WSWS
:Tamil
:
செய்திகள் ஆய்வுகள்
:
ஆசியா :
இந்தியா
ஒரு சட்ட விசாரணையற்ற கொலைத்தண்டனை:
இந்திய அரசாங்கம் அப்ஸல் குருவுக்கு மரணதண்டனையை
நிறைவேற்றியிருக்கிறது
By Kranti Kumara and Keith
Jones
12 February 2013
use this version to print | Send
feedback
இந்தியாவின் காங்கிரஸ்
கட்சி தலைமையிலான அரசாங்கம் தனது பிற்போக்குத்தனமான பாதையை ஒரு நடவடிக்கை மூலம்
முன்மாதிரியாக எடுத்துக்காட்டியுள்ளது. கடந்த சனிக்கிழமை டிசம்பர்
2001ல் இந்தியாவின் பாராளுமன்ற
கட்டிடங்களுக்குள் பயங்கரவாத தாக்குதலை நடத்தியதற்காக இந்திய அதிகாரிகளால் போலியாக
குற்றம்சாட்டி வைக்ப்பட்டிருந்த
43
வயதுடைய காஷ்மீர் நபரான முகமது அப்ஸல்
குருவை இரகசியமான முறையில் தூக்கிலிடுவதற்கு கட்டளையிட்டிருக்கிறது
அந்த தாக்குதலில் எட்டு
பாதுகாப்புப் படையினர்,
ஒரு தோட்டக்காரர் மற்றும் ஐந்து
காஷ்மீர் பிரிவினைவாத பயங்கரவாதிகள் என்று கருதப்பட்டவர்கள் இறந்துள்ளனர்.
இதை உடனடியாக இந்திய
ஆளும்வர்க்கமும்,
பெருநிறுவன செய்தி ஊடகங்களும்
”இந்தியாவின்
9/11” ஆக இருக்கும் என்று
அறிவித்து,
மேலும் ஒரு மூர்க்கமான பூகோள அரசியல்
நிகழ்ச்சிநிரலையும் மற்றும் மனித உரிமைகள் மீது மிகப்பரந்த தாக்குதல்களையும்
நியாயப்படுத்தின. அமெரிக்காவில்
9/11 தாக்குதல்களுக்கான
சூழ்நிலைகள் போல டிசம்பர்
13, 2001 அன்று இந்திய
பாராளுமன்றத்தின் மீதான ஆயுதத் தாக்குதல்கள் பல பதிலளிக்கப்படாத கேள்விகளோடு
இருக்கின்றன.
கேள்விகளை ஆராய்வதில்
அதிகாரிகள் எந்தவித அக்கறையையும் வெளிப்படுத்திக்காட்டவில்லை
அப்போது இந்துமத
மேலாதிக்கவாத பாரதிய ஜனதா கட்சியினால்
(BJP)
தலைமைதாங்கப்பட்ட இந்திய அரசாங்கம்,
உடனடியாக இப்பயங்கரவாத
தாக்குதலில் பாகிஸ்தானுக்கு உடந்தையிருப்பதாக குற்றம் சுமத்தியது பின்னர்
பாகிஸ்தான் எல்லைகளில் 7
லட்சம் துருப்புக்களை
பணியிலமர்த்த உத்தரவிட்டிருந்தது.
பல மாதங்களாக உபகண்டம்
முற்றுமுழுதான யுத்தத்தின் விளிம்பில் இருந்தது.
”இஸ்லாமிய”
மற்றும்
”பாகிஸ்தான் அடிப்படையிலான”
பயங்கரவாதம் பற்றிய
அரசாங்கத்தினதும் ஊடகங்களினதும் அச்சவெறியை ஒரு கொடூரமான முறையில் பயங்கரவாத
எதிர்ப்புச் சட்டத்தை
(Prevention of
Terrorism Act)
முன்கொண்டுவருவதற்கும்
பயன்படுத்தப்பட்டது.
