிறது. மாறாக இது ஒபாமாவின் வெள்ளை மாளிகை மற்றும் இராணுவம்/உளவுத்துறை
அமைப்புக்கள் வேண்டுமென்றே ஏற்ற கொள்கையின் வெளிப்பாடு ஆகும்.
குழுக் கூட்டத்தில்
ஒபாமா நிர்வாகம் அமெரிக்க மண்ணிற்குள் டிரோன் படுகொலைகளை நடத்துமா என்று
கேட்கப்பட்டதற்கு, பிரென்னன் “இப்பிரச்சினைகளில் வெளிப்படையான தன்மையை அதிக
அளவிற்குக் காட்ட அவர் உறுதி கொண்டுள்ளதாகவும், அதே நேரத்தில் இரகசியம் மற்றும்
தேசியப் பாதுகாப்பு ஆகியவற்றின் இரகசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்பதிலும்
உறுதியாக உள்ளார்” என்று விடையிறுத்தார். இவ்வகையில் அவர் வினாவை முற்றிலும்
தவிர்த்தார்; ஜனநாயக அல்லது குடியரசுக் கட்சி உறுப்பினர் எவரும் இது குறித்து
மேலும் தொடரவில்லை.
அமெரிக்கக் குடிமக்களை
ஜனாதிபதியே அமெரிக்காவிற்குள் படுகொலைகள் செய்யும் உண்மையான அச்சுறுத்தல்கள்
பொலிஸ்-இராணுவ சர்வாதிகார தோற்றத்தைத்தான் அப்பட்டமாக எழுப்புகின்றன. இரண்டு
வாரங்களுக்கு முன் பகிரங்கப்படுத்தப்பட்ட, சட்டபூர்வ இரட்டைப் பேச்சுக்கள் என்று
நிர்வாகத்தின் அமெரிக்கர்கள் மீதான டிரோன் மூலக் கொலைகள் பற்றிய வெள்ளைத்தாளுக்குப்
பின்புலத்தில், அமெரிக்க அரசாங்கம் உலகில் எங்கும் எவரையும் படுகொலை செய்யும்
வரம்பற்ற அதிகாரங்களைக் கொண்டுள்ளதாகக் கூறியுள்ளது.
இரகசியமாகவும்,
நீதித்துறை அல்லது காங்கிரஸ் கண்காணிப்பு இல்லாமல் பயங்கரவாதிகள் எனக்கூறப்படுவோரை
கொலை செய்யும் அதிகாரத்தை உறுதிப்படுத்துகையிலும் மற்றும் குறைந்தப்பட்சம் மூன்று
அமெரிக்கர்கள் உட்பட ஆயிரக்கணக்கான மக்களை கொல்ல இப்படி எடுத்துக் கொண்ட
அதிகாரத்தின் கீழ் ஒபாமா நிர்வாகம் நடைமுறையில் அமெரிக்க அரசியலமைப்பின் உரிமைகள்
மசோதா மற்றும் ஐந்தாம் திருத்தம் உறுதியளிக்கும் சரியான சட்ட வழிவகை இல்லாமல்
ஒருவரின் உயிரும் பறிக்கப்படாது எனக்கூறியுள்ளதையும் அகற்றிவிட்டது.
அரசியல் அல்லது செய்தி
ஊடக நடைமுறையில் எந்தப் பிரிவில் இருந்தும் குறிப்பிடத்தக்க எதிர்ப்பு இதற்கு
இல்லாதது அமெரிக்க ஜனநாயகத்தின் சிதைவு மற்றும் அமெரிக்க ஆளும் வர்க்கத்திற்குள்
ஜனநாயக உரிமைகளின் பாதுகாப்பிற்கு எவரும் இல்லாத நிலை ஆகியவற்றைத்தான்
அடிக்கோடிட்டுக்காட்டுகிறது. எவ்வளவு விரைவில் அமெரிக்க முதலாளித்துவம் அதன் சொந்த
முந்தைய சட்ட நெறிகளிடம் இருந்து முறித்துக் கொள்கிறது என்பது பிரென்னன் பதவி
உறுதிக்கு தீவிர எதிர்ப்பு இல்லாததில் நிரூபணம் ஆகிறது. நான்கு ஆண்டுகளுக்கு
முன்பு ஒபாமா அப்பொழுது உயர்மட்ட
CIA
அதிகாரியாக இருந்த பிரென்னனுடைய பெயரை நிறுவனத்தின் தலைமைப் பதவிக்கு முன்வைக்கும்
திட்டங்களைத் தள்ளி வைக்க நேர்ந்தது. அதற்கு காரணம் புஷ் நிர்வாகத்தின்
சித்திரவதையை பயன்படுத்துவதில் அவர் கொண்டிருந்த பங்கு மற்றும் அதைப் பொதுவில்
ஆதரித்தது பற்றிய எதிர்ப்புக்கள் நிறைய இருந்ததுதான்.
