சமூக சமத்துவத்திற்கான அனைத்துலக மாணவர் இயக்கத்தில் இணைவீர்!

தினசரி செய்திகள், ஆய்வுகள்
ஆங்கிலத்தில்

புதிய செய்திகள்

செய்தியகம்

முன்னோக்கு

காங்கிரஸ்

கலை இலக்கியம்

வரலாறு

நூலகம்

விஞ்ஞானம்

விவாதங்கள்

தொழிலாளர்
போராட்டம்

இந்திய உபகண்டம்

நினைவகம்

ஆவணங்கள்

உலக சோசலிச வலைத்தளம் பற்றி

நான்காம் அகிலத்தின் அனைத்துலக குழு
பற்றி

Other Languages

சிங்களம்

ஜேர்மன்

பிரெஞ்சு

இத்தாலி

ரஷ்யன்

ஸ்பானிஷ்

போர்த்துகீஷ்

சேர்போ குரோசியன்

துருக்கி

இந்தோநேசியன்

 

WSWS :Tamil : செய்திகள் ஆய்வுகள் : முன்னோக்கு

Currency wars hang over G20 meeting

G20 கூட்டத்தை நாணயப் போர்கள் சூழ்ந்துள்ளது

Nick Beams
15 February 2013

use this version to print | Send feedback

ிதி மந்திரிகள் மற்றும் மத்திய வங்கியாளர்களின் G20 கூட்டமானது உலக முதலாளித்துவப் பொருளாதாரத்தின் ஆழமான முரண்பாட்டிற்கு மத்தியில் மாஸ்கோவில் எதிர்வரும் இரண்டு நாட்கள் நடக்கவுள்ளன.

ஒருபுறம் தற்காலிகமாக என்றாலும், நிதியச் சந்தைகளுக்கு ஒரு குறிப்பிட்ட உறுதித்தன்மை திரும்பவும் வந்திருப்பதுடன், பங்குச் சந்தைகள் ஏற்றத்தில் உள்ளன; ஆனால் மறுபுறம் பொருளாதார வளர்ச்சியானது தொடர்ந்து தேக்க நிலையில் உள்ளது. உலகின் பெரும் பகுதிகள் மந்தநிலை அல்லது அதற்கு வெகு அருகே உள்ளன. பைனான்சியல் டைம்ஸ் விபரிப்பதைப் போலமிகச்சிறிய பொருளாதார வளர்ச்சிக்கு வளர்ச்சியடைந்த நாடுகள் இப்பொழுது போராடுகின்றன.

இத்தகைய பெருகிய முரண்பாடுதான் ஒரு உலகநாணயப் போர்குறித்த புதுப்பிக்கப்பட்ட எச்சரிக்கைகளின் பின்புலத்தில் உந்துதல் சக்தியாக உள்ளது. அதாவது நாணயப் போர்ப் பிரச்சினைதான் தொடரும் நடவடிக்கைகளின் மீது முற்றிலும் ஆதிக்கம் செலுத்தும்.

உலக நாணயப் போரின் ஆபத்தைக் குறித்து முதலில் 2010ல் பிரேசிலின் நிதி மந்திரி Guido Mantega இனால் எழுப்பப்பட்டது. அமெரிக்க மத்திய வங்கி கூட்டமைப்பின் நாணயப் புழக்கத்தை அதிகரிக்கும் கொள்கையானது அமெரிக்க டொலரின் மதிப்பைக் குறைப்பதுடன், அதனால் மற்றய சக்திகளின் பொருளாதார நிலைமையும் குறைமதிப்பிற்கு உட்படுத்தவதோடு, இது ஒருவேளை பதில் நடவடிக்கைகளுக்கும் வழிவகுக்கும் என்று அப்போது எச்சரித்தார்.

கடந்த டிசம்பர் மாதம் ஜப்பானில் அரசாங்க மாற்றத்தைத் தொடர்ந்து இந்தப் பிரச்சினை  மீண்டும் முக்கியத்துவத்தை அடைந்துள்ளது. அத்தோடு ஏப் இன் புதிய நிர்வாகமானது ஜப்பான் மத்திய வங்கி அதனுடைய  சொந்த பதிப்பு வழியில்நாணயப் புழக்கத்தை அதிகரிக்கும்முறையைத் பின்தொடர வேண்டும், அது தேக்கமடைந்துள்ள ஜப்பானிய பொருளாதாரத்திற்கு ஏற்றம் கொடுக்கும் எனக் கோரியுள்ளது. பிரெஞ்சு ஜனாதிபதி பிரான்சுவா ஹாலண்ட் இம்மாதம் முன்னதாக யூரோவின் மதிப்பு உயர்வு பொருளாதாரத்திற்கு சேதம் விளைவிக்கிறது என விடுத்த அறிக்கையானது பிரச்சினைக்கு மேலும் எரியூட்டியது.