ஏனையவற்றுடன் இச்சட்டம் எந்தவித
குற்றச்சாட்டுமில்லாமல் நபர்களை
180
நாட்களுக்கு மேல்
கைதுசெய்துவைத்திருப்பதற்கு அதிகாரிகளுக்கு உரிமையளிக்கிறது.
மேலும் காவல்துறையினர்
சித்திரவதைகளை பயன்படுத்துவதற்காக இழிபேர்பெற்ற ஒரு நாட்டில் சாட்சிகளை இரகசியமாக
சாட்சியமளிக்கவும் மற்றும் ஒப்புதல் வாக்குமூலத்தை பரவலாகப் பயன்படுத்துவதற்கும்
விதிகளை மாற்றியுள்ளது.
இதுவரையிலான
இந்தியாவில் அரச தூக்குதண்டனை நிறைவேற்றுவதற்கான நிலைமை குறைவாகவே காணப்பட்டுள்ளது.
மும்பையில் நவம்பர்
2008 பயங்கரவாத தாக்குதலில்
ஈடுபட்ட உயிரோடிருந்த ஒரே துப்பாக்கியேந்திய நபரான அஜ்மல் கஸாப்பின் மரணதண்டணை
இதற்கு முன்னர் நடந்துள்ளது.
2004 இருந்து இந்தியாவில் ஒரு
மரணதண்டனையும் ஏற்படவில்லை.
இப்போது மூன்று மாதத்திற்கும்
குறைவான நாட்களில் இரண்டு நடந்திருக்கின்றன.
அப்ஸல் குருவை
2006ல்
தூக்கிலிலிடுவதற்காக நாட்குறிக்கப்பட்டிருந்தது.
ஆனால் இவ்வாறான விடயங்களில்
வழமையாக இருப்பதுபோல் இந்த மரணதண்டணை நிறுத்திவைக்கப்பட்டிருந்தது அல்லது அவருடைய
மனைவி தபாஷூம் கருணை மனுவை தாக்கல் செய்தபின்னர் இது இடைநிறுத்தப்பட்டிருந்தது.
இருந்தபோதிலும் பாரதிய ஜனதா
கட்சி 2004ல்
அதிகாரத்திலிருந்து இறங்கிய பின்னர் மீண்டும் மீண்டும் குருவினுடைய மரணதண்டனையை
நிறைவேற்றக் கோரியிருந்தனர்.
இந்திய ஜனாதிபதி அலுவலத்தில்
அந்த கருணை மனு எந்தக் குறிப்பிட்ட முக்கியத்துவமும் சேர்க்கப்படாமல் பல வருடங்களாக
வெளிப்படையாக தேங்கிக்கிடந்தது.
பின்னர் கடந்த மாதம்
திடீரென அனைத்தும்,
குருவின் மரண தண்டனையால் ஒரு
அரசாங்க முன்னுரிமையாக மாறியிருந்தது.
நீண்டநாள் காங்கிரஸ் உள்நிர்வாக
உறுப்பினராகவும் முன்னாள் நிதி மந்திரியாகவுமிருந்த இந்திய ஜனாதிபதி பிராணாப்
முகர்ஜி ஜனவரி 23
அன்று அப்ஸல் குருவின் சார்பில்
அளிக்கப்பட்ட கருணை மனுவை முறையாக நிராகரித்தவுடன் உள்துறை அமைச்சார் சுஷில் குமார்
ஷிண்டே அவருடைய மரணதண்டனைக்கு உத்தரவிட்டிருந்தார்.