இப்பொழுது பிரென்னன்
நியமனத்தை செனட் உறுதிப்படுத்த உள்ளது. முக்கிய செய்தித்தாட்கள் உளவுத்துறைக்
குழுவிற்கு அவருடைய எழுத்துமூல விடைகளை புறக்கணித்தன அல்லது உட்பக்கங்களில்
பெயரளவிற்கு வெளியிட்டு அவற்றைப் புதைத்தன. அமெரிக்க தாராளவாதத்தின் முக்கிய
கருவியான நியூயோர்க் டைம்ஸ், பிரென்னன் பதவிச்சத்தியப்பிரமாணம் பற்றித்
தலையங்கம் எழுதியது, அமெரிக்காவிற்குள் டிரோன் தாக்குதல்கள் இராது எனக் கூற
மறுப்பதைப் பற்றிக்கூடத் தகவல் கொடுக்கவில்லை.
பிரென்னனுடைய எழுத்து
மூல விடைகளை செனட் வெளியிட்ட அன்றே, லாஸ் ஏஞ்சல்ஸ் டைம்ஸ் உள்நாட்டு
விமானப்போக்குவரத்து நிர்வாகம்
Federal Aviation Administration (FAA)
1,428 உள்நாட்டு டிரோன்
அனுமதிகளை 2007ல் இருந்து கொடுத்துள்ளதாக தெரிவித்துள்ளது. இந்த எண்ணிக்கை முந்தைய
மதிப்பீடுகளைவிட மிக அதிகம் ஆகும். செய்தித்தாள் எழுதியது: “FAA
இந்த
வாரம் நாட்டில் 6 இடங்களில் டிரோன் சோதனைகளை நடத்தும் திட்டங்களை நாடியுள்ளது; இது
பரந்த அளவில் அரசாங்க, வணிகப் பயன்பாட்டிற்கு ஒப்புதல் கொடுக்குமுன் முக்கிய
நடவடிக்கை ஆகும்.”
உள்நாட்டு பாதுகாப்பு
நிதிகளின் கீழ் பல உள்ளூர் பொலிஸ் துறைகள் ஏற்கனவே டிரோன்களைப் பெற்ற தங்கள் சொந்த
டிரோன் ஒற்றுத் திட்டங்களை செயல்படுத்துகின்றன. அமெரிக்காவிற்குள் சமீபத்தில்
மூர்க்கமான லாஸ் ஏஞ்சல்ஸ் பொலிஸ் அதிகாரி கிறிஸ்தோபர் டோர்னர் போன்ற நபர்களை தேட
டிரோன்களைப் பயன்படுத்துவது இப்பொழுது உண்மையாகிவிட்டது. தலைக்குமேல் பறக்கும்
நூற்றுக்கணக்கான டிரோன்கள் “அதிக சக்தி வாய்ந்த ஒளிப்பதிவு காமெராக்கள்,
அதீதஊதாக்கதிர் கருவிகள், வாகன உரிமை எண்களை அவதானிப்பவை, கேட்கும் கருவிகள்
இன்னும் மற்ற உயர் தொழில்நுட்ப முறைகளை எடுத்துச் செல்லுகின்றன” என்று லாஸ்
ஏஞ்சல்ஸ் டைம்ஸ் தெரிவிக்கிறது.
9/11ல் இருந்து
அமெரிக்காவில் ஒரு பொலிஸ் அரசாங்கத்திற்கான அஸ்திவாரங்கள் முறையாகப்
போடப்படுகின்றன. “பயங்கரவாதத்தின் மீதான போர் என்ற மறைப்பில், நீதித்துறைக்குப்
புறம்பான “போர்க்கால” அதிகாரிங்கள் ஜனாதிபதிகளால் பெரிய அளவில்
விரிவாக்கப்பட்டுவிட்டன. ஒபாமா காலத்தில் இந்த வழிவகை தீவிரப்படுத்தப்பட்டுள்ளது.
சட்டவிரோத டிரோன் படுகொலைத்திட்டம் விரிவாக்கப்பட்டுவிட்டது. அத்துடன் கடத்தல்களும்
உள்நாட்டு ஒற்றுப்பார்த்தலும் அதிகரிக்கப்பட்டு விட்டன. குற்றச்சாட்டுக்களோ, வழக்கு
விசாரணையோ இல்லாமல் அமெரிக்க குடிமக்களை இராணுவக் காவலில் வைக்க அனுமதி கொடுக்கும்
சட்டங்கள் இயற்றப்பட்டுவிட்டன.
ஆரம்பத்தில் இருந்தே
உலக சோசலிச வலைத்தளம் எச்சரித்து வந்துள்ளதைப் போல், செப்டம்பர் 11, 2001ல்
இருந்து இயற்றப்பட்ட பொலிஸ்-அரச
நடவடிக்கைகள் பயங்கரவாதத்தில் இருந்து அமெரிக்க குடிமக்களை பாதுகாப்பதுடன்
தொடர்பற்றவை. மாறாக அவை சமுக சமத்துவமின்மைக்கு எதிராகவும் இன்னும் மோசமாகிவரும்,
வாழ்க்கை, மற்றும் பணி நிலைமைகள் என்பவற்றிகான தொழிலாளர் வர்க்கத்தின் எதிர்ப்பின்
வளர்ச்சிக்கு எதிராக பயன்படுத்தும் வடிவமைப்பைக் கொண்டவை.
பெருமந்த நிலைக்குப்
பின் அமெரிக்க மற்றும் உலக முதலாளித்துவத்தின் மிகப் பெரிய நெருக்கடியைத்
தோற்றுவித்த 2008 நிதியச் சரிவில் இருந்து, அனைத்து முக்கிய ஏகாதிபத்திய நாடுகளின்
ஆளும் வர்க்கங்களும் மிருகத்தனமான சிக்கன நடவடிக்கைகளை எடுத்து அவர்களின்
அமைப்புமுறையின் தோல்வியின் சுமையை தொழிலாள வர்க்கத்தின் முதுகில் சுமத்தி
வருகின்றன. மக்களுடைய இடர்களை களையும் கொள்கைகள் எதையும் வளங்க திறனற்ற நிலையில்,
மக்கள் எதிர்ப்பை முகங்கொடுக்கையில், அவர்கள் அனைத்து அரச வன்முறை மற்றும் தொழிலாள
வர்க்கப் போராட்டத்தை குற்றத்தன்மை ஆக்குதல் ஆகியவற்றில் ஈடுபடுகின்றன.
உலக நெருக்கடியின்
மையத்தில் இருக்கும் அமெரிக்காவில் ஆளும் வர்க்க்ம் இதேபோல்தான் அமெரிக்க
முதலாளித்துவத்தின் பொருளாதாரச் சரிவை ஈடுகட்ட வெளிநாடுகளில் இராணுவவாதம் மற்றும்
உள்நாட்டில் சிக்கனம் மற்றும் பெருகிய முறையில் அடக்குமுறை ஆகியவற்றைக்
கடைப்பிடிக்கிறது
அமெரிக்க
இராணு/உளவுத்துறை அமைப்பு இல்லாதொழிக்கப்படவேண்டிய அரசியல் எதிரிகள் பட்டியலை
தயாரிக்கிறது என்பதை கருத்திற் கொள்ளமால் இருப்பது அரசியல்ரீதியாக அப்பாவித்தனமான
தன்மை ஆகும். அரசியல் எதிரிகள் “மறைந்து போகலாம்” அல்லது சமூக
கொந்தளிப்புக்களின்போது சிறையில் தள்ளப்படலாம். இப்படித்தான் இலத்தீன்
அமெரிக்காவிலும் இந்தோனிசியா மற்றும் பிற இடங்களிலும் வாஷிங்டனின் ஆதரவு
சர்வாதிகாரகள் கடந்த காலத்தில் செய்துள்ளனர்.
அமெரிக்க தொழிலாள
வர்க்கம் வரவிருக்கும் வெகுஜனப் போராட்டங்களுக்கு அதன் சொந்தத் தயாரிப்புக்களை
மேற்கொள்ள வேண்டும். இத் தயாரிப்புகளின் மையத்தில், ஜனநாயக உரிமைகளை பாதுகாப்பதற்கு
அடிப்படையாக ஒரு சோசலிச புரட்சிகர முன்னோக்கை ஏற்றுக்கொள்வதுதான் உள்ளது. அதன்
நோக்கம் பெருநிறுவன, நிதிய ஆளும் உயரடுக்கின் பிடியை உடைத்து அதன் ஒடுக்குமுறை அரசை
ஒரு தொழிலாளர் அரசால் பதிலீடு செய்வதுதான். |