நாணயப் பிரச்சினைகள் குறித்த அழுத்தங்களின் தன்மையானது G20 கூட்டத்திற்கு முன் G7 நாடுகளான பிரித்தானியா, அமெரிக்கா, ஜப்பான், ஜேர்மனி, பிரான்ஸ், இத்தாலி, கனடா ஓர் அறிக்கையை வெளியிட்டு நாணய மதிப்பு சந்தைச் சக்திகளால் நிர்ணயிக்கப்பட வேண்டுமே ஒழிய மத்திய வங்கிகளால் அல்ல என்று கூறியதையடுத்து எடுத்துக் காட்டப்பட்டது. இந்த அறிக்கை ஆரம்பத்தில் ஜப்பானுக்கு ஆதரவானது எனக் கருதப்பட்டது, ஆனால் ஓர் அதிகாரி இது சமீபத்திய ஜப்பானிய நடவடிக்கைககளைப் பற்றிய குறைகூறல் என்றவுடன் சந்தைகள் கொந்தளிப்பிற்குத் தள்ளப்பட்டன.

அதனுடைய அறிக்கையில் G7 ஆனது தன்னுடைய மத்திய வங்கிகளின் நோக்கம் தத்தமது நாடுகளின் நாணயங்களை இலக்கு கொள்ளவில்லை என்று கூறியுள்ளன. நம் நிதி மற்றும் நாணயக் கொள்கைகள் உள்நாட்டு அமைப்புகளை பயன்படுத்தி உள்நாட்டு குறிக்கோளை அடையும் நோக்கிலுள்ளோம், அத்தோடு நாணய மாற்று விகிதங்களை இலக்கு கொள்ளமாட்டோம் என மறுஉறுதிப்படுத்துகிறோம்.” என மேலும் தெரிவித்தனர்.

ஆனால் உலகப் பொருளாதாரம் மற்றும் நிதிய அமைப்புமுறையும் ஒன்றுடன் ஒன்று தொடர்புபட்டதாக இருக்கையில் இந்த அறிக்கையானது, ஒரு நாட்டில் அதிகரித்த கார்பன் சூழல்மாசுபடல் -carbon pollution- என்பது பூகோள வெப்பமயமாதலுக்கு பங்களிப்புச் செய்யாது, ஏனெனில் அது ஒரு நாட்டின்உள்நாட்டு நடவடிக்கைதான் எனக்கூறுவது போல் கேலிக்கூத்தாக இருக்கின்றது.

உலக நிதிய நெருக்கடி 2008ல் வெடித்ததிலிருந்து, அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பு அதனுடைய நிதியச் சொத்துக்களை மூன்று மடங்கு அதிகமாக அதிகரித்துள்ளது. அது இப்பொழுது அதனுடைய இருப்புநிலைக் குறிப்பில் 80 பில்லியன் டாலர்கள் ஒரு மாதத்திற்கும், அதாவது கிட்டத்தட்ட 1 டிரில்லியன் டாலர்கள் ஓராண்டிற்கு என்று சேர்த்து வருகிறது. இப்படி நிதியச் சொத்துக்களை வாங்குவது டாலர்கள் விநியோகிப்பதை அதிகரிக்கிறது, நாணய மாற்று விகிதத்தை மற்றய நாணயங்களுக்கு எதிராகக் குறைக்கவும் உதவும். இதனால் அமெரிக்க ஏற்றுமதியாளர்களுக்கு அவர்களுடைய போட்டியாளர்களின் இழப்பில் இலாபங்கள் ஏற்படும்.

மேலும், அமெரிக்க நலன்கள் நேரடியாகப் பலன் பெற்றாலும் பெறாவிட்டாலும், அமெரிக்க டாலர் உலக நாணயத்தின் தலையாய பங்கைக் கொண்டிருப்பது என்பதின் பொருள் அதன் சரிவு மற்றய எல்லா நாணயங்களின் ஒப்புமை மதிப்பை அதிகரிக்கிறது என்பதுடன், அவற்றின் உள்நாட்டுச் சந்தைகளை அதிகரித்த சர்வதேசப் போட்டித்தன்மை அழுத்தங்களுக்கு திறப்பதனால் ஏற்றுமதிச் சந்தைகளுக்கு போராடும் இந்நாடுகளின் நிலைமை மோசமாகின்றது.

ஒரு குறிப்பிட்ட கட்டத்தில் இந்த அழுத்தங்கள் பதிலடி கொடுக்கத் தூண்டும். எனவேதான் ஜப்பானிய நடவடிக்கைகள் முக்கியத்துவம் வாய்ந்தவை என்று கருதப்படுகின்றன; அத்தோடு நாணயப் போர்களைப் பற்றிய புதிய எச்சரிக்கைகள் அதிகமான பதட்டங்களுக்கு வழிவகுக்கிறது.

ஏனைய மற்றும் நீண்டகால, விளைவுகளும் 2008 ஆண்டு நிதியச் சரிவானது உலக முதலாளித்துவ ஒழுங்கில் ஒரு முறிவைப் பிரதிநிதித்துவப்படுத்தியது என்னும் உண்மையைத்தான் சுட்டிக்காட்டுகின்றன.

அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பு, வங்கியின் நாணயப் புழக்கத்தை அதிகரிக்கும் திட்டமும், அதையொட்டி அமெரிக்க டாலரின் மதிப்புக் குறைவும் முன்னோடியில்லாத நடவடிக்கைகள் ஆகும். கடந்த காலத்தில் உதாரணமாக 1985 பிளாஸா ஒப்பந்தப்படி டாலர் மதிப்பு குறைவிற்கு உட்பட்டது என்றாலும் அது பிற முக்கிய முதலாளித்துவச் சக்திகளுடன் பொதுவான உடன்பாடு மற்றும் ஒத்துழைப்புடன் நடைபெற்றது.

இப்பொழுது அமெரிக்கா அதனுடைய பொருளாதாரச் செயற்பட்டியலை ஒருதலைப்பட்சமாகவும் முற்றிலும் பொறுப்பற்ற முறையிலும் பின்தொடர்கிறது. உலக நாணய அமைப்புமுறையின் அஸ்திவாரங்களை அது குறைமதிப்பிற்கு உட்படுத்துவதானது காகித நாணயங்களில் நம்பிக்கைச் சரிவு ஏற்படும் என்னும் அச்சுறுத்தலையும் கொண்டுள்ளது. மேலும் 1930 களில் இருந்த பொருளாதார முகாம்கள், மீண்டும் திரும்பும் என்ற அச்சறுத்தலையும் அதனால் உலக வர்த்தகமும், முதலீட்டிற்கும் கணக்கிலடங்கா விளைவுகளையும் ஏற்படுத்தும்.

அதையும்விட உடனடியான அச்சுறுத்தலாக இருப்பது, நிதியச் சொத்துக்களானது அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பு மற்றும் பிற மத்திய வங்கிகளால் வாங்கப்படுவது இன்னும் பரந்த அளவில் 2008 சரிவிற்கு வழிவகுத்த சூழலை ஏற்படுத்திவிடும் என்பதுதான். 2008 ஆரம்பத்திலிருந்தே, அமெரிக்க மத்திய வங்கிக் கூட்டமைப்பு அதனுடைய இருப்புநிலைக் குறிப்பை 220 சதவிகிதத்திற்கும், இங்கிலாந்து மத்திய வங்கி 350 சதவிகிதத்திற்கும் மற்றும் ஐரோப்பிய மத்திய வங்கி கிட்டத்தட்ட 98 சதவிகிதத்திற்கும் விரிவுபடுத்தியிருக்கின்றன.

பொருளாதார வளர்ச்சியை விரிவாக்க கொள்கைகள் ஏதும் இல்லாத நிலையில், நிதிய ஏமாற்றுக் கையாளுகையின் மீது நம்பிக்கை என்பது உலகப் பொருளாதாரத்தின் மையத்தில் புதிய, வெடிப்புமிகுந்த முரண்பாடுகளைத் தோற்றுவித்துள்ளது. இந்த உண்மையானது, நிதிய அமைப்புமுறையில் பொறுப்பைக் கொண்டுள்ள சிலராலேதான் என்பது அடையாளம் காணப்பட்டுள்ளது. நிதிய மற்றும் கடன் கொள்கைகளின் மீது முற்றிலும் நம்பிக்கைஎன்னும் கொள்கை நீண்ட கால இடர்களைக் கொண்டுள்ளது.   அதாவது இந்த ஆபத்து கடந்தகால அதீத நடவடிக்கைகள் தோற்றுவித்த பொறியிலிருந்து தப்புவிக்கும் நிலையை நாடுகையில், நாம் வருங்காலத்தில் பாதிப்புக்களைக் கட்டமைத்துவிடக்கூடும் என்பதாகும்என்று ஒரு சமீபத்திய உரையில், பிரித்தானியாவின் Financial Services Authority உடைய தலைவர் Adair Turner இவ்வாறு எச்சரித்தார்.

2008 நெருக்கடியின்போது, மத்திய வங்கிகள் உலகெங்கிலும்கடைசியாகக் கடன் கொடுப்பவைகளாக செயற்பட்டு, வங்கிகளுக்கும் மற்றும் உதவி கிடைத்திராவிட்டால் திவாலாகிவிட்டிருகக் கூடிய பிற நிதிய நிறுவனங்களுக்கும் பிணையெடுப்பை மேற்கொண்டன. இந்த நடவடிக்கையை மத்திய வங்கிகள் செய்ய முடிந்ததற்குக் காரணம் அவைகள் பாதிக்கப்பட்ட நிதியச் சந்தைகளில் நேரடியாக தொடர்பு கொண்டிருக்கவில்லை என்பதால்தான்.

ஆனால் இப்பொழுது நிலைமை வியத்தகு அளவில் மாறிவிட்டது. வங்கிகளே இப்பொழுது டிரில்லியன்கள் கணக்கில் டாலர்களை அரசாங்கப் பத்திரங்கள் மற்றும் பிற கடன் வகைகளில் வைத்துக்கொண்டுள்ளன. இச் சந்தைகளில் சரிவு என்றால், மத்திய வங்கிகளானது முக்கிய வங்கிகளுக்கும் முதலீட்டாளர்களுக்கும் பிணை எடுக்கும் முயற்சியை மேற்கொள்வதைக் காணமுடியும், ஆனால் அவற்றின் நிதி நிலையோ குறைமதிப்பிற்கு உட்பட்டுவிடும்.

வேறுவிதமாகக் கூறினால், கடந்த ஐந்து ஆண்டுகளாக எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் நாணயப் போர்களை விரிவாக்கும் சூழலைத் தோற்றவித்துள்ளன என்பது மட்டுமின்றி, அடுத்த நிதிய நெருக்கடியில் மத்திய வங்கிகளுக்கே ஏற்படும் என்பதை அவைகள் உறுதிப்படுத்திவிட்டிருக்கின்றன.

G20 கூட்டத்தில் கலந்து கொள்ளும் சிலரேனும் குறைந்தப்பட்சம் தங்கள் திரைக்குப் பின்னால் நடக்கும் விவாதங்களில் இந்த ஆபத்துக்களைப் பற்றி உணர்ந்திருப்பார்கள். ஆனால் அவைகளைச் சமாளிக்க கொள்கைகள் எதையும் முன்வைக்க சக்தியற்று இருப்பார்கள். ஏனெனில் இலாபமுறையினதும் தேசிய அரச அமைப்புமுறையினதும்  அடித்தளத்திலேயே இந்த நெருக்கடியானது மிகவும் வேறூன்றியுள்ளது. தற்பொழுது இருக்கும் முதலாளித்துவ அமைப்புமுறையின் நிலைமுறிவு தோற்றுவித்துள்ள மிகப்பெரும் ஆபத்துக்களை எதிர்கொள்வதற்கான ஒரே விடையாக இருப்பது, பெரும் ஒழுங்கற்ற இலாபமுறைக்குப் பதிலாக முழு நனவான பொருளாதாரத் திட்டமிடலுக்காகவும் சோசலிச சர்வதேச வேலைத்திட்டத்திற்காகவும் தொழிலாள வர்க்கம் அரசியல் போராட்டத்தை ஆரம்பிப்பதே.