அவருடைய கருணை மனு
நிராகரிப்பை ஒரு நீதிமன்ற மறுஆய்வுக்காக அவருடைய கேட்பதற்கான சட்டரீதியான உரிமை
தடுக்கப்படவும் மற்றும் குருவிற்கு பரந்த ஆதரவுள்ள இந்திய கட்டுப்பாட்டிலான
காஷ்மீர் பகுதியிலிருக்கும் மக்கள் நிறைவேற்றப்படவுள்ள தூக்குத்தண்டனைக்கு எதிராக
கிளர்ச்சி செய்வதை தடுக்கும் நோக்கத்திலும் இவையனைத்தும் இரகசியமான முறையில்
நடைபெற்றுள்ளது.
மோசமான கொடூரம் நிறைந்த
ஒரு திட்டமிட்ட நடவடிக்கையாக,
சனிக்கிழமை காலை
5 மணிக்கு வலுக்கட்டாயமாக
எழுப்பப்பட்டபோதுதான் அப்ஸல் குரு தான் தூக்கிலிட இருப்பதைக் தெரிந்துகொண்டார்.
ஏழுமணிக்கு அவர் வற்புறுத்தி
தூக்குமேடைக்கு கொண்டுசெல்லப்பட்டதுடன்
8 மணிக்கு அவர் இறந்துவிட்டதாக
அறிவிக்கப்பட்டது.
அவருடைய மரணதண்டனைக்கு
முன் குருவின் குடும்ப உறுப்பினர்கள் அவருடைய மனைவி மற்றும்
14 வயது மகன் காலிஃப் உட்பட
அவருடன் சந்திப்பதற்கு ஒரு வாய்ப்பும் அளிக்காமல் மறுக்கப்பட்டது.
அவருடைய சடலத்தின் மீது அவர்கள்
உரிமைகோருவதை நிராகரிக்கமுடியும் என்பதால் அவருடைய உடலை சிறைச்சாலை மைதானத்தில்
அதிகாரிகள் உடனடியாக அடக்கம் செய்துவிட்டார்கள்.
மேலும் ஆத்திரத்தைத்
தூண்டும் வகையில்,
குருவின் மனைவிக்கு இந்திய அரசு
அவருடைய தூக்குத் தண்டனை தகவலைத் தெரிவிப்பதற்கு
”விரைவுத் தபால்”
(Speed Post) சேவையைத்
தேர்வுசெய்திருந்தது.
அந்தக் கடிதம்,
அரசாங்கம் குருவின் மரணதண்டனையை
பகிரங்கமாக பிரகடனம் செய்து
48 மணிநேரத்திற்கு மேலாக
அடுத்தநாள்தான் சென்றடைந்தது.
குருவின் மரணதண்டனையை
இந்திய அரசாங்கம் முடிவெடுத்திருந்த நிலையில்,
இரகசியமான முறையில்
ஏற்பாடுகளைச்செய்து செயல்படுத்தியதுடன், காஷ்மீரில் ஏதிர்பார்க்கப்படும் மக்கள்
சீற்றத்தை தணிப்பதற்கு அரசு எந்திரத்தின் அடக்குமுறையை திரட்டியது.
ஜம்மு மற்றும் காஷ்மீரில்
வசிப்பவர்கள் சனிக்கிழமை காலை எழுந்துவந்தபோது ஆயிரக்கணக்கான கனரக ஆயுதங்கள் தரித்த
பாதுகாப்பு படையினர் பணியிலிருத்தப்பட்டிருந்lதை
கண்டனர். இணையத்தள வசதிகள் துண்டிக்கப்பட்டிருந்ததுடன் மேலும் காஷ்மீர்
பள்ளத்தாக்கின் எல்லா பிரதான நகரப் பகுதிகளும் பொதுவான காலவரையறையற்ற ஊரடங்குச்
சட்டம் நடைமுறையிலிருந்தது.
இருப்பினும்,
குருவின் மரணதண்டனைக்கு எதிராக
பல கொந்தளிப்பான எதிர்ப்புப் போராட்டங்கள் அங்கு நடந்தன.
இதில் குறைந்தபட்சம் மூன்று
இளைஞர்கள் கொல்லப்பட்டனர்.
காவற்துறையினரிமிருந்து
தப்பிக்க முயன்றதில் இரண்டுபேர் மூழ்கடிக்கப்பட்டும் மூன்றாவது நபர் பாதுகாப்புப்
படையினரால் சுட்டும் கொல்லப்பட்டனர்.
பல எண்ணிக்கையானவர்கள் காயம்
பட்டனர்.
அப்ஸல்
குரு ஒரு
அரசு
சட்டவிசாரணையற்ற
மரணதண்டனையின்
பலியாளாவார்
டிசம்பர்
2001 தாக்குதலில் இவர்
ஈடுபட்டுள்ளதான ஒரு வாக்குமூலத்தை கொடுமையான சித்திரவதை மூலம் காவல்துறை பெற்றது.
ஒரு
”விரைவு நீதிமன்றம்”
மூலம் நடத்தப்பட்ட அவருடைய
முதல்கட்ட விசாரணையில் குரு நீதிமன்றம் நியமித்த ஒரு அனுபவமற்ற வழக்கறிஞரைப்
பெற்றிருந்தார்.
அவர் குருவின் பாதுகாப்பிற்காக எதையும்
செய்ய தவறியதோடு, வழக்கின் சாட்சிகளை குறுக்கு விசாரணை கூட செய்யவில்லை.
இறுதியில்,
2001 டிசம்பர் தாக்குதலில்
முடிவடைந்த காவல்துறையின் ”சதி”
வழக்கு கதையின்படி எதுவும்
கண்டுபிடிக்கப்படவில்லை.
இதில் இருந்த மற்ற மூன்று
நபர்கள் குருவைப் போல ”விரைவு
நீதிமன்றம்”
மூலம் சதியின் ஒரு பகுதியாக
இருந்தார்கள் என குற்றம் சாட்டப்பட்டனர்.
இரண்டுபேர் தங்கள் எல்லா
குற்றங்களுக்கு எதிராக சிறப்பாக மேல்முறையீடு செய்திருந்தனர்.
இதில் சதியின்
””சூத்திரதாரி”
(masterminded)
என காவல்துறையால் கருதப்பட்ட
கல்லூரிப் பேராசிரியர் எஸ்.ஏ.ஆர்.
கிலானியும் அடங்குவார்.
குருவோடு சேர்க்கப்பட்ட மூன்றாவது குற்றவாளியான ஷெவ்கத் குரு அவருடைய மரண தண்டனை
பத்து வருட சிறைத்தண்டனையாக குறைக்கப்பட்டு
2010இல் அவர்
விடுதலைசெய்யப்பட்டார்.
பயங்கரவாத
தாக்குதலுக்கு குருவை தொடர்புபடுத்துவதற்கான பொருட்களின் சான்றுகளை திரிபுபடுத்தி
வைத்திருந்தபோதிலும்,
”விசாரணை பாதுகாவல்களை மீறுதல்”
(“violations of
procedural safeguards”)
என்று அழைக்கப்படுகிற விதத்தில்
அவருடைய ஒப்புதல் வாக்குமூலம் உட்படுத்தப்பட்டு, மேலும் வழக்கில் மற்ற ஓட்டைகள்
இருந்தபோதிலும் இந்திய உச்ச நீதிமன்றம் அவருக்கு
”மூன்று ஆயுள்கால தண்டனையையும்
இரண்டு மரண தண்டனைகளையும்”
வழங்கியிருந்தன.
இவ்வாறு செய்வதன் மூலம்,
”குற்றஞ்சாட்டப்பட்டவருக்கு
அதிகூடிய தண்டனையை வழங்கியிருப்பதால் மட்டுமே சமூகத்தின் கூட்டு உணர்வுகள்
திருப்தியடைந்துகொள்ளும்.”
என்று அறிவித்துள்ளது.
குறிப்பிடக்கூடிய இந்திய
எழுத்தாளரும் அரசியல் திறனாய்வாளருமான அருந்ததி ராய் ஞாயிற்றுக்கிழமை
ஹிந்து
பத்திரிகையில் பிரசுரிக்கப்பட்ட ஒரு செய்திக் கட்டுரையில்
”குரு மீது பழிவாங்கும்
நடவடிக்கையால் மட்டுமே இந்திய சமூகம் திருப்தியடையும் என்பதில்
உண்மையிருக்குமானால், அதற்கு அரசியல் உயரடுக்கும்,
பெருநிறுவன செய்தி ஊடகங்களும்
அவர்களை ஒரு உன்மத்தநிலைக்கு இட்டுச்சென்றதாலாகும்.”
(ராய் மிக உன்னிப்பாக
ஆய்வுசெய்துள்ளதுடன் அப்ஸல் குருவுக்கு எதிரான அரசின் வழக்கையும்,
2001 பயங்கரவாத தாக்குதலின்
உத்தியோகபூர்மான கதையின் முரண்பாடுகளையும் வெளிப்படுத்தியும் உள்ளார்)
ஆனாலும் கூட,
2001ல்
தாக்குதலில் குருவின் ஈடுபாட்டை பற்றிய ஒட்டுமொத்த இந்திய அதிகாரிகளின் கூற்றுக்களை
விவாதத்திற்காக எடுத்துக்கொண்டால்கூட அவர் ஒரு வெளிக்கருவியாக செயற்பட்டு தாக்குதல்
நடத்துவதற்கு உபகரணங்களை கொடுத்து உதவியவர் மட்டுமே.
காங்கிரஸ் தலைமையிலான
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசாங்கம் குருவின் மரணதண்டனையை விரைவான நிறைவேற்ற
எடுத்த தீர்மானம் மிகவும் கணிப்பிடப்பட்டதொன்றாகும். பிரதம மந்திரி மன்மோகன் சிங்
மற்றும் காங்கிரஸின் உயர்மட்டத் தலைவர்களும் அவர்களின் ஈவிரக்கமற்ற தன்மையையும்,
அரசின் அதிகாரத்தை நிலைநிறுத்துவதற்கு கொலை செய்வதற்கு தாங்கள் தயாராக இருப்பதையும்,
மற்றும்
அரசியல் சூழ்நிலையை மேலும் வலதுக்கு நகரச்செய்வதற்கு தேசிய மற்றும்
பேரினவாதத்தையும் பொதுவாக சமூக பிற்போக்குவாதத்தையும் ஊக்குவிக்க தயாராக
இருப்பதையும் பகிரங்கமாக எடுத்துக்காட்டுகின்றனர்.
இந்த அரசியல்
மாற்றத்திற்கு உடனடியான பின்னணி இந்தியா மற்றும் பாகிஸ்தான் கட்டுப்பாட்டில் உள்ள
காஷ்மீர் இடையிலான நடைமுறை எல்லையில் உருவாக்கப்பட்டிருக்கின்ற எல்லை கட்டுப்பாட்டு
கோட்டு
(Line of Control - LOC)
பகுதியும் சேர்த்து பாகிஸ்தானுடனான பதட்டங்கள் அதிகரிக்கப்பட்டிருக்கிறது.
இது பாரதிய ஜனநாயக
கட்சியிடமிருந்து வரும் ஒரு வலதுசாரி அரசியல் கோபமூட்டும் தாக்குதலுக்கு மத்தியில்
வருகிறது.
இது திரும்ப திரும்ப காங்கிரஸ்
கட்சியை ”பயங்கரவாதத்திற்கு
மென்மையை”
காட்டுவதாக தாக்கியும் வருகிறது.
மேலும் இது பல முக்கிய வணிகத்
தலைவர்களால் 2014
தேசிய தேர்தலில் முதல்தர
”பிரதம
மந்திரி வேட்பாளராக”
கருதப்படும் மூர்க்கமான வகுப்புவாத
முதலமைச்சர் நரேந்திர மோடியை முன்னிறுத்துகிறது.
பாரதிய ஜனநாயக கட்சி
டிசம்பர் இறுதியில் மிகவும் பிரபல்யப்படுத்தப்பட்டதும், பெருவணிக ஊடகங்களால்
ஆதரவளிக்கப்பட்டதுமான நிகழ்வான டெல்லி இளம் பெண்னொருவர் கொடூரமான கும்பலால்
பலாத்காரப்படுத்தப்பட்டமையை பயன்படுத்தி மரண தண்டனையை பரந்தளவு பயன்படுத்துமாறும்,
நடைமுறைப்படுத்துமாறும் கோரிக்கை வைத்தமை கட்டாயம் குறிக்கப்படவேண்டிய ஒன்றாகும்.
ஆனால் பொதுவாக இந்த
திருப்பம் வர்க்க அழுத்தங்கள் அதிகரிக்கும்
நிலையில் வருகிறது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச
மூலதனத்திலிருந்து வரும் கோரிக்கைகளுக்கு பதிலளிக்க வேண்டிய நிலையிலிருக்கும்
அரசாங்கமானது முதலீட்டாளர்களுக்கு இந்தியாவை இன்னும் கவர்ச்சிகரமானதாக்குவதற்கு
இலக்குகளை கொண்டு அதற்காக மக்கள் விரோத கொள்கை மாற்றங்களை முன்னெடுக்க
முயற்சிக்கிறது.
அரச சட்டவிசாரணையற்ற
குருவின் படுகொலை அரசியல் கட்டமைப்பிலுள்ள இந்திய ஆளும்தட்டினரான பாரதிய ஜனநாயக
கட்சி மற்றும் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி
(மார்க்சிஸ்ட்)
இரண்டினாலும்
ஆதரவழிக்கப்படுகின்றது. இடது முன்னணிக்கு தலைமை கொடுக்கும் ஸ்ராலினிசக் கட்சி தனது
ஆதரவுக் குரலை கொடுத்துள்ளது.
இந்திய கம்யூனிஸ்ட்
கட்சி
(மார்க்சிஸ்ட்)
அரசியற்குழு உறுப்பினர்
சீதாராம் யெச்சூரி ”அப்ஸல்
குருவின் வழக்கை பொறுத்தவரையிலும் மற்றும் பாராளுமன்றத்தின் மீதான தாக்குதல்
தொடர்பாகவும் இந்த நாட்டின் சட்டம் அதன் அனைத்து ஒழுங்குகளுடன் இறுதியான முடிவைப்
பெற்றிருக்கிறது என நான் நினைக்கிறேன்.
கடந்த
11 வருடங்களாக நீடித்து நின்ற
இந்தப் பிரச்சனை இறுதியில் அதற்குரிய காலப்பகுதியில் நிறைவுபெற்றுள்ளது.”
என்று கூறியுள்ளார்.
அவர் மற்ற உயர்
குற்றத்திற்குரிய மரணதண்டனைகள் விரைவாக மேற்கொள்ளப்பட வேண்டும் என வற்புறுத்தி
மேலும் இதன்மூலம் மரணத்தை விளைவிக்கும் அரச வன்முறைக்கு மேலும் ஆதரவை வழங்குகிறார்.
பிரதம மந்திரி ராஜீவ் காந்தி
மற்றும் பஞ்சாப் முதலமைச்சர் பீண்ட் சிங் படுகொலைகளைச் செய்த குற்றவாளிகளை
குறிப்பிட்டு ”இந்த
வழக்குகளில் தீர்ப்பு கட்டாயம் வழங்கப்படும்.
அவர்களும் அதற்குரிய
காலப்பகுதியில் அதனை அடைவார்கள்”
என்று கூறினார்.
The
author also recommends:
India: Stop the state murder of Mohammed Afzal |