WSWS :Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஐரோப்பா
:
கிரீஸ்
Greek strikes
continue as unemployment, poverty hit record levels
வேலையின்மை, வறுமை உயர்ந்த மட்டத்தை தொட்டிருக்கையில் கிரேக்க வேலைநிறுத்தங்கள்
தொடர்கின்றன
By Robert Stevens
16 February 2013
Back to screen version
ஆழும் பொருளாதாரச் சரிவு மற்றும் பெருகிய அரசாங்க அடக்குமுறையை
எதிர்கொண்ட நிலையில், கிரேக்கம் முழுவதும் உள்ள தொழிலாளர்கள் வேலைநிறுத்தங்களையும்
எதிர்ப்புக்களையும் பெப்ருவரி 20 பொது வேலைநிறுத்தத்திற்கு முன் தொடர்கின்றனர்.
இப்போராட்டங்கள் ஐரோப்பிய ஒன்றியம் ஆணையிட்டுள்ள சிக்கன நடவடிக்கைகள் பெரும்பாலான
தொழிலாள வர்க்கத்தினருக்கு பொறுத்துக்கொள்ள முடியாத சூழ்நிலையை
தோற்றுவித்திருக்கையில், நடத்தப்படுகின்றன.
கிரேக்க அரசாங்கத்தின் புள்ளிவிவர நிறுவனம் வியாழன் அன்று வெளியிட்ட
தகவல்கள்,
நாட்டின் பொருளாதாரம் மந்த
நிலையில் இன்னும் தீவிரமாகச் சரிந்துள்ள நிலையில்,
வேலையின்மை ஒரு புதிய உயர்நிலையை அடைந்துவிட்டது என்பதைக் காட்டுகின்றன.
உத்தியோகபூர்வ புள்ளிவிவரங்களின்படி, வேலையின்மை விகிதம் அக்டோபரில்
இருந்த 26.6 என்பதில் இருந்தும்,
கடந்த
ஆண்டு நவம்பர் மாதம் இருந்த 20.8% என்பதில் இருந்தும் 27% க்கு உயர்ந்து விட்டதைக்
காட்டுகின்றது. இப்புள்ளிவிவரங்கள் இன்னும் 30,000 தொழிலாளர்கள் நவம்பர் மாதம்
வேலையிழந்தனர் என்பதைக் குறிக்கிறது.
வேலையில் இருக்கும் தொழிலாளர்களின் எண்ணிக்கை தொடர்ந்து குறைகிறது;
0.8 சதவிகிதம் அதாவது 3.6 மில்லியன். அதே நேரத்தில் வேலையின்மை எண்ணிக்கை மீண்டும்
1.5% உயர்ந்து 1.4 மில்லியனை எட்டுகிறது. “செயலற்று இருப்பர்கள்” என
விளக்கப்படுபவர்கள்—பலரும் வேலை கிடைக்கும் என்ற நம்பிக்கையை இழந்தவர்களை
அடக்கியது—ஒப்புமையில் மாறாமல் 3.3 மில்லியன் என உள்ளது.
இதில் பெரும் தாக்கத்திற்கு உட்பட்டவர்கள் இளந்தொழிலாளர்கள் ஆவர்;
இது வயதுக்கு வந்த ஆனால் 24 வயதிற்கு குறைந்தவர்களில் அதிர்ச்சி தரும் நிலையில்
61.7% என வேலையற்றோர் எண்ணிக்கையில் உள்ளது.
இதற்கிடையில் கிரேக்கத்தின் தனியார் துறை தொழிற்சங்கக் கூட்டமைப்பு
GSEE செவ்வாய் அன்று அறிக்கை ஒன்றை வெளியிட்டு மொத்த மக்கட்தொகையான 11 மில்லியனில்
3.9 மில்லியன் கிரேக்கர்கள் உத்தியோகப்பூர்வ வறுமைக் கோட்டிற்குக் கீழே இந்த ஆண்டு
இறுதியில் வாழ்வர் என்று கணக்கிட்டுள்ளது. கிரேக்கத்தின் வறுமைக் கோடு 7,200
யூரோக்கள்
(US$9,700)
ஒரு தனிநபருக்கு
ஓராண்டிற்கு என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
வெள்ளியன்று ஏதென்ஸில் தெருக்களுக்கு வந்தவர்களில் இயலாதவர்களும்
இருந்தனர்; அவர்களின் டஜன் கணக்கானவர்கள் சக்கர நாற்காலிகளில் இருந்தனர்; இவர்கள்
நிதி அமைச்சரகத்திற்கு வெளியே தங்கள் ஊதியங்கள், ஓய்வூதியங்கள் ஆகியவற்றை
அரசாங்கத்தின் சிக்கனத் திட்டத்தின் ஒரு பகுதியாக அரசாங்கம் வெட்டியிருப்பது
குறித்து ஆர்ப்பரித்தனர்.
இதற்கிடையில், பல நூறு ஓய்வூதியம் பெறுவோர் தொழிலாளர்துறை
அமைச்சரகத்திற்கு வெளியே ஏற்கனவே பற்றாது என்று உள்ள ஓய்வூதியங்களை இப்பொழுது புதிய
பிற்போக்குத்தன வரி அதிகரிப்புக்களால் இன்னமும் குறைத்துவிட்டதை எதிர்த்து
ஆர்ப்பரித்தனர்.
“நாங்கள் சில பிரச்சினைகளைப்பற்றி மட்டும் பேசவில்லை. அவர்கள்
எங்கள் வாழ்க்கையை அழிக்கின்றனர்” என்று கிரேக்கத்தின் முக்கிய ஓய்வூதியம் பெறுவோர்
சங்கத்தின் தலைவர் அசோசியேட்டட் பிரஸ்ஸிடம் கூறினார். “எங்களால் மின்சாரக் கட்டணம்,
அவசரக்கால வரிகள் ஆகியவற்றைச் செலுத்த முடியவில்லை. எங்களிடம் மருத்துக்குத்
தேவையான பணமும் இல்லை, அது எங்கள் உயிர்களை ஆபத்தில் தள்ளும்.”
கடந்த வாரம் கிரேக்க முனிசிபல் தொழிலாளர்கள் செய்தி ஊடகத்
தொழிலாளர்கள், விவசாயிகள், மாணவர்கள் இன்னும் பிற குழுவினர்
New
Democracy/PASOK/Democratic Left
கூட்டணி அரசாங்கத்தின் மிருகத்தனச்
சிக்கன நடவடிக்கைகளுக்கு எதிராக ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
திங்களன்று செய்தி ஊடகத் தொழிலாளர்கள் எட்டாம் தொடர்ந்த நாளாக ஊதிய
வெட்டுக்கள், பணிநீக்கங்களை எதிர்த்து, கூட்டு ஒப்பந்தம் செய்யும் உரிமையைக் கோரி
வேலைநிறுத்த நடவடிக்கையை மேற்கொண்டனர். கிரேக்கத்தின் செய்தித்தாட்கள், வானொலி
நிலையங்கள், தொலைக்காட்சி நிறுவனங்கள் ஆகியவற்றின் செய்தியாளர்களும் தொழில்நுட்பப்
பணியாளர்களும் இந்நடவடிக்கையில் தொடர்பு கொண்டிருந்தனர். அன்று செய்தி ஊடக
ஊழியர்கள் “பொறுத்தது போதும்” என்பதும் அடங்கிய கோஷங்களை முழக்கமிட்டு, ஏதென்ஸின்
நாளேட்டு செய்தியாளர்கள் சங்கத் தலைமையக்த்தில் இருந்து பாராளுமன்றத்திற்கு
அணிவகுத்துச் சென்றனர். பிற்பகலில் வேலைநிறுத்தத்தில் தனியாருக்குச் சொந்தமான
செய்தி ஊடகக் குழுக்களில் இருந்து சில ஊழியர்கள் சேர்ந்து கொண்டனர்.
தொழிலாளர்கள் பணிநீக்கங்கள் மற்றும் ஊதிய வெட்டுக்களுக்கு
முற்றுப்புள்ளி வைக்கப்பட வேண்டும், வெளியீட்டாளர்களுடன் தொழிலாளர் கூட்டு
ஒப்பந்தத்தில் கையெழுத்திடப்பட வேண்டும் என்று கோருகின்றனர். அவர்கள்
கோரிக்கைகளில், முனிசிபல் வானொலி நிலையம் 9.84ல் எட்டு செய்தியாளர்கள் பணிநீக்கம்
செய்யப்பட்டது திரும்பப் பெற வேண்டும்,
ERT
ஒலிபரப்பு ஊழியர்கள் 74 பேரின் நிரந்தர
கால ஒப்பந்தங்கள்,
அவை இப்பொழுது அகற்றப்பட்டுள்ள
நிலையில், புதுப்பிக்கப்பட வேண்டும் என்பவை அடங்கியிருந்தன. செய்தி ஊடகக்
குழுக்களும்,
சிக்கன நடவடிக்கைகள்
மற்றும் ஊதியக் குறைப்புக்கள் என பரந்த சிக்கன நடவடிக்கைகளின் ஆரம்பத்தில் இருந்து
சுமத்தியதன் விளைவாக கிட்டத்தட்ட 3,000 செய்தி ஊடக ஊழியர்கள் கடந்த மூன்று
ஆண்டுகளில் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளனர். தொழிலாளர்களும் தங்கள் ஊதியங்களில் 10
முதல் 20 சதவிகிதம் வரை குறைப்பைக் கண்டுள்ளனர்.
இந்த நடவடிக்கை
Panhellenic Federation of
Journalists Unions
ஆல் அழைப்பு விடப்பட்டிருந்தது; இது புதன்கிழமை காலை 6 மணி வரை
தொடரும்.
வேலைநிறுத்தம் செய்துவரும் செய்தியாளர்கள் செய்தி ஊடகத்துறையில்
“மத்தியகால நிலை” என்பது குறைந்த ஊதியம் பெறுவோர், அவர்கள் குடும்பத்தினரை
நெரிப்பது மட்டும் இல்லாமல், செய்தி ஊடகம் மற்றும் ஜனநாயகச் சுதந்தரத்திற்கே ஓர்
அச்சறுத்தல் என்றும் கூறியதாக ஒரு செய்தி ஊடகம் மேற்கோளிட்டுள்ளது.
புதன் கிழமை காலை மத்திய ஏதென்ஸில்
Klafthmonos
சதுக்கத்தில் நகரசபை தொழிலாளர்கள்,
அணிவகுப்பு ஒன்றை நடத்தினர்: இது 48 மணி நேர வேலைநிறுத்தத்தின் முதல் நாள் ஆகும்.
POE-OTA தொழிற்சங்கங்களின்
உறுப்பினர்கள், மற்றும் நகரசபை ஊழியர்கள் ஆகியோர் இதில் கலந்துகொண்டனர். அவர்கள்
வேலை உத்தரவாதங்களுக்கும், பாக்கி வைக்கப்பட்டுள்ள ஊதியங்கள் கொடுக்கப்பட வேண்டும்
என்பதற்கும் வேலைநிறுத்தம் செய்துள்ளனர்.
தலைநகரில் வாடிக்கையான எதிர்ப்புக்களுடன், கிரேக்கத்தின் இரண்டாம்
பெரிய நகரான தெசலோனிகியிலும் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் எதிர்ப்புக்கள் நடைபெற்று
வருகிறது. திங்களன்று ஆயிரக்கணக்கான மாணவர்கள் கல்வி வரவு-செலவுத்
திட்டத்தில் வெட்டுக்களுக்கு எதிராக எதிர்ப்புக்கள் நடத்தினர்; அரசாங்கத்
திட்டத்தில் பல கல்வி வசதிகளை மூடும் எண்ணமும் இருந்தது. புதன் மற்றும்
வியாழக்கிழமைகளில் நகரம் முழுவதும் தொழிலாளர்கள்,
நகரசபை தொழிலாளர்களின்
வேலைநிறுத்தத்தின் ஒரு பகுதியாக வேலைக்குச் செல்லவில்லை. இவர்களுள் நகரத்தின்
வரலாற்றுப்புகழ் படைத்த Arch
of Galerius என நகர மையத்தில்
இருக்கும் இடமும் அடங்கும். இந்தவாரம் வேலைநிறுத்தம் செய்தவர்களுள்
IKA
சுகாதாரப் பாதுகாப்பு நிதியத்தால்
வேலைக்கு அமர்த்தப்பட்ட தொழிலாளர்களும் அடங்குவர்; அந்த அமைப்பு வரவு-செலவுத்
திட்ட வெட்டுக்களை ஒட்டி 500 தொழிலாளர்களின் ஒப்பந்தங்களை புதுப்பிக்க மறுக்கிறது.
சமீபத்திய வேலைநிறுத்தங்களும் எதிர்ப்புக்களும்
GSEE
தனியார் துறை மற்றும் Adedy
பொதுத்துறை தொழிற்சங்கக்
கூட்டமைப்புக்கள் விடுத்துள்ள பெப்ருவரி 20 அன்று நடக்க இருக்கும் 24 மணிநேரப் பொது
வேலைநிறுத்தத்திற்கு முன்னதாகவே நடைபெறுகின்றன. 2010ல் இருந்து கூட்டமைப்புக்கள்
அழைப்புவிடும் பல குறைந்த வரம்புடைய, எதிர்ப்பு வேலைநிறுத்தங்களில் இது சமீபத்தியது
ஆகும். இவற்றின் முக்கிய நோக்கம்,
சர்வதேச
நிதிய மூலதனத்தின் சார்பில் கிரேக்க அரசாங்கம் சுமத்தும் வெறுக்கத் தக்க
நடவடிக்கைகளை எதிர்க்கும் இந்த பரந்த எதிர்ப்பை சிதறடிப்பதாகும்.
இத்தகைய பெயரளவு நடவடிக்கைகள், தொழிற்சங்க அதிகாரத்துவத்தின்
வசதியான தலைவர்கள் ஏதேனும் ஒரு சில சிக்கன நடவடிக்கைகள் குறித்துக் குறைகூறலை
வெளியிடுவதற்கூடாக,
தொழிலாள
வர்க்கத்தின் மீது சுமத்தப்படும் மிருகத்தனத் தாக்குதல்களின் முழுவடிவத்தையும்
காப்பாற்றும் நடவடிக்கை என கருதப்படுகிறது.
அரசாங்கம் அதன் பாசிச சகாப்த அடக்குமுறையை முடுக்கிவிட்டு,
தொழிற்சங்க அதிகாரத்துவம் மற்றும் அதன் பல போலி இடது குழுக்கள் நிர்ணயிக்கும்
வரம்பை மீறும் அச்சுறுத்தலைக் கொண்ட எந்த வேலைநிறுத்தத்தையும் நசுக்கும். கிரேக்க
ஆளும் உயரடுக்கு, அடிப்படை ஜனநாயக உரிமைகளை மீறி, எத்தகைய திறமையான வேலைநிறுத்த
நடவடிக்கை மீதும் நடைமுறையில் தடைகளை சுமத்துகிறது. கடந்த வாரம் அரசாங்கத்தால்
“உள்நாட்டு அணிதிரள்வு உத்தரவு” மூலம் படகுத்துறைத் தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தை
முறியடிக்க இராணுவச் சட்டம் சுமத்தப்பட்டது. இதே நடவடிக்கைகள் இரண்டு வாரங்களுக்கு
முன் ஏதென்ஸின் சுரங்க இரயில் தொழிலாளர்களின் வேலைநிறுத்தத்தை முறியடிக்க
பயன்படுத்தப்பட்டன.
கலகப் பிரிவுப் பொலிசார்,
சிக்கன நடவடிக்கைகளை எதிர்த்து
ஆர்ப்பரிப்பவர்களுக்கு எதிராக மிருகத்தனத் தாக்குதல்களை நடத்துவது என்பது கடந்த
ஆண்டுகளில் கிரேக்கத்தில் சாதாரணமாகிவிட்டது. இந்த வாரம், விவசாயத் துறையில் வரிகளை
அதிகரித்தல் என்னும் முடிவு உட்பட பல அரசாங்கக் கொள்கைகளுக்கு எதிராக விவசாயிகள்
தெரிவித்த எதிர்ப்பு, இத்தகைய அரசாங்கம் ஏற்பாடு செய்த வன்முறையை எதிர்கொள்வதில்
சமீபத்தியது ஆகும்.
Fthiotida, Viotia
நிர்வாகப்பிரிவுகளில் இருந்துவந்த விவசாயிகளை நெடுஞ்சாலையில் கலகப்
பிரிவுப் பொலிஸ் படை எதிர்கொண்டு அவர்களை கலைக்க கண்ணீர்ப்புகை குண்டை வீசியது.
இத்தாக்குதல்கள் நான்கு விவசாயிகளை காயப்படுத்தின, 12 கைதுகள் செய்யப்பட்டன.
விவசாயிகளுக்கும் பொலிசாருக்கும் இடையே கூடுதல் மோதல்கள் வியாழன்
அன்று ஏதென்ஸ்-பட்ராஸ் இல் இருந்து
Corinth Velo
சாலைக்கு செல்கையில்
நடைபெற்றன; பொலிசார் நால்வரை கைது செய்தனர். வெள்ளியன்று பொலிசார் செரஸ் விவசாயிகளை
எதிர்கொண்டபோது கூடுதல் கைதுகளும் நடத்தப்பட்டன.
விவசாயிகளுக்கு எதிராக கலகப் பிரிவுப் பொலிசார்
பயன்படுத்தப்படுமுன், வலதுசாரி நாளேடு
Kathimerini
பெப்ருவரி11 அன்று “அரசாங்கம் வேலைநிறுத்தக்காரர்கள்மீது அதிக வன்முறையை
செலுத்துகிறது; இதில் “உள்நாட்டு அணிதிரள்வு உத்தரவு” ஏதென்ஸில் மெட்ரோத்
தொழிலாளர்களுக்கு எதிராகவும் படகுத்துறைத் தொழிலாளர்களுக்கு எதிராகக்
கொண்டுவரப்பட்டதும் அடங்கும்; ஆனால் இது சலுகைகளைக் கோரும் விவசாயிகளுக்கு எதிராக
மிருதுவான நிலைப்பாட்டைக் கொண்டுள்ளது.” என எழுதியுள்ளது.
பெருகும் அதிருப்தியை அடக்க,
அப்பட்டமான வன்முறை என்பது,
கிரேக்க அரசாங்கம் தொழிலாளர்கள்
தங்கள் வேலை செய்யும் உரிமையைப் பயன்படுத்துவதை நிறுத்த எடுக்கப்படும்
நடவடிக்களுடன் இணைந்த நடக்கிறது—இந்த உரிமை முன்னதாக கிரேக்க அரசியலமைப்பில்
பாதுகாப்பிற்கு உட்பட்டு இருந்தது. இப்பொழுது “உள்நாட்டு அணிதிரள்வு உத்தரவு”
வேலைநிறுத்தங்களை முடிவிற்கு கொண்டுவர அடிக்கடி பயன்படுத்தப்படுகின்றன; கடந்த
ஞாயிறு To Vima நாளேடு
கன்சர்வேடிவ் புதிய ஜனநாயகக் கட்சியின் பிரதம மந்திரி அன்டோனிஸ் சமரஸ் அவருடைய
தொழிலாளர் துறை மந்திரி யியனிஸ் வ்ரௌட்சிசுடன்,
எத்தகைய தொழில்துறை
நடவடிக்கையும் எடுப்பதற்கு பெரும்பாலான தொழிற்சங்க உறுப்பினர்களின் வாக்கு தேவை
என்னும் சட்டத்தைக் கொண்டு வர முற்படுகிறார். நிர்வாகங்களுக்கு தொழிலார்களை
பணிநீக்கம் செய்யவும், ஆலைகளையும் நிறுவனங்களையும் எத்தகைய கால அளவிலான
வேலைநிறுத்தம் ஏற்பட்டாலும் மூடுவதற்கு அனுமதிக்கும் சட்டமும்
பரிசீலிக்கப்படுகிறது. இத்தகைய நடவடிக்கைகள் மூலம் அரசாங்கம், ஐரோப்பிய ஒன்றியம்
மற்றும் சர்வதேச நாணய நிதியத்தின் ஆதரவுடன்,
இன்னும்
வறியநிலை பெருகும்போது வெகுஜன எதிர்ப்பை எதிர்கொள்ள அதன் தயாரிப்புக்களை மேற்கொண்டு
வருகிறது.
ஊதியங்கள், ஓய்வூதியங்கள் மற்றும் சமுக நலதிட்டங்கள் என மில்லியன்
கணக்கான மக்களுக்குக் கொடுக்க வேண்டியவற்றின் மீது முன்னோடியில்லாத தாக்குதல்கள்
இருந்தபோதிலும், இன்னும் மோசமானவை வர இருக்கின்றன. பெப்ருவரி 14ம் திகதி, 500,000
கிரேக்க ஊழியர்களுடைய கூட்டு ஒப்பந்தங்கள் 42 துறைகளில் காலாவதியாயின. இதன் உடனடி
விளைவு முதலாளிகள் இப்பொழுது எந்த போனஸ் பணத்தையும் கொடுக்காமல் அகற்றிவிடாம்;
இதையொட்டி ஊதியங்கள் குறைகின்றன.
Proto Thema
நாளேடு அத்தகைய நடவடிக்கைகள்
ஊதியங்களில் 15 முதல் 30 சதவிகிதங்களை குறைத்துவிடும்—புதிய துறை ஒப்பந்தங்கள்
கையெழுத்திடப்படாவிட்டால் என்று கூறுகிறது,
அநேகமாக
அப்படித்தான் நேரும் போல் உள்ளது.
நிறுவனங்களும் ஊழியர்களும் இப்பொழுது ஒரு மூன்று மாத காலத்தை புதிய
கூட்டு ஒப்பந்தங்களுக்கு உடன்படப் பெற்றுள்ளனர்; ஆனால் பல நிறுவனங்களும்
தொழிலார்களை தனித்தனி ஒப்பந்தங்களை குறைந்த ஊதியங்களுக்கு கையெழுத்திட
வலியுறுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மார்ச் 31ம் திகதி ஒரு தேசிய பொதுக்கூட்டுத் தொழிலாளர் உடன்பாடு
350,000 தொழிலாளர்களுடன் ஈடுபாடு உடையதும் காலாவதி ஆகிறது. அன்று இந்தத்
தொழிலாளர்கள் இயல்பாகவே அனைத்துத் திருமண நலன் நிதியையும் இழப்பர் (அவர்களுடைய
ஊதியத்தில் 10%). மற்றொரு கூட்டு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வரவில்லை என்றால்,
அவர்கள் ஒவ்வொரு மூன்று ஆண்டும் 58.6 யூரோக்கள் அவர்கள் ஊதியங்களை அதிகரிக்கும்
போனஸையும் இழப்பர். முந்தைய சிக்கன வெட்டுக்களின் விளைவாக வேலையின்மை 10%க்குக்
கீழ் போனால் இந்த போனஸ் தேக்க நிலையில் வைக்கப்படும். அதை திரும்ப்ப்பெறுவது என்பது,
உண்மையில் உத்தியோகபூர்வ வேலையின்மை இப்பொழுது 27%த்தில் இருக்கையில், விரைவில் 30%
ஐ எட்ட இருக்கையில் செயலற்றுப் போய்விடும